1997 ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கோவையில் நடைபெற்ற கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கோயம்பத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி என்ற பெயரில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்திய மக்களிடம் நன்கொடை வசூலித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது. முறையாக வருமானவரி துறையினர் கணக்கு சமர்பிக்கப்பட்டு அவர்கள் இது தொடர்பான விசாரணைகளை நடத்தி இந்த நிதியின் ஒவ்வொரு பைசாவும் முறையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகிக்கப் பட்டு விட்டது என்று சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.
ஆனால் அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் மத்தியில் ஆட்சியில் இருந்த பிஜேபி தலைமையிலான அரசு கோயம்புத்தூர் முஸ்லிம் நிவாரண நிதி நிர்வாகிகள் மீதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ஆகியோர் மீதும் ஒரு பொய் வழக்கை தொடுத்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் தொடர்ச்சியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு சென்று வருகின்றார்கள்.
இதனிடையே, நேற்று வழக்குறைஞரின் கவனக்குறைவினால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் ஆஜராகவில்லை. இதன் காரணமாக நீதிமன்றத்தின் வழக்கமான நடைமுறையின் அடிப்படையில் பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டது.
இன்று பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் மற்றும் செ. ஹைதர் அலி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய பிறகு, பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆனால் இது ஏதோ அசாதாரண நிகழ்வு போன்றும், புதிதாக வழக்கு தொடுத்திருப்பது போன்றும் சிலர் சித்தரிக்க முயன்றுள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
No comments:
Post a Comment