Friday, July 31, 2009

வெற்றிக்கு வழி!இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன்!!தொடர் 1

நபிகள் நாயகம் எக்ஸ்பிரஸ் என்ற அந்த ரயில் புறப்பட தயாரான நிலையில் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.சலீம் நானா,பஷீர் காக்கா மற்றும் பல பிரயாணிகள் தத்தம் லக்கேஜ்களுடன் ஏறிக்கொண்டும்,தங்கள் எண் கொண்ட சீட்டில் உட்காரவும்,இடம் பிடிப்பதுமாகவும் ,இப்படி அந்த ரயில் பரபரப்பாக இருந்தது.

"அடடே பஷீர்,சலீம்,பார்த்து எவ்ளோ நாளாச்சு?" குரல் வந்த திசையில் பார்த்தால்,"அட நம்ம கிளாஸ் மேட சண்முகம்,எங்கடா ஆளையே காணோம்,பார்த்து ரொம்ப நாளாச்சே?சலீமும்,பஷீரும் சந்தோஷப்பட்டனர்.

"ஆமாம்,பஷீர்,சலீம்.எம் மவன் டெல்லியில ஒரு பெரிய கம்பெனியில ஜெனெரல் மானேஜரா இருக்கான்,அதுனால நானும்,என் மனைவியும் அங்கேயே செட்டில் ஆகிட்டோம்.டெல்லி அலுத்துப் போச்சி,கொஞ்ச நாள் நம்ம ஊர்ல இருக்கலாமேன்னு என் மனைவியுடன் அதிராம்பட்டினம் கெளம்பிட்டேன்".அப்போதுதான் அவர் மனைவியை இருவரும் கவனித்தனர்.இருவருக்கும் புன்னகை தந்தாள் அந்த அம்மாள் ரஞ்சிதம்.

ரயில் புறப்பட தயாரானது,அப்பொழுது,சலீம் நானாவும் - பஷீர் காக்காவும் பயண துவா சொல்ல ஆரம்பித்தனர்."ஸுப்ஹாநல்லதீ ........"அரபி மொழியில் அமைந்த அந்த துவாவை ஓதிவிட்டு,தமிழிலும் இவ்வாறு பிரார்த்தித்தனர்."

அல்லாஹ் மிகப்பெரியவன். இதை வசப்படுத்தி தந்தவன் தூயவன். நாங்கள் இதன்மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். யா அல்லாஹ்! எங்களின் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். யா அல்லாஹ்! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு. இதன் தொலைவை எங்களுக்கு குறைத்துவிடு. யா அல்லாஹ்! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். யா அல்லாஹ்! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும் மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். (நூல்: முஸ்லிம் 2392.)

இதை கவனித்துக்கொண்டிருந்த சண்முகம் சொன்னார்.

இறைவன் நாடினால் தொடரும்..........


by முஹம்மத் பிர்தௌஸ்

2 comments:

  1. நண்பரே, அஸ்ஸலாமு அலைக்கும்! தாங்கள் என் ப்ளாகுக்கு வந்து என் கருத்தை கேட்டுள்ளீர்கள். நன்றி!

    நீங்கள் என்னுடைய ஹஜ் பதிவில், மார்க்கத்தை விளங்காமல் சில விஷயங்கள் எழுதியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். இதன் மூலம் நான் தெரிந்து கொண்டேன் நீங்கள் மத்ஹபை மறுக்கும் ஏகத்துவவாதி என்று!

    நிற்க, நான் சுன்னத் வல் ஜமாத்தை சேர்ந்தவள். தங்களுடன் தர்க்கத்தில் ஈடுபட எனக்கு விருப்பமில்லையாதலால், மேற்கொண்டு அவ்விஷயமாக எதுவும் சொல்ல விரும்பவில்லை.

    நாம், தர்கா வழிபாடு, வரதட்சணை போன்ற கொடுமைகளை ஒழிக்க, ஏதேனும் இயத்தில் இருந்து தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. இது ஒவ்வொரு இஸ்லாமியனுடைய கடமையாகும்.

    நான் சிறு வயதில் இருந்தே, தப்லீக் ஜமாத் என்னும் பாசறையில் வளர்ந்து, தீனை விளங்கிய பெண். ஆதலால், நமக்குள் முரண்பட்ட கருத்து இருக்கலாம். அது குறித்து நான் எதுவும் பேச போவதில்லை. குதர்க்கம் செய்பவர்களுடன் தர்க்கம் ஒரு போதும் செய்யக் கூடாது.

    தராவிஹ் எத்துணை ரக்அத் என்று விவாதிப்பதை விட, இஹ்ராம் எங்கு கட்ட வேண்டும் என்று தர்க்கிப்பதை விட, எத்தணையோ கேடு கெட்ட செயல்கள், நம்மை சுற்றி நடக்கின்றன.

    அதை முடிந்தால், கையால் தடுக்க வேண்டும், அல்லது நாவால் தடுக்க வேண்டும், குறைந்த பட்சம் மனதாலாவது அது தீங்கு என்று எண்ண வேண்டும். இது ஈமானின் ஆக குறைந்த படித்தரமாகும். நான் இன்றைய சூழலில், இக்கடைசி நிலையில் தான் இருக்கிறோம்.

    முதலில், நம்மை நாம் சீர்திருத்த வேண்டும். நமக்குள் ஒற்றுமை வேண்டும். இது தான் நாம் உய்யும் வழி. இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளை இன்று சரிவர நிறைவேற்றுபவர் யார்? சிந்தித்துப் பாருங்கள்.

    நான் சொல்வதில் ஏதேனும் தவறிருந்தால், மன்னியுங்கள். பொதுவாக, புது புது இயக்கவாதிகளிடம் நான் தொடர்பு வைத்துக் கொள்வது இல்லை. தங்களைப் பற்றி எனக்கு தெரியாது.

    நான் ஒரு பெண்; என் கணவனுக்கு முழுமையாக கட்டுபட்டவள். ஆதலால், நான் இது குறித்து மேல் விவாதம் செய்ய என் கணவர் அனுமதிக்க மாட்டார். நன்றி!

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி அவர்களே!ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்காமல்,அவனை மட்டுமே வணங்கி வழிபடுபவன்,குரான்,சுன்னா(நபிவழி-ஹதீஸ்)பின்பற்றுபவன் அனைவருமே சுன்னத் வல் ஜமாஅத் தான்.ஆனால் சுன்னத் வால் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டு,பித் அத், ஷிர்க்,அனாச்சாரம் போன்றவைகளில் மக்கள் ஈடுபடும்போது,அவைகளை விட்டு பிரித்துக் காட்டவே தவ்ஹீத்வாதிகள் என்ற பதம் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.நாம் ஏக அல்லாஹ்வுக்கும்,ரசூல் ஸல் அவர்களுக்கும் கட்டுப்பட்ட முஸ்லீம்கள்,முஸ்லிம்களை மட்டுமன்றி,மற்ற மத நண்பர்களையும் நல வழி பக்கம் அழைக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது,குறிப்பாக நன்கு எழுதத்தெரிந்த உங்களுக்கு அந்த கடமை உண்டு.சரிதானே சகோதரி.

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!