Sunday, March 4, 2012

“நிலங்கள்” வாங்குவோர் கவனத்திற்கு !

சகோதரர்களே !   நாம் அனைவர்களும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவது  என்பது நிதர்சனமான உண்மை. குறிப்பாக திருமணம் செய்தல், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள், இல்லப்பயன் தரும் பொருட்கள் வாங்குதல், பிள்ளைகளின் கல்வி, சகோதரிகளின் திருமணம், பெற்றோர்களின் மருத்துவ செலவு மற்றும் நமது அன்றாட செலவுகள் என எண்ணற்ற நம்முடைய ஒவ்வொரு கடமைகளையும் சிறிது சிறிதாக நிறைவேற்றிக் கொள்வோம்.
நமதூரில் வசிக்கக்கூடிய அனைத்து சகோதரர்களுக்கும் நிலம் வாங்கி வீடு கட்டுதல் என்பது ஒரு கடமையாகவோ அல்லது கனவாகவோ இருக்கும். மேலும் நமதூரில்  விற்கக்கூடிய மனைகளின் விலைகளை நன்கு அறிவீர்கள். இவ்வளவுத் தொகையை கொடுத்து வாங்கு முன் நாம் கவனமாக கீழ் கண்ட முறைகளைப் பின்பற்றி பாதிப்புகள் ஏற்படாதவாறு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மனைகள் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை :
1.    நிலத்தின் லே-அவுட் ( Layout ) போட்டு அதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
2.    நிலத்தின் பகுதி பத்து ஏக்கருக்கு ( அதாவது முப்பது “ மா “ ) குறைவாக இருந்தால், மாவட்ட டீ.டி.சி.பி. ( Directorate of Town and Country Planning – DTCP ) அலுவலகத்தின் அனுமதி தேவை.
3.    நிலத்தின் லே-அவுட்டில் சாலை வசதி, பூங்கா, பொது இடம் என்று இடங்களை ஒதுக்கிருக்க வேண்டும்.
இதனால் சாலை, குடிநீர், மின்சாரம் வசதிகள் விரைவில் நமது உள்ளாட்சியின் மூலம் கிடைக்ககூடிய வாய்ப்புகள் ஏராளம்,  மேலும் நாம் உடனடியாக வீடு கட்டும் சூழ்நிலை உருவானால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் மூலம் ‘ புதிய வரைபட அனுமதி ‘ என பல்வேறுப் பயன்களை அடையலாம்.
சொத்துகள் / மனைகள் வாங்கும் போது  என்ன  என்ன “ டாகுமென்ட்ஸ் “ கள் கவனிக்கப்பட வேண்டியவை ?
1.       பட்டா :  ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், ( Survey Number and Subdivision ), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

2.       சிட்டா  :  ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா ?  என்பதும் தீர்வை ( வரி ) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

3.       அடங்கல் :  ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

4.    வில்லங்க சான்றிதழ் ( Encumbrance Certificate ) :  22 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது. சொத்தின் உரிமை ( Ownership ) , சொத்தின் நான்கு எல்லைகள், பேங்க் அடமானங்கள், நீதி மன்ற வழக்குகள் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

5.    சொத்து ஆவணம் ( பத்திரம் ) :
1.    நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கப்படுகிறதா ? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது. உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் ( Guardian ) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.
2.    அதிகாரம் பெற்ற முகவர் ( Power of Attorney Holder ) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது. அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா ? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை. பவர் பத்திரப்பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், அதே சமயம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பவர் பத்திரம் பதிவு செய்தால், ரூ.1,000 கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3.     மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
4.    முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா ( Original Deed ) அல்லது படி ஆவணமா ( Duplicate copy ) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.
5.    அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி,  திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.
6.    விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

இறைவன் நாடினால்  !   தொடரும்........................

ஹஜ்ஜு வருது,நீங்க ரெடியா?


தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது.   இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களைWWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Saturday, March 3, 2012

மரண அறிவிப்பு

மர்ஹும் ESM  இப்ராஹீம் அவர்களின் மகளும்,மர்ஹும் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும்,பாருக் அவர்களின் சகோதரியும்,செய்யது ஹாஷிம் அவர்களின் தாயாரும்,நெய்னா முஹம்மது,ஜாபர் சாதிக்,நிஜாமுத்தீன் ஆகியோர்களின் மாமியாருமாகிய ஜைனப் அவர்கள்,அதிரை- புதுமனை தெரு இல்லத்தில் இன்று காலை மரணமாகிவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.


இன்ஷா அல்லாஹ்,அன்னாரின் நல்லடக்கம் தக்வா பள்ளி மைய வாடியில் நடைபெறும். அன்னாரின் மறுமை பேற்றுக்கு துவா செய்யும் படி வேண்டுகிறோம்.

Thursday, March 1, 2012

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!


அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது.

பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.

யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

Tuesday, February 28, 2012

விபசாரி மகன்.மனுதர்மம்


கலைஞரா பிராமணர்களை சீண்டுகிறார்? முதலில் உம்மை பிராமணன் என்று சொல்லிக் கொள்வது பார்ப்பனர் அல்லாத மக்களைச் சீண்டுவது ஆகாதா? நீவீர் பிராமணன் என்றால் நாங்கள் யார்? சூத்திரர் கள் என்று எங்களை மறைமுகமாகச் சொல்லிச் சீண்டுவது ஆகாதா?
உங்கள் மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?
சூத்திரன் ஏழு வகைப்படும்: 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்  7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).
ஓ பிராமணர்களே! - எங்களை நீங்கள் விபசாரி மகன் என்று எழுதி வைத்துள்ளீர்களே.அதனை இன்று அளவுக்கும் உறுதிபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளை ஏற்படுத்திக் கொண்டு, நாங்கள் துவி ஜாதியினர் இருபிறப்பாளர்கள், நாங்கள் பிராமணர்கள், பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று விடாப்பிடியாக இந்நாள் வரை பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு திரிகிறீர்களே இது எங்களைச் சீண்டுவது ஆகாதா?
விபசாரி மகன் என்று எங்களை இன்றுவரை சொல்லும் நிலையில்கூட பொறுமை காத்துக் கொண்டிருக்கிறோம் என்ற திமிரில் இன்றைக்கும் பூணூல் அணிந்து கொண்டு திரிகிறீர்களே,
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர், உரிமை என்றால் சூத்திரன் பஞ்சமன் கருவறைக்குள் நுழைவதா? சாமி தீட்டுப்படும் என்று கூறுகிறீர்களே - உச்சநீதிமன்றம் வரை சென்று தடுக்கிறீர்களே! இவ்வளவும் செய்துவிட்டு கருணாநிதி சீண்டுவதாகக் கூறலாமா?
தந்தை பெரியார் தனது இறுதிப் பேருரையில் (மரண சாசனம்) (19.12.1973) திட்டவட்டமாகவே கூறினாரே!
இந்து நூற்றுக்கு மூன்று பேர் பார்ப்பனர்களைத் தவிர பாக்கி 97 பேர் தேவடியாள் மக்கள், என்று பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுத வைத்திருக்கிறார்கள்.  இதற்கெல்லாம் காரணம், என்ன? திருப்பிச் சொல்லாத காரணம் அவர்களைக் கண்டிக்காத காரணம் என்ன?  திருப்பிச் சொல்லாத காரணம், அவர்களைக் கண்டிக்காத காரணம், பார்ப்பானைக் கண்டால் வாப்பா தேவடியாள் மகனே, எப்ப வந்தே? என்று கேட்க வேண்டும். ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால் நீ எழுதி வைத்ததடா - என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்! என்ன தப்பு?
- என்று தந்தை பெரியார் இறுதி உரையில் மரண சாசனமாக கூறியுள்ளார் என்பதை நினைவூட்டுகிறோம்.
பார்ப்பனர்களே துள்ளாதீர்கள்! துள்ளாதீர்கள்!
தந்தை பெரியார் சொன்னபடி நாங்கள் உங்களைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் கேட்கவும் நேரிடும் எச்சரிக்கை!
---- நன்றி விடுதலை,28-02-2012

