Wednesday, August 24, 2011

ஓ! உமரா!


……“ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!” (ஹம்ஜா (ரழி)

……அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!” என்று கூறினார்கள். (ரசூல் (ஸல்)

…….உமர் (ரழி) முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்”  (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி)

…….“உமர் (ரழி) முஸ்லிமானதற்கு பிறகே நாங்கள் பலமிக்கவர்களாக ஆனோம்” (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி)

……..“உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோதுதான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும், எங்களுக்கு கஅபாவை தவாஃப் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி கொடுத்தோம்” (ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி)


  
உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவுதல்

அநியாயங்கள், அடக்குமுறைகள் எனும் மேகங்கள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில் முஸ்லிம்களின் வழிக்கு ஒளிகாட்ட மற்றொரு மின்னல். ஆம்! இம்மின்னல் முந்திய மின்னலை (ஹம்ஜா (ரழி) முஸ்லிமானதை) விட பன்மடங்காக ஒளி வீசியது. அதுதான் உமர் இப்னு கத்தாப் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது.
நபித்துவத்தின் ஆறாம் ஆண்டு துல்ஹஜ் மாதம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவி மூன்று நாட்கள் கழித்து உமர் இஸ்லாமைத் தழுவினார். நபி (ஸல்) அவர்கள் உமர் இஸ்லாமை தழுவ வேண்டுமென இறைவனிடம் வேண்டியிருந்தார்கள்.

“
அல்லாஹ்வே! உமர் இப்னு கத்தாப் அல்லது அபூஜஹ்ல் இப்னு ஹிஷாம் ஆகிய இருவரில் உனக்கு விருப்பமானவரைக் கொண்டு இஸ்லாமை வலிமைப்படுத்துவாயாக!” என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டினார்கள். அவர்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர் உமராக இருந்தார் என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத், அனஸ், இப்னு உமர் (ரழி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை நாம் ஆய்வு செய்து பார்க்கும்போது உமரின் உள்ளத்தில் இஸ்லாம் படிப்படியாகத்தான் வேரூன்றியது என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிவிப்புகளைச் சுருக்கமாக நாம் பார்ப்பதற்கு முன் உமரிடம் இருந்த உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் முதலில் பார்ப்போம்.
உமர் நல்ல வலிமையும் கம்பீரமான இயல்பும் உடையவர். அவரால் முஸ்லிம்கள் பல வகையான தொந்தரவுகளை, எண்ணற்ற இன்னல்களை நீண்ட காலமாக அனுபவித்து வந்தனர். எனினும், அவரது உள்ளத்தில் பல மாறுபட்ட உணர்ச்சிகளின் போராட்டம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒருபுறம் தங்களது மூதாதையர்கள் கடைபிடித்து வந்த சடங்குகளைப் பின்பற்றி அவற்றுக்காக வீறுகொண்டு எழுந்தார். மற்றொருபுறம்,கொள்கையில் முஸ்லிம்களுக்கு இருந்த உறுதியையும் அதற்காக சோதனைகள் அனைத்தையும் அவர்கள் தாங்கிக் கொள்வதையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும், ஒரு நல்ல பகுத்தறிவுவாதிக்கு வரும் சந்தேகங்கள் அவருடைய உள்ளத்திலும் அவ்வப்போது தோன்றி மறைந்தன. ஒரு வேளை இஸ்லாமிய போதனை மற்றவைகளைவிட தூய்மையானதாக,சரியானதாக இருக்கலாமோ என யோசிப்பார். அதனால்தான் அவருக்கு இஸ்லாமின்மீது கோபம் பொங்கி எழும்போதெல்லாம் உடனடியாக அடங்கியும் விட்டது.
உமர் இஸ்லாமைத் தழுவிய நிகழ்ச்சியை விவரிக்கும் அறிவிப்புகளை முறையாக இங்கு நாம் பார்ப்போம். ஓர் இரவில் தனது வீட்டுக்கு வெளியில் தூங்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. நேராக ஹரமுக்கு வந்து கஅபாவின் திரைக்குள் நுழைந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அங்கு தொழுது கொண்டிருந்தார்கள். தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தியாயம் அல்ஹாக்கா ஓத, அதன் வசன அமைப்புகளை ரசித்து உமர் ஓதுதலைச் செவிமடுத்தார். இதைத் தொடர்ந்து உமர் கூறுகிறார்:
நபி (ஸல்) அவர்கள் ஓதுவதை கேட்டுக் கொண்டிருந்த நான் எனது எண்ணத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் கவிஞராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் கூற,
இது, நிச்சயமாக (நம்மால் அறிவிக்கப்பட்டபடி) மிக்க சங்கை பொருந்திய ஒரு தூதரால் கூறப்பட்டதாகும். இது, ஒரு கவிஞனுடைய சொல்லல்ல. எனினும், (இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அல்குர்ஆன் 69:40, 41)
என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்
அடுத்து இவர் ஜோசியக்காரராக இருப்பாரோ! என்று என் உள்ளத்தில் நான் கூற,

