ஆடு வளர்க்கும் வளர்மதி: தேனி மாவட்டம் சிலமலை என் சொந்த ஊர். நான்காவது வரை படித்துள்ளேன். 19 வயதில் திருமணம். கணவர் சத்தியமூர்த்திக்கு தச்சு வேலை. தகரம்தான் சுவர்; தென்னங்கீற்று தான் கூரை; அதுதான் எங்கள் வீடு. வறுமை வாழ்க்கையை பிடுங்கியது. "அரம்'செய்வது எங்கள் ஊரின் குடிசைத் தொழில். அதையே நானும் செய்தேன். தினம், 50 ரூபாய் கிடைத்தது. எனக்கு தையல் தெரியும் என்பதால், ஒரு பழைய தையல் இயந்திரத்தை வாங்கி வந்தேன். காடா துணி வாங்கி வந்து,உள் பாவாடை தைத்து விற்றேன். அதன் மூலம் சிறிது வருமானம் உயர்ந்தது. அடுத்ததாக, கிரைண்டர் வாங்கி, கூலிக்கு மாவு அரைத்துக் கொடுத்தேன்.
பின், மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினரானேன். அப்போது தான், வெளியே நாலு பேருடன் பழக முடிந்தது. முன்னேறுவதற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்ள முடிந்தது. ஆடு வளர்க்க குழுவுக்கு கடன் கொடுத்தனர். துணிந்து 34 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, 11 ஆடுகளை வாங்கினேன். ஆட்டு புழுக்கையை விற்று, அந்த பணத்தில் ஆடுகளுக்கு தீவனம் வாங்கினேன்.
தொண்டு நிறுவனத்தில் இருந்து எங்களுக்கு, மொபைல் போன் வாங்க பணமும், இலவச சிம் கார்டும் கொடுத்தனர். தினமும் அதில் ஐந்து முறை, வாய்ஸ் மெயிலில் விவசாய டிப்ஸ் வரும். ஆடு வளர்ப்பு, எளிய முறை ஆடு வைத்திய குறிப்புகள் போன்றவற்றை கேட்டுக் கொள்வேன். வர்த்தக வசதி சேவை மையம்,வங்கிகள் இல்லாத கிராமங்களுக்கு கை கொடுக்கிறது.
எங்கள் ஊரிலும் அந்த மையம் இருக்கிறது. அதற்கு நான் தான் பொறுப்பாளர். அதற்கு ஊதியமும் உண்டு. நான் இப்போது, சிலமலை கிராம ஏழு மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி; 14 மகளிர் கூட்டமைப்பின் பொருளாளர்; விடி வெள்ளி மகளிர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்; மகளிர் சுய உதவிக்குழுக்களின் தீவிர ஆர்வலர் ஆகிய பொறுப்புகளை வகிக்கிறேன். நாள் முழுவதும் அயராத உழைப்பு என்றாலும், இப்போது என்னால் தலை நிமிர்ந்து வாழ முடிகிறது.

No comments:
Post a Comment