Friday, February 24, 2012

மரண அறிவிப்பு


புதுமனை தெரு வை சார்ந்த மர்ஹும் முசெமு அப்துல் மஜீத் அவர்களின் மகனும் வக்கீல் முனாஃப், மர்ஹும் அப்துல் வாகித், பொளஜூல் அமீன், இவர்களின் தகப்பனாரும் ஜம்ரூத் அவர்களின் மாமனாருமான எம் எஸ் எம் அப்துல் காதர் (75) அவர்கள் இன்று மதியம் காலமாகி விட்டார்கள்(இன்னா...) அன்னாரின் ஜனாசா நாளை காலை 8 மணியளவில் மறைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செயப்படும் என அன்னாரின் நெருங்கிய உறவினர்கள் கூறினர்.
தொடர்புக்கு : முனாஃப் 9791947724
---------------------------------------------------------------

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

அல் குர்ஆன்

Thursday, February 23, 2012

என்னதான் இருக்கிறது நபிமொழியில்..?


                                                                 ஓரிறையின் நற்பெயரால்

"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு இருவர் மட்டும் தனியே ரகசியம் பேசாதீர்கள்..! " (1)

இப்படி தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமின்றி அத்தகைய செயல் அந்த மூன்றாம் நபருக்கு மனரீதியாக உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக அறிந்து இந்த செயலை தவீர்க்க சொன்னது யாரென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா...?

. . . 

  முஸ்லிமல்லாதவர்களுக்கு பெரும்பாலும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்ச முஸ்லிம்களுக்கே அதிலும் மார்க்க சூழலில் வளர்ந்த முஸ்லிம்களுக்கே இவை நபிமொழிகள் என அறிய வாய்ப்புகள் இருக்கிறது.

இதற்கு யார் காரணம்...? எது காரணம்..?

  தாடி வைப்பதும் , தொப்பி அணிவதும், வார நாட்களில் மற்றும் குறிப்பிட்ட தினங்களில் நோன்பு வைப்பதும், உபரியான தொழுகைகள் நிறைவேற்றுவதும் மட்டுமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்) என பொதுவாக இச்சமூகத்தில் முஸ்லிம்களால் புரிய வைக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்களால் புரிந்துக்கொள்ளப் படுகிறது.

வெறும் ஆன்மிகத்தை மட்டுமே போதிக்க வந்தவர்களாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் இருந்தால் அவர்களை அல்லாஹ் குர்-ஆனில் அகிலத்தாருக்கு அழகிய முன்மாதிரி - என கூற வேண்டிய அவசியமில்லை. ஆக ஆன்மிகம் மட்டுமில்லாது., அரசியல் தொடங்கி அனைத்துத்துறைகளிலும் மக்களுக்கு உரித்தான பாடங்கள் அவர்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கபெற வேண்டும் என்பதைதான் மேற்கண்ட இறைவசனம் பறைச்சாற்றுகிறது.


  பொன்மொழிகள் எனபன மனித வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை அறிவுரீதியாகவும், அனுபவரீதியாகவும் விளக்கிக்கூறுவதே. ஒருவர் கூறும் பொன்மொழிகளை அவரது வாழ் நாள் முழுவதும் பின்பற்றி நடந்திருப்பார் என்பதற்கு எந்த வித ஆதாரமும் தெளிவாக இல்லை!