(
இது) ஒரு ஜோசியக்காரனுடைய சொல்லுமல்ல. (எனினும், இதனைக் கொண்டு) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுபதேசம் அடைகின்றீர்கள். உலகத்தார்களின் இறைவனால் (இது) இறக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 69:42,43)
என்ற வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள்.
அது சமயம் எனது உள்ளத்தில் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இது உமர் இதயத்தில் விழுந்த இஸ்லாமின் முதல் விதையாகும். எனினும்,அறியாமைக் கால எண்ணங்களும் மூட பழக்க வழக்கங்களின் பிடிவாதமும்,மூதாதையர்களின் மார்க்கத்தை உயர்வாக கருதி வந்ததும், அவரது உள்ளம் ஒத்துக் கொண்டிருந்த மகத்தான உண்மையை மறைத்திருந்தது. தனது உள்ளத்தில் பொதிந்து கிடந்த உணர்வைப் பொருட்படுத்தாமல் இஸ்லாமுக்கு எதிராக செயல்படுவதிலேயே தீவிரம் காட்டி வந்தார்.
நபி (ஸல்) அவர்களின் மீது அவருக்கிருந்த, அளவுமீறிய கோபத்தினால் வாளை ஏந்தி நபி (ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வெளியேறினார். அப்போது நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் வழியில் அவரை சந்தித்து “உமரே நீ எங்கு செல்கிறாய்?” என்று கேட்க “நான் முஹம்மதை கொல்லச் செல்கிறேன்.” என்றார். அதற்கு நுஅய்ம் “நீ முஹம்மதை கொலை செய்துவிட்டு ஹாஷிம், ஜுஹ்ரஹ் இவ்விரு கிளையார்களிலிருந்து பயமின்றி தப்பித்து வாழ்வது எங்ஙனம்?” என்று அச்சுறுத்தினார். அவரை நோக்கி “நீ உனது மார்க்கத்தை விட்டுவிட்டு அவரது மார்க்கத்திற்கு சென்று விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது” என்று உமர் கூறினார். அதற்கு நுஅய்ம் “உமரே! ஆச்சரியமான ஒன்றை நான் உமக்கு சொல்லட்டுமா?. உனது சகோதரியும் (அவரது கணவர்) உனது மச்சானும் உனது மார்க்கத்தை விட்டுவிட்டு முஹம்மதின் மார்க்கத்துக்குச் சென்று விட்டனர்” என்று கூறியதுதான் தாமதம். அவ்விருவரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை நோக்கி உமர் விரைந்தார்.
அப்போது அங்கு கப்பாப் (ரழி) அவர்கள் உமரின் சகோதரிக்கும் அவரது கணவருக்கும் தனது ஏட்டிலுள்ள “தாஹா’ எனத் தொடங்கும் அத்தியாயம் தாஹாவின் வசனங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உமர் வருவதை அறிந்த கப்பாப் (ரழி) வீட்டினுள் மறைந்து கொண்டார். உமரின் சகோதரியும் அந்த ஏட்டை மறைத்து விட்டார்கள். எனினும், உமர் வீட்டிற்கு அருகே வந்தபோது கப்பாப் (ரழி) கற்றுக் கொடுத்த சப்தத்தை கேட்டு விட்டார். வீட்டினுள் நுழைந்த உமர் “உங்களிடம் நான் செவிமடுத்த இந்த மெல்லிய சப்தம் என்ன?” என்று கேட்டதற்கு “நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை தவிர வேறு எதுவும் இல்லை” என்று அவ்விருவரும் கூறினார்கள். அப்போது உமர் “நீங்கள் மதம் மாறிவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவரது மச்சான் “உமரே! சத்தியம். உன்னுடைய மார்க்கத்தை தவிர வேறொன்றில் இருந்தால் உன் கருத்து என்ன?” என்று கேட்க, உமர் கடுஞ்சினம் கொண்டு தனது மச்சானின் மீது பாய்ந்து அவரை பலமாகத் தாக்கி மிதிக்கவும் செய்தார். அவரது சகோதரி தனது கணவரை விட்டும் உமரை விலக்கினார். உமர் கடுமையாக தன் சகோதரியின் கன்னத்தில் அறைந்து அவரது முகத்தை ரத்தக் காயப்படுத்தினார்.
கோபம் கொண்ட உமரின் சகோதரி உமது மார்க்கமல்லாத வேறொன்றில் உண்மை இருந்தாலுமா? (அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது.) “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்”என்று உரக்கக் கூறினார். தனது கோபம் பலனற்றுப் போனதைக் கண்டு உமர் நிராசை அடைந்தார். தனது சகோதரிக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தைப் பார்த்து அவருக்கு கைசேதமும், வெட்கமும் ஏற்பட்டது. உங்களிடமுள்ள இப்புத்தகத்தை எனக்குக் கொடுங்கள். நான் அதை படிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதற்கு அவரது சகோதரி “நீ அசுத்தமானவர். நீர் எழுந்து குளித்து வாரும்” என்று கூறி அதைத் தர மறுத்துவிட்டார். பிறகு குளித்து வந்தவுடன் திருமறையை கையிலேந்தி “பிஸ்மில்லார்ரஹ்மானிர்ரஹீம்” (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஓதியவுடன் “ஆஹா! என்ன தூய்மையான பெயர்கள்” என்று கூறி, தொடர்ந்து “தாஹா’ என்று தொடங்கி பதினான்காவது வசனம் வரை ஓதி முடித்துவிட்டு “இது எவ்வளவு அழகான சொற்கள்! எவ்வளவு இனிமையான வசனங்கள்! எனக்கு முஹம்மதைக் காட்டுங்கள்!” என்று கேட்டுக் கொண்டார். உமரின் பேச்சைக் கேட்ட கப்பாப் (ரழி) வெளியேறி வந்து “உமரே! நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள். வியாழன் இரவு, “அல்லாஹ்வே! உமர் அல்லது அபூஜஹ்ல் மூலமாக இஸ்லாமுக்கு உயர்வைக் கொடு!” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் செய்த பிரார்த்தனை உங்கள் விஷயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நான் உண்மையில் நம்புகிறேன்” என்றுரைத்தார்.
நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலையில் உள்ள இல்லத்தில் இருந்தார்கள். உமர் தனது வாளை அணிந்து கொண்டு நபி (ஸல்) அவர்களின் வீட்டை நோக்கி வந்தார். உமர் கதவைத் தட்டியபோது ஒருவர் கதவின் இடுக்கின் வழியாக உமரை வாள் அணிந்த நிலையில் பார்த்து நபி (ஸல்) அவர்களுக்கு அச்செய்தியைக் கூறினார். அங்கிருந்தவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிட்டார்கள். மக்கள் “உமர் வந்திருக்கிறார்” என்று கூறினார்கள். “ஓ! உமரா! (வந்திருக்கிறார்?) அவருக்கு கதவை திறந்து விடுங்கள்! அவர் நன்மையை நாடி வந்திருந்தால் அந்த நன்மையை நாம் அவருக்குக் கொடுப்போம்! அவர் தீமையை நாடி வந்திருந்தால் அவரது வாளாலேயே அவரை நாம் கொலை செய்து விடுவோம்!” என்று ஹம்ஜா (ரழி) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வீட்டின் உள்பகுதியில் வஹி (இறைச்செய்தி) வந்த நிலையில் இருந்தார்கள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு உமரை சந்தித்த நபி (ஸல்) அவர்கள் உமரின் சட்டையையும் வாளையும் பிடித்து அவரைக் குலுக்கி “உமரே! நீ வழிகேட்டிலிருந்து விலக மாட்டாயா? வலீதுக்கு ஏற்பட்டதைப் போன்ற கேவலத்தையும், தண்டனையும் அல்லாஹ் உனக்கு இறக்க வேண்டுமா?அல்லாஹ்வே! இதோ உமர் இப்னு கத்தாப் வந்திருக்கிறார். அல்லாஹ்வே! உமரால் இஸ்லாமிற்கு உயர்வைக்கொடு!” என்று கூறினார்கள். உமர் (ரழி)“அஷ்ஹது அல்லாஇலாஹஇல்லல்லாஹ் வ அன்னக்க ரஸுலுல்லாஹ்”என்று கூறி இஸ்லாமைத் தழுவினார். (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, அல்லாஹ்வின் தூதர் நீங்கள் என்றும் சாட்சி கூறுகிறேன் என்பதே இதன் பொருளாகும்.) இதனைப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் தக்பீர் (அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெயரிவன் என்று) முழங்கினர். அந்த சப்தத்தைப் பள்ளியில் உள்ளவர்களும் கேட்டார்கள்.
யாராலும் எதிர்கொள்ள முடியாத அளவுக்கு உமர் (ரழி) வலிமை மிக்கவராக இருந்தார். அவர் இஸ்லாமை ஏற்றுக்கொண்டது இணைவைப்பவர்களுக்கிடையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதுடன்,இனி தங்களுக்கு இழிவும் பலவீனமும்தான் என்பதை அவர்களுக்கு உணர வைத்தது. உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது முஸ்லிம்களுக்குக் கண்ணியத்தையும், சிறப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் இஸ்லாமைத் தழுவியபோது மக்காவாசிகளில் நபி (ஸல்) அவர்களுக்கு மிகக் கடுமையான எதிரி யார்?என்று யோசித்தேன். அபூ ஜஹ்ல்தான் அந்த எதிரி என்று கூறிக்கொண்டு நான் அவனிடம் வந்து அவனது வீட்டுக் கதவைத் தட்டினேன். என்னைப் பார்த்த அவன் “வருக! வருக! நீங்கள் வந்ததற்குரிய காரணம் என்ன?” என்று வினவினான். “நான் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் நம்பிக்கை கொண்டேன். அவர் கொண்டு வந்த மார்க்கத்தை உண்மை என்று நம்புகிறேன்” என்று கூறினேன். அதற்கவன் “அல்லாஹ் உன்னை கேவலப்படுத்துவானாக! நீ கொண்டு வந்ததையும் கேவப்படுத்துவானாக!” என்று கூறி என் முகத்தில் கதவை அறைந்து சாத்தி விட்டான்.” (இப்னு ஹிஷாம்)
உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அக்காலத்தில் ஒருவர் முஸ்லிமாகிவிட்டார் என்று தெரியவந்தால் அனைவரும் அவரைப் பிடித்து அடிப்பார்கள்; சண்டை செய்வார்கள். நானும் முஸ்லிமாகி எனது தாய்மாமா“ஆஸி இப்னு ஹாஷிமிடம்’ வந்து அதைக் கூறியவுடன் அவர் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார். அவ்வாறே குறைஷிப் பெரியோர்களில் ஒரு முக்கியமானவரிடம் சென்று கூறினேன். அவரும் என்னை ஒன்றும் செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்து கொண்டார்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவிக்கிறார்கள்: உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவிய செய்தி குறைஷிகள் எவருக்கும் தெரியவில்லை. இதனால், செய்திகளை மக்களிடத்தில் மிக அதிகம் பரப்புபவர் யார்? என்று உமர் (ரழி) விசாரித்தார். அதற்கு ஜமீல் இப்னு முஅம்மர் அல் ஜும என்று பதில் கூறப்பட்டவுடன் அவரிடம் சென்றார்கள். நானும் உடன் இருந்தேன். அப்போது எனக்கு பார்ப்பதையும், கேட்பதையும் நன்கு