Sunday, September 28, 2014

மோடிக்கு அமெரிக்காவில் அதிகரிக்கும் எதிர்ப்பு !இப்போ லேடி,எப்போ மோடி

மேடிசன் ஸ்கொயர் கார்டனில் இன்று பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்ச்சி ஒரு புறம் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் மற்றொரு புறம் மோடிக்கு எதிர்ப்பு அலையும் அங்கு உக்கிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதி மற்றும் பொறுப்பிற்கான ஒருங்கிணைப்புக் கூட்டணி என்ற அமைப்பில் ஒன்று கூடுபவர்கள் மோடிக்கு எதிராக ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மோடிக்கு வரவேற்பு நடக்கும் மேடிசன் ஸ்கொயர் பகுதிக்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் போராட்டம் என்று இவர்கள் தயாராகி வருகின்றனர்.

2002ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை ஒரு மாநில முதல்வராக இவர் அடக்கவில்லை என்பது இவர்களது பெரும் புகார் ஆகும்.

இதுவல்லாமல் சீக்கியர்கள் நீதியமைப்பு என்ற மனித உரிமை அமைப்பும் மோடிக்கு எதிராக 30ஆம் தேதி சிடிசன் கோர்ட் என்ற நடைமுறையை மேற்கொள்கிறது. வெள்ளை மாளிகையில் மோடியை வரவேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா சிகப்பு கம்பளம் விரிக்கும் அதே நேரத்தில் வெள்ளை மாளிகைக்கு வெளியே இந்த மனித உரிமை அமைப்பின் சிட்டிசன் கோர்ட் நடைபெறுகிறது. இது அமெரிக்கா முழுதும் அன்று லைவ் ஒளிபரப்பாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான நியாயப்பாடு இல்லையென்றாலும் அமெரிக்காவுக்கு முதன் முதலாக வருகை தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு இதனால் நெருக்கடியே என்று தெரிகிறது.

இதோடல்லாமல் நியூயார்க்கில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்று பெடரல் டிஸ்ட்ரிக்ட் கோர்ட் அளித்த அழைப்பாணைகளை மோடியிடம் சேர்ப்பிப்பவருக்கு 10,000 டாலர்கள் வெகுமதியும் அறிவித்துள்ளது.

இப்படியெல்லாம் நடப்பதை அமெரிக்க அரசு தடுக்குமா அல்லது அங்கு ஜனநாயக உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது செப்டம்பர் 30ஆம் தேதி தெரியவரும்.

http://tamil.thehindu.com/world/
திங்கள், செப்டம்பர் 29, 2014

SOME COMMENTS BY THE HINDU READERS....

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட காரணமாயிருந்த மோடியை குற்றவாளி என்னும் கண்ணோட்டத்தில் அமெரிக்கா வாழ் மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்ல,உலகம் முழுவதும் வாழும் ஈர மனதுடையவர்களின் பார்வையும் அதுதான்.என்றாவது ஒருநாள் தமது குற்றத்திற்கான தண்டனையை இந்திய சட்டத்தின் மூலம் மோடி அனுபவித்தே ஆகவேண்டும்.

மோடி மீது வீசும் "ரத்தக் கவிச்சும்" "நரமாமிச நாற்றமும்" "பிரதமர்" என்ற போர்வைக்குள் மறைத்து விட முடியாது வெளிப்பட்டே தீரும், அதன் எதிரொலி தான் அமெரிக்காவில் நடைபெறும் போராட்டங்கள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மனித உரிமை போராளிகளுக்கு !

U . N . O ல் அணைத்து நாட்டு தலைவர்களும் ( ராஜா பக்ஷே உட்பட) பேசுவது என்பது இயல்பு. அப்படி இறுகையில் அமெரிக்காவும் உலகமும் சேர்ந்து இவரை மட்டும் அழைத்தது போல ஒரு பிரமாண்ட மாயையை ப.ஜ.க விடம் கையூட்டு பெற்ற பல மீடியாக்கள் மிகை படுத்தி செய்தி வெளியிடுவதும், இதை ஒரு கூட்டம் யாருமே சாதிக்காததை மோடி சாதித்தது போல பிரமாண்ட படுத்துவதும் வேடிக்கையாக உள்ளது.

இப்படியெல்லாம் நடப்பதை அமெரிக்க அரசு தடுக்குமா அல்லது அங்கு ஜனநாயக உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது செப்டம்பர் 30ஆம் தேதி தெரியவரும்.???? ஐயா, தனது நியாயமான ஜனநாயக வுரிமைகளுக்கு அமெரிக்கா என்றும் செவி சாய்க்கும். ஜெயலலிதா நீதி தேவனிடம் மண்டியிட்டது போல் , இந்த மோடியும் ஒருநாள் மண்டியிடுவார். நீதி பெற வெகு தூரம் பயணிக்க வேண்டியிருகிறது. அந்த லேடியை போல் இந்த மோடியும் ஒரு நாள் செய்த தவறுக்கு பரிகாரம் பெறுவார்.

-----------------------------------------------------------------------------
உண்மையான ஜனநாயக நாடு அமெரிக்காதான் என்பது இதன் மூலமும் தெரிந்து கொள்ள இயலும்.ஒரு நாள் நீதி வெல்லும்.அமெரிக்காவை மற்ற நாடுகள் போல் எண்ண வேண்டாம்.இங்கு சட்டம்தான் ஆட்சி செய்யும்,சட்டத்தின் முன் ஒபாமாவும்,சாதாரண குடி மகனும் ஒன்றுதான்.மற்ற நாடுகளில் ஆண்டானுக்கும்,பணக்காரனுக்கும்,ஏழைக்கும்,பெரும்பான்மைக்கும்,சிறுபான்மைக்கும் வேறு விதமான - ஏற்றத் தாழ்வுள்ள சட்டங்களே நடைமுறையில் உள்ளன.

18 வருடங்கள் கழிந்து இந்த லேடிக்கு இப்போது தண்டனை கிடைத்துள்ளது.அப்ப மோடிக்கு?



1 comment:

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!