இஸ்லாத்தில் ஜகாத் மற்றும் அதன் முக்கியத்துவம்
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான் :
தொழுகையையும் நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள். (அல்பகரா : வசனம் 110)
மேலும்,
'அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியானவழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையைஅவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர(வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும். " (98:5)
இப்னு உமர் (ரலி) அறிவித்து புகாரீ மற்றும் முஸ்லிமில் பதிவாகியுள்ளது - அவர்கள் கூறுகின்றார்கள் :
(அடிப்படைகளான) ஐந்தின் மீது இஸ்லாம் அமைக்கப்பட்டுள்ளது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறி விட்டு, (ஐந்தான) அவற்றிலிருந்து ஜகாத் கொடுப்பதைக் கூறினார்கள்.
முஆத் (ரலி) அவர்களை யமன் தேசத்தின்பால் அனுப்பிய சம்பவம் புகாரீயில் பதிவாகியுள்ளது. அதில்இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (ஏகத்தும், தொழுகை ஆகிய முன் கூறப்பட்ட) அதற்கு அவர்கள் கீழ்ப்படிந்து(கட்டுப்பட்டு) விட்டால், நிச்சயமாக அல்லாஹ் தர்மத்தை (ஜகாத்தை) அவர்களின் மீது கட்டாயக்கடமையாக்கியுள்ளான். அவர்களில் ஏழைகளாயிருப்போருக்கு திருப்பிக் கொடுக்கப்படும் என்பதைஅவர்களுக்கு அறிவிப்பீராக! என்று கூறினார்கள்.
மேலும், ஜகாத்தை நிறைவேற்றுவதை விட்டவர், நிராகரிப்பில் உள்ளார் என்பது பற்றி உயர்ந்தோனாகியஅல்லாஹ் கூறுகின்றான் :
ஆகவே அவர்கள் (தங்கள் பாவங்களிலிருந்து விலகிப்) பச்சாதபப்பட்டு, தொழுகையையும் நிறைவேற்றி,ஜகாத்தையும் கொடுத்து வந்தால் (அவர்கள்) உங்களுக்கு மார்க்கத்தில் சகோதரர்கள். (9:11)
தொழுகையை நிச்சயமாக நிறைவேற்றாது, ஜகாத்தையும் கொடுக்காதவர் நம்முடைய மார்க்கச்சகோதரர்களில் உள்ளவரல்லர் - அது மாத்திரமல்லாது நிராகரித்தோரில் அவர் உள்ளவராவார் என்பது பற்றி இவ்வசனத்திலிருந்து விளங்கப்படுகின்றது.
எவற்றில் ஜகாத் கடமை?
தங்கம், வெள்ளி, வியாபாரச் சரக்குகள், கால்நடைகள் (ஆடு, மாடு, ஒட்டகம்) பூமியில் விளையும்தானியங்கள், பழங்கள் மற்றும் உலோகங்கள் ஆகியவற்றில் ஜகாத் கடமையாகும்.
தங்கம், வெள்ளி:
தங்கம், வெள்ளி எந்த வகையைச் சார்ந்ததாக இருந்தாலும் அவற்றில் ஜகாத் கடமையாகும். நிஸாப் எனும்உச்சவரம்பு அளவு தங்கம், வெள்ளி யாரிடம் உள்ளதோ அவர் மீது ஜகாத் கடமையாகும். தங்கத்தில் நிஸாப்அளவு 7.5 தோலா அதாவது 87.48 கிராமாகும். வெள்ளியின் நிஸாப் 52.50 தோலா அளவு அதாவது, 612.36கிராமாகும். யார் தங்கத்திற்குரிய நிஸாப் அளவை வைத்திருக்கிறாரோ அவர் தன்னிடமுள்ளதில் இரண்டரைசதவீதம் ஜகாத் கொடுப்பது அவர் மீது கடமையாகி விடுகிறது.
ரொக்கப் பணமாகக ஒருவர் ஜகாத் கொடுக்க விரும்பினால் எந்த நாளில் ஓராண்டு பூர்த்தியாகின்றதோ அந்தநாளில் ஒருகிராம் தங்கம் அல்லது வெள்ளியின் விலை மதிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.பிறகு அதன் மதிப்புக்கு நிகரான பணத்தை ஜகாத் கொடுக்க வேண்டும்.
