Thursday, November 24, 2011

டிசம்பர் 20ல் கடையடைப்பு,ஆர்பாட்டம்!காரைக்குடி மார்க்கமாக(அதிரை வழியே)அகல் ரயில்பாதை அமைக்க கோரி!


 திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், தலைஞாயிறு, முத்துப்பேட்டை ஆகிய யூனியன் பகுதிகளில் டிசம்பர் 20ம் தேதி மத்திய அரசை கண்டித்து திருவாரூர் - காரைக்குடி அகல ரயில்பாதை பணியை உடனடியாக துவக்க வலியுறுத்தி கடையடைப்பும், ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நாகை திருவாரூர் மாவ ட்ட வர்த்தக சங்க தலைவர் சிவசுந்தரம் நகராட்சி தலைவர் உமாகேஸ்வரி, யூனியன் தலைவர் வேதநாயகி ஆகியோர் முன்னிலையில் அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள், சேவை சங்க பெ õறுப்பாளர்கள் சங்க சிறப்புக் கூட்டம் நடந்தது.

தென்னகத்தின் மிக பழமையான சென்னை காரைக்குடி, ராமேஸ்வரம் வழித்தடத்தில் உள்ள திருவாரூர், திருத்துறைப்பூண்டி, காரைக்குடி வரையிலான மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதுக்கு உடனடியாக பணிகளை துவக்க வேண்டும்.திருத்துறைப்பூண்டி அகஸ்தியம்பள்ளி வரையிலான வழித்தடத்தை அகல ரயில் பாதையாக மாற்றுவதுக்கு நிதி ஒதுக்கிடு செய்வதுக்கு டிசம்பர் 20ம் தேதி திருத்துறைப்பூண்டி தலைஞாயிறு, வேதாரண்யம், முத்துப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளில் கிராமங்கள், நகரங்களில் கடையடைப்பு செய்து தபால் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

Wednesday, November 23, 2011

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்கு ஒரு குறும்படம் “நரகத்தை நோக்கி…”


இந்தப்படத்தின் நோக்கம்
நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினை.
முதலில் இந்த குறும் படத்தை எழுதி,இயக்கிய நமதூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.
படம் தரும் படிப்பினை
பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் தஸ்லீமா.இந்த இருவர்தான்  கதையின் கதாபாத்திரங்கள்.
அந்நிய ஆண்களுடன் பழகுவதினால் ஏற்படும் விளைவுகள் மிக கொடுரமானதாக இருக்கும் என்பதை மிக அருமையாக காட்டி உள்ளார் இயக்குனர் ரபீக் அவர்கள்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அதிக சுதந்திரம் கொடுப்பதினால் ஏற்படும் விளைவுகள், மிஸ்ஸிடு கால்களினால் மிஸ்ஸாகி போகும் பெண்களின் வாழ்க்கை என பெற்றோருக்கு அறிவுரை கூறும் படமாக உள்ளது.
ஆங்காங்கே குரான் வசனங்கள் சுட்டி காட்டபடுவது மிக அருமை.
இந்த படத்தை பார்த்து தவறான வழியை தேர்ந்தெடுக்கும் இளம் பெண்கள் திருந்த வேண்டும் என்பதே இயக்குனர் அவர்களின் நோக்கம்.
இந்த படத்தை தயாரித்தவர்களின் நோக்கம் வெற்றியடைய நாம் அனைவரும் துஆ செய்வோம்.
இத்துடன் இந்த படத்தின் டிரய்லர் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த குறும்படம் சி.டி வடிவில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.வேண்டும் என்பவர்கள் kdnl.org@gmail.comஎன்ற முகவரிக்கு மெயில் மூலம் தொடர்பு  கொள்ளவும்.

Click Here-நரகத்தை நோக்கி படத்தின் டிரய்லர்


கடையநல்லூரில் சி.டி கிடைக்குமிடம் 
மக்கா ஆப்டிகல்ஸ், 
(ஊரணி பள்ளிவாசல் எதிர்புரம்) 
பெரிய தெரு
கடையநல்லூர்.
மதுரையில் சி.டி கிடைக்குமிடம் 
MEDIA RESEARCH FOUNDATION(MRF)
104/231,Raja Clinic 3rd Floor,
East Veli Street,Madurai-1,
Cell:98949 92298
சென்னையில் சி.டி கிடைக்குமிடம் 
No. New No 184, Old No 229,2nd Floor,
Linghi Chetti Street,
Mannadi Chennai - 600 001,
Ph. 044- 64611961
http://kadayanallur.org/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/

Tuesday, November 22, 2011

ஒரு பிராமண சகோதரனின் கதை

 ஒரு பிராமின்  ஏன் முஸ்லிமாக மாறினேன் என அவரே சொல்லும் வீடியோ . 


கேளுங்கள் 


http://www.islamreligion.com/videos/2519/

Sunday, November 20, 2011

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் - தமிழரும்.


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர்இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.

சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம்


சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி புதிய  தோற்றம்   


கட்டுமான அமைப்பு

இந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே ஒரு உதாரணமாக உள்ளது. இந்து கட்டிடக்கலையை ஆதாரமாக கொண்டு கட்டப்பட்ட இந்த மசூதி, மற்ற உலக மசுதிகளில் இருந்து வேறுபட்டு கிழக்கு நோக்கி கட்டப்பட்டு இருந்தது. (ஆனால் தற்போது இந்த மசூதி திருத்தி மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது).