ஆனால் நபிமொழிகள் எனபன அப்படியல்ல., நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் செயல்படுத்தியது.  பிறரை செயல்படுத்த தூண்டியது மற்றும் செயல்படுத்தியதற்கு அங்கீகாரம் கொடுத்தது. இவை முழுவதும் தொகுக்கப்பட்டவையே நபிமொழிகள் என அழைக்கப்படுகிறது.


சரி அப்படி அவர்கள் எதைத்தான் சொன்னார்கள்...? 

கடை நிலை பாமரன் கூட நம் வாழ் நாளில் ஒன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் அவர்கள் முன்மொழிந்த வார்த்தைகள் இருப்பது தான் கூடுதல் அழகு. ஆன்மிகத்தை அன்றாட வாழ்வியலோடு இணைத்த பெருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்றால் அது மிகையாகாது. மக்களின் அன்றாடச்செயல்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அதை தம் வழிமுறையாக்கினார்கள் - இறைவனிடத்தில் அவை நன்மை பயக்கும் என்றார்கள்.  ஒருவர் இயல்பாக அதை தொடர்ந்து செய்ய ஆர்வமூட்டினார்கள். அவர்களின் கூற்றில் சிலவற்றை பார்ப்போம்.

உனது மனைவிக்கு ஒரு வாய் உணவு கவளத்தை ஆசையோடு ஊட்டுவதற்கும் இறைவனிடத்தில் நன்மை உண்டு (2) என்றார்கள். அதுமட்டுமா...

ஒருமுறை தம் தோழர்கள் மத்தியில் உரையாடியபோது
"உங்கள் மனைவியோடு வீடுக்கூடுவதற்கும் இறைவனிடத்தில் வெகுமதி உண்டென்றார்கள் - (3)
அறிவு மிகுதிபெற்ற அண்ணலாரின் தோழர்களில் ஒருவர்
" நாயகமே! எங்களது இச்சைகளை தவிர்த்துக்கொள்வதற்காக செய்யும் இச்செயல் எப்படி இறைவனிடத்தில் வெகுமதி பெற்றுதரும் என்றார்.

  அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம், மனைவியோடு கூடாமல் மாற்றரோடு கூடினால் "விபச்சாரமென" அதற்கு இறைவனிடத்தில் தண்டனையுண்டல்லவா...? இறைவனுக்காக அதை தவிர்த்து ஆகுமானவற்றோடு வாழ்வதற்கே அந்த வெகுமதியென்றார்கள்.

 சர்வசாதரணமாக இல்லங்களில் நாம் செய்யும் சராசரி செயலுக்குக்கூட இறைவனிடத்தில் அங்கீகாரம் உண்டு என்று இல்லறவியலுக்கு புதுவிலக்கணம் வகுத்தார்கள்.

 சமூகத்தில் எல்லோரிடமும் நம்மால் நற்பெயர் பெற முடியும். அல்லது அஃது பெறுவதற்கு அவர்களுக்கு முன்னால் நம்மால் போலியாய் கூட நடிக்க முடியும். ஏன், நமது தாய்,  தந்தை,  சகோதரங்கள்,  மகன் என எல்லோரிடமும் அஃது நம்மால் நற்பெயர் எடுக்க முடியும்.

  ஆனால் உண்மையற்ற நிலையில் மனைவியிடத்தில் மட்டும் நற்பெயர் பெற முடியாது. ஏனெனில் இந்த உலகத்தார் அனைவரிலும் நம் அந்தரங்கங்களை அதிகம் அறிந்தவள் நம் மனைவி மட்டுமே. ஆக அவளை போலியாக நடித்து ஏமாற்றுவது என்பது எல்லா காலத்திலும் சாத்தியமில்லை. ஆதலால் தான்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
"மனைவியரிடத்தில் சிறந்தவரே மக்களில் சிறந்தவர்..!"-  (4) என்றார்கள்.
 மக்களில் சிறந்தவர் என்ற பெயரோடு நாளை இறைவனிடத்தில் செல்வதற்கு இன்று மனைவியிடத்தில் உண்மையாக நடந்துக்கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகிறது.