வியாபாரச் சரக்குகளுக்குரிய ஜகாத்:
அசையாப் பொருள்ள, பிராணி, உணவு, பானம், கார் போன்றவற்றில் இலாபத்தை நோக்கமாகக் கொண்டுகொடுக்கல் வாங்கல் செய்யக் கூடிய அனைத்திலும் ஜகாத் கடமையாகிறது. இவற்றில் ஜகாத்திற்குரியநிபந்தனை : பணம் நிஸாப் எனும் உச்ச வரம்பை எட்டியிருக்க வேண்டும்.அவற்றை வெள்ளி, தங்கம்இவ்விரண்டில் ஒன்றின் கிரயத்திற்கு ஈடாக மதிப்பிட வேண்டும். அவற்றின் மொத்தக் கிரயத்தில் இரண்டரைசதவீதம் ஜகாத் கடமையாகும்.
விளைபொருளுக்குரிய ஜகாத்:
சேமிக்கப்படக் கூடிய, நிறுக்கப்படக் கூடிய பேரீத்தம் பழம், திராட்சை போன்ற கனி வகைகளிலும்மணிக்கோதுமை, அரிசி போன்ற தானியங்களிலும் ஜகாத் கடமையாகும். எனினும் பழங்களிலும்காய்கறிகளிலும் ஜகாத் கடமையில்லை.
விளைபொருள்கள் நிஸாப் எனும் உச்சவரம்பை அடைந்து விட்டால் ஜகாத் கட்டாயமாகும். ஜகாத்தின் அளவு675 கிலோவாகும். கோதுமைக்குரிய நிஸாப் (உச்ச வரம்பு அளவு) 552 கிலோவாகும். ஓராண்டு பூர்த்தியாகவேண்டும் என்பது இவற்றில் நிபந்தனையில்லை.
கால்நடைகளுக்குரிய ஜகாத்:
கால்நடைகள் என்றால் ஒட்டகம், மாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆகியவையாகும். இவற்றில் கீழ் காணும்நிபந்தனைகளுடன் ஜகாத் கடமையாகும்.
• நிஸாப் எனும் உச்சவரம்பை எட்ட வேண்டும். ஒட்டகத்தின் நிஸாப் ஐந்து, செம்மறி ஆடு, வெள்ளாடுஇவற்றின் நிஸாப் நாற்பது. மாட்டின் நிஸாப் முப்பது. இதற்கு குறைவானதில் ஜகாத் கிடையாது.
• இவை உரிமையாளரின் கைக்கு வந்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
• இக்கால்நடைகள் வருடத்தில் அதிக நாட்கள் வெளியே சென்று மேய்ந்ததாக இருக்க வேண்டும். தீனிகொடுத்து வளர்க்கப்பட்டவையாகவோ அல்லது அவற்றுக்கான தீனி விலைக்கு வாங்கப்பட்டவையாகவோஇருந்தால் அல்லது அவற்றுக்கான தீனியை உரிமையாளரே சேகரிக்கின்றார் என்றால் இதுபோன்றகால்நடைகளுக்கு ஜகாத் கடமையில்லை. ஆனால் இவை வருடத்தில் அதிக நாட்கள் மேய்ந்தவையாகஇருந்தால் ஜகாத் கடமையாகும்.
• அவை பணியில் ஈடுபடுத்தப்படாதவையாக இருக்க வேண்டும். அவற்றின் உரிமையாளன் அவற்றைவிவசாயத்திலோ அல்லது சுமை தூக்கவோ அல்லது வேறு வேலைகளுக்கோ அவற்றைப் பயன்படுத்தாமல்இருக்க வேண்டும்.