இதில் மனரா (கோபுரம்), அறைக்கோள மேற்புறங்கள் (Dome) போன்ற அமைப்புகள் எதுவும் இல்லை. மிகவும் சாதாரணமான கட்டிடமாகவே இது கட்டப்பட்டது. பின்பு இந்த மசூதி பழைய பகுதிகளுக்கு எந்த சேதாரமும் வராத வகையில் புதிய முறையில் மாற்றி கட்டப்பட்டது.

சேரநாடு


சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான சேர வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய கேரள மாநிலமும் தமிழகத்தின் தென் பகுதியும் இருந்தது. அப்போது சேர நாடு அரபியார்களுடன் வியாபார கப்பல் தொடர்பை கொண்டிருந்தது. பல்வேறு கிறிஸ்தவ மதத்தினரும் யூத மதத்தினரும் அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.

நிலவை பிரிக்கும் அதிசயம்


மெக்காவில் முகம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள் அவர்கள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார்கள். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர்கள் பலரிடமும் விசாரித்தார்கள். 

அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அரபியார் கூட்டம் ஒன்று அது பற்றி தங்களுக்கு தெரியும் என கூறியதை கேட்டு, அவர்களை தங்கள் அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார்கள். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்பவைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறக்கேட்டனர். 

இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அவர்கள் அந்த அரபியார்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார்கள். ஆனால் அப்போது ஈழத்துக்குபயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அரபியார் கூட்டம் தங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாள் அவர்களை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.

இஸ்லாத்தை ஏற்றல்


தனது ராஜ்ஜியததை பல்வேறு பிரிவுகலாக பிரித்த சேரமான் பெருமாள் அவர்கள், அதை தனது மகன்களுக்கும் உறவினர்களுக்கும் பகிரிந்து கொடுத்தார் (அதில் ஒரு பிரிவினர் 'கொச்சின் ராயல் பேமிலி' என்ற பெயரில் இன்றளவும் கேரளாவில் வாசித்து வருகின்றனர்).

அதன் பிறகு சேரமான் பெருமாள் அவர்கள் திரும்பி வந்த அராபிய கூட்டத்தாருடன் மெக்கா கிளம்பி சென்றனர். அங்கு முகம்மது நபி (ஸல்) அவர்களை நேரில் பார்த்த சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயேஇஸ்லாம் மதத்தை ஏற்றார்கள். மேலும் முகம்மது நபி (ஸல்) அவர்களால் தாஜுதீன் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பெற்றார்கள். மேலும் 3 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றிய அவர்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொண்டுவந்த ஊறுகாயை அன்பளிப்பாக கொடுத்தார்கள். 

இதை நபி தோழர்களில் ஒருவரான அபு சயீத் அல் குத்ரி கூறியதாக ஹக்கிம் என்பவர் தனது நூலான அல் முஸ்தராக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகின்றார் இந்தியாவிலிருந்து முகம்மது நபி (ஸல்) அவர்களை பார்க்க வந்திருந்த ஒரு மன்னர் ஒரு ஜாடீ நிறைய ஊறுகாய்கலை கொடுவந்திருந்தார். அதில் இஞ்சி சேர்க்கப்பட்டு இருந்தது. அதை முகம்மது நபி (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். அதில் எனக்கும் ஒரு துண்டு கிடைத்தது."

இறப்பு


சேரமான் பெருமாள் அவர்கள் அங்கேயே ஜித்தாஹ் (jeddah) தேசத்து மன்னரின் தங்கையை மனம் முடித்தார். அதன் பிறகு இஸ்லாம் மதத்தை இந்தியாவில் பரப்பும் பொருட்டு நபி தோழர்களில் ஒருவரான மாலிக் பின் தீனார் (ரலி) என்பவரின் தலைமையில் பல போதகர்களை அழைத்துக்கொண்டு நாடு திரும்பினார். ஆனால் திரும்பும் வழியிலேயே ஓமன் நாட்டில் உள்ள சலலாஹ் துறைமுகத்தில் (Salalah Port,Oman) நோய் வாயப்பட்டு இறந்தார். அவருடைய உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

மாலிக் பின் தீனார் அவர்களின் இந்தியா வருகை


மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களின் குழு சேர நாட்டை அடைந்தது. அங்கு மன்னர் குடும்பத்தை சந்தித்த அவர்கள் சேரமான் பெருமாள் அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தை கொடுத்தனர். அதில் சேரமான் பெருமாள் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களுக்கு இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கு மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவுமாறும் அதற்காக பல மசூதிகளை காட்டுமாறும் பனித்திருந்தனர். 

அதை ஏற்று மன்னர் குடும்பமும் இஸ்லாம் மதத்தை பரப்புவதற்கும் மசுதிகளை காட்டுவதற்கும் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்களுக்கு உதவியது. அதன் பேரில் மாலிக் பின் தீனார் (ரலி) அவர்கள் கி.பி 612-ல் கொடுங்கலூரில் முதல் மசூதியை கட்டினார். அதன் பிறகு மேலும் பல மசூதிகளை வட கேரளம் மற்றும் காசர்கோடு (கர்நாடகா) பகுதிகளிலும் காட்டினார்.

சில தகவல்கள்


  • சேரமான் பெருமாள் இஸ்லாம் மதத்தை ஏற்ற முதல் இந்தியர் மற்றும்தமிழர் ஆவார்.
  • சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி தான் இந்தியாவின் முதல் மசூதி மற்றும் உலகின் இரண்டாவது ஜும்மா மசூதி ஆகும். (உலகின் முதல் ஜும்மா மசூதி மதினாவில் உள்ளது)
  • சேரமான் பெருமாள் அவர்களது சமாதி இன்றும் ஓமான் நாட்டில் உள்ள ஜாபர் துறைமுகத்தில் (இன்றைய சலாலா) இந்திய மன்னர் சமாதி என்ற பெயரில் உள்ளது
மேற்கோள்கள்

நன்றி : http://ta.wikipedia.org/wiki/
Zahir Hussen M

Saturday, November 19, 2011

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?


இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் கொள்கையையும், கோட்பாட்டையும் குறை காண முடியவில்லை. அவர்கள் ஏற்றிப் போற்றும் எந்தச் சித்தாந்தத்தையும் விட இஸ்லாம் சிறந்து விளங்குவதால் அவர்களால் இஸ்லாத்தை விமர்சிக்க முடியவில்லை. இஸ்லாத்தை விமர்சித்து அதன் வளர்ச்சியைத் தடுத்திட இரண்டே இரண்டு விமர்சனங்களைத் தான் அவர்கள் செய்து வருகின்றனர்.

1.      இஸ்லாம் தீவிரவாதிகளை உருவாக்குகிறது.
2.      இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது.

இந்த இரண்டுமே பொய்யான விமர்சனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
இஸ்லாம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது என்ற பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் ஆண்களை விட பெண்களே அதிகமாக இஸ்லாத்தை ஏற்று வருகின்றனர்.

அத போல் தீவிரவாதம் என்ற பிரச்சாரத்துக்குப் பின் தான் உலகம் இஸ்லாத்தின் பால் தனது பார்வையைத் திருப்பியுள்ளது.

உலகில் இன்று கூட பெண்களுக்கு வழங்க முடியாத உரிமைகளை இஸ்லாம் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே வழங்கி விட்டது.
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் கீழ்க்காணும் குற்றச்சாட்டுகளைத் தான் முன் வைக்கின்றனர்.

  • ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து கொள்ள அனுமதிக்கிறது.
  • மனைவியைப் பிடிக்காவிட்டால் சர்வ சாதாரணமக விவகரத்துச் செய்ய இஸ்லாம் ஆண்களூக்கு உரிமை வழங்கியுள்ளது
  • விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுப்பதையும் இஸ்லாம் மறுக்கிறது.
  • பெண்களை ஹிஜாப் எனும் ஆடையால் போர்த்தி அவர்களின் சஉதந்திரத்தைப் பறிக்கிறது.
  • வாரிரிசுரிமைசச் சட்டத்தில் ஆன்களூக்கு இரு மடங்கும் பெண்களூக்கு ஒரு மடங்கும் என பாரபட்சம் காட்டுகிறது.
  • இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்ட்சிக்குச் சமமானது என்று பாரபட்சம் காட்டுகிறது.
  • கணவன் இறந்து விட்டால் இத்தா என்ற பெயரில் குற்ப்பிட்ட காலம் பெண்களைத் தனிமைப்படுத்தி வைப்பது
  •  பெண்கள் ஆட்சித் தலைமை வகிக்கக் கூடாது எனக் கூறி பெண்களின் அரசியல் அதிகாரத்தைலப் பறிக்கிறது.
  • முஸ்லிம் பெண்கள் கல்வி கற்பதில்லை
  •  முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு வருவதில்லை.
  •  என்பன போன்ற குற்றச்சாட்டுக்கள் தான் பெண்கள் தொடர்பாக எடுத்து வைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்கள்அனைத்துக்கும் முழுமையாகவும், எந்த எதிர்க் கேள்வியும் கேட்க முடியாத வகையிலும் இந்நூல் அமைந்துள்ளது.
முஸ்லிம் அல்லாத மக்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்வோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்
முஸ்லிமாலாதவரக்ளுக்கு அன்பளிப்புச் செய்ய ஏற்ற நூல்

 

அறிமுகம்

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? என்ற இந்த நூலில் பெண்கள் குறித்து எழுப்பப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இது தவிர நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மட்டும் மற்றவர்களை விட அதிகமான பெண்களை மணந்தது ஏன் என்ற கேள்வியும் பலரால் எழுப்பப்படுகிறது. இதற்கான விளக்கத்தை 'நபிகள் நாயகம்(ஸல்) பல திருமணங்கள் செய்தது ஏன்?' என்ற தலைப்பில் தனி நூலாக வெளியிட்டுள்ளோம்.

ஜிஸ்யா, முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராகப் போர் செய்தல், கஃபாவை வணங்குதல், திசையை வணங்குதல், சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் போன்ற மற்ற குற்றச்சாட்டுக்கள் அனைத்துக்கும் விடையாக'குற்றச்சாட்டுக்களும் பதில்களும்' என்ற தலைப்பில் தனி நூலை வெளியிட்டுள்ளோம்.

தத்துவ ரீதியாக இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாதவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையாக 'அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்' எனும் நூலில் விளக்கம் அளித்துள்ளோம். இந்த நான்கு நூல்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் விளக்கம் பெறலாம்.

பதிப்புரை 
நல்லவை எங்கே கிடைத்தாலும் அதைத் தேடிப் பெற்றுக் கொள்பவர்களாகவே பெரும்பாலான மனிதர்கள் உள்ளனர்.
குறிப்பாக ஆன்மீகத்தின் பால் மனிதர்களின் தேடுதல் மிகவும் அதிகமாகவேஉள்ளது. இவ்வாறு தேடியலையும் மக்களுக்கு நல்ல ஆன்மீக வழி தென்படுமானால் தயக்கமில்லாமல் அவ்வழியில் செல்ல அவர்கள் தயாராகவே உள்ளனர்.
அமைதியைத் தேடியலையும் மக்களின் பார்வையில் இஸ்லாம் சிறந்த வாழ்க்கை நெறியாகத் தென்படுகிறது. அதன் கொள்கைகள் அறிவுப்பூர்வமாக உள்ளன. அதன் சட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்திட எளிதாக உள்ளன.
இதன் காரணமாக அவர்களை இஸ்லாம் ஈர்த்தாலும் இஸ்லாத்தின் சில கொள்கைகளும், கோட்பாடுகளும் தவறானவை; காலத்துக்கு ஒவ்வாதவை என்று அவர்கள் எண்ணுகின்றனர்.

அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை உரிய விதத்தில் தெளிவுபடுத்தினால் அவர்களை இஸ்லாம் முழுமையாக ஈர்க்கும்.
முஸ்லிமல்லாத மக்களின் இந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் தமிழில்தகுதியான நூல் இல்லை என்ற குறையை நீக்கும் வகையில் இந்த நூலை வெளியிடுவதில் மனநிறைவு அடைகிறோம்.
இஸ்லாத்தில் பெண்கள் நிலை குறித்துத் தான் அவர்களுக்கு அதிகப்படியான சந்தேகங்கள் உள்ளன.
அந்தச் சந்தேகங்களை நீக்கும் வகையில் 'இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா?' என்ற இந்த நூல் ஏழாவது பதிப்பாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
முந்தைய பதிப்புகளை விட மேலதிகமான விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேவையான திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்களை நீக்க இந்த நூல் பயன்பட வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
இவன்,நபீலா பதிப்பகம்

 

முன்னுரை

இன்றைய உலகில் பல்வேறு மதங்கள் மலிந்து கிடப்பதை நாம் காண்கிறோம். எல்லா மதங்களும், மதவாதிகளும் தங்கள் மதமே சிறந்தது' என்று அறிவித்துக் கொள்கின்றனர். தங்கள் மதத்தைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.
எனினும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகையில் சிறந்து விளங்குவதை சிந்தனையாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இஸ்லாம் வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் சொல்லித் தரும் மதமாக இல்லாமல் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளையும் கவனிக்கிறது!
அதில் தலையிடுகிறது!
தக்க தீர்வையும் சொல்கிறது!
அன்றிலிருந்து இன்று வரை மனிதக் கரங்களால் மாசு படுத்த முடியாத மகத்தான வேதத்தை இஸ்லாம் மட்டுமே வைத்திருக்கிறது!
என்றெல்லாம் இஸ்லாத்தைப் பற்றி நற்சான்று வழங்குபவர்கள் இஸ்லாத்தின் ஒரு சில சட்டங்களைப் பற்றி அதிருப்தி அடைகிறார்கள்.
இத்தகையவர்களின் ஐயங்களைத் தர்க்க ரீதியாகவும், அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளும் வகையிலும் நீக்குகின்ற கடமை முஸ்லிம்களுக்கு இருக்கிறது.
ஏனெனில் இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கமன்று. முழு உலகுக்கும் அருளப்பட்ட மார்க்கமாகும்.
எனவே, இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் விடையளிக்கும் வகையில் இந்நூலைத் தயாரித்துள்ளேன்.
ஏனைய குற்றச் சாட்டுக்களுக்கான விளக்கங்கள் மற்ற இரு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.
பெண்கள் குறித்து இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் அனைத்து வாதங்களுக்கும் இந்த பாகத்தை வாசிப்பவர்கள் விடை காணலாம்.
மூன்று பாகங்களையும் வாசிப்பவர்கள் இஸ்லாம் குறித்த எந்தக் குற்றச்சாட்டுக்கும் உரிய விளக்கத்தைப் பெறலாம்.
முஸ்லிமல்லாத மக்களின் சந்தேகங்கள் விலக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திலேயே இந்நூலை எழுதியுள்ளேன். அந்த நோக்கம் நிறைவேற வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
P.ஜைனுல் ஆபிதீன்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Wednesday, November 16, 2011

தினமலர் பொய் செய்திக்கு மீண்டும் செருப்படி.


தினமல(த்தின்) ரின் திருகுதாள திருவிளையாடல்
“முத்துமாரியம்மமனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர். “
என்ற‌
தினமல(த்தின்)ரின் பொய்யான மற்றும் தவறான செய்திக்கு
மறுப்பு அறிக்கை
தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
பொய்யான மற்றும் தவறான வெளியிடும் தினமலர்.

இளையான்குடி பேருராட்சி தலைவர்
அயூப்அலிகான் மறுப்பு அறிக்கை
 
தினமலர் செய்திக்கு பேரூராட்சி தலைவர் அயூப் அலிகான் மறுப்பு அறிக்கை.

15.11.2011 ஆம் தேதியிட்ட தினமலர் நாளிதழில் கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்திய இளையான்குடி பேருராட்சி முஸ்லிம் தலைவர் என்ற தலைப்பில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், என்னிடம் எவ்வித பேட்டியும் எடுக்காமல், பேட்டி எடுத்தது போல் பொய்யான மற்றும் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

மாற்று மதத்தினை சேர்ந்த எனது ஒரு சில நண்பர்கள் எனக்கு வாக்களித்த கிராமபுற மக்களுக்கு விருந்து வைத்தனர். 

பேருராட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மதநல்லிணக்கத்துடன் அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன். 

எனவே, துவேச மனப்பான்மையுடன் தினமலர் நாளிதழில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அவதூரான இச்செய்தியை வெளியிட்ட தினமலர் நாளிதழின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.


