Saturday, August 20, 2011

இருநூற்றைம்பது ரூபாயில் ஒருமாத ஜீவாதாரம்

அதிரையிலிருந்து படுக்கோட்டைக்கு ஒருமுறை ஆட்டோவில் சென்றுவர செலவளிக்கும் தொகைதான் ஆகும்! இருநூற்றைம்பது ரூபாயில் ஓர் ஏழையின் ஒருமாத ஜீவாதாரத் தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்படுகிறது என்றால் நம்புவீர்களா? ஆம்! நம்பித்தான் ஆகவேண்டும். அதிரை பைத்துல்மால் கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக இதை சாத்தியப்படுத்தி வருகிறது. நமதூரில் சுமார் 50 ஏழைகளை அடையாளம் கண்டு, மாதந்தோறும் தலா ரூ.250 வீதம் உதவித்தொகை வழங்கி அவர்களின் அத்தியாவசிய ஜீவாதாரத் தேவையை ஓரளவு நிறைவு செய்து வருகிறது. 

பெரும்பாலும் நோன்பு காலங்களில் தானதர்மங்கள் நிரம்பி, நமதூர் மட்டுமின்றி அக்கம்பக்க ஊர்களிலிருந்தும் ஜகாத் மற்றும் ஃபித்ரா தர்மங்களைப்பெறுவதற்காக வருகின்றனர். அவர்களில் எத்தனைபேர் உண்மையிலேயே ஏழை அல்லது ஜகாத் பெறுவதற்குத் தகுதியுள்ளவர்கள் என்பது அனேகருக்குத் தெரியாது. அதிரை பைத்துல்மால் முஹல்லாவாரியாக பொறுப்புதாரிகளை நியமித்து, உண்மையிலேயே தருமம் பெறுவதற்குத் தகுதியானவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் சுயமரியாதைக்கும் கண்ணியத்திற்கும் எவ்வகையிலும் இடையூறு ஏற்படாதபடி அவர்களுக்கான தானதர்மங்களைச் செய்து வருகிறது. 

ஒருமுறை கைத்தொலைபேசிக்கு ரீசார்ஜ் செய்வதைக் குறைத்து, ரூ.250 ஐ பைத்துல்மாலுக்குச் செலுத்தினால், ஓர் ஏழையின் ஒருமாதத்திற்கான குறைந்தபட்ச அடிப்படை உணவுக்கு இது உதவுகிறது. பட்டுக்கோட்டைக்கு ஆட்டோவில் செல்லாமல், ஒருமுறை பேருந்தில் செல்வதன்மூலம், அதில் மிச்சப்படும் தொகையை தர்மமாக வழங்கி மேற்சொன்னபடி உதவலாம். இப்படியாக,நம் செலவுகளை மிச்சப்படுத்துவதன்மூலம் மிஞ்சும் தொகையை மாதம் ஒருமுறை மட்டும் வழங்கினால் இன்ஷா அல்லாஹ் நமதூரில் உண்ண உணவன்றி வாழும் ஏழைகளே இல்லை என்ற நிலையை உருவாக்கலாம். 

அதிரை பைத்துல்மாலின் நிர்வாகிகளைச் சந்தித்தோ அல்லது abmchq@gmail.com என்ற முகவரிக்கு மின்மடலுக்கு எழ்தியோ, குறைந்த செலவில் நிறைந்த நன்மை பயக்கும் பைத்துல்மாலின் பல்வேறு அளவிலான உதவிகளில் உங்களையும் இணைத்துக் கொள்ளலாமே! 

இந்த வருடம் ரமலான் பிறை இன்னும் 9-10 மட்டுமே இருக்கக்கூடும். உங்கள் தானதர்மங்களை அதிரை பைத்துல்மாலுக்குச் செலுத்தி விட்டீர்களா? இந்த மாதத்தின் செலவுகளில் அதிரை பைத்துல்மாலுக்கும் ஓர் பகுதியை ஒதுக்கி,பன்மடங்கு நன்மைகளைக் கொள்ளையடிக்கும் இந்த மாதத்தை பயனுள்ளதாக்கிக் கொள்ளலாமே!

அன்புள்ள அதிரை வலைப்பூ உரிமையாளர்களே! நடத்துனர்களே! அதிரை பைத்துல்மாலுக்கு உதவிகோரும் இந்த அறிவிப்பை உங்கள் தளத்திலும் வெளியிட்டு உதவிவிடுவீர். ஈருலக வாழ்க்கையையும் வெற்றியாக்கித் தருவதற்கு அல்லாஹ் போதுமானவன்.

Friday, August 19, 2011

மரணிக்கும் போதும் மண்ணறையிலும் நிகழ்பவைகள்!


அல்லாஹ் கூறுகிறான்: -
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்-குர்ஆன் 21:35)

மரணம் என்பது நிச்சயமானது. அதிலிருந்து எந்த உயிரினத்தாலும் மீளமுடியாது. நாம் வாழும் காலம் குறுகியது என்று உணர்ந்த பிறகும் மரணிக்கும் போதும் அதன் பிறகு நடப்பவை பற்றியும் கவனக்குறைவாக, அல்லது மரணத்தையே மறந்தவர்களாக நாம் இருக்கின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மரணவேளை என்பது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த உலகவாழ்வின் இறுதிக் கட்டமான அந்த மரணத்தின் நேரம் மற்றும் மண்ணறைகளில் நடைபெறக் கூடிய நிகழ்ச்சிகளைப் பற்றியும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நாம் அமல்கள் செய்வதற்குரிய கால, நேரங்கள் எல்லாம் நாம் உயிருடன் இருக்கும் போது தான். மரணம் நம்மை வந்தடைந்தவுடன் நம்முடைய நன்மை தீமை பதிவேடுகள் மூடப்படும். ஆகவே நல்ல அமல்கள் செய்வதற்கு இதுதான் நேரமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: -

“அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, ‘எனக்கு வஹீ வந்தது’ என்று கூறுபவன் அல்லது ‘அல்லாஹ் இறக்கிவைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்கிவைப்பேன்’ என்று கூறுபவன், ஆகிய இவர்களை விடப் பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) ‘உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள் இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள் இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்’ (என்று கூறுவதை நீர் காண்பீர்).

அன்றியும் (மறுமையில் அல்லாஹ் இவர்களை நோக்கி), ‘நாம் உங்களை முதல் முறையாகப் படைத்தோமே அதுபோன்று நீங்கள் (எதுவுமில்லாமல்) தனியே எம்மிடம் வந்துவிட்டீர்கள் இன்னும்: நாம் உங்களுக்கு அளித்தவற்றையெல்லாம் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டு விட்டீர்கள்! எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ, உங்களுக்குப் பரிந்து பேசுபவர்கள் (என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ) அவர்களை நாம் உங்களுடனிருப்பதைக் காணவில்லை; உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது; உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன’ (என்று கூறுவான்)” (அல்-குர்ஆன் 6:93-94)

“மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: ‘எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்’ என்று” (அல்-குர்ஆன் 8:50)

மரணமும், மண்ணறை வாழ்க்கையும் மறைவான விஷயங்களில் உள்ளவைகள். இறந்தவர் எவரும் திரும்பி வந்து அவர்களுடைய நிலைமையைப் பற்றி விளக்குபவர்களாக இல்லை. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இந்த விஷயங்களைப்பற்றி கூறியிருக்க வேண்டும். கப்ரின் நிகழ்வுகளைப் பற்றி  முஹம்மது நபி  صلى الله عليه وسلم  அவர்கள் ஹதீஸின் மூலமாக கூறியுள்ளார்கள். இதன் மூலம் மண்ணறையில் நமக்காக என்ன வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். 
எனதருமை சகோதர, சகோதரிகளே! நாம் இவற்றை மிக மிக கவனமாகப் படித்து அந்த தவிர்க்க முடியாத இறப்பை சந்திப்பதற்கு நாம் நம்மை நாமே தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

  • அல்லாஹ்விடம் வருத்தப்பட்டு பாவமன்னிப்பு தேடக் கூடிய நேரம் இதுதான்!
  • நாளை என்பது வராமல் போகலாம்!
  • மரணம் நம்மை வந்தடைந்து விட்டால் மன்னிப்புக்கான கதவுகள் நிரந்தரமாக மூடப்படும்!
  • மறுபடியும் திரும்பி வந்து நல்ல செயல்கள் செய்வதற்கு சிறிதும் சந்தர்ப்பம் கிடைக்காது!
  • மண்ணறையின் வேதனையில் இருந்து வெற்றி பெறுவதற்கு அல்லாஹ்வுடைய வேதத்தை பொருளுணர்ந்து ஓதி அதன் படி அமல் செய்வதுதான் சிறந்த வழி!
  • முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கப்ரில் இறைவனைப் பற்றியும் நபி صلى الله عليه وسلم அவர்களை பற்றியும் கேள்வி கேட்கப்படும்! என்று கூறியுள்ளார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: -

“எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் – இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான் மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்” (அல்-குர்ஆன் 14:27)

நபி صلى الله عليه وسلم அவர்களின் பிராத்தனை: -

“அல்லாஹ்வே நான் நரகத்தைவிட்டும் நரகத்தின் தண்டனையை விட்டும் கப்ரின் வேதனையை விட்டும் அதிகமான செல்வத்தை விட்டும் ஏழ்மையை விட்டும் மற்றும் தஜ்ஜாலின் சோதனையை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்” என்று நபி  صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்.