ஒட்டகம்:
ஜகாத்திற்குரிய நிஸாப் ஐந்து ஒட்டகங்கள் இருந்தால் ஒட்டகத்தில் ஜகாத் கடமையாகும். ஒரு முஸ்லிமிடம்ஐந்துக்கு மேல் ஒன்பது வரை ஒட்டகங்கள் அவனது உடமையிலிருந்தால் ஓர் ஆண்டுநிறைவடைந்திருந்தால் அவற்றில் ஒரு ஆடு ஜகாத் கடமையாகும். பத்துக்கு மேல் பதினான்கு வரைஇருந்தால் அவற்றில் இரண்டாடு கடமையாகும். பதினைந்திற்கு மேல் பத்தொன்பத வரை மூன்றாடுகள்.இருபதிற்கு மேல் இருபத்து நான்கு வரை நான்கு ஆடுகள். இருபத்தைந்திற்கு மேல் முப்பத்தைந்து வரை ஒருவயது பூர்த்தியான பெண் ஒட்டகம். இது அவனுக்குக் கிடைக்கவில்லையானால் இரு வயது பூர்த்தியான ஒருஆண் ஒட்டகம். 36 க்கு மேல் 45 வரை இருவயது பூர்த்தியான பெண் ஒட்டகம். 40 க்கு மேல் 60 வரை மூன்றுவயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். 61க்கு மேல் 75 வரை நான்கு வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். 76 க்கு மேல் 90 வரை இரு வயது பூர்த்தியான இரு பெண் ஒட்டகம். 91க்கு மேல் 120 வரை மூன்று வயதுபூர்த்தியான இரு ஆண் ஒட்டகங்கள். இதற்கு மேல் அதிகமானால் ஒவ்வொரு நாற்பதுக்கும் இரு வயதுபூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம். ஒவ்வொரு ஐம்பதுக்கும் மூன்று வயது பூர்த்தியான ஒரு பெண் ஒட்டகம்.கீழ்க்காணும் அட்டவணை ஒட்டகத்திற்குரிய ஜகாத்தை தெளிவுபடுத்துகிறது.
மாடுகள்:
ஒருவனிடம் 30 க்கும் மேல் 39 வரை மாடுகள் இருந்தால் ஒரு வயது பூர்த்தியான ஒரு பசுவும், 40 க்கும் மேல்59 வரை இரு வயது பூர்த்தியான ஒரு பசுவும், 60 க்கு மேல் 69 வரை ஒரு வயது பூர்த்தியான இரண்டுகாளைகளும், 70 க்கும் மேல் 79 வரை இரு வயது பூர்த்தியான ஒரு பசுவும், ஒரு வயது பூர்த்தியான ஒருகாளையும் பின்னர் ஒவ்வொரு 30க்கும் ஒரு வயது பூர்த்தியான ஒரு காளையும், ஒவ்வொரு 40 க்கும் ஒருவயது பூர்த்தியான பசுவும் கொடுக்க வேண்டும்.
ஆடுகள்:
ஒருவனிடம் 40 முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அவன் ஒரு ஆடு கொடுப்பது கடமையாகும். 121 முதல்200 வரை இரு ஆடுகளும், 201 முதல் 300 வரை இருந்தால் மூன்று ஆடுகளும், 301 முதல் 400 வரை நான்குஆடுகளும், 401 முதல் 500 வரை ஐந்து ஆடுகளும் கொடுக்க வேண்டும். பின்னர் இதற்கு மேல் அதிகமாகும்பட்சத்தில் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் சராசரி ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.
பின்னர் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.
ஜகாத் பெறத் தகுதியானவர்கள்:
அல்லாஹ் கூறுகின்றான் :
(ஜகாத் என்னும்) தான தர்மங்களெல்லாம் ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் இந்த தானதர்மங்களைவசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்களது உள்ளம் ஈர்க்கப்பட்டவர்களுக்கும்,அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடன்பட்டவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர்புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்கும் உரியனவாகும். (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்.அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிகக் ஞானமுடையவன். (9:60)
அல்லாஹ் ஜகாத் பெறத் தகுதியான எட்டு வகைக் கூட்டத்தினரை விளக்கிக் கூறியுள்ளான். இஸ்லாத்தில்ஜகாத் சமுதாயத்தையும் தேவையுடையோரையும் சென்றடைகின்றது. ஏனைய மார்க்கங்களிலுள்ளது போல- மார்க்க விற்பன்னர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட மாட்டாது.
1) ஃபகீர் (ஏழை) :
உயிர் வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கும் குறைவாகப் பெற்றிருப்பவர்
2) மிஸ்கீன் :
உயிர் வாழ்வதற்குப் போதுமான தேவைகளில் பாதிக்கு மேல் பெற்றிருப்பவர். எனினும் அவர் போதுமானமுழுமையான அளவைப் பெற்றுக் கொள்வதில்லை. இவர்களுக்கு பல மாதங்களுக்கான அல்லது ஒருவருடத்தில் போதுமான அளவிற்குரிய பணம் ஜகாத் நிதியிலிருந்து கொடுக்க வேண்டும்.