அன்புடன்,
A.அயூப்அலிகான்
பேருராட்சி தலைவர்
இளையான்குடி
************

தினமலரில் வெளியான பொய்யான மற்றும் தவறான செய்தி .
கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பேரூராட்சி முஸ்லிம் தலைவர்

இளையான்குடி : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சித் தலைவர் தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற, சுயேச்சை வேட்பாளர் அயூப் அலிக்கான், தாயமங்கலம் முத்துமாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக, மூன்று "கிடா' வெட்டி பக்தர்களுக்கு வழங்கினார்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, இளையான்குடி பேரூராட்சி 16வது வார்டு செயலராக இருந்த அயூப் அலிக்கான், நகர் செயலர் அன்வர், அவைத் தலைவர் அப்துல் குலாம் விருப்பம் தெரிவித்திருந்தனர். 

இதில், நகர் செயலர் அன்வருக்கு சீட் வழங்கப்பட்டது. அதிருப்தி அடைந்த அவைத் தலைவர் அப்துல் குலாம், அயூப் அலிக்கானை தலைவர் பதவிக்கு, சுயேச்சையாக களத்தில் இறக்கினார். கட்சித் தலைமை அப்துல் குலாம், அயூப் அலிக்கானை கட்சியில் இருந்து நீக்கியது.

தங்களது பலத்தை தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கில், அப்துல் குலாம் ஆதரவாளர்கள் தீவிரமாக வேலை செய்து, அ.தி.மு.க., வேட்பாளர் அன்வரை மூன்றாவது இடத்திற்குத் தள்ளி, அயூப் அலிக்கானை வெற்றி பெறச் செய்தனர்.

ஐந்து உறுப்பினர்களைப் பெற்றிருந்த அ.தி.மு.க.,வை ஓரங்கட்டி, சுயேச்சையாக வெற்றி பெற்ற அப்துல் வாஹித் துணைத் தலைவரானார். 

இந்நிலையில், தலைவராக வெற்றி பெற்ற அயூப் அலிக்கான், தேர்தலில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக, அருகில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் நேர்த்திக் கடனாக, மூன்று "கிடா' வெட்டி, தனது வெற்றிக்கு பாடுபட்டவர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில்," தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் சக்தி வாய்ந்தது. எனது வேண்டுதலை நிறைவேற்றினால், அம்மனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செய்வதாக வேண்டியிருந்தேன். எனது வேண்டுதல் நிறைவேறியதால், அம்மனுக்கு கிடா வெட்டி அன்னதானம் செய்தேன்' என்றார்.

http://vanjoor-vanjoor.blogspot.com/2011/11/blog-post_16.html

Monday, November 14, 2011

காலமாகிவிட்டார்கள்

நாம் பொதுவாக இறந்துவிட்டவர்களைப் பற்றிக் கூறும்பொழுது,இறந்துவிட்டார்கள்,மறைந்துவிட்டார்கள்,மரணமடைந்துவிட்டார்கள்,வபாத்தாகிவிட்டார்கள் என்று பயன்படுத்துவதுண்டு.அதே போன்று காலமாகிவிட்டார்கள் என்றும் பயன்படுத்துகிறோம்.இந்த வார்த்தையை நாம் சற்று சிந்திக்கும்போது - முஸ்லிம்களாகிய நாம் அந்த வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என் விளங்க தோன்றுகிறது.

சில மொழிகளில் பல வார்த்தைகள் இணைவைக்கும் தன்மையை அல்லது மார்க்கம் அனுமதிக்காத சொற்களைக் கொண்டுள்ளன.

உதாரணாமாக காலமாகிவிட்டார்கள் என்று சொன்னால்,அவர் காலமாக ஆகிவிட்டார் என்ற மறைமுக பொருளையும் கொடுக்கிறது.அல்லாஹ் தன்னைப் பற்றி கூறுவதாக கீழ்கண்ட நபிமொழி நமக்கு இவ்வாறு போதிக்கிறது,

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தைஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்
NUMBER 4826
 Volume :5 Book :65


தானே காலம் எனக் கூறுகிறான்.எனவே காலமாகிவிட்டார்கள் எனக் கூறும்போது,இங்கு இணைவைக்கும் சொல்லாக ஆகிவிடுகிறது.எனவே மிக எச்சரிக்கையாக இருப்போம்.இன்ஷா அல்லாஹ் 

 

Sunday, November 13, 2011

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட ...........


அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள் (சூரா அல்-பகரா 2:187).

திருமணத்தின் மூலம் நீங்கள் வெறும் மனைவியை மட்டும் பெறுவ தில்லை. அன்றிலிருந்து உங்கள் வாழ்வின் இறுதிவரை அனைத்திலும் அவள்தான். உங்கள் வாழ்க்கைத் துணைவி! இல்லத்தரசி! பங்காளி! வாழ்வின் நீண்ட பயணத்தின் வழித்துணை! எதிலும் அரவணைத்து நிற்பவள்! நீங்கள் ஏற்றம் பெற உற்ற தோழியாய் நிழலாய் வலம் வருபவள்! .

அன்று முதல் அவள்தான் உங்களுடைய ஒவ்வொரு நொடியையும், நாளையும், வருடத்தையும், சுகத்தையும், துக்கத்தையும், கனவையும், நனவையும மகிழவையும், கவலையையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறவள்.

நீங்கள் நோயுறும்போது, அவள் உங்களை மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொள்வாள். உங்களுக்கு ஏதேனும் தேவை என்றாலும் ஓடோடி வருபவளும் அவள்தான்.

உங்களுடைய ரகசியங்களை அவள் பாதுகாப்பாள். உங்களுக்கு ஆலோசனைகள் தேவைப்படும்போது அவள்தான் உங்கள் மதி மந்திரி.