புரிந்து கொள்ளக்கூடிய வயதுதான். உமர் (ரழி) அவரிடம் சென்று “ஓ ஜமீல்! நான் முஸ்லிமாகி விட்டேன்” என்று கூறியவுடன், அவர் மறுபேச்சு பேசாமல் நேராகப் பள்ளிக்குச் சென்று உரத்த குரலில் “ஓ குறைஷிகளே! கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டான்” என்று கத்தினான். அவனுக்கு பின்னால் உமர் (ரழி) நின்றுகொண்டு “இவன் பொய் கூறுகிறான். நான் மதம் மாறவில்லை. மாறாக முஸ்லிமாகி விட்டேன்! அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன்! அவனது தூதரை உண்மை என்று மெய்ப்பித்தேன்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட மக்கள் ஒன்று கூடி உமரின் மீது பாயத் தொடங்கினார்கள். அவர்கள் உமரிடம் சண்டையிட உமரும் அவர்களிடம் சண்டையிட்டார். சூரிய வெப்பம் அதிகரித்தபோது களைத்துவிட்ட உமர் (ரழி) கீழே உட்கார்ந்து விட்டார். மக்கள் அவரைச் சுற்றி நின்று கொண்டார்கள். உங்களுக்கு என்ன விருப்பமோ! அதை செய்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக கூறுகிறேன். நாங்கள் குறைந்தது 300 நபர்களாக பெருகிவிட்டால் ஒன்று மக்கா(வின் ஆதிக்கம்) உங்களுக்கு அல்லது எங்களுக்காகி விடும்” என்று கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)
இதற்குப் பிறகு உமரை கொலை செய்யக் கருதி இணைவைப்பவர்கள் உமரின் வீட்டுக்கு படையெடுத்தனர். உமர் (ரழி) வீட்டில் பயந்த நிலையில் இருந்தபோது அபூ அம்ர் ஆஸ் இப்னு வாயில் என்பவர் வந்தார். அவர் யமன் நாட்டு போர்வையும் கை ஓரம் பட்டினால் அலங்கரிக்கப்பட்ட சட்டையும் அணிந்திருந்தார். அறியாமை காலத்தில் அவரது கிளையார்களான பனூ ஸஹம் எங்களுடைய நட்புக்குரிய கிளையார்களாக இருந்தார்கள். அவர் உமரிடம் “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார். உமர் (ரழி) “நான் முஸ்லிமானதற்காக என்னை உமது கூட்டம் கொலை செய்ய முனைகிறார்கள்” என்று கூறினார். அதற்கு அவர் “அப்படி ஒருக்காலும் நடக்காது” என்று கூறினார். அவர் இந்தச் சொல்லை கூறியதற்கு பிறகு உமர் நிம்மதியடைந்தார். இதற்கு பிறகு ஆஸ் வெளியேறி வந்து பார்த்தபோது அங்கு மக்களின் பெரும் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்களைக் கண்ட ஆஸ் “எங்கே வந்தீர்கள்?” என்று கேட்டதற்கு“இதோ கத்தாபின் மகன் மதம் மாறிவிட்டார். அவரிடம்தான் வந்துள்ளோம்”என்று கூறினார்கள். அதற்கு ஆஸ் “அவரை ஒருக்காலும் நீங்கள் நெருங்க முடியாது” என்று கூறவே அனைவரும் திரும்பிச் சென்றுவிட்டனர். (ஸஹீஹுல் புகாரி)
இதுவரை கூறிய நிகழ்ச்சிகள் இணைவைப்பவர்களைக் கவனித்துக் கூறப்பட்டது. முஸ்லிம்களை கவனித்துப் பார்க்கும்போது உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியது வித்தியாசமான ஒன்றாகவே இருந்தது. இதைப்பற்றி இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்:
உமரிடம் “உங்களுக்கு “ஃபாரூக்’ என்ற பெயர் வரக் காரணம் என்ன?” என்று கேட்டேன். அதற்கவர் “எனக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக ஹம்ஜா (ரழி) முஸ்லிமானார். பிறகு நான் முஸ்லிமானேன்” என்று தான் முஸ்லிமான சம்பவத்தைக் கூறினார்கள். அதன் இறுதியில் அவர்கள் கூறியதாவது: நான் முஸ்லிமானபோது “அல்லாஹ்வின் தூதரே! நாம் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தானே இருக்கிறோம்” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆம்! எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் இறந்தாலும் உயிர் வாழ்ந்தாலும் உண்மையில்தான் இருக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான் “அப்போது ஏன் மறைவாக செயல்பட வேண்டும். உங்களைச் சத்திய மார்க்கத்தைக் கொண்டு அனுப்பிய இறைவனின் மீது ஆணையாக! நாம் வெளிப்படையாக சத்தியத்தைக் கூறியே ஆக வேண்டும்” என்று கூறி முஸ்லிம்களை இரண்டு அணிகளாக ஆக்கி, ஓர் அணியில் நானும் மற்றொரு அணியில் ஹம்ஜாவும் இருந்துகொண்டு நபி (ஸல்) அவர்களை இரு அணிகளுக்கு நடுவில் ஆக்கிக் கொண்டோம். திருகையிலிருந்து மாவுத் தூள்கள் பறப்பது போன்று எங்களது அணிகளில் இருந்து புழுதிகள் பறந்தன. நாங்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் என்னையும் ஹம்ஜாவையும் பார்த்த குறைஷிகளுக்கு இதுவரை ஏற்பட்டிராத கைசேதமும் துக்கமும் ஏற்பட்டது. அன்றுதான் நபி (ஸல்) அவர்கள் எனக்கு “அல் ஃபாரூக்“” எனப் பெயரிட்டார்கள். (தாரீக் உமர்)
உமர் (ரழி) முஸ்லிமாகும் வரை நாங்கள் கஅபாவுக்கு அருகில் தொழக்கூட முடியாதவர்களாகவே இருந்தோம்” என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (முக்தஸருஸ்ஸீரா)