இறந்தவரின் உடல் கப்ருக்கு எடுத்துச் செல்லப்படும் போது: -

“மரணித்த ஒருவரை மண்ணறைக்கு எடுத்துச் செல்லும் போது மூன்று விஷயங்கள் அவரை பின் தொடர்ந்து செல்கின்றன; அவருடைய உறவினர்களும், சொத்துக்களும் திரும்பி விடுகின்றது. அவர் செய்த செயல்கள் மட்டும் அவரோடு தங்கி விடுகிறது”

மண்ணறை குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்: -

“மறுமையின் முதல் பிரவேசம் மண்ணறை! ஒருவர் அதிலே மீட்சி அடைந்து விட்டால் அடுத்த நிகழ்வுகள் அவருக்கு சுலபமானதாக இருக்கும். ஒருவர் அதிலே மீட்சி அடையவில்லை என்றால் அவரைத் தொடரக்கூடிய அடுத்து நிகழ்வுகளை அவர் கடினமாக காண்பார். மண்ணறையை விட கொடுரமான ஒரு இடத்தை நான் எப்போதும் கண்டதில்லை” என்று நபி  صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள். 

“மண்ணறை என்பது சுவர்க்கத்தின் ஒரு தோட்டமாகவோ அல்லது நரகத்தின் ஒரு படுகுழியாகவோ இருக்கும்”

“நான் தான் புகழிடத்தின் வீடு! நான் தான் தனிமையின் வீடு!  நான் தான் புழுதியின் வீடு! மற்றும் நான் தான் புழுக்களின் வீடு! என்று மண்ணறை சொல்லக்கூடிய ஒருநாள் வரும். ஒரு முஃமின் இறந்த உடன் உங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்! என் மீது நடமாடியவர்களில் நீங்கள் தான் எனக்கு விருப்பமானவர்கள்; நான் இன்றைய தினம் உங்கள் மீது பொறுப்பு
அமர்தப்பட்டுள்ளோம்; நீங்கள் இங்கு வந்து விட்டீர்கள்; நான் எவ்வாறு உங்களை நடத்தப்போகிறேன் என்பதை பாருங்கள்! என்று மண்ணறை சொல்லும். பிறகு அது கண்கள் பார்க்கக்கூடிய அளவுக்கு விரிவாக்கப்படும். சொர்க்கத்தின் ஒரு வாசல் அவருக்காக திறக்கப்படும். ஆனால் ஒரு நிராகரிப்பாளர் இறந்த உடன், உமக்கு எந்த வரவேற்பும் இல்லை; என் மீது நடமாடியவர்களில் நீர் தாம் மிகவும் வெறுப்புக்குரியவர்! இன்று உங்கள் மீது நான் பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளேன்! நீர் என்னிடம் வந்துவிட்டீர்கள்! நான் உங்களை எவ்வாறு நடத்தப்போகிறேன் என்பதை பார்ப்பீர்கள்; மலைப்பாம்புகள் அவர்கள் மீது ஏவப்படும்; அந்தப்பாம்பு எப்படிப்பட்டதென்றால் ஒரு பாம்பு இந்த பூமியின் மீது சுவாசித்தால் இந்த உலகம் உள்ளவரை ஒரு புல் பூண்டு கூட முளைக்காது; மேலும் அது மறுமைக்காக எழுப்பபடும் நாள்வரை கடித்துக்கொண்டே இருக்கும்”

கப்ரில் நடக்கும் வேதனை குறித்து நபி صلى الله عليه وسلم அவர்கள்: -

“அல்லாஹ்வுக்கு சமமாக மற்றவர்களை அழைத்து பிரார்த்திப்பவர்கள், மண்ணறையில் கடினமான சோதனையை சந்திப்பார்கள். மண்ணறையில் இறந்தவர்களை அடக்குவதை நீங்கள் நிறுத்திவிடுவீர்கள் என்று நான் பயப்படாமலிருந்தால் நிச்சயமாக நான் உங்களுக்கு மண்ணறையில் நடக்கும் வேதனையை கேட்கச் செய்திருப்பேன்”

“நபி صلى الله عليه وسلم  அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்” என்று கூறினார்கள்.
“அடியான் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டு அவனுடைய தோழர்கள் திரும்பிச் செல்லும்போது, அவன் அவர்களின் செருப்பின் ஓசையைச் செவியேற்பான். அப்போது இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து, ‘இந்த மனிதரைப் பற்றி என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என்று முஹம்மத்   صلى الله عليه وسلم  குறித்துக் கேட்பர். அவன் இறைநம்பிக்கையாளனாக இருந்தால் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ எனக் கூறுவான். அவனிடம் (நீ கெட்டவனாய் இருந்திருந்தால் உனக்குக் கிடைக்கவிருந்த) நரகத்திலுள்ள உன்னுடைய இருப்பிடத்தைப் பார். (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதை மாற்றி உனக்குச் சொர்க்கத்தில் இருப்பிடத்தை ஏற்படுத்தியுள்ளான் எனக் கூறப்படும். இரண்டையும் அவன் ஒரே நேரத்தில் பார்ப்பான்…”அவனுக்கு மண்ணறை விசாலமாக்கப்படும்” என்றும் இறைத்தூதர்   صلى الله عليه وسلم   அவர்கள் கூறினார்கள் என இதன்
அறிவிப்பாளரான கதாதா குறிப்பிடுகிறார்…

நயவஞ்சகனாகவோ நிராகரிப்பவனாகவோ இருந்தால் ‘இந்த மனிதர் விஷயத்தில் நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?’ என அவனிடம் கேட்கப்படும்போது ‘எனக்கொன்றும் தெரியாது; மக்கள் சொல்லிக் கொண்டிருந்ததையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ எனக் கூறுவான். உடனே ‘நீ அறிந்திருக்கவுமில்லை: (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். மேலும் இரும்பு சுத்திகளால் அவன் கடுமையாக அடிக்கப்படுவான். அப்போது அவனை அடுத்திருக்கும் மனிதர்களையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவுக்கு அவன் அலறுவான்.” (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்   رَضِيَ اللَّهُ عَنْهُ , ஆதாரம் : புகாரி)

கப்ரில் உள்ளவர்களுக்காக நாம் செய்யவேண்டிய துஆ:-

“முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களை மரணம் மூலம் சந்திப்பவர்களே!” அறிவிப்பவர் : அபூஹுரைரா,  رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.
“முஃமினான, முஸ்லிமான மண்ணறை வாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! நிச்சயமாக, இன்ஷா அல்லாஹ், நாங்களும் உங்களை அடுத்து வருபவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகவாழ்வைக் கேட்கிறோம்” அறிவிப்பவர் : புரைதா   رَضِيَ اللَّهُ عَنْهُ , நூல்கள்: முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜா.

கப்ருகளை வணங்கும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுதல்: -

நபி  صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்: -

“யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர்” (நூல் : புகாரி)
“அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள்”  (நூல் புகாரி மற்றும் முஸ்லிம்)

“இறைவா என்னிடைய கப்ரை வணங்கும் இடமாக ஆக்கிவிடாதே! யார் நபி மார்களின் கப்ருகளை வணங்கும் இடமாக எடுத்துக்கொண்டார்களோ அவர்களின் மீது அல்லாஹ்வின் கோபம் கடுமையானதாக இருக்கும்”

கருனையாளனான வல்ல அல்லாஹ் முஸ்லிமான நம் அனைவரையும் கப்ருடைய வேதனையிலிருந்தும், மறுமையில் நரக வேதனையிலிருந்தும் காப்பாற்றி ஈடேற்றம் அளித்திடுவானாக!