உங்கள் மனைவிதான் உங்களுடன் எப்போதும் உடன் இருப்பவள். காலையில் நீங்கள் கண் விழிக்கும்போது உங்கள் கண்கள் பார்க்கும் முதல் காட்சி அவளுடைய கண்களாகத்தான் இருக்கும். அன்றைய தினம் முழுவதும் அவள் உங்களுடன் இருப்பாள்.

சில சந்தர்ப்பங்களில் உடலால் உங்களருகில் அவள் இருக்க முடியாமல் போகும்போது அவளது நினைவுகள் உங்களை சூழ்ந்திருக்கும். காரணம் அவளது ஆன்மா, மனம், இதயம் மூன்றும் இறைவனிடம் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு நாளின் முடிவில் நீங்கள் படுக்கைக்கு போகுமுன் நீங்கள் கடைசியாகப் பார்ப்பது அவளது கண்களாகத்தான் இருக்கும். உறங்கிய பிறகும் உங்கள் கனவிலும் அவள் வலம் வருவாள். சுருக்கமாகச் சொன்னால் அவள் தான் உங்கள் உலகம்! நீங்கள்தான் அவளது உலகம்!

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை பாருங்களேன்!

“அவர்கள் உங்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஆடைகளைப் போன்றவர்கள்” (சூரா அல்-பகரா 2:187).

எவ்வளவு எதார்த்தமான உவமை! ஆம் உண்மையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆடைகளைப் போன்றவர்கள். காரணம் ஆடைகள் மனிதனின் மானத்துக்கும், உடலுக்கும், பாதுகாப்பை அளிக்கின்றன.மரியாதையையும், மாண்பையும் தருகின்றன.

அழகையும், கவர்ச்சியையும் வழங்குகின்றன. கடும் பனிப் பிரதேசத்தில் பயணிக்கும் பிரயாணிக்கு அவனது ஆடை எந்த அளவுக்கு சுகத்தையும், பாதுகாப் பையும் தரும் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தாலே அதன் அருமை புரியும்.அந்த அளவுக்கு நமது வாழ்க்கைப் பாதையில் நமக்கு சுகத்தையும், பாதுகாப்பையும், கண்ணியத்தையும் வழங்குபவள் மனைவி தான்.

இந்த உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான். இந்த உண்மையை அல்-குர்ஆன் இந்த வசனத்தில் உணர்த்துகிறது.

وَاللّهُ جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا

மேலும்,அல்லாஹ் உங்கள் வாழ்க்கைத் துணைகளை உங்களிலிருந்தே உண்டாக்கினான். (சூரா அல்-நஹ்ல் 16:72)

அல்லாஹ் இதன் மூலம் அவனது அத்தாட்சிகளை இந்த பிரபஞ்சத்தில் தேடுவோருக்கு இந்த உணர்வுகள் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான் என்று உணர்த்தி அவனது வல்லமையை மனிதர்கள் உணர்வதற்காக கீழ்க்கண்ட வசனத்தில் சொல்கின்றான்:

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது’ (சூரா: அல்-ரூம் 30:21).

ஆனால், அல்லாஹ்வுக்கு மனிதனின் மனநிலையைப் பற்றி நன்கு தெரியும். அது நீண்ட காலம் ஒரே நிலையில் இருக்காது, அடிக்கடி அதன் தன்மைகள் மாறும. உணர்வுகள் வேறு வடிவம் பெறும். ஏன்! காலம் ஓட ஓட காதல் கூடக் கசக்கத் துவங்கும். முறையான கவனம் செலுத்தப்படவில்லை என்றால் திருமண பந்தம் தொய்வடையக் கூடும்.

நமது முயற்சி இல்லாமல் இல்லறத்தில் எந்த நேரமும் மகிழ்ச்சி நிறைந்திருக்குமென்று எண்ணிவிடக்கூடாது. நாம் அரும்பாடு பட்டுக் 
கட்டிய அந்த இல்லறக் கூட்டில் மகிழ்ச்சி நிரந்தரமாக நிலைத்திருக்க வேண்டுமென்றால் கணவன் மனைவி இருவரது கூட்டுப் பங்களிப்பு மிக மிக அவசியம்.

திருமண பந்தம் என்ற மரம் தழைத்தோங்கி வளர வேண்டுமென்றால், செடியை ஊன்றி விட்டால் மட்டும் போதாது, அந்த மரம் வளர வேண்டிய மண்ணுக்கு உரமிட்டு, நீரிட்டு பராமாரித்து, பாதுகாக்கப் பட்டால் தான் முடியும்.

பெருமானார் நபி (ஸல்) அவர்கள் தமது சீரிய பணிகளுக்கிடையேயும் தமது இல்லற வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் நேரம் ஒதுக்கிய சம்பவங்களை நினைவு கூர்ந்து பாருங்கள்.தங்களது மனைவி ஆயிஷா அவர்களை பாலை வெளியில் அழைத்துச் சென்று தங்களுக்குள் ஓட்டப்பந்தயம் வைத்தார்கள். அதில் அன்னை ஆயிஷா(ரலி) வென்றார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு அன்னையாருக்கு எடைகூடிய காரணத்தால் அவர்களை நபியவர்கள் வென்றார்கள்.

மேலும் தங்களது மனைவியை எத்தியோப்பிய இளம் வீரர்களின் வீர விளையாட்டுக்களை காண அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உங்களது மனைவியைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் அன்பை அடிக்கடி வெளிக்காட்டுவது, உறவை மேலும் மேலும் பலப்படுத்த உதவும்.

நீங்கள் உங்கள் மனைவி மீது செலுத்தும் அன்புக்கு அல்லாஹ் கூலி கொடுக்கத் தவறுவதில்லை என்ற உண்மையை எண்ணிப்பாருங்கள். அதனால் தான் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் மகிழ்ச்சியை நாடி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் நற்கூலி உண்டு, ஒரு கவள உணவாயினும் உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் அன்போடு ஊட்டி விடுங்கள்.