“
உமர் (ரழி) இஸ்லாமைத் தழுவியபோதுதான் இஸ்லாம் வெளி உலகுக்குத் தெரியவந்தது. பகிரங்கமாக இஸ்லாமிய அழைப்பு விடப்பட்டது. கஅபாவைச் சுற்றி கூட்டமாக நாங்கள் அமர்ந்தோம். மேலும், எங்களுக்கு கஅபாவை தவாஃப் செய்ய முடிந்தது. எங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவர்களிடம் அவர்கள் செய்யும் கொடுமைகளில் சிலவற்றுக்காவது நாங்கள் பதிலடி கொடுத்தோம்” என்று ஸுஹைப் இப்னு ஸினான் (ரழி) கூறுகிறார்கள்.(தாரீக் உமர்)

“
உமர் (ரழி) முஸ்லிமானதற்கு பிறகே நாங்கள் பலமிக்கவர்களாக ஆனோம்”என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) கூறுகிறார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ரஹீக், இறுதித் தூதர் (ஸல்) வாழ்க்கை நூலிலிருந்து

Tuesday, August 23, 2011

நாத்திகரா நீங்கள்..? உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்...


நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்..


இஸ்லாமிய வெறுப்புக்கு தெளிவான மறுப்பு அழகாய் சொல்லப்பட்ட போதிலும் கடவுளை விமர்சிக்கும் நாத்திகர்கள் இதுவரையிலும் நாத்திகம் குறித்து உரையாட வாய் திறப்பதில்லை. ஆகவே அன்புள்ளம் கொண்ட இணைய வாழ் பெருமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்...

நாத்திகரா நீங்கள்..?
      
Good!.. உங்களைத்தான் தேடிக்கொண்டிருக்கிறோம்., கீழ்க்கண்ட ஆத்திக பதிவர்கள் உங்களோடு நாத்திகம் குறித்து நாகரிமான முறையில் உரையாட காத்திருக்கிறார்கள்., அவர்களின் நாத்திகம் குறித்த சந்தேக பார்வையை நீங்களும் பாருங்கள்., உங்கள் பார்வையில் நாத்திகம் உண்மையென்றால் அதுக்குறித்து உரையாட வாருங்கள்...


கொள்ளையர்களை வெட்டிய வீரப்பெண் பரக்கத் நிஷா!


வீடு புகுந்து நகைகளைப் பறித்த கொள்ளையர்களிடம் போராடிய பெண், அவர்களிடம் இருந்த அரிவாளைப் பறித்து, கொள்ளையனை வெட்டியதால், அவர்கள் தப்பி ஓடினர். தேனி மாவட்டம் உத்தமபாளையம், பி.டி.ஆர். காலனியை சேர்ந்த சர்தார் அகமது மனைவி பரக்கத் நிஷா,53. நேற்று அதிகாலை 4 மணிக்கு, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, 25 முதல் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் வீட்டிற்குள் புகுந்தனர்.

அதில் ஒருவன், பரக்கத் நிஷாவின் மகள் அலிமா பானு படுத்திருந்த அறைக்குள் சென்று, அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் செயினை பறித்த போது, அலிமா பானு கூச்சலிட்டார். கொள்ளையனைப் பிடிக்க ஓடி வந்த பரக்கத் நிஷாவை, அரிவாளுடன் காத்திருந்த மற்றொரு கொள்ளையன் தடுத்தான். அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்தவன், அரிவாளால் வெட்டினான். இதில், பரக்கத் நிஷாவிற்கு கைவிரலில், காயம் ஏற்பட்டது.

large_298784.jpgசுதாரித்துக்கொண்டவர், திருடனுடன் போராடினார். அவனிடம் இருந்த அரிவாளைப் பறித்து, கொள்ளையனைத் திருப்பி வெட்டினார். தோள்பட்டையில், இரண்டு முறை வெட்டியதால், தப்பித்தால் போதும் என, கையில் கிடைத்த ஐந்தரை சவரன் நகைகளுடன், கொள்ளையர்கள் தப்பி ஓடினர். அதற்குள், பரக்கத் நிஷாவின் மருமகன் அக்பர் அலி, எழுந்து துரத்திய போது, காலில் காயம் ஏற்பட்டது. பரக்கத் நிஷாவும், அக்பர் அலியும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்தமபாளையம் போலீசார், தப்பி ஓடிய கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
 

Monday, August 22, 2011

ஹிஜாபுக்காக போராடும் கல்லூரி மாணவி

.........."இந்த விஷயத்தில் முன் வைத்த காலை பின் வாங்கும் எந்த எண்ணமும் தமக்கு இல்லை" என்று ஆகஸ்ட் 12 வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் ஹதியா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.........