"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பதும் ஓர் நற்செயலாகும்." (5)
பெரும்பாலான குடும்ப பிரச்சனைகளுக்கு மையக்காரணம் சரியான உபசரிப்பிமின்மையே... குறைந்த பட்சம் வாங்க!.. என்று சொல்வதில் கூட ஏற்ற இறக்க உச்சரிப்புதான்!

இவை கூடாதென்று சொல்லி அதை தவிர்க்க சொல்வதோடு உரிய முறையில் அவர்களை நோக்குவதே... இறைவனிடத்தில் நன்மையை பெற்று தரும் செயல்களில் ஒன்றாக மாற்றினார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்.

இப்படி குடும்பவியல் செயல்களை இறை நேசத்திற்கு உரித்தான செயலாக மாற்றமடைய வழிச்சொன்ன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் பொருளியலிலும் சமூக மத்தியிலும் அதே நிலையே தான் கையாண்டார்கள்.

வட்டியே தடை செய்து வியாபாரத்தை ஊக்குவித்த நபிகள்
ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. (6) என்று ஒருவர் தம் சொந்த கால்களில் நிற்பதற்கு தன்னார்வத்தை ஏற்படுத்தினார்கள். மேலும் தேவை ஏற்படும் நிமித்தமாக பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதையும் சபித்தார்கள்.

அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க நான் மட்டும் வயிறார உண்பவன் உண்மை இறை விசுவாசியல்ல!" (7) என்று ஏனையவர்களின் மீதும் நமக்குள்ள கடமையே சுட்டிக்காட்டினார்கள். அதை செயல்படுத்தியும் காட்டினார்கள்.

இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராக இருந்தாலும் அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் அவர் பெற்ற கடனை தவிர. (8)என கொடுக்கபட்ட கடனும், கொடுத்தவரின் நிலையும் இறைவனிடத்தில் எவ்வளவு மதிப்புடையது என்பதை தெளிவுறுத்தினார்கள்.

மக்கள் நடக்கும் நடைபாதைகளில் குறுக்கே அமர்ந்து அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதையும், நிலக்குறிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு சேதம் ஏற்படுத்துவதையும் தடை செய்த (9) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவை இறைவனின் கோபத்திற்கு ஆளாக்கும் இழிசெயல் என்றும் எடுத்துரைத்தார்கள்.

அனாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்கு சமமானது (10) என அநியாய செயலை விளக்கி அஃது செயல்படுவோர் அதே நிலையில் இறைவன் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்கள்.
மேலும் அனாதைகளை பற்றிக்கூறும் போது, "அவர்களை நல்ல முறையில் பராமரிப்பவர்களும் நானும் மறுமையில் இப்படி (நெருக்கமாக) இருப்போம் என தனது ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் ஒன்றிணைத்து காட்டினார்கள். (11)

 பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை என்ன தான் மிகப்பெரிய வணக்கசாலியாக இருந்தாலும் அவனை இறைவன் மன்னிப்பதில்லை.  (12) என்ற நபிமொழியில் தனிமனித உரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை உணரலாம்!

இன்னும் பார்த்தால்....  தெருக்களில் கிடக்கும் சிறு முள்ளை அகற்றுவதையும் ஈமான் எனும் உயர் இறையச்சத்தோடு உள்ளடக்கிய ஒரு பகுதியாக (13) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் கூறுவதிலிருந்தே தனி மனித மற்றும் சமூகத்திற்கு பயன்படும் அனைத்துமே அவர்களது கூற்றில் அடங்கிருப்பதை சிந்தனை ரீதியாக உணரும் எவருக்கும் நிரூபணம்!