ஆகவே, நீங்கள் செய்யக்கூடிய சின்னஞ்சிறு அன்பான காரியங்களைக் குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள். மனைவிக்கு உணவு ஊட்டி விடுவது, வாகனங்களில் அவர்கள் ஏற உதவுவது போன்ற சிறுசிறு விசயங்களா யினும் சரியே. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தங்களது மனைவி ஒட்டகத்தில் ஏறி அமர தங்களது கால் முட்டியை மடித்து அமர்ந்து உதவி இருக்கிறார்கள் அல்லவா?

அடிக்கடி இருவரும் சேர்ந்து அல்லாஹ்வை வணங்குவதில் ஈடுபட முயற்சி எடுத்துக்கொள்ளுங்கள். வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இரவில் விழித்தெழும் தம்பதியர்களை நபி (ஸல்)அவர்கள் வாழ்த்தியிருக் கிறார்கள். மேலும் முதலில் எழும் தம்பதியரில் ஒருவர் மற்றொருவரை விழிக்கச் செய்வதற்காக குளிர்ந்த நீரை முகத்தில் தெளிக்கத் தூண்டி இருக்கின்றார்கள்.

எப்போதும் சொல்லாலும் செயலாலும் உங்கள் மனைவியரிடம் நல்லவிதமாக நடந்துக் கொள்ள மிகுந்த முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மலர்ந்த முகத்துடன் அவர்களிடம் எப்போதும் பேசுங்கள், குடும்ப விசயங்களில் அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறுங்கள், பிற விசயங்களிலும் அவர்களது அபிப்ராயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடன் இருந்து அளவளாவ நிறைய நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த விசயத்தில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சொன்ன பொன்மொழிகளை மறந்து விடாதீர்கள்.

“உங்களில் மிகச் சிறந்தவர் தங்களது மனைவியரிடம் மிகச் சிறந்தவர்” என்று பெயர் எடுப்பவர்தான்.

இறுதியாக, தம்பதியர் இணங்கி இருப்பதும், தங்களது மரணம் வரை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்வதும் இயல்புதான் என்றாலும், அது போதாது. உங்கள் மனைவியிடம் அன்புடன் நடந்து கொண்டால் மட்டும் போதாது, அவர்கள் விரும்புவதை எல்லாம் நீங்களும் விரும்ப வேண்டும். அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது அன்புக்குப் பாத்திரமான ஒவ்வொருவரும் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களாக ஆக வேண்டும்.

விருந்தினர்களாக உங்கள் மனைவியரின் குடும்பத்தினரோ, அவர்களுக்கு விருப்பமானவர்களோ உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களை வரவேற்கும் முதல் நபராக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் மேலாக ஒரு விஷயம் இருக்கிறது. உங்களது மரணம் வரை அவர்களை விரும்பினால் மட்டும் போதாது, அவர்களை நீங்கள் விரும்புவது உண்மையென்றால் மரணத்திற்குப் பிறகும் அவர்கள் உங்களது மனைவியராக இருக்க விருப்பம் கொள்ள வேண்டும்.

நாம்தான் மரணத்திற்குப் பிறகும் நிரந்தர வாழ்க்கை இருப்பதை நம்பிக்கை வைத்துள்ளோமே. இவ்வுலகில் நல் அமல்களை செய்தோர் தங்களது வாழ்க்கைத் துணைவியருடனும், தங்களது பிள்ளைகளுடனும் சொர்க்கம் புகுவார்கள்.

சூரா அல்-ஜுக்ருஃப் 43:70 ல் அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்:


أدْخُلُوا الْجَنَّةَ أَنتُمْ وَأَزْوَاجُكُمْ تُحْبَرُونَ

நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள் ( என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).

இந்த வசனத்தை உண்மையாக்க நபி (ஸல்) எவ்வளவு அக்கறை செலுத்தியுள்ளார்கள் என்று பாருங்கள்.

இருபத்திஐந்து வருட காலம் தங்களது வாழ்க்கைத் துணையாக இருந்த அன்னை கதீஜா பிராட்டியாரின் மறைவுக்குப் பின்னரும் நீண்ட காலம் ஆகியும் அன்னையாரின் குடும்பத்தினரை நபியவர்கள் மறக்காமல் அன்பு செலுத்தி வந்தார்கள்.

தங்களது வீட்டில் எப்போது ஆடு அறுத்தாலும் அன்னை கதீஜாவின் குடும்பத்தினருக்கு ஒரு பங்கை அனுப்பத் தவறியதில்லை. ஓருமுறை தங்களது வீட்டின் கதவு தட்டப்படும்போது அந்த ஓசையைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் யா அல்லாஹ்! வந்திருப்பவர் என் மனைவி கதீஜாவின் சகோதரி ஹாலா வாக இருக்க வேண்டுமே என்று தங்களது ஆவலை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் வேதத்திலும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்விலும் நிச்சயம் மனிதாபிமானம் நீடுழி வாழ அகிலத்தாருக்கு பற்பல படிப்பினைகள் உண்டு என்பதை புரிந்து வாழ்வோமாக. INSHA ALLAH...

Monday, November 7, 2011

மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்



மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், IFT வெளியிட்டுள்ள திருக்குர்ஆன்  தமிழ் மொழிப்பெயர்ப்பாளருமான மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் 6.11.2011 அன்று மாலை சிங்கப்பூரில் இறையடி சேர்ந்தார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜீவூன்.