TO READ MORE 

VISIT 


http://manithaneyaexpress.blogspot.com/

இஸ்லாமிய விரோத வலைத்தளங்களை தாக்கும் சவுதி பெண்மணி-Woman disables anti-Islam websites


அமெரிக்காவில் கல்வி கற்கும் சவுதி அரேபிய யுவதி ஒருவர் டென்மார்க் நாட்டில் இருந்து இயங்கும் 23 வலைத்தளங்களை தனது திறமையின் மூலம் தாக்கியுள்ளார், இவ்வளைத்தலங்கள் அனைத்தும் இஸ்லாத்துக்கு எதிராக இயங்குவதை தமது கொள்கையாக கொண்டுள்ளதுடன் இவைகள் அனைத்தும் நபி பெருமானார் (ஸல்) அவர்களை தூற்றுவதை வாடிக்கையாக கொண்ட இணையத் தளங்களாகும் என அல் மதீனா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பத்திரிகைக்கு பேட்டியளித்த நூப் ராஷித் என்ற குறித்த பெண்மணி நபிகளாரை பற்றி இட்டுக்கட்டப்பட்ட விடயங்களையும் மற்றும் கார்டூன்களையும் வெளியிடும் தளங்களையே ஹாக்கிங் செயற்பாடு மூலம் செயலிழக்க செய்ததாக குறிப்பிட்ட அவர் தனது பார்வையில் இத்தளங்களின் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக பல ஆபாச வலைத்தளங்களும் நூப் ராஷித் இனால் செயலிழக்க செய்யப்பட்டதோடு ஆபாச படங்களை எடுத்து அதை பயன்படுத்தி இளம் பெண்களை பயமுறுத்திய ஒரு நபரின் கணனியின் செயற்பாட்டை கட்டுப்படுத்தி குறித்த ஆபாச படங்களை அழித்து பயமுறுத்தல்களுக்கு உள்ளான இளம்பெண்களையும் காப்பாற்றியுள்ளார். கணணியை கற்பதற்கான ஆர்வமே தான் இந்த துறையில் நிபுணத்துவம் அடைய காரணமாகும் என்று நூப் தெரிவித்துள்ளார்.
ஒரு இளைஞன் ஒரு யுவதியை அவளது அந்தரங்க புகைப்படங்களை கொண்டு மிரட்டி அவளை திருமணம் செய்ய முற்பட்ட சம்பவம் தான் ஹாக்கிங் துறையில் திறமைகளை வளர்க்க தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்ட நூப், இச்சம்பவத்தின் பின்னர் தன்னுடைய நண்பர்கள் மூலமே ஹாக்கிங் கலையை கற்றதாக கூறியுள்ளார். இதன் மூலம் அல்லாஹ்வின் கிருபையால் மேலும் பல பெண்களை இவ்வாறான சூழ்நிலைகளில் இருந்து நூப் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த டென்மார்க் தளங்களை தாக்கிய நூப் அவ்வலைத்தளங்கள் நடாத்துவோருக்கு பெருமானார பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் பொருத்தமான தகவல்களை அனுப்பியுள்ளார்.
இணையத்தை பாவிக்கும் இளம்பெண்கள் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நூப் வலியுறுத்தியுள்ளார். கணணி பராமரிப்பு மற்றும் திருத்த வேலைகளுக்கு அதற்கான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கணணிகளை கொடுக்கும் போது இளம் பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இவ்வாறான கடைகள் மற்றும் கொம்பனிகளில் கடமை புரியும் சில நபர்கள் இளம் பெண்களின் கணனிகளில் உளவு மென்பொருள்களை (Spyware) உட்புகுத்தும் சாத்தியங்கள் உண்டு எனவும் தெரிவித்தார்.
மேற்குலக ஊடகங்களின் தகவல்களின் படி அண்மையில் 900 க்கு மேற்பட்ட டென்மார்க் வலைத்தளங்கள் ஹாக்கிங் தாக்குதலுக்கு உள்ளாயின.
ஒரு சர்வதேச இணைய கண்காணிப்பாளர் தகவல் தருகையில் ஒரு சிறிய காலப்பகுதிக்குள் இவ்வாறு பெறும் எண்ணிக்கையான வலைத்தளங்கள் தாக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும் என்று தெரிவித்துள்ளார். அநேகமான ஹாக்கிங் தாக்குதல்களின் போது குறித்த தளங்கள் செயலிளப்புக்கு மாத்திரமே உள்ளாகும் அதேவளை சில சந்தர்ப்பங்களில் டென்மார்க் அரசையும் மக்களையும் எச்சரிக்கும் வாசகங்கள் பதிவேற்றப்படுகின்றன எனவும் தெரிவித்தார். தாக்கப்படும் தளங்கள் பின்னர் மீண்டும் இயங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவைப்போல் சவுதியிலும் ஹாக்கிங் குற்றத்துக்காக கடுமையான தண்டனைகள் அமுலில் உள்ளமை குறிப்பிட தக்கது.

