Sunday, August 2, 2009

வெற்றிக்கு வழி! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன். தொடர் 2

"ரொம்ப அருமையான கருத்தா இருக்கே"

"ஆமாம்,சண்முகம்,இஸ்லாத்தில் எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு இருக்கு.இத செய்,அத செய்யாதே என்று சொல்வதோட நிருத்திக் கொள்ளாமே,ஏன் செய்யனும்,ஏன் செய்யக்கூடாது என்று விளக்கமும் துல்லியமான முறையில் இருக்கும்."

அப்படியா ஆச்சரியமா இருக்கு.சரி ஒரு விஷயம் ஞாபகம் வருது,இது பத்தி இஸ்லாத்துல சொல்லப்பட்டிருக்கா? என்று ஆவலோடு கேட்ட சண்முகத்தைப் பார்த்து பஷீர் சொன்னார்,:தயங்காம எது வேணுன்னாலும் கேளுங்க நண்பரே,என்னால் முடிந்த அளவு சொல்றேன்".

"பொதுவா மனுஷன் தப்பு பண்ணிண்டே இருக்கான்.அதுக்கு ஒரு இலக்கணம் இல்லாம போச்சு, தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்கிற மாதிரி நிலமையில இப்போ இந்த உலகம் போய்க்கிட்டு இருக்கு,எனவே பாவங்கள் செய்றதா பத்தி இஸ்லாத்துல என்ன சொல்லப்பட்டிருக்குன்னு கொஞ்சம் சொல்லேன்"சண்முகம் வேண்டிக்கொண்டார்.

"நல்லது சண்முகம்,இத பத்தி குரானிலும் இறைவன் கூறி இருக்கிறான்,நபிகள் நாயகமும் தங்களுடைய ஹதீஸிலும் கூறி இருக்கிறார்கள்.அது இதுதான்"


பெரும் பாவங்களில் மிகப் மிகப் பெரியதை நான் உங்களுக்கு அறிவிக்கவா? என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் வினவினர். அதற்கு நாங்கள் சரி என்றோம். அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும் பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் (அநியாயமாக) கொலை செய்வதுமாகும் என்று கூறிச் சாய்ந்து வீற்றிருந்த நபி صلى الله عليه وسلم நிமிர்ந்து அமர்ந்து மேலும் கூறினர்; அறிந்து கொள்ளுங்கள். பொய்யுரைப்பதும், பொய்ச்சான்று பகர்வதுமாம் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்கள் (அவற்றைத் திரும்பத் திரும்ப கூறாது) வெறுமனே இருந்து விடட்டுமே என்று கூறும் வரை. அறிவிப்பாளர்: அபூபக்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ

பெரும் பாவங்களைப் பற்றி ஒருவர் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், அவை ஒன்பதாகும். [1] இணை வைப்பதும் [2] சூனியம் செய்வதும் [3] கொலை செய்வதும் [4] வட்டியை உண்பதும் [5] அனாதிகளின் பொருள்களை உண்பதும் [6] போர்க்களத்தில் பின்வாங்கி ஓடுவதும் [7] கணவர்களைப் பெற்றுள்ள குற்றமற்ற பெண்கள் மீது அவதூறு கூறுவதும் [8] பெற்றோர்களுக்கு மாறு செய்வதும் [9] உங்களுடைய கிப்லாவான கஃபதுல்லாஹ்வில் செய்யத் தகாததைச் செய்ய, ஒருவன் வாழும்பொழுதும் இறந்த பின்பும் பிறர் செய்து வருவதையும் ஆகுமாக்குவதாகும் என்று கூறினர். அறிவிப்பவர்: உபைதுப்னு உமைர் அவர்கள் தமது தந்தை மூலம் அறிந்து, ஆதாரம்: அபூதாவூத், நஸயீ

அல்லாஹ்வுடைய நபியே! அல்லாஹ்விடம் எந்த பாவம் மிகப்பெரியது என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், நீர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதாகும். அவன்தான் உம்மைப் படைத்தவன் என்று கூறினார்கள். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், உம்முடைய குழந்தைகள் உம்முடைய உணவில் பங்காளிகளாக வந்து விடுவார்களென்று அஞ்சி அவர்களைக் கொலை செய்வதாகும்' என்று கூறினர். பின்னர் எது? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள் 'நீர் உம்முடைய அண்டை வீட்டுக்காரரின் மனைவியைச் சோரம் செய்வதாகும்' என்று கூறினர். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூத்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ

'ஒருவன் தனது பெற்றோர்களை ஏசுவதும் நிச்சயமாகப் பெரும் பாவங்களைச் சேர்ந்ததேயாகும்' என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். (அப்பொழுது) மனிதன் தன் பெற்றோர்களையும் ஏசுவதுண்டா? என்று நாங்கள் வினவினோம். ஆம்! இவன் மற்றவனின் தந்தையை ஏசுகிறான். அவன் இவனுடைய தந்தையை (பதிலுக்கு) ஏசி விடுகிறான். இவன் மற்றவனின் தாயை ஏசி விடுகிறான் என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்رَضِيَ اللَّهُ عَنْهُ ஆதாரம்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ



இதைக்கேட்டுக்கொண்டிருந்த சண்முகம்,இவ்வளவு நுணுக்கமான முறையில நபிகள் சொல்லி இருக்கிறார்களே என்று ஆச்சரிப்பட்டுப் போனார்.

இறைவன் நாடினால் தொடரும்.....

முஹம்மத் பிர்தௌஸ்

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!