அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 70 இந்தியர்களின்
பாஸ்போர்ட்கள் காணமல் போய் உள்ளன.
காணாமல் போன 70 இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகளை அந்நாட்டு போலீசார் தேடி
வருகின்றனர்.
சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் பாஸ்போர்ட் "விசா"
தொடர்பான பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்திருந்தது. அதில் 70
இந்தியர்களின் பாஸ்போர்ட்டுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் மாயமாகி விட்டன.
அமெரிக்காவில் திருட்டுப் போன இந்திய பாஸ்போர்ட்கள் - 70 பேர் தவிப்பு
அந்த நிறுவனம் அளித்த புகாரை அடுத்து அமெரிக்க போலீசார் பாஸ்போர்ட்டுகளை
தேடி வருகின்றனர். காணாமல் போன பாஸ்போர்ட்டுகளை இந்திய தூதரக அலுவலகம்
ரத்து செய்துள்ளது. எனவே அந்த பாஸ்போர்ட்டை வைத்து யாரும் இனி பயணிக்க
முடியாது.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் மேற்கொள்பவர் இந்த நாட்டைச்
சேர்ந்தவர்தான் என்பதை தெரிவிக்கும் ஆதாரமாக பாஸ்போர்ட் உள்ளது. விசா ஒரு
நாட்டைச் சேர்ந்தவர் இன்னொரு நாட்டிற்கு செல்லும் வேலைக்கான அனுமதி அல்லது
ஒப்புதல் சான்றாக விளங்குகிறது.
70 இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் அமெரிக்காவில் காணமல் போய் உள்ளது அமெரிக்க
வாழ் இந்தியர்களிடையே அச்சத்தை உண்டாக்கி உள்ளது.
Read more at: http://tamil.oneindia.in/news/international/70-indian-passports-stolen-from-san-francisco-report-195421.html
Read more at: http://tamil.oneindia.in/news/international/70-indian-passports-stolen-from-san-francisco-report-195421.html
No comments:
Post a Comment