ஊழல் ஒழிப்பு, வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள இந்தியர் களின் கறுப்புப் பணம் மீட்பு உட்பட அதிரடிக் கோரிக்கைகளுடன் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது ஓர் உண்ணாவிரதப் போராட்டம்.
யோகா குருவான பாபா ராம்தேவுடைய முதல் கட்டப் போராட்டம் பாதியிலேயே முடிந்தாலும், நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது. ஆனால், அவருடைய போராட்டம் ஊழல் ஒழிப்பைவிடவும் அவரைப் பற்றிய விவாதங்களை அதிகம் உருவாக்கி இருப்பதுதான் வேடிக்கை!
ராம்தேவ் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இது முதல் தடவை அல்ல! பதஞ்சலி மரபின் அடிப்படையில் யோகா பயிற்சியை முன்வைத்துக் கற்பிக்கும் ராம்தேவ், 100 வாக்குப்பதிவு, 100 தேசி யம், 100 சுதேசி, 100 மக்கள் ஒற்றுமை, 100 யோகாவை மையப்படுத்திய தேசமே தன் கொள்கை எனப் பிரகடனப்படுத் தியவர், அவ்வப்போது அரசியல் சர்ச்சை களிலும் சிக்குவார். மார்ச் 2005-ல் ராம் தேவுடைய 'திவ்ய யோக மந்திர் அறக் கட்டளையைச் சேர்ந்த 113 ஊழியர்கள், தங்களுக்குக் குறைந்த அளவே ஊழியம் வழங்கப்படுவதாகப் போராட்டத்தில் குதித்தனர். ஓரளவுக்கு ஊழியர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டாலும், போராட்டத்தை வழி நடத்திய முக்கியமான ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப் பட்டனர்.
இதேபோல், ஜனவரி 2006-ல் ராம்தே வுடைய அறக்கட்டளைக்குச் சொந்தமான 'திவ்யா ஃபார்மசியில் தயாரிக்கப்படும் மருந்துகளில் விலங்கு எலும்புகள் கலக்கப்படுவதாக சி.பி.எம். தலைவர் பிருந்தா காரத் சர்ச்சையைக் கிளப்பினார். சரத் பவார், முலாயம் சிங் போன்ற தலைவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்காக பிருந்தாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர். பா.ஜ.க-வோ, வக்கீல் நோட்டீஸே அனுப்பியது. ஒரு வழியாக டெல்லியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகம், 'திவ்யா ஃபார்மசியின் மருந்துகளில் அப்படி எதுவும் எலும்புகள் இல்லை என்று மறுத்தது.
ஆனால், அதே ஆண்டு டிசம்பரில் எய்ட்ஸையும் கேன்சரையும் யோகா மூலம் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறி புதிய பரபரப்புக்கு வழிவகுத்தார் ராம்தேவ்.
''பாடப் புத்தகங்களில் பாலியல் கல்வி கற்றுத் தருவதற்குப் பதிலாக, யோகாவைக் கற்றுத் தந்தால் எய்ட்ஸைத் தடுக்கலாம்'' என்றார். 2009 ஜூலையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்குச் சட்டரீதியான உரிமைகளை வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியது. இதற்கு எதிராகக் கொதித்து எழுந்த ராம்தேவ், ''ஓரினச் சேர்க்கை யாளர்கள் நோயாளிகள். அவர்களை மருத்துவமனைக்குத்தான் அனுப்ப வேண்டும்.
சுப்ரீம்கோர்ட் சொல்வதை மத்திய அரசு நிறைவேற்றினால், வீதியில் இறங்கிப் போராடுவேன்'' என்றார். இப்படி அவ்வப்போது அடிபட்ட ராம்தேவுடைய பெயர், கடந்த இரண்டு வாரங்களில் இந்தியா முழுவதும் உச்சரிக்கப்பட்டது!
அண்ணா ஹஜாரேவின் போராட்டத் துக்குக் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, ராம்தேவும் போராட்டத்தில் குதித்தார். காந்திய வழியில் நடத்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட இந்தப் போராட்டத்தின் செலவு மட்டும் 18 கோடி என்கிறார்கள். 2.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமான பந்தல் போடப்பட்டு, ஏர்கூலர்கள் வைக்கப்பட்டு, 5,000 மின் விசிறிகள் பொருத்தப்பட்டன. போர்வெல் போட்டு 650 குழாய்களில் குடிநீர் வசதியும், உண்ணாவிரதத்துக்கு வருவோ ருக்காக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளியல் அறைகளும் கழிப்பறைகளும் கட்டப்பட்டன.
60 டாக்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பந்தல் முழுவ தும் கண்காணிப்பு கேமராக்கள். இதை, 'ஐந்து நட்சத்திரப் போராட்டம் என்று வர்ணித் தார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவராகிய திக் விஜய் சிங்.
''ஏழை களுக்காகப் பரிந்து பேசும் ராம்தேவின் யோகா பயிற்சி வகுப்பில் முதல் வரிசையில் அமர 50,000, நடு வரிசையில் அமர 30,000, கடைசி வரிசையில் அமர 1,000 வசூலிக்கப்படுகிறது'' என்பது திக்விஜய் சிங்கின் குற்றச்சாட்டு. ராம் தேவுடைய மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்களின் மதிப்பு மட்டும் 15,000 கோடி என்பது அவருடைய இன்னொரு குற்றச்சாட்டு.
திக் விஜய் சிங்கின் குற்றச்சாட்டு கள் காங்கிரஸைக் காப்பாற்றுவதற் காகவே சொல்லப்படுபவை என்றாலும், ராம்தேவுக்கு உள்ள கோடிக்கணக்கான சொத்துகள், மதவாத சக்திகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகள் ஆகியவை அவ்வளவு எளிதில் புறக்கணிக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் அல்ல;
ராம்தேவுக்கு அமெரிக்காவில் 650 ஏக்கர் நிலம் இருப்பதாக வும் ஸ்காட்லாண்டில் தனித் தீவு இருப்ப தாகவும் சொல்லப்படுகிறது. மேலும், கறுப்புப் பணத்தைப் பற்றிப் பேசும் அதே வேளையில், எந்த உழைப்பிலும் உற்பத்தி யிலும் ஈடுபடாத இத்தகைய கார்ப்பரேட் சாமியார்களிடம் கோடிக்கணக்கில் பணம் குவிவதுபற்றியும் பேசித்தான் ஆக வேண்டும்!
மணிப்பூரில் 10 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து போராடிவரும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்துக் கும் ஈழத்தில் இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகத்தில் நடை பெற்ற தீக்குளிப்புப் போராட்டங்களுக் கும் கிடைக்காத முக்கியத்துவம், இத்தகைய 'ஊழல் எதிர்ப்பு போராட்டங் களுக்கு மட்டும் ஏன் கிடைக்கிறது என் பதும் ஆராயப்பட வேண்டிய, மிக முக்கியமான ஒன்றே!

ஆனந்த விகடன் 15.06.2011
No comments:
Post a Comment