எச்சரிக்கை? ஹலால் உணவுகள்


பிரான்ஸ் நாட்டில் 30.7.2011 அன்று  canal +(plus) TV channel லில் Special  Investigation  Halal என்ற தலைப்பில்  பல... உண்மைகளை நமக்கு தோலுரித்து காட்டினார்கள். நாங்கள் எல்லாம் அதிர்ச்சி அடைந்தோம். அதன் விபரம் இதோ... பல முஸ்லிம் வியபாரிகள்  Whole Sale மார்கெட்டில் ஹலால் இல்லாத இறச்சிகளை எடுத்து வந்து ஹலால் என்று தாங்களே..  Certificate  மற்றும்  Lableதயாரித்து விற்பனை செய்து முஸ்லிம் மக்களை  ஏமாற்றுகிறார்கள். மறு புறம் நம்பிக்கைக்குறிய பள்ளிவாசல் நிர்வாகிகள் (Mosquée de Paris) தன் அலட்சியபோக்கினால் சரிவர  Controll செய்யாமல்   இஸ்லாமிய மக்களுக்கு வினியோகம் செய்கிறார்கள்.  இதில் 80,90 பிரசன்ட் ஹலால் கிடையாது .இந் நாட்டில் 10,20 பிரசன்ட் தான் ஹலால். ஹலால் என்று முத்திரை போட்டு விற்பனை செய்யும் மிட்டாயிலும் பன்றி கொழுப்பு அதாவது ஜெலட்டின்- (Gelatine de Porc) இருப்பதாக கண்டறியப்பட்டது. சில மாதம் முன்பு  Herta - ஹலால் என்ற பெயரில் வியபாரத்தில் உள்ள இறச்சியை  (Lab Test)  சோதனை செய்ததில் பன்றி (Porc) இறச்சி இருப்பது தெரியவந்தது. ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள DOUX  என்ற கோழி இறச்சி கம்பெனி  சவுதி அரேபியாவுக்கு மெஷின் மூலம் கட் பண்ணி ஹலால் இல்லாத கோழிகளை தான் அனுப்புகின்றது. இதை ஏன் நாம் கூடுதலாக தெரியப்படுத்த காரணம்.கோழி மற்றும் இறச்சிகள்FRANCE(ஃபிரான்ஸ்) லிருந்து SAUDI(சவுதி) க்கு EXPORT(ஏற்றுமதி) அதிகம் நடக்கிறது. எல்லா நாட்டு முஸ்ஸிம் மக்களும் அறிந்து கொள்ள இச் செய்தியை  நம்உணர்வு வார இதழிலும் பிரசுரிக்கவும். நம் அனைத்து வளைகுடா மண்டல தவ்ஹீத் சகோதரர்களுக்கும் இந்த செய்தியை தெரியப்படுத்தும் மாறும்கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு.. TNTJ பிரான்ஸ் மண்டலம்-பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்.---FRTJ                 
           


நூறு தானியங்கள்

தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். 


திருக்குர்ஆன். 2:261.

வேலைவாய்ப்பு


ஓட்டுனர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான,வேலைவாய்ப்பு முகாம் திருவள்ளூரில் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, கலெக்டர் அஷிஷ் சட்டர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு செயல்படுத்தி வரும், 108 அவசர சேவை ஆம்புலன்ஸில் பணிபுரிய, ஓட்டுனர் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், வரும் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணிக்கு திருவள்ளூர் டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உள்ள, 108 அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அவசர கால மேலாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில், நடைபெறும் இப்பணிக்கு, கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், கீழ்க்காணும் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
மருத்துவ உதவிப் பணியாளர்: 20-30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி., நர்சிங் அறிவியல் பட்டய படிப்புடன் அல்லது குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இளநிலை பட்டப்படிப்புடன் , 12ம் வகுப்பில் அறிவியல் பாடம் படித்திருக்க வேண்டும்.
ஓட்டுனர் பதவி: 25-32 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். உயரம், 162.5 செ.மீ.,க்கு குறையாமல், குறைந்தது, 5 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
ஊதியம் முறையே மருத்துவ உதவியாளருக்கு, 7,250 ரூபாயும், ஓட்டுனருக்கு, 6,600 ரூபாயும் வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும்.
நேர்காணல் குறித்த விவரங்களுக்கு, 044-28888060 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், நேர்காணலில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூனியக்காரனும் ஈமான் உறுதிமிக்க சிறுவரும்




நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களுக்கு முன்னால் வாழ்ந்த மக்களில் ஓர் அரசர் இருந்தார். அவரிடம் ஒரு சூனியக்காரர் இருந்தார். அவர் வயது முதிர்ந்த பொழுது எனக்கு வயது அதிகமாகிவிட்டது. ஆகவே ஒரு சிறுவரை அனுப்பி வைப்பீராக! நான் அவனுக்குச் சூனியக் கலையைக் கற்றுத் தருகிறேன் என அவர் அரசரிடம் கூறினார். அதனை அரசர் ஏற்றுக் கொண்டு அவரிடம் சூனியத்தை கற்றுக் கொள்ள ஒரு சிறுவரை அனுப்பி வைத்தார்.

பின்னர் (ஒரு நாள்) வழியில் (கிறிஸ்துவ) துறவி ஒருவர் சென்றார். அவரிடம் அச்சிறுவர் சென்று அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்டார். அவர் கூறுவது அச்சிறுவருக்கு பிடித்து விட்டது. அச்சிறுவர் சூனியக்காரரிடம் வந்தால் உடனே அத்துறவியிடம் சென்று விடுவார். பின்னர் சூனியக்காரரிடம் திரும்பி வந்தால் அவரை சூனியக்காரர் அடித்து விடுவார். இதனை அச்சிறுவர் (ஒரு முறை) துறவியிடம் முறையிட்டார். அதற்கவர் சூனியக்காரனிடம் நீ பயந்தால் என் குடும்பத்தார் என்னைத் தடுத்து வைத்திருந்தனர். (எனது குடும்பத்தாரின் பணிகளில் ஈடுபட்டிருந்தேன்) என்று கூறிவிடு. உன் குடும்பத்தார்களிடம் நீ பயப்படும் பொழுது சூனியக்காரன் என்னைத் தடுத்த வைத்திருந்தான் என்று கூறிவிடு! எனச் சொல்லித்தந்தார்.

இதற்கிடையே அச் சூனியக்காரர் ஒரு நாள் ஒரு பெரிய வாகனத்தில் வந்தார். அவ்வாகனம் மக்களைத் தடுத்து நிறுத்திவிட்டது. அப்பொழுது,அச்சிறுவர் சூனியக்காரர் சிறந்தவரா? துறவி சிறந்தவரா? என்று நான் இன்று அறிவேன் என்று (தனக்குள்) கூறிக் கொண்டார். பின்னர் ஒரு கல்லை எடுத்து இறைவா! சூனியக்காரனின் விஷயத்தைவிட துறவியின் விஷயம் உனக்கு மிகப் பிரியமானதாக இருந்தால் இவ்வாகனத்தைக் கொன்றுவிடு! மக்கள் போகட்டும் என்று கூறினார். பின்னர் அக்கல்லை வாகனத்தில் மீது எறிந்தார். அவ்வாகனம் இறந்து விட்டது. மக்கள் சென்று விட்டார்கள்.

பின்னர் அச்சிறுவர் துறவியிடம் வந்து செய்தியைக் கூற அவர், ''மகனே! இன்று நீர் என்னை விடச் சிறந்தவர். நான் பார்க்கும் இந்த அளவுக்கு உம் விஷயம் (சிறப்பான இடத்தை) அடைந்துள்ளது. நிச்சயமாக நீர்(பிற்பாடு) சோதிக்கப்படுவீர்! நீர் சோதிக்கப்பட்டால் எனக்கு அதனைக் கூற வேண்டாம்''என்று கூறினார்.

அச்சிறுவர் பிறவிக் குருடரையும், வெண்குஷ்டமுடையவரையும் மற்ற நோய்களை விட்டும் மக்களைக் குணப்படுத்தினார். இதனை அரசவையை சேர்ந்த கண் பார்வையற்ற ஒருவர் கேள்விப்பட்டார். அவர் பல அன்பளிப்புகளுடன் அச்சிறுவரிடம் வந்து ''நீர் என் கண்பார்வையை குணப்படுத்த வேண்டும்'' என்றார், அதற்கு அச்சிறுவர் நிச்சயமாக நான் யாரையும் குணப்படுத்தவதில்லை. அல்லாஹ்தான் குணப்படுத்துகிறான். நீர் அவனைக் கொண்டு ஈமான் கொண்டால் நான் அவனிடம் துஆச் செய்வேன். அவன் உம்மைக் குணப்பத்துவான் என்றார். அதனை ஏற்று அவர் அல்லாஹ்வைக் ஈமான் கொண்டார். அல்லாஹ் அவரை குணப்படுத்தினான். பிறகு அவர் அரசவைக்கு வந்து அமர்ந்தார். அப்பொழுது அரசர் அவரிடம் உமக்குக் கண் பார்வையை மீண்டும் வழங்கியது யார்? என்றார். அதற்கவர்''என் இரட்சகன்'' என்று பதிலளித்தார். அரசர், உமக்கு என்னைத் தவிர வேறு இரட்சகன் இல்லையே என்று கூற, ''ஆம்'' என்னுடைய இரட்சகனும் உம்முடைய இரட்சகனும் அல்லாஹ்தான் என்று பதிலளித்தார். உடனே அரசர் அவரைப் பிடித்து கடும் வேதனை செய்யவே, அவர் அச்சிறுவரைப் பற்றிக் கூறிவிட்டார். உடனே அச்சிறுவர் (அரசவைக்கு) கொண்டு வரப்பட்டார். அரசர் அவரிடம், ''மகனே பிறவிக் குருடையும்,வெண்குஷ்டத்தையும் வேறு நோய்களையும் குணப்படுத்தும் அளவுக்கு உன் சூனியம் சென்றுவிட்டதே!'' என்று கூறினார். அச்சிறுவர் ''நான் யாரையும் குணப்படுத்துவதில்லை, அல்லாஹ்தான் குணப்படுத்துகிறான்'', என்றார். உடனே அரசர் அச்சிறுவரைப் பிடித்து வேதனை செய்யவே அவர் துறவியைப் பற்றி அறிவித்துக் கொடுத்தார். உடனே அத்துறவி கொண்டுவரப்பட்டார். அவரிடம் உமது மார்க்கத்தை விட்டு நீர் விலகிவிடும் என்று கூறப்பட்டது. அதற்கவர் மறுக்கவே ஓர் இரம்பத்தை அவரது தலையின் நடுவில் வைத்து அறுத்தனர். அவர் இரண்டு துண்டாகக் கிழே விழுந்தார்.