Sunday, August 21, 2011

கண்ணீர் பெருகியது... காஷ்மீரை நினைத்து! காஷ்மீரில் மறைக்கப்படும் உண்மைகள்...


நடுங்கும் குளிர் இல்லை. அந்த சினாப் பள்ளத்தாக்கு இரவு நேர அமைதியுடன், இதமாக இருந்தது. நாங்கள் விடுதிக்கு வந்த கொஞ்ச நேரத்தில், அரசுசாரா அமைப்பைச் சேர்ந்தவர்களும், சில மனிதஉரிமை ஆர்வலர்களும் எங்களை சந்தித்தனர்.

காஷ்மீரில் நடைபெறும் போராட்டங்கள், மனிதஉரிமை மீறல்கள், மக்களின் வாழ்க்கை, அரசியல்வாதிகளின் அணுகுமுறைகள், ஹூரியத் அமைப்பின் செயல்பாடுகள் என பல விஷயங்களைப் பேசினோம்.

இறுதியாக காஷ்மீரின் உண்மை வரலாறு குறித்தும், இந்திய - பாகிஸ்தான் நாடுகளின் அரசியல் சதுரங்களத்தில் காஷ்மீர் பகடைக்காயாக பயன்படுத்துவது குறித்தும் உணர்வுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பேசினார்கள்.

குறிப்பாக இந்திய ராணுவத்தின் மீது கடும் கோபத்தையும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ மீதான வெறுப்பையும் அவர்கள் வெளிக்காட்டினார்கள்.

எங்களை இந்தியர்களாகவும், தங்களை காஷ்மீரிகளாகவும் கருதியப்படிதான் அவர்களது உரையாடல் இருந்தது. ஜம்மு - காஷ்மீரில் ஆளும் கட்சியாக இருக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி ஊழலில் திளைப்பதாகவும், உமர் அப்துல்லாவுக்கு நிர்வாகத் திறன் இல்லை என்றும் காஷ்மீரிகள் கருதுவதாக கூறினார்கள்.

அவர்கள் தொடர்ந்து சொன்ன செய்திகள் வாய்விட்டு கதறிஅழ செய்யக்கூடியவை. தமிழ் ஈழத்தில் சிங்கள ராணுவமும், பங்களாதேசில் பாகிஸ்தான் ராணுவமும் செய்திட்ட அட்டூழியங்களுக்கு நிகரானவை. அவர்கள் சொன்ன செய்திகளை அதே வார்த்தைகளில் உங்களுக்கு சொல்கிறோம். அது......,,,,

திடீர் என சோதனை என்ற பெயரில் நள்ளிரவில் ராணுவத்தினர் வருவார்கள். ஆண்களை வெளியே நிறுத்தி விட்டு பெண்களை மட்டுமே உள்ளே இருக்கச் சொல்வார்கள். ஒருவர் பின் ஒருவராக எங்கள் பெண்களை சூரையாடுவார்கள். அவர்களது கால்களையும், கைகளையும் பிடித்து எங்கள் பெண்கள் அழுவார்கள். போதையில் வெறிப்பிடித்திருக்கும் ராணுவத்தினர் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் பொழுது வெளியே துப்பாக்கி முனையில் துடிக்கும் அக்குடும்பத்தின் ஆண் மக்களின் நிலை உங்களுக்கு தெரியுமா?

ராணுவத்தினர் எல்லா அநியாயங்களையும் செய்து முடித்து நகர்ந்த பிறகு அக்குடும்பத்தின் ஆண்களும், பெண்களும் கட்டிப்பிடித்து அழும் சோகத்தை எப்படி எங்களால் சொல்ல முடியும்? அந்த நள்ளிரவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் தூக்கத்தை தொலைத்து விட்டு அழும் குழந்தைகளை என்ன சொல்லி தேற்றுவது என தெரியாமல் எத்தனையோ இரவுகள் கழிகிறது.

ஸ்ரீநகர் போன்ற நகரங்களில் இதை செய்யும் துணிச்சல் இந்திய ராணுவத்திற்கு இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் இது தினமும் நடக்கிறது. துணிச்சல் மிக்க சில குடும்பத்தினர் அதை வெளியே கொண்டு வரும் போது அவை பரபரப்பு செய்தியாகின்றன. ஆனால் நூற்றுக்கணக்கான காஷ்மீரி பெண்கள் தங்கள் கற்பை இழந்தும் கூட தங்கள் பிள்ளைகளுக்காக உயிருள்ள பிணங்களாய் துயரங்களை மூடிமறைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது இந்தியர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?

நீங்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளை ராணுவம் சுட்டுக்கொன்றதாக செய்தி ஊடகங்களில் அறிவீர்கள். உங்களுக்கு தெரியுமா? அவர்களில் 95 சதவிகிதம் பேர் அப்பாவிகள் என்று?

ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்களை பெறும்பாலும் ராணுவம் நெருங்குவதில்லை. அப்படியே நெருங்கினாலும் இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டைகள் நடக்கும். அதில் இறப்பவர்கள் தான் ஆயுதங்களோடு போராடுபவர்களாக இருப்பார்கள். மற்றபடி அரசு படைகள் சுட்டுக்கொண்டதாக அடிக்கி வைக்கப்படும் இளைஞர்களின் பிணங்களெல்லாம் போலி எண்கவுண்டர் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

அதிகமானோரை சுட்டுக்கொன்ற வீரர் என்று விருதுகளையும், பதக்கங்களையும் பெறுவதற்காக இப்படி எங்கள் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று சுட்டுக்கொன்று கணக்கு காண்பிக்கிறார்கள். இப்படி விருதுளை பெற்ற அதிகாரிகளின் எண்ணிக்கை ஏராளம்.

இவ்வளவு அநீதிகளையும், துயரங்களையும் நாங்கள் காஷ்மீரில் சுமக்கிறோம். குறைந்த பட்சம் எங்களின் நியாயங்களை, எங்கள் தரப்பு வாதங்களை இந்திய ஊடகங்கள் பேசாதது எங்களை மேலும் அந்நியப்படுத்துகிறது. அருந்ததிராய் போன்ற ஒரு சிலர் மட்டுமே எங்களுக்கு ஆறுதலாக பேசுகிறார்கள்.

நாங்கள் பாகிஸ்தானை ஒரு போதும் ஆதரிப்பதில்லை. ஆனால், எங்களை பாகிஸ்தான் ஆதரவாளர்களாக இந்தியாவில் பா.ஜ.க சார்பு அமைப்புகள் சித்தரிக்கின்றன. உண்மையில் நாங்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் அரசியல் விளையாட்டுகளிலிருந்து விடுதலை கேட்கிறோம். இங்கு நடப்பது மத போராட்டம் அல்ல. எங்கள் மண்ணின் விடுதலைக்காக மக்களே நடத்தும் போராட்டம். இதை காஷ்மீரில் உள்ள சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை மக்களும் புரிந்திருக்கிறார்கள்.
இப்படி அவர்கள் பேசிக்கொண்டே சென்றார்கள். நாங்களும் அவர்களுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தோம்.

இரவு மணி 12 மணிவரை பேசிவிட்டு அவர்கள் விடை பெற்றார்கள். எங்களுக்கு வேதனையாக இருந்தது. நியாயங்களும், உரிமைகளும் மறுக்கப்பட்டு, உண்மை வரலாறு புறக்கணிக்கப்பட்டு காஷ்மீர் குறித்து தவறான வரலாறு பரப்பப்படுவதை எண்ணி வருந்தினோம். எங்களோடு வந்த வழக்கறிஞர் வாசுதேவனும், புகைப்பட நிபுணர் சந்திரனும் அதே உணர்வில் பேசினர்.

அந்த இரவு 1 மணியை தாண்டியும் துக்கம் தொடர்ந்தது... தூக்கம் வராமல்! கண்ணீர் பெருகியது... காஷ்மீரை நினைத்து!


எம். தமிமுன் அன்சாரி 

ஆபத்தான மின் கம்பம்,அலட்சியத்தில் அதிரை மின் வாரியம்

அதிராம்பட்டினத்தில் உள்ள புதுமனைத்தெரு -செக்கடிக்குளம் வடக்கு கரை பக்கம் உள்ளது நீங்கள் காணும் மின் கம்பம்.அது மிகவும் பழுதடைந்து எந்த நேரமும் விழலாம் என்ற நிலையில் உள்ளது.இதை மின்வாரியமோ இதுவரை கண்டு கொள்ளவில்லை.இந்த ஆபத்தான மின் கம்பத்தை உடன் அகற்றவேண்டும்,இல்லையெனில் பொது மக்கள் திரண்டு அரசுக்கும்,மின் வாரியத்துக்கும் எதிரான போராட்டங்களில்  குதிக்க நேரிடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.எனவே,பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று அதை உடனே மாற்றித்தர வேண்டுகிறோம்.


இதை பொதுமக்கள் மட்டுமின்றி,ஊரில் உள்ள எல்லா இயக்கங்களும்,ஷம்சுல் இஸ்லாம் சங்கமும் அரசு மற்றும் மின் வாரிய கவனத்துக்கு கொண்டு சென்று -ஆவன  செய்ய வேண்டும். 

பணத் திமிர் பிடித்துத் திரியும் படா டோபப் பேர்வழி


தன்னைப் போன்று எவரும் உண்டா ?  என்ற மமதை சிலருக்கு வரும். அது வந்து விட்டாலே   உலக வாழ்க்கையை ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வைத்துக் கொள்ளத் தூண்டும், சொகுசும் ஆடம்பரமும் வந்து விட்டால் தனக்கு கீழுள்ளோர் மீது ஆதிக்கம் செலுத்தத் தூண்டும், தன்னை மதிக்காதவர் மீது வெறுப்பைத் தூண்டும், தன்னை சமமாக கருதுபவரை புறக்கனிக்கத் தூண்டும். 

அவ்வாறான சிந்தனை யாருக்கெல்லாம் வரும் ?

  • பாட்டன், முப்பாட்டன் சேர்த்து வைத்த மிதமிஞ்சியப் பொருளாதாராத்தின் வாரிசுகள்.   

  • உயர்ந்த அரசப் பதவியை வகிப்பவரகள்.   

  • குறுகிய காலத்தில் முறையற்ற வழியில் மலை போல் பொருளீட்டியவர்கள