தமிழகத்தில் இஸ்லாமிய இயக்கத்தை அனைத்து பகுதிகளில் வேரூன்ற செய்ததில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்கள்.  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார்கள்.  மேலும் இறைமார்க்கத்தை மேலோங்க செய்கின்ற பணிகளில் தனது இறுதி காலம் வரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.  தனது 76 வயதிலும் இஸ்லாமிக் சென்டர் வேலூரில் நடைபெற்றுவரும் குல்லியத்துஸலாம் அரபிக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்தார்கள்.

இறுதி வரை இறைமார்க்கத்திற்காக பணியாற்றிய மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்களது மறுமை வெற்றிகாகவும், அவர்களது குடும்பத்தார்கள் அனைவருக்கும் அமைதி நிலவவும் பிராத்திக்கின்றோம்.

நான் முஸ்லிம்: 3ம் பார்வை

நான் முஸ்லிம்: 3ம் பார்வை: கற்றுக்கொள்ளாமலே... உலகில் அனைவரும் அறிந்த ஒரே மொழி..

Thursday, November 3, 2011

சுப்ஹானல்லாஹ்...அவசியம் பாருங்கள்... விட்டுகட்டி

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு....

சகோதரர் சுவனப்பிரியன் அவர்களது இந்த பதிவை பாருங்கள்.


சுப்ஹானல்லாஹ்...வார்த்தைகளே இல்லை வர்ணிக்க...

திருத்துறைபூண்டி பக்கத்தில் இருக்கும் விட்டுகட்டி கிராமம்...

  • தர்கா வழிபாடு முற்றிலும் கிடையாது.
  • 80% நபிவழி திருமணங்கள்.
  • தின தொழுகைகளுக்கு பள்ளிக்கு வரும் பெண்கள்...
  • கத்தம் பாத்தியா என்னும் மூடப்பழக்கங்கள் அறவே இல்லாதது..

என்று ஆச்சர்யம் மேல் ஆச்சர்யத்தை தருகின்றது அந்த கிராமத்தை பற்றிய சுவனப்பிரியன் அவர்களின் பகிர்வு. அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்....

பாருங்கள்..பிடித்திருந்தால் பலருடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். இதன் மூலமாக இறைவன் பலரையும் நேர்வழிப்படுத்தலாம். 

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ 

Wednesday, November 2, 2011

NASA விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்




அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பிரபல விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (அல்ஹம்துல்லிலாஹ்)

இந்தியாவைச் பூர்வீகமாக கொண்ட இவர் சந்திரனுக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையிலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.



தான் சந்திரனில் உலாவித் திரிந்தசமயம் பூமியை தொலைநோக்கி கருவி மூலம் பார்த்ததாகவும் அப்போது பூமி கடும் இருட்டாக தென்பட்டபோதும், மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு நகரங்கள் மாத்திரம் பிரகாசமாக தென்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பூமியிலிருந்து எந்தவிதமான அலைவரிசைகளும் சந்திரனுக்கு எட்டாத நிலையில் அதான் (பாங்கு) ஒலி சத்தத்தை மாத்திரம் தான் தெளிவாக கேட்டதாகவும் புனித இஸ்லாத்தை தழுவிக்கொண்டுள்ள சுனீதா வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் மாதத்தை அடைந்துள்ள உலகளாவிய முஸ்லிம்களுக்கு இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென நம்புகிறோம். அல்லாஹ் நம்மனைவரையும் இஸ்லாத்தின்பால் பொருந்திக்கொள்ளட்டும்..!!

வேலாயுதம் vs சூலாயுதம்

 கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க உன்னைப்போல் ஒருவன்,வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன. 

இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது.தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயன்று வந்தன. பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. 

ஹிந்துத்துவா இயக்கத்தை ஒரு மாநிலத்தில் வேரூன்ற செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு இஸ்லாமிய எதிப்புணர்வு என்கிற சக்தி தேவைபடுகிறது. அந்த சிந்தனையை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் தமிழ் சினிமாவை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை  தமிழகத்தில் பரப்பவும் அதேநேரம் முஸ்லிம் எதிர்ப்பு வெறி உணர்வை ஏற்படுத்தவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதிதான் ஜிஹாத் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி எல்லாம். 

இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமே என்பது நிரூபனமான பின்னரும் அதை பற்றி எந்த சினிமாவும் வாய்திறக்க வில்லை. இப்படி இருக்க இஸ்லாமிய எதிர்புணர்வை  ஏற்படுத்தும் இதுபோன்ற 
படங்களை எடுத்து  ஹிந்துக்கள் உள்ளத்தில் முஸ்லிம்களை பற்றிய HATE POLICY(வெறுப்புணர்வு) உண்டாக்கி இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை தமிழகத்தில் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ். யின் செயல்திட்டமே இது. 

ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், தமிழகத்திலே தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள், இதை பற்றி காட்ட எந்த சினிமாவுக்கும் துப்பில்லை. நமது ஹிரோக்களுக்கும்,  தயாரிப் பாளர்களுக்கும் பயங்கரவாதி ராஜபக்சேவிடம் இருந்து தமிழர்களைகாப்பது போல் படம் எடுக்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்த ஒரு கோரத்தை பற்றி சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு கலவரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்.க்குதுணை போவதேன்?

இது போன்ற படங்களை எடுக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பின்னணியில் இருந்து பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது என்றே நம்பத்தோன்றுகிறது. அத்வானியின் தமிழக வருகையும் விஜய்யின் வேலாயுதம் படம் வெளியீடும் ஒரு கலவரத்துக்கான ஒத்திகையாகவே நம்மால் பார்க்க முடிகிறது. 



பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!