3) ஜகாத் தொகையை வசூலிப்பவர்கள் :
ஜகாத் தொகையை செல்வந்தர்களிடமிருந்து சேகரிப்பதற்காக ஆட்சியாளரால் நியமிக்கப்படுபவர்கள்.அவர்கள் செல்வந்தர்களாயிருந்தால் அவர்களது அந்தஸ்த்திற்கேற்ப அவர்களது வேலைக்குரிய கூலியைக்கொடுக்க வேண்டும்.
4) உள்ளம் ஈர்க்கப்பட்டவர்கள் :
தம் மக்களிடத்தில் மரியாதைக்குரிய தலைவர்களில் எவர்கள் இஸ்லாத்திற்கு வருவார்கள் என்றோமுஸ்லிம்களுக்குத் தொல்லை தராமலிருப்பார்கள் என்றோ எதிர்பார்க்கப்படுகிறதோ அத்தகையவர்கள்.இவ்வாறே இஸ்லாத்தில் புதிதாக வந்தவர்களுக்கும் அவர்களது உள்ளங்கள் இஸ்லாத்தின்பால்நேசமாக்கப்படுவதற்காகவும், அவர்களின் உள்ளங்களில் ஈமான் உறுதியாவதற்காகவும் அவர்களுக்கு ஜகாத்கொடுக்க வேண்டும்.
5) அடிமை மீட்பு (சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு)
அடிமைகளை உரிமைவிடுவதற்காகவும் எதிரிகளால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காகவும்ஜகாத் கொடுக்கப்பட வேண்டும்.
6) கடன்பட்டவர்கள் :
இவர்களுடைய கடன்; அடைப்பதற்காக ஜகாத் நிதியிலிருந்து கொடுக்கப்பட வேண்டும். ஆயினும்முஸ்லிம்களாயிருப்பதும், கடனை அடைப்பதற்கு வசதியுள்ள செல்வந்தர்களாக இல்லாமலிருப்பதும்,அவர்களது கடன் பாவத்திற்குரியதாக இல்லாமலிருப்பதும் தற்காலிக கடனாக இருப்பதும் விதிமுறையாகும்.
7) அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவர்களுக்கு:
ஊதியத்தை எதிர்பார்க்காமல் வணக்கமாகக் கருதி போர்புரிபவர்கள். அவர்களின் செலவிற்காக அல்லதுஆயுதங்கள் வாங்குவதற்காக ஜகாத் கொடுக்க வேண்டும். மார்க்கக் கல்வியைத் தேடுவதும் ஜிஹாதைச்சேர்ந்தது தான். மார்க்கக் கல்வியில் ஈடுபவடுவதை நாடும் ஒரு மனிதன் தன்னிடம் பொருளாதாரவசதியில்லாமலிருக்குமானால் அவன் மார்க்கக் கல்வியைத் தேடுவதில் ஈடுபடுமளவிற்கு போதுமானதொகையை மட்டும் ஜகாத் நிதியிலிருந்து கொடுப்பது கூடும்.
8) வழிப்போக்கன் :
ஊருக்குச் செல்ல முடியாமல் வழியிலேயே நின்று விட்ட ஒரு பயணி. அவனது ஊரில் அவன் செல்வந்தனாகஇருந்தாலும் அவன் ஊர் போய்ச் சேருமளவிற்கு ஜகாத் தொகையிலிருந்து கொடுக்க வேண்டும்.
ஜக்காத்தின் நிதி பள்ளிகட்டுவதற்கும் சாலைகளை சீர்படுத்துவதற்கும் செலவிடுவது கூடாது.
வாடகைக் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகள்:
வாடகைக்கான கட்டடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஜகாத் கடமையில்லை. எனினும் வாடகைப்பணம் நிஸாப் (உச்சவரம்பு) எனும் உச்சவரம்பை எட்டியிருந்து ஓராண்டு பூர்த்தியாகி விடுமானால் அதில்ஜகாத் கடமையாகும். உதாரணமாக ஒருவன் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டு அதன் வாடகையை எடுத்துக்கொள்கிறான். அவன் வாடகையாக எடுத்துக் கொண்ட தொகைக்கோ அல்லது அதில் சிறிதளவுக்கோ அவைஜகாத்தின் அளவை எட்டும் பட்சத்தில் - ஓராண்டு பூர்த்தியாகி விடுமானால் அதில் ஜகாத் கடமையாகும்.
No comments:
Post a Comment