Saturday, January 28, 2012

ஏரிப்புறக்கரை தலையாறி ஆறுமுகம்


நமதூரின் வீட்டுமனைகள் நிலவில் இடம் வாங்கிப் போடும் விலைக்கு உயர்ந்ததற்கு பல்வேறு காரணிகள் உண்டு. குறிப்பாக சில,

1. பெண்ணுக்கு வீடு எனும் இஸ்லாத்திற்கு முரணான வரதட்சணை.
2. திடீரென பெருகிவிட்ட நில புரோக்கர்கள்.
3. கருணாநிதியில் இலவச நிலத் திட்டம் என பட்டியல் தொடர்ந்தாலும் இன்னுமொரு அதிபயங்கர காரணமும் உள்ளது. அது அல்ல அவர்,
4. ஏரிப்புறக்கரை தலையாறி ஆறுமுகம்

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் நிஜம்.

ஆளை நேரில் பாருங்கள் யாருமே நம்ப மாட்டார்கள் இந்த அப்பாவியா? சே;சசே இருக்காது என்பார்கள்.

அவர் வீட்டை நேரில் பாருங்கள், மூளையுடைய எவனும் சொல்ல மாட்டான் அவரை குடிசை வீட்டு கோடீஸ்வரன் என்று.

அதிகாலை 6 மணிக்கு அவர் வீட்டிற்கு சென்று பாருங்கள், பக்திப்பழமாக பூஜைகளில் 1 மணி நேரத்திற்கு மேல் ஈடுபட்டிருப்பார், இந்த பக்திமான் வேஷம்  கடவுளை ஏமாற்றவா அல்லது வெளியே கால்கடுக்க அவரை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களை ஏமாற்றவா என்பது விடைகாண முடியா வினா!

ஆனால் ஒன்று மட்டும் நிஜம், அந்த பூஜை நேரத்தில் மட்டும் தாங்க அவர் நல்லவர், யாரையும் ஏமாற்றுவதில்லை. அதற்கப்புறம் வரி செலுத்துவோரை வஞ்சித்து அரசாங்க சம்பளத்தையும் வாங்கிக் கொள்வார்.

அவர் மூலம் ஆக வேண்டிய நில அளவை போன்ற காரியங்களுக்காக போய் அழைத்துப் பாருங்கள், நாளொரு சாக்குப்போக்குகள் சாதரணமாக வந்து விழும், கலெக்டர் ஆபீஸ் போறேன், தாசில்தார் ஆபீஸ் போறேன் என மாதக்கணக்கில் இழுத்தடிப்பார். அதையும் மீறி கெஞ்சியோ கொஞ்சி அழைத்துப் பாருங்கள் வாரக்கணக்கில் இழுத்தடிப்பார். அதையும் மீறி அவர் வந்து விட்டால் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நமது மனைக்கோ நமது பக்கத்து மனைக்கோ சம்பந்தமில்லாத அந்நியர்கள் சிலர் நமக்கு முன்பே ஆஜராகியிருப்பார்கள் இவர்களை நன்றாக கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் இவர்கள் தான் நம்முடைய மனைக்கு தலையாறி ஆறுமுகத்தின் கைங்காரியத்தால் வில்லனாக வில்லங்கம் செய்ய இருப்பவர்கள்.

ரியல் எஸ்டேட் புரோக்கர் குழுவாக வலம் வரும் சிலருக்கு ஆறுமுகத்தின் ஆசி எப்போதும் உண்டு, ஊரில் இருந்த பெரும்பாலான அரசு புறம்போக்கு நிலங்களும் இந்த கும்பலுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டு களவு போயிருக்கக்கூடும், மாவட்ட நிர்வாகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? நடவடிக்கை எடுக்குமா? 

கடந்த திமுக ஆட்சியே இந்த நிலத்திருட்டுக் கும்பலின் பொற்காலம் எனலாம், ஏனெனில் கருணாநிதி கொண்டு வந்த இலவச நிலத் திட்டமே புறம்போக்கு நிலங்களை பட்டியலிட்டு காட்டியது. இந்த இலவச நிலங்களை முறைகேடாக பெற்றவர்களை கண்டறிவதுடன் இதில் ஆறுமுகத்தின் திருவிளையாடல் என்ன என்பதையும் கண்டறிய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

நமக்கு சொந்தமான மனைக்கு பக்கத்தில் ஏதாவது சிறிய துண்டு புறம்போக்கு நிலம் இருந்தால் உடன் நடவடிக்கையில் இறங்கி உங்கள் மனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் ஆறுமுகத்தின் உதவியோடு உங்கள் மனையின் ஒரு பகுதியை போலி ஆவணங்களை உருவாக்கி, களவாடி புறம்போக்குடன் இணைத்து மூன்றாவது பார்ட்டிக்கு விற்றுவிடுவார்கள் பின்பு வாங்கியவரும் நாமும் கோர்ட், கேஸ் என்று அடித்து கொண்டு தெருவில் நிற்க வேண்டும்.

பட்டுக்கோட்டையிலிருந்து நாம் முறைப்படி கட்டணம் செலுத்தி சர்வேயர்களை அழைத்து வந்தாலும் தலையாறி ஆறுமுகம் தன் உள்குத்து இருக்கும் மனைக்கு அவர் வரவே மாட்டார், மனையை அளக்க கடைசி வரை ஒத்துழைப்பும் தர மாட்டார்.

இப்போது சொல்லுங்கள், நம்மூர் மனை விலையேற்றங்களுக்கு தலையாறி அறுமுகமும் ஒரு காரணமா?  இல்லையா?

ஆறுமகத்தின் மீது துறைசார் நடவடிக்கைகான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன, மேலும் என்னைப் போன்று பாதிக்கப்பட்டோர் யாருமிருந்தால் உடன் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு புகார் அனுப்பும்படியும், விழிப்புணர்விற்காக இணையத்தில் பதியவும் வேண்டுகிறேன்.

டெய்ல் பீஸ்: ஆறுமுகத்திற்கு நெருக்கமான புரோக்கர் கும்பலைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய நிலத்தில் பள்ளிவாசல் ஒன்றை கட்டப்போகிறராம். ஆறுமுகத்தின் அதே டெக்னிக், தினமும் 1 மணி நேரம் பூஜை செய்து விட்டு எந்த அக்கிரமம் செய்தாலும் கடவுள் கண்டு கொள்ளாது என்று நினைப்பதை போல் நில வில்லங்கம் செய்து விட்டு அல்லாஹ்விற்காக பள்ளிவாசலை கட்டி கொடுத்து விட்டால் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என நினைக்கிறார் போலும், சகோதரா! விலகிக் கொள், அல்லாஹ்வின் தண்டனையை நாம் யாரும் தாங்க முடியாது.

முஹமது அமீன்
பிலால் (ரலி) நகர்
ஏறிப்புறக்கரை ஊராட்சி

No comments:

Post a Comment

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!