கண் ஒளி பெற்ற அரசவையைச் சேர்ந்தவர் அரசவைக்கு கொண்டு வரப்பட்டு நீர் உமது மார்க்கத்தை விட்டு விலகி விடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கவர் மறக்கவே ஓர் இரம்பத்தை அவரது தலையின் நடுவில் வைத்து அறுக்கப்பட்டது. அவரும் இரண்டு துண்டாகக் கிழே விழந்தார். பின்னர் அச்சிறுவர் கொண்டு வரப்பட்டு உமது மார்க்கத்தை விட்டு நீர் விலகிவிடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கு அவர் மறுத்துவிடவே, உடனே அரசர் தமது ஆட்களில் சிலரை அழைத்து இவரை இன்ன மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லுங்கள்! அம்மலையின் உச்சியை நீங்கள் அடைந்ததும், அவர் தம் மார்க்கத்தை விட்டு விலகி விட்டால் அவரை விட்டு விடுங்கள்! இல்லையென்றால் அவரை அங்கிருந்து தூக்கி வீசி எறிந்து விடுங்கள்!  என்று கூறினார்.

அவர்கள் அச்சிறுவரை இழுத்துச் சென்று மலையின் உச்சியில் ஏற்றினார்கள். அப்பொழுது அவர் ''இறைவா! நீ நாடியதைக் கொண்டு இவர்களை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!'' என துஆச் செய்தார். உடனே மலையில் கால் வழுக்கி அவர்கள் கீழே விழுந்தார்கள். பின்னர் சிறுவர் அரசரிடம் நடந்து வந்தார். அவரைப் பார்த்த அரசர் உம் தோழர்கள் (உம்முடன் வந்த நம் ஆட்கள்) என்ன ஆனார்கள்? என்று கேட்டார். அதற்கவர் அவர்களை விட்டும் அல்லாஹ் என்னைக் காப்பாற்றி விட்டான் என்று கூறினார்.

அரசர் அச்சிறுவரைத் தம் ஆட்கள் சிலரிடம்(மீண்டும்) ஒப்படைத்து ஒரு கப்பலில் ஏற்றி இவரை நடுக்கடலுக்குக் கொண்டு செல்லுங்கள்! அவர் அப்பொழுது மனம் திருந்தி தனது மார்க்கத்தை விட்டு விலகிவிட்டால். அவரை விட்டு விடுங்கள். இல்லாவிட்டால் அவரைக் கடலில் வீசி எறிந்து விடுங்கள்! என்று கூறினார். (அதன்படி நடுக்கடலுக்கு அச்சிறுவர் அழைத்துச் செல்லப்பட்டார்) அப்பொழுது அவர் ''இறைவா நீ நாடியதை கொண்டு இவர்களை விட்டும் என்னைப் பாதுகாப்பாயாக!'' என்று கூறினார். அதன்படி கப்பல் மூழ்க ஆரம்பித்தது. அரசரின் ஆட்கள்(மட்டும்) தண்ணீரில் மூழுகினர். பிறகு சிறுவர் அரசரிடம் வந்தார். அரசர், உம் தோழர்கள் (உம்முடன் வந்த நம் ஆட்கள்) என்ன ஆனார்கள்? என்று கேட்டார். அதற்கவர் அவர்களை விட்டும் அல்லாஹ் என்னைக் காப்பாற்றி விட்டான் என்று கூறினார். பின்னர் கூறினார், ''அரசரே! உமக்கு நான் ஏவுவது போல் நீர் செய்யாத வரை என்னை நீர் கொல்லமுடியாது'', என்று கூறினார். அது என்ன? என்று அரசர் கேட்டார். அதற்கவர் நீர் எல்லா மக்களையும் ஒன்று திரட்டி, என்னை ஒரு மரத்தில் கட்டி பிறகு எனது அம்புப் பையிலிருந்து ஓர் அம்பை எடுத்து அதனை வில்லின் நடுவில் வைத்து பின்னர் ''பிஸ்மில்லாஹ் ரப்பில் குலாமி'' (இச்சிறுவனின் இரட்சகனான அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று கூறி என் மீது அம்பை எறிவீராக! அவ்வாறு செய்தால் என்னைக் கொன்று விடலாம்! என்று கூறினார். அதன்படி அரசர் மக்களை ஓரிடத்தில் ஒன்று திரட்டி ஒரு மரக்கிளையில் அச்சிறுவரைக் கட்டிப் பின்னர் அவரது அம்புப் பையில் இருந்து ஒர் அம்பை எடுத்து வில்லின் மத்தியில் வைத்து''பிஸ்மில்லாஹி ரப்பில் குலாமி'' என்று எய்தார். அந்த அம்பு அவரது நெற்றிப் பொட்டில் பட்டது. (உடனே) அவர் தம் கையை நெற்றிப் பொட்டில் வைத்தார். அவர் இறந்து விட்டார். உடனே மக்கள், இச்சிறுவருடைய இரட்சகன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம், என்று கூறினர். அப்பொழுது அரசரிடம் சிலர் வந்து நீர் எதனை அஞ்சினீரோ அது அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிகழ்ந்து விட்டது. மக்கள் ஈமான் கொண்டு விட்டனர் என்று கூறினார். உடனே அரசர் பாதைகளின் வாயில்களில் (தெருமுனைகளில்) குழிகளைத் தோண்டுமாறு கட்டளையிட்டார். அதில் நெருப்பு மூட்டப்பட்டது. பின்ன யார் தம்(புதிய) மார்க்கத்தை விட்டு விலகவில்லையோ அவரை இந்நெருப்புக் குழியில் போடுங்கள் என்றார். அல்லது (புதிய) மார்க்கத்தை விட்டு விலகாதவரை நோக்கி இக்குழியில் விழுவீராக எனக் கூறப்பட்டது. அவர்களும் அவ்வாறே செய்தார்கள். (இறுதியாக) ஒரு பெண்மணி தம் குழந்தையுடன் வந்தாள். அந்த நெருப்புக் குண்டத்தில் விழுவதற்கு அஞ்சினாள். அதற்கு அக்குழந்தை, ''தாயே! நீ பொறுமை கொள்வாயாக! நிச்சயமாக நீ சத்தியத்தின் மீது இருக்கிறாய்'' என்று கூறியது. (முஸ்லிம் : ஸுஹைப்(ரலி)

ஸஹீஹ் முஸ்லிமிலிருந்து


Wednesday, August 17, 2011

உறவை இணைத்து வாழ்தல்


ஒருவர் தம் உணவு (வாழ்வாதாரம்) தமக்கு அதிகரிக்கப்படவும், தம் ஆயுள் தமக்கு நீட்டிக்கப்படவும் விரும்பினால் அவர் தம் உறவினரை இணைத்து வாழட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்.

நிச்சயமாக அல்லாஹ், படைப்புகளைப் படைத்து முடித்தபோது `உறவு எழுந்து நின்றது. (என்னைத்) துண்டித்துக் கொள்வதைவிட்டு உன்னிடம் பாதுகாப்புக் கோரும் இடம் இது என்று கூறியது. ஆம் உன்னைச் சேர்த்துக்கொள்பவனை நானும் சேர்ப்பேன். உன்னைத் துண்டிப்பவனை நானும் துண்டிப்பேன் என்பதை நீ திருப்தியுறவில்லையா? என்று அல்லாஹ் கேட்டான். திருப்திதான் என உறவு கூறியதும், உனக்கு அது உண்டு என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு, நீங்கள் விரும்பினால் (பின்வரும்) இறைவசனத்தை ஓதுங்கள் என்றும் கூறினார்கள்.

நீங்கள் பொறுப்பாளர்களாக வந்துவிட்டால் பூமியில் நீங்கள் குழப்பம் செய்திடவும், உங்களின் இரத்தத் தொடர்புடையவர்களை நீங்கள் துண்டித்துக் கொள்ளவும் விரும்புகிறீர்களா? (துண்டிக்கும்) அவர்களை அல்லாஹ் சபித்துவிட்டான். அவர்களைச் செவிடாக்கிவிட்டான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கி விட்டான். (47: 22-23) 
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

உறவு என்பது, அர்ஷைப் பிடித்துக்கொண்டு, என்னை இணைத்து வாழ்பவரை அல்லாஹ் இணைத்துக்கொள்வான். என்னைப் பிரித்துவிடுபவரை அல்லாஹ்வும் பிரித்துவிடுவான் என்று கூறும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

பிரதி உபகாரம் (உதவிக்கு உதவி) என வாழ்பவர், உறவை இணைத்து வாழ்பவர் அல்லர். எனினும் தன் உறவினர் தம்மைத் துண்டித்தாலும், இணைத்து வாழ்பவரே உறவை இணைத்து வாழ்பவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரலி), நூல்: புகாரீ

நபி (ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! சொர்க்கத்தில் என்னை நுழையச் செய்கின்ற, நரகத்திலிருந்து என்னைத் தூரமாக்கிவிடுகின்ற ஒரு செயலை என்னிடம் கூறுங்கள் என்று ஒருவர் கேட்டார். நீர் அல்லாஹ்வை வணங்குவீர்; எதையும் அவனுக்கு இணையாக்காதீர்; தொழுகையைப் பேணுவீர்; ஸகாத்தைக் கொடுப்பீர்; உறவினரை இணைத்து வாழ்வீர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: காலித் இப்னு ஸைத் அல்அன்ஸாரீ (ரலி), நூற்கள்: புகாரீ, முஸ்லிம்

உங்களுள் ஒருவர் நோன்பு துறந்தால், ஒரு பேரீத்தம் பழத்தால் நோன்பைத் துறக்கட்டும். அதுவே அபிவிருத்தி தரும். ஒரு பேரீத்தம் பழம் இல்லையென்றால், தண்ணீர் (மூலம் நோன்பு துறக்கட்டும்); அதுவே சுகாதாரமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஏழைக்குத் தர்மம் தருவது, ஒரு தர்ம(க் கூலி)தான். உறவினருக்குத் தர்மம் வழங்குவது இரண்டு (கூலி)களாகும். ஒன்று தர்மம்; மற்றொன்று உறவை இணைத்து வாழ்தல் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: சல்மான் இப்னு ஆமிர் (ரலி), நூல்: திர்மிதீ

அல்-குர்ஆன் தமிழாக்கம்

Saturday, August 13, 2011

காஃபிர்களுக்கு உதாரணம் .........


மூதாதையர்களின் மடமையை கண்மூடித் தனமாகப் பின்பற்றுபவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள்! “மேலும், ‘அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால், ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையம் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்; அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்; அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்”
 
(அல்-குர்ஆன் 2:170-171)

Islamic conference Live

Assalamu alaikum

One Day Islamic conference organised by New College Students at Makkah Masjid, Chennai is now live on 



http://adiraibbc.blogspot.com

Thursday, August 11, 2011

இஸ்லாம் அறிவியலுக்கு எதிரானதா?


ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காக எப்படிப் படைத்திருக்கின்றான்  என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன்:71-15)
இஸ்லாமிய மார்க்கம் அகிலத்தின் இரட்சகனான வல்ல அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட நெறியாகும். இந்த மார்க்கம் மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விசயங்களையும் மனிதனுக்குப் போதித்திருக்கின்றது. உலகம் அழியும் நாள்வரை மனிதர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் தீர்வுகளைக் கூறிக்கொண்டிருக்கிறது. காரணம் இந்த மார்க்கம் முழுமையான மார்க்கம். மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்திவிட்டதாக வல்ல இறைவன் அல்லாஹ் கூறுகின்றான்.


இன்றைய தினம் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கிவிட்டேன். மேலும் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகவும் தேர்ந்தெடுத்துள்ளேன். (அல்குர்ஆன்:5-3)

மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கின்ற பரிசுத்த குர்ஆன் மனிதன் எக்காலத்திலும் சந்திக்கின்ற மார்க்கம் சம்பந்தப்பட்ட விசயங்களானாலும் சரி அறிவியல் விசயங்களானாலும் சரி எல்லாவற்றையும்; விளக்கிக் கூறுகின்றது. மனிதன் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வணக்க வழிபாடு என்னென்ன என்பதைக் குறிப்பிடுகின்றது திருக்குர்ஆன். அதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை இறைத்தூதர் விளக்கிக் கூறியிருக்கின்றார்கள்.

இவ்வாறே ஒவ்வொரு காலத்திலும்  ஏற்படுகின்ற அறிவியல் மாற்றங்களைப் பற்றியும் திருக்குர்ஆன் அறிவிக்கின்றது. திருக்குர்ஆன் இறக்கப்பட்ட காலத்தில் இன்று நாம் கண்டுகொண்டிருக்கின்ற எந்த அறிவியல் வளர்ச்சியும் இருந்திருக்கவில்லை. ஆனால் அறிவியல் வளர்ச்சியில் மனிதன் ஈடுபடவேண்டுமென்று அன்றே இறைவன் மனிதனுக்குக் கட்டளையிட்டுவிட்டான்.

திருக்குர்ஆன் வசனங்களைப் படித்துப் பார்க்கும் போது இதை நம்மால் புரிய முடியும். மனிதன் தனது அறிவைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்யுமாறு தூண்டுகின்ற வசனங்களைச் சிந்தித்துப் பார்ப்பது இறைநம்பிக்கையாளர்கள் மீது கடமையாக இருக்கின்றது.

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காக எப்படிப் படைத்திருக்கின்றான்  என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான். (அல்குர்ஆன்:71-15)

அல்லாஹ் ஏழு வானங்களைப் படைத்திருக்கின்றான் என்றும் அதை அடுக்கடுக்காகப் படைத்திருக்கின்றான் என்றும் குர்ஆன் கூறுகிறது.  இந்த விசயத்தை நீங்கள் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டாமா என்று   மக்களைப் பார்த்து இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் கேட்டார்கள். இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தூதராக அனுப்பப்பட்டவர்தான் நூஹ்(அலை)  அவர்கள்.

அப்படியானால் மனிதன் அல்லாஹ்வுடைய படைப்பைச் சிந்தித்து ஆராய்ச்சி செய்யுமாறு ஆதிமுதலே இறைவன் கட்டளையிட்டுள்ளான் என்பது தெரியவருகின்றது. மேலும் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்! நிச்சயமாக வானங்களும்  பூமியும் முதலில் இணைந்திருந்தன என்பதையும்  அவற்றை நாமே பிரித்தமைத்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் நீரிலிருந்து படைத்தோம் என்பதையும் நிராகரிப்பாளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 21:30)

இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். வானில் தத்தமது வட்டவரையறைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.  (அல்குர்ஆன் 21:33)

வானங்கள், பூமி என்ற பிரபஞ்சத்தையும் அல்லாஹ் படைத்துள்ள மற்ற படைப்புகளையும் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?  (அல்குர்ஆன் 7:185)

சூரியன் தன் வரையறைக்குள் சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும் யாவற்றையும் நன்கு அறிந்தோனுமாகிய இறைவன் விதித்ததாகும். இது அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்.
இன்னும்  உலர்ந்து வளைந்த பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரை சந்திரனுக்கு நாம் பல நிலைகளை ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை நெருங்கிப் பிடிக்க முடியாது.

இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் தம் வட்ட வரையறைக்குள் நீந்தி வருகின்றன. (அல்குர்ஆன்:36:38-40)

இது போன்ற வசனங்களை வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனின் நூற்றுக்கணக்கான இடங்களில் சொல்கின்றான் என்றால் அவற்றைப் படித்துவிட்டுக் கடந்து செல்வதற்காக அல்ல. சிந்தித்து ஆராய்வதற்காகவும் அவற்றைத் தங்கள் வாழ்வில் கடைப்பிடிப்பதற்காகவுமே கூறுகின்றான்.

சிந்தனையைத் தூண்டுகின்ற இவை போன்ற வசனங்களையெல்லாம் ஆய்வு  செய்யக்கூடியவர்களும் அதிலிருந்து பயன்பெறக்கூடியவர்களும் பெரும்பாலும் முஸ்லிம் அல்லாதவர்களாகவே இருக்கின்றனர். அல்லாஹ்வுடைய படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து பயன்பெறுகின்ற பொறுப்பை மாற்றான் கையில் கொடுத்துவிட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவிற்கு அறிவியல் விசயங்களை நம்புவதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலும் முஸ்லிம் சமுதாயம் மிகவும் பின்னடைந்து இருக்கிறது.

குறிப்பாக அரபி மதரசாக்களில் குர்ஆன், சுன்னா கல்வியைக் கற்பவர்கள் குர்ஆன் கூறுகின்ற இவை போன்ற உண்மைகளைப் பற்றி ஆய்வதை விட்டும் கண்ணை மூடிக்கொள்கின்றனர். வளர்ந்து வருகின்ற அறிவியல் உலகத்தில் இஸ்லாம் எந்த வகையிலும் உண்மையான அறிவியலுக்கு மாற்றமானதில்லை என்பதை நிரூபிப்பதற்கு மார்க்கம் கற்ற அறிஞர்கள் முன் வரவேண்டும்.

நாம் அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்வராவிட்டாலும் அல்லாஹ்வுடைய படைப்புகளைப் பற்றி ஆய்வு செய்து வெளியில் கொண்டுவருகின்ற ஆராய்ச்சியாளர்களின் சரியான ஆய்வுகளை இஸ்லாத்திற்கு விரோதமில்லாதிருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொண்டு செயல்படவேனும் முன்வர வேண்டும்.

அவர்கள் திருக்குர்ஆனைச் சிந்தித்து ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
(அல்குர்ஆன்:4:82)
 

 

Wednesday, August 10, 2011

எழுத்துகளுக்கோ கருத்துகளுக்கோ காப்புரிமை கொண்டாடாதீர்!


No Copyright in Islam
எழுத்துகளுக்கோ கருத்துகளுக்கோ காப்புரிமை கொண்டாடாதீர்!
இஸ்லாம் மட்டுமே இறைவனுடைய மார்க்கம்: ''நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்''. (3:19)



ஆகவே இஸ்லாத்திலுள்ள எந்த விஷயத்தைப்பற்றியும் குறிப்பாக குர்ஆன் மற்றும் ஹதீஸிலுள்ள வசனங்களையோ கருத்துகளையோ பயன்படுத்தி கட்டுரையோ பிற ஆக்கங்களையோ உருவாக்கி இது எனக்கு மட்டும் சொந்தமானது என்று எவரும் சொந்தம் கொண்டாட முடியாது. அதற்கான உரிமை உலகிலுள்ள எவருக்கும் கிடையாது. அப்படி எவரேனும் கருதுவாரானால் அவர் ஒன்று அப்பட்டமான சுயநலவாதியாக இருக்க வேண்டும் அல்லது அறியாமையில் மூழ்கியிருப்பவராக இருக்க வேண்டும், கற்றறிந்த அறிஞராக இருந்தாலும் சரியே!

தீனை (மார்க்கத்தை) எடுத்துச் சொல்லும் எவரும் அதற்கான கூலியாக பணத்தை மட்டுமல்ல புகழை எதிர்பார்ப்பதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டதே! ஏனெனில் தீனுக்காக உழைக்கும்போது அதற்கான கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்ப்பதுதான் ஒரு உண்மையான முஸ்லிமுக்கு அழகு. உதாரணமாக ஒரு முஸ்லிம் இஸ்லாமிய மார்க்கம் குறித்த செய்திகளை வாய் மொழியாக (சொற்பொழிவாக) வெளியிடும்போது அவர்– தனது பேச்சுக்கு உரிமை கொண்டாடுவதை காணமுடியாது.

ஒரு மார்க்க சொற்பொழிவாளர் பேசியதை இன்னொருவர் வேறு இடத்தில் பேசும்போது அப்படியே எடுத்துப் பேசுவதை எவரும் தடைசெய்யும் நடைமுறை உலகில் எங்குமில்லை. அவ்வாறு இருக்கும்போது அதே பேச்சு, எழுத்து வடிவில் வரும்போது இந்த கட்டுரையோ - இந்த ஆக்கமோ எனக்கு மட்டும் சொந்தமானது என்று எவரேனும் சொன்னால்; இறைவன் வழங்கிய ‘இல்மு’ என்னும் அருட்கெடையை இவ்வுலக ஆதாயத்துக்காக அவர் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று தான் பொருள்.

கட்டுரையோ செய்தியோ ஒருவர் பெயரில் வெளியாகிறது எனில் அதில் தவறு இருந்தால் அந்த எழுத்தாளரிடம் சுட்டிக்காட்டுவதற்கு அது வசதியாக இருக்கும் என்கின்ற நோக்கத்தின் அடிப்படையில் ‘நிய்யத்’ வைத்து கட்டுரையாசிரியர் தனது பெயரை வெளியிடுவதுதான் உயர்ந்த பண்பாடாக இருக்க முடியும். அதைவிடுத்து தான் எழுதிய கட்டுரைக்கு தான் மட்டுமே உரிமையாளர் என்று கருதுவது சரியானதாகாது. ஏனெனில்மார்க்கக் கட்டுரைகள் எழுதும் எவரும் அல்லாஹ்வின் திருவசனத்தையோ அல்லதுஅவனது திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகளையோ, செய்தியையோ கலக்காமல் எழுதவோ, சொற்பொழிவாற்றவோமுடியாது.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் மவ்லானா, ஜகரிய்யாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய ‘அமல்களின் சிறப்பு’ எனும் நூலை எடுத்துக் கொண்டோமானால் அது பிரபலமானதற்கு காரணம் மவ்லானா அவர்களின் கருத்துக்கள் என்பதைவிட அதில் எடுத்தாளப்பட்டுள்ள இறைவசனங்களும், இறைத்தூதர் முஹம்மதுர்ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகளே என்பதை படிப்பவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். மவ்லான அவர்களை குறை காண வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. தனது ஆக்கங்கள் அனைத்தையும் சமுதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களது நூலில் எடுத்தாளப்பட்டுள்ள திருவசனங்களை தவிர்த்துவிட்டு அந்நூலைப் பார்த்தால் அதில் உள்ள விளக்கங்கள் சாதாரணமானவையே என்று கூட சொல்லலாம். (இதை படிக்கும் அவர்களின் அபிமானிகளுக்கு கோபம் வரலாம், ஆனால்) உன்னிப்பாக அதை படிப்பவர்களுக்கு அதை விட சிறப்பான விளக்கங்களை இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் ஏராளமான அறிஞர்களால் கொடுக்க முடியும் என்பதை மறுக்க முடியாது.ஒருவர் ஒரு மார்க்கக் கட்டுரையை எவ்வளவுதான் சிறப்பாக எழுதி இருந்தாலும் அதில் இடம்பெற்றிருக்கும் இறைவசனமும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொல்லும் சில இடங்களில் இடம்பெற்றிருந்தாலும்கூட அந்த கட்டுரையைஅழுத்தமாக தாங்கி நிற்பதே அந்த திருவசனங்களாகத்தான் இருக்கும் என்பதை படிப்பவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். அதுதான் மனிதனுடைய எழுத்துக்கும் இறைவனின் திருவசனங்களுக்கும் உள்ள வேறுபாடு.

யாஸீன் ஸூராவில் ‘இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை’ (என்றும் கூறினார்). (36:17) என்று இறைவன் கூறுகின்றான். இறைவனின் செய்தியை எடுத்துச்சொல்வது மட்டுமே நபியின் வேலை என்பதை அல்லாஹ்வே சுட்டிக்காண்பித்த பின்னர் அதன் விளைவுகளைப் பற்றியோ இலாப நஷ்டங்களைப் பற்றியோ எண்ணுவதற்கு எவருக்கு உரிமை இருக்க முடியும்?!

இதில் மிகப்பெரிய வினோதம் என்னவெனில் ''குர்ஆனை ஓதி கூலி பெறுவது இறைவனால் தடைசெய்யப்பட்டுள்ளது'' என்பதை அழுத்தமாக எடுத்துச் சொன்னவர்களே இன்று இறைவன் வழங்கிய ‘இல்மை(அறிவை)க் கொண்டு’ சொற்பொழிவின் மூலமோ, கட்டுரை எழுதுவதின் மூலமோ C.D., D.V.D.. போன்றவைகளில் பதிவு செய்து விற்று அதில் வரும் லாபத்தை - கூலியை (பணமாகவோ, புகழாகவோ) பெற நினைப்பது, எதிர்பார்ப்பது எவ்வாறு சரியான செயலாக இருக்க முடியும்?
தீன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் எழுத்து வடிவில் இருந்தாலும் சரி சி.டி. அல்லது டி.வி.டி. வடிவில் இருந்தாலும் சரி, அதை எவரேனும் ஒரு முறை விலை கொடுத்து வாங்கியபின் அதனை தன் சுற்றத்தார்களும் கேட்கவேண்டும் என்று விருப்பப்படும்போது அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவு (Copy) எடுக்கலாம் என்பதே ஷரீஅத்தின் சட்டம். (கீழே உள்ள ஆங்கிலக் விளக்கத்தைக் காண்க). ஆனால் அதனை விற்பனை செய்து இலாபம் அடைவது மட்டுமே தவறு - கூடாது.

நமது நாட்டிலுள்ள ஒரு சிலர்; இதுபோன்று C.D., D.V.D..க்களை பதிவு செய்வது, கட்டுரைகளை மற்றவர்களும் படித்துப் பயனடைய வேண்டும் எனும் நோக்கில் எடுத்து பிரசரிப்பது தவறு என்று தங்கள் சுய ஆதாயத்துக்காக ஃபத்வா கொடுக்கக்கூட துணிவதைக் காணும்போது அவர்களின் தீன் சேவையில் சுயநலத்தின் சாயல்தான் தெரிகிறது.
தன் மூலம் வெளியாகும் எந்தவொரு தீன் சம்மந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, தீனை நிலைநாட்டுவதற்கு அல்லாஹ் நம்மை ஒரு கருவியாக ஆக்கினானே என்று அகமகிழ்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி கூற வேண்டுமேயொழிய எனது கருத்துக்கு நான் தான் உரிமையாளன் என்று எந்த ஒரு இக்லாஸான, விபரமறிந்த, உண்மையான முஸ்லிமும் சொல்லத்துணிய மாட்டார்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் ‘எங்களது பத்திரிகைதான் நம்பர் ஒன்’என்று சுயதம்பட்டம் அடித்துக்கொள்வதை காண முடிகிறது. இவையெல்லாம் அவர்களது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு முஃமினும் தீனுக்காக உழைக்க வேண்டியது கடமையாக இருக்கும் அதே வேளையில் அதற்கான கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். இந்த உலகில் கிடைக்கின்ற பணம், புகழ் இவையணைத்தும் மறுமையில் நமக்குக் கிடைக்கக்கூடிய நற்கூலியை இழக்கும்படி செய்துவிடலாம். ‘மறுமைக்கு முன்பாக இவ்வுலக வாழ்வு அற்பமானது’ என்று இறைவன் ஸூரத்துத் தவ்பாவில் கூறுவதை நினைவில் கொள்வோம். இவ்வுலகில் செய்கின்ற நற்காரியங்களுக்கு மறுமையில் இறைவன் வழங்க இருக்கும் மகத்தான கூலியை இழக்க எவருக்கேனும் மனம் வருமா? சிந்திப்போம் சீர்பெறுவோம்.

சுவனவாசிகளில் பெரும்பலானோர் இவ்வுலகில் வாழுகின்ற காலத்தில் மிகவும் சாதாரணமானவர்களக, மற்றவர்களால் பெரும்பாலும் அறியப்படாதவர்களாக (முக்கியத்துவம் அற்றவர்களாக)வே இருப்பார்கள் எனும் கருத்தை எடுத்தியம்பிய நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகள் நமது நமது காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். அவ்வாறு இருந்தால்தான் இவ்வுலகின் வீணான புகழுக்கும் செல்வத்துக்கும் மயங்காதவர்களாக நம்மை நெறிப்படுத்த முடியும். இல்லையெனில் திருமறை குறிப்பிடும் மாயக்காரனான ஷைத்தானின் வலையில் வசமாக சிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்பதை நினைவில் கொள்வோம்.

பொதுவாக எவரும் தன்னையோ தன்னைச்சார்ந்தவர்களையோ நாங்கள்தான் நம்பர் ஒன் என்றோ நாங்களே சாதனையாளர்கள் என்றோ, நாங்களே உயர்ந்தவர்கள் என்றோ கனவிலும் எண்ணாதீர்கள். ஏனெனில் ‘மேலே செல்பவரை கீழே இழுத்து விடுவது அல்லாஹ்வின் கடமைகளில் ஒன்றாக இருக்கிறது’ எனும் கருத்துள்ள நபிமொழி ஒன்று உண்டு. ஆகவே எந்த முஃமினும் தன்னை மற்றவர்களைவிட உயர்வாக எண்ண வேண்டாம். ஒவ்வொருவருடைய உண்மையான எண்ணத்தையும் அந்தரங்கத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே! அவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன். அவன் மட்டுமே என்றைக்கும் எப்போதும் ‘நம்பர் ஒன்’னுக்கும் உயர்வான அந்தஸ்துக்கும் நிலையான, நிரந்தரமான உரிமையாளன். அவனுக்கு முன்பாக நாமெல்லோரும் அடிமைகள் எனும் எண்ணம்தான் நம்மிடம் மிகைத்திருக்க வேண்டும்.

காரணம்,
நமக்கு வேதத்தைக் கற்றுக்கொடுத்து, நம்மைத் தூய்மைப்படுத்துவதற்காக (ஸூரா ஆல இம்ரான்) - ஏக இறைவனால் அகிலத்தின் அருட்கொடையாக அனுப்பி வைக்கப்பட்ட இறைத்தூதர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை அல்லாஹ்வின் அடிமை என்று சொல்வதில்தான் பெருமையடைந்தார்கள். அவர்களைப் பின்பற்றக்கூடிய, பின்பற்றவேண்டிய நாமும் நம்மை அந்த ஏக இறைவனின் அடிமையிலும் அடிமையாகக் கருதி மூச்சிருக்கும் வரை புகழுக்கும் பெருமைக்கும் ஆசைப்பட்டு ஷைத்தானின் வலையில் வீழ்ந்து விடாமல் இறைவனின் கனிவான பார்வை நம்மீது விழுமாறு இறையச்சத்துடன் இறையாதரவுடன் வாழ்வோம்.
அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

கட்டுரை ஆக்கம்: எம்.ஏ. முஹம்மது அலீ,


நன்றி:http://www.nidur.info/



காப்புரிமை என்பது முஸ்லிமல்லாதவர்களின் செயல் என்பதை அறிய கீழுள்ளஆங்கில கட்டுரையை படியுங்கள்.

No Copyright in Islam
As-salamu alaykum,

One of the questions quite often asked of us, is regarding the copyright of Islamic materials.
Point 1-
No Intellectual Copyright

First and foremost we wish to point out that there is no such thing as intellectual copyright in Islam i.e. a person cannot quote Quran and Sunnah or anything related to this deen and claim it for himself, as this deen belongs to Allah (swt),

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الإِسْلاَمُ
Truly, the religion with Allah is Islam. (Aali Imran 3:19)
We are commanded to convey this deen, the Messenger (saw) said in a hadith collected in Sahih Al Bukhari,
بَلِّغُوا عَنِّى وَلَوْ آيَةً
"Convey from me even one verse"
and Allah says,
وَمَا عَلَيْنَا إِلاَّ الْبَلاَغُ الْمُبِينُ
"And our duty (i.e. the Messengers) is only to convey plainly (the Message)." (Ya-Sin 36:17)
The reward we seek for conveying this deen should be sought from Allah (swt).
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْر ٍ إِنْ أَجْرِي إِلاَّ عَلَى رَبِّ الْعَالَمِينَ
"No reward do I ask of you for it (my Message), my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinns and all that exists). (Ash-Shu'ara 26:109)

Point 2 -

The Right of Disposal

Secondly the confusion most people have is that one may be compensated financially for producing a CD for his effort in production etc, however once the product is brought by the buyer he has the right of disposal to do as he wishes with this CD, DVD, book etc. This includes to copy the material and distribute it freely if he wishes. The original seller cannot stipulate any conditions on the buyer once the goods has left his hands.
Point 3 -
 Copyright is an innovation of the Non-Muslims

If we look to our Islamic History we do not find our scholars copyrighting their works, rather they made it available for the Ummah so that they could benefit from the knowledge.
Unfortunately with the age of technology, some Muslims have started to practice that which never existed in Islam and are following the innovation (bidah) of copyright.

We advise you listen to this lecture by Sheikh Feiz Muhammad which clarifies the points mentioned above.
For listen the lecture by Sheikh Feiz Muhammad Please Click : 
Jazakkallahu Hairan  http://www.missionislam.com/copyright.html



http://nidurseasons.blogspot.com/2011/08/blog-post_10.html

arrest subramanya swamy-online petition


Dear All,

 
Subramnai Swami the political orphan has written an article in DNA which demands the following:
  • To remove the masjid in Kashi Vishwanath temple and the 300 masjids.
  • Implement the uniform civil code, 
  • Declare India a Hindu Rashtra in which non-Hindus can vote only if they proudly acknowledge that their ancestors were Hindus.
  • Enact a national law prohibiting conversion from Hinduism to any other religion. 
  • Re-conversion will not be banned. 
  • Propagate the development of a Hindu mindset.

It is a duty of all Indians who believe in secularism and democracy to respond to this anti national article.


Click here to sign the online petition

Subramani Swamy Anti national article in DNA 

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு - 13.08.2011 - இடம் : நியூ காலேஜ்

ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு

நாள் : 13.08.2011

இடம் : நியூ காலேஜ் காம்பஸ், ராயபேட்டை, சென்னை-14

நேரம் : காலை 9.30  மணி முதல் மாலை 6.30 மணி வரை

இப்தார் விருந்து ஏற்பாடு செய்யபட்டுள்ளது

பெண்களுக்கு தனி இட வசதி உண்டு

பேச்சாளர்கள் :

1 அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
   தலைப்பு : இஸ்லாமே உண்மை நெறி (கேள்வி பதில்களுடன்)

2  மௌலானா சம்சுதீன் காசீமி
    தலைப்பு : சமூக பிரச்சனைகளும் தீர்வுகளும்

3  மௌலவி சதீதுத்தீன் பாகவி
    தலைப்பு : இம்மையும் மறுமையும்

4  மௌலவி இல்யாஸ் ரியாஜி
    தலைப்பு : சமூக ஒற்றுமை

5  மௌலவி பக்ருதீன் பாகவி
   தலைப்பு : இஸ்லாமும் முஸ்லீம்களும்

6  மௌலவி அப்துல் பாசித் அல் புஹாரி
    தலைப்பு : எங்கே அந்த சமூகம்?

உமராலும் முந்தமுடியாத உத்தமர் இவர்!


உமர்[ரலி] அவர்கள் அறிவித்தார்கள்;
அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் தர்மம்  செய்யுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள். அதற்கு ஏற்றார்போல் என்னிடம் பொருளாதாரமும் இருந்தது. ''ஏதேனும் ஒரு நாளில் அபூபக்கரை நான் முந்த வேண்டுமாயின், இந்த நாளில் முந்திவிட வேண்டியதுதான்'' என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். எனவே என் பொருளாதரத்தில் நான் பாதியைக்  கொண்டு வந்தேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், உமரே! உமது குடும்பத்திற்காக என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். 'இதுபோன்ற ஒரு பங்கை வைத்து விட்டு வந்துள்ளேன்' என்று நான் பதிலளித்தேன். அபூபக்கர்[ரலி] அவர்கள் தன்னிடமுள்ள பொருளாதாரம் அனைத்தையும் கொண்டு வந்து விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள், அபூபக்ரே! உம்முடைய குடும்பத்திற்காக எதை விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவர்களுக்காக விட்டு வந்திருக்கிறேன்' என்று  பதிலளித்தார்கள். ''அல்லாஹ்வின் மீது ஆணையாக!எதிலும் அபூபக்ரை முந்த முடியாது என நான் எண்ணிக்கொண்டேன்.

நூல்; திர்மிதி, அபூதாவூத்.

இந்த பொன்மொழியை நாம் கவனிக்கும் வேளையில், அருமை சஹாபாக்கள் எதற்கு போட்டி போட்டுள்ளார்கள் என்பதை முதலாவதாக நம்மால் அவதானிக்க முடிகிறது. நம்மில் பெரும்பாலோர் நமது சக சகோதரரை  செல்வம் உள்ளிட்ட உலக விஷயங்களில் முந்த முற்படுகிறோம். அவரை விட எங்களுக்குத் தான் வலிமை  அதிகம் என்று காட்ட முற்படுகிறோம். இவ்வாறன உலக விஷயங்கள் எல்லாம் சஹாபாக்களுக்கு இரண்டாம்பட்சமாக, இறைவனின் பொருத்தம் ஒன்றே முதலாவதாக தோன்றியதால் தான் செல்வங்களை  அல்லாஹ்வின் பாதையில் வாரி வழங்குவதில் ஒருவரை ஒருவர் போட்டி  போட்டுக் கொண்டனர். அதிலும் மிக உயர்வான தோழரான அபூபக்ர்[ரலி] அவர்களை, மற்றொரு உயர்வான நபித் தோழர் உமர்[ரலி] அவர்களால் கூட எந்த விஷயத்திலும் நன்மையில் முந்த முடியவில்லை எனும் நிலையில், நாமெல்லாம் நமது அமல்களெல்லாம் இந்த நபித் தோழர்களின் அமல்களோடு ஒப்பிடுகையில் கடலில்  கரைத்த பெருங்காயம் போன்று காட்சியளிக்கிறது. ஆனாலும் நபித் தோழர்கள் வாழ்வில் ஏதேனும் கறையோ, குறையோ தென்படாதா? என கண்ணில் எண்ணெய் ஊற்றி தேடுவதில் மட்டும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நம்மில் பலரின் நடவடிக்கைகள் காட்டுகின்றன. 

எல்லாம் வல்ல அல்லாஹ், அபூபக்ர்-உமர்[ரலி-அன்ஹும்] ஆகியோரைப் போன்று, நாமும்  நன்மையில் போட்டி போடக்கூடியவர்களாக ஆக்கியருள்வானாக!

-- 

Monday, August 8, 2011

தடை செய்யப்பட்ட தீமைகள்.


தொழுகையில் இமாமை முந்துதல்!
முஹம்மது நபி صلى... الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலழ்ழாலீன்’ என்று கூறினால் நீங்கள் “ஆமீன்” என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், ‘நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறினார்கள். மேலும், ‘இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள்.

கொலை செய்தல்!
“எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்வானாயின் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள்கிறான்; இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான்” (அல்-குர்ஆன் 4:93)

‘நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்’ (அல்-குர்ஆன் 5:32)

விபச்சாரம் செய்தல்!
 “நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது” (அல்-குர்ஆன் 17:32)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘மூன்று நபர்கள், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப்படுத்தவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுமுண்டு. அவர்கள் விபச்சாரம் புரியும் வயோதிகன், பொய்யனான அரசன், பெருமையடிக்கும் ஏழை.” (ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம்)

ஓரினப் புணர்ச்சி (ஆணும் ஆணும் புணர்ச்சி) செய்தல்!
 “மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: ‘நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள். நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழி மறி(த்துப் பிரயாணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கின்றீர்கள்; உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்கவற்றைச் செய்கின்றீர்கள்’ என்று கூறினார்; அதற்கு அவருடைய சமூகத்தாரின் பதில்: ‘நீர் உண்மையாளரில் (ஒருவராக) இருப்பின் எங்கள் மீது அல்லாஹ்வின் வேதனையைக் கொண்டு வருவீராக’ என்பது தவிர வேறு எதுவுமில்லை” (அல்-குர்ஆன் 29:28-29)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘லூத் (அலை) சமுதாயத்தினர் செய்த செயலை செய்யக்கூடியவர்களைக் கண்டால் செய்தவனையும் செய்யப்பட்டவனையும் கொன்றுவிடுங்கள்’ அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாம் : அஹ்மத்.

வட்டி வாங்குதல், கொடுத்தல், வட்டி சம்பந்தமான தொழில்களில் பணிபுரிதல்!

“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் – முதல் – உங்களுக்குண்டு; (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்” (அல்-குர்ஆன் 2:278-2:279)

“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பேரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.

மது அருந்துதல்!
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)

மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

சூதாட்டத்தில் ஈடுபடுதல்!

“(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)

பொய் பேசுதல்!

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

திருடுதல்!

“திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்” (அல்-குர்ஆன் 5:38)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘திருடுபவனை அல்லாஹ் சபிப்பானாக! ஒரு முட்டையைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும். கயிற்றைத் திருடினாலும் அவனுடைய கை துண்டிக்கப்படும்’ அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி

லஞ்சம் கொடுத்தல், லஞ்சம் வாங்குதல்!

“அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்” (அல்-குர்ஆன் 2:188)

‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா.

பொய்சாட்சி கூறுதல்!

அபூபக்ரா (ரலி) பெரும் பாவங்களில் மிகப்பெரும் பாவத்தை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள்! அதற்கு நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள் என்றோம். அதற்கவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நிந்திப்பது, என்று கூறினார்கள். சாய்ந்திருந்த அவர்கள் நிமிர்ந்து உட்கார்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்! பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான், அறிந்து கொள்ளுங்கள் பொய் சொல்வதும் பொய்சாட்சி கூறுவதும் தான்’ என்று கூறினார்கள். ‘நிறுத்த மாட்டார்களா? என நாங்கள் கூறும் அளவுக்கு அவற்றை திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்கள். ஆதாரம் : புகாரி.

அவதூறு கூறுதல்!
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள். (அல்-குர்ஆன் 24:4)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

அநாதைகளின் சொத்துக்களை அபகரித்தல்!

“நிச்சயமாக, யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான் – இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக) நெருப்பிலேயே புகுவார்கள். (அல்-குர்ஆன் 4:10)

‘அழிக்கக் கூடிய ஏழு விஷயங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது நாங்கள் அவை என்னென்ன? என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், சூனியம் செய்தல், நியாயமாகவேயன்றி அல்லாஹ் ஹராமாக்கிய உயிரை கொலை செய்தல், வட்டியின் மூலம் சாப்பிடுதல், அனாதைகளின் பொருளை சாப்பிடுதல், போர்க்களத்தில் புறமுதுகிட்டு ஓடுதல், கற்புள்ள பேதைப் பெண்களின் மீது அவதூறு கூறுதல்’ என்று பதிலளித்தார்கள்.

கர்வம் கொள்ளுதல்!

“நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 4:36)
 அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: ‘எவன் தன் தலைமுடியை வாரி அழகுபடுத்தி நல்ல ஆடைகளை அணிந்து கர்வத்துடன் தலை நிமிர்ந்து தன்னில் தானே பூரிப்பு அடைந்த வண்ணம் நடந்து செல்கின்றானோ அவன் பூமியில் திடுமெனச் செருகப்பட்டு மறுமை நாள் வரை அதன் அதலபாதாளத்தில் முட்டி மோதி மூழ்கடிக்கப்பட்டு விடுபவன் போலாவான்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

தற்பெருமை, ஆணவம் கொள்ளுதல்!

‘(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்-குர்ஆன் 31:18)

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ”எவர் தன்னைப் பற்றி பெரிதாக எண்ணுகிறாரோ அல்லது தனது நடையில் ஆணவம் கொள்கிறாரோ அவர் அல்லாஹவை சந்திக்கும் நாளில் அல்லாஹ அவர் மீது கோபம் கொண்ட நிலையில் சந்திப்பார்.” (ஆதாரம் : அல் அதபுல் முஃப்ரத்)

அளவு நிறுவையில் மோசடி செய்தல்!

“அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா? (அல்-குர்ஆன் 83:1-4)

“மேலும், வானம் – அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான். நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக. ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 55:7-9)

பிறர் சொத்தை அபகரித்தல்!

அபூ ஸலமா(ரலி) அறிவித்தார்கள் : “எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ‘ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்” என்று கூறினார்கள்.

மோசடி செய்தல்!

“எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்” (அல்-குர்ஆன் 3:161)

“நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (அல்-குர்ஆன் 8:58)

அநீதி இழைத்தல்!

“அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை” என்று நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி), ஆதாரம் : புகாரி.

புறம் பேசுதல்!

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!