அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும்,
வருகிற ஜனவரி 14, 15 தேதிகளில் நம்மூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கான வேலைகளை அதிரைநிருபர் குழு, அதிரை இஸ்லாமிக் மிஷன் மற்றும் அதிரை இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்து வருகிறோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏன்?
கல்வி விழிப்புணர்வு மாநாடு நடந்த வேண்டும் என்று 4 மாதங்களுக்கு முன்பே அன்பு சகோதரர்களிடமிருந்து பல கருத்துக்கள் கேட்டறியப்பட்டது, முஸ்லீம்கள் எல்லாவையிலும் பின்னதங்கியுள்ள நிலை தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலும் இது இருந்து வருகிறது இதில் அதிரைப்பட்டினம் மட்டும் விதிவிலக்கா என்னா? கல்வி, அரசுவேலை, இந்தியாவில் வேலை போன்றவற்றில் தகுந்த வழிகாட்டல்கள் இல்லாத காரணத்தால் பின்னடைவில் இருக்கும் நம் சமுதாயத்தை தட்டி எழுப்ப கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு, அதிரையில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடத்தப்பட உள்ளது. இன்ஷா அல்லாஹ்.
கல்வி விழிப்புணர்வு மாநாடு ஏன்? இதை நடத்துவதால் என்ன பயன்? மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஏன் கலந்துக்கொள்ள வேண்டும்? என்று பலர் மனதில் தோன்றலாம், அவற்றிற்கான விளக்கத்தினை அனைவருக்கும் விளங்கும்படி எடுச்சொல்வது எமது கடமை.
தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் நம்மூர் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் பள்ளிகள் மிக பழைமையானவை. இதில் படித்து பயனடைந்தவர்கள் பலர் என்பது உண்மை. தமிழகத்தில் நீண்ட காலமாக இஸ்லாமியர்கள் நடத்தும் ஆங்கில வழி பள்ளிகூடங்களில் இமாம் ஷாஃபி பள்ளியும் ஒன்று. இதில் பயனடைந்தவர்கள் பலர் இன்று நல்ல நிலையில் உள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆனால் கடந்த 20 வருடங்களில் நம்மூர் கல்வி நிறுவனங்களின் கல்விதரத்தின் அடிப்படையில் நாம் கொஞ்சம் அலசிப்பார்த்தால், நமக்கு கிடைப்பது கீழே குறிப்பிட்டுள்ள சில கேள்விகள் மட்டுமே.
எத்தனை முஸ்லீம் மருத்துவர்கள் உருவாகினார்கள்? எத்தனை பேர் அதிரையில் உள்ள மருத்துவமனைகளில் வேலை செய்கிறார்கள்?
எத்தனை பெண் முஸ்லீம் மருத்துவர்கள் உருவாகினார்கள்?
எத்தனை பெண் ஆசிரியர்கள் உருவாகினார்கள்?
எத்தனை கல்லூரி ஆசிரியர்கள் உருவாகினார்கள்?
எத்தனை பேர் அரசு வேலைகளுக்கு சென்றார்கள்?
எத்தனை பேர் IAS IPS IFS ஆக உருவானார்கள்? எத்தனைபேர் இது தொடர்பான தேர்வுகளைப் பற்றியாவது அறிந்துள்ளார்கள்?
எத்தனை வக்கீல்கள் உருவாகினார்கள்? இதில் எத்தனைப் பேர் நம் சமுதாயத்துக்காக நீதிமன்றங்களில் வாதாடுகிறார்கள்?
எத்தனை பேர் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு படிக்க சென்றார்கள்?
இன்னும் நிறைய கேள்விகள் நீண்டுக்கொண்டே போகும்.
மேல் சொல்லப்பட்டவைகள் அதிரைவாசிகள் மற்றும் முஸ்லீம்களிடம் நம்மால் கேட்கப்படும் கேள்விகளே. பதில் இருக்குமா என்றால், அது குறைவே... எந்த குறிக்கோள்களும் இல்லாமல் செல்லும் நம் சமுதாய மக்களின் பாதை (எதிர்காலம்) எங்கே செல்கிறது? என்றாவது சீரியசாக சிந்தித்திருக்கிறோமா?
சரி நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும், இனியாவது கொஞ்சம் சுதாரிக்க வேண்டாமா? சுதாரித்தே ஆகவேண்டும், இல்லையென்றால் காலம் போரப்போக்கில் வருங்கால சமுதாயத்தின் நிலை இஸ்லாமிய நிலையிலிருந்து தடுமாறி, ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சிக்கும் அடக்குமுறைக்கு அடிபணிந்துக்கொண்டிருக்க போவது தொடரத்தான் போகிறது. அல்லாஹ் காப்பாத்துவானாக.
அதிரையில் நடக்கவிருக்கும் கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சிறந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டல் நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளது, தமிழகத்தின் தலைச்சிறந்த மார்க்க பற்றுள்ள கல்வியாளர்கள் வருகைத்தர உள்ளார்கள் இவர்களின் அனுபவங்கள் ஆலோசனைகள் நிச்சயம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் ஹுசைன் கல்லூரி பேராசிரியர். டாக்டர். ஆபிதீன் அவர்களும், தமிழகத்தில் கல்வி விழிப்புணர்வுக்கு புகழ் பெற்ற CMN சலீம் அவர்களும் கலந்துக்கொள்கிறார்கள். இம்மாநாட்டில் சொல்லப்படும் கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டல்கள் நிச்சயம் நல்ல பயனுல்லதாக இருக்கப்போகிறது. இன்ஷா அல்லாஹ் நிச்சயம் இருக்கும்.
இனி, நம் சமுதாயத்தில் குறிப்பாக அதிரை போன்ற முஸ்லீம் ஊர்களில் நிறைய மருத்துவர்கள், IAS ஆபீசர்கள், IPS ஆபீசர்கள், IFS ஆபீசர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், உயர் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் என்று மிகப் பெரிய பட்டாலத்தை உருவாக்க வேண்டும். இதற்கான சந்தர்பத்தை அதிரையில் நடைப்பெற உள்ள கல்வி விழிப்புணர்வு மாநாடு உருவாக்கப்போகிறது. அன்பான மாணவ, மாணவிகளே, பெற்றோர்களே இந்த அறிய சந்தர்பத்தை பயன்படுத்தி கல்வியில் ஆர்வமுள்ள அனைவரும் வந்து கலந்துக்கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
-- தாஜுதீன்
No comments:
Post a Comment