Monday, May 30, 2011

தலைகாட்டாமல் இருந்தால் ?

ஒரு நாளில் சில நிமிடங்களாவது வெயிலில் தலை காட்டாவிட்டால், வைட்டமின் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும்' என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.மும்பையில் வசிப்பவர் குல்கர்னி. ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றும் இவர், காலையில் அலுவலகம் செல்லும் போது, "ஏசி' காரில் சென்று விடுவார். அலுவலகத்திலும், "ஏசி' அறையிலேயே இருப்பார்.

காலை முதல் மாலை வரை வெளியில் எங்கும் செல்லாமல், வெயிலில் தலை காட்டாமல் இருந்ததால், அவருக்கு சில வகையான வைட்டமின்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். "உங்களின் வழக்கமான பணிகளில் மாற்றத்தை உண்டாக்குங்கள். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம், சில நிமிடங்களாவது உடம்பில் வெயில்படும்படி பார்த்துக் கொள்ளுங்கள்' என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர்.இதேபோல், "வெயில் படாமல் நிழலிலேயே இருக்கும் பலரும், உடம்பில் முக்கியமான வைட்டமின்கள் பற்றாக்குறையால், சில வகையான நோய் பாதிப்புக்குள்ளாகி அவதிப்படுகின்றனர்' என, அரசு சாரா அமைப்பு ஒன்றின் துணைத் தலைவராக இருக்கும் டாக்டர் ஷியாம் பிங்கிள் தெரிவித்துள்ளார்.

டி அல்லது டி3 சத்துக்கள் : அவர் மேலும் கூறியதாவது:நாம் வெப்ப மண்டல நாட்டில் வசிக்கிறோம். இங்கு சூரிய வெளிச் சத்திற்கு பற்றாக்குறை இல்லை. இருந்தாலும், பலர் சூரிய ஒளி மூலம் பெறக்கூடிய வைட்டமின்களான, டி அல்லது டி3 பற் றாக்குறையால் அவதிப்படுகின்றனர். அதற்கு காரணம் வெயிலில் தலை காட்டாததே. ஒருவருக்கு எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் எனில், இந்த வைட்டமின் டி அல்லது டி3 சத்துக்கள் அவசியம். மும்பையில் பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின், 75 சதவீதம் பேர் வைட்டமின் சத்துக்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, வைட்டமின் பி12 மற்றும் டி சத்துக்கள் அவர்களின் ரத் தத்தில் போதிய அளவு இல்லை. அதனால், உணவுப் பழக்கத்திலும், வாழ்க்கை முறையிலும் மாற்றங்களைக் கொண்டுவர வேண் டும். அத்துடன், ஒரு நாளில் சில நிமிடங்களாவது உடம் பில் வெயில் படும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, காலை நேர வெயில் உடம்பில் பட்டால் நல்லது.இவ்வாறு ஷியாம் பிங்கிள் தெரிவித்துள்ளார்.இதே போன்ற கருத்தை, வேறு பல மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.



1 comment:

  1. நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு, நன்றி

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!