  சில உதாரணங்கள் தான் இவை. இன்னும் அனேக நபிமொழிகள் இருக்கின்றன, ஆனால் அவை இந்த மனித மத்தியில் தெளிவாக வழிமொழியப்படாமல், பொன்மொழிகள் என்ற அளவிலே வைத்து பார்க்கப்படுவதால் நாம் நடைமுறைப்படுத்தும் அண்ணலாரின் வழிமுறைகள் இன்று சமூகத்தின் கவனத்திற்கு வருவதில்லை.

மேற்சொன்ன செயல்கள் மட்டுமல்ல. நாம் புது ஆடை அணிவதிலிருந்து, மரணித்தப்பின் நமக்கு வெள்ளாடை தரிக்கும் வரையிலான நிகழ்வுகளின் வழிக்காட்டுதல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வாழ்வியலிருந்தே பெறப்படுதல் சாத்தியம் என்பதை இச்சமூகத்திற்கு உணர்த்த வேண்டும். அது எல்லோராலும் எளிதாகவும் பேணப்படவும் முடியும் என்பதையும் தெளிவுறுத்த வேண்டும்.

 நபிகளாரின் செய்கைகளை நினைவூட்டுவதற்காக வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் மீது புகழ்பாக்களாக படிப்பதால் அதை உணர்த்த முடியாது! அதற்கு அவர்களின் வழிமுறைகளில் ஒவ்வொன்றையும் முடிந்த அளவிற்கு பின்பற்றி வாழ்வதே பொருத்தமானது! 

ஏனெனில் நாம் இச் சமூகத்தில் செய்யும் ஒவ்வொரு நற்கருமங்களும் அவர்களின் வாழ்வியல் வழிமுறை என்பதை விளக்க வேண்டும் அப்போது அவர்கள் மீது நாம் கொண்ட நேசத்தை உண்மைப்படுத்துவதாக பொருள். மாறாக அவர்களை மிகைப்படுத்தி புகழ்வதில் இல்லை.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்:
 முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான தலைவர் என்ற மாயை எண்ணத்தை அகற்றுங்கள். ஏனெனில் அதற்காக மட்டும் தான் அவர்களின் வருகை இருந்திருந்தால் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற மார்க்க கடமைகளை விவரிப்பதோடு அவர்களின் பணி முடிவுற்று இருக்கும்.

ஆனால் அவர்களின் இறுதி பேரூரையில்
"பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.....

இப்படி -வர்த்தக ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கும் மக்களின் எதார்த்த வாழ்வை மையப்படுத்தி கூறினார்கள். அரேபியர்களுக்கோ ஒரு இனத்திற்கோ தனிப்பட்ட முறையில் அவர்களின் வரவு அமைந்திருந்தால் இப்படி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. யாராக இருப்பினும் இறைவன் முன் அனைவரும் சமம் என்றே பிரகடனம் படுத்தினார்கள். ஆக குர்-ஆன் எப்படி மானிட சமூகத்திற்கு பொதுவான நூலோ அதுப்போலவே நபிகளும் இந்த மனித சமுதாய முழுமைக்குமான தலைவர்!

                                                        அல்லாஹ் நன்கு அறிந்தவன் .


நீல நிறத்தில் இருப்பவைகள் அனைத்தும் சஹீஹான ஹதிஸ்களே. எளிதாக புரிந்துக்கொள்வதற்காக இயல்பு தமிழில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


ஹதிஸ் விபரம்:
01.அறிவிப்பவர் :  இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி
02. அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56
03.
04. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082
05. அறிவிப்பாளர்கள்: அபூதர் (ரலி)  நூல் : திர்மிதி 2022, 2037)
06.  நூல் :  புஹாரி,எண் 2072 
07. அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : மிஷ்காத் 
08. அறிவிப்பாளர்: சலமா பின் அக்வஃ (ரலி) நூல் புகாரி: 2289
09. அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).  நூல் :   புஹாரி.
10.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2766) முஸ்லிம்.
11. அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம், திர்மிதி (1983)
12. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 2448
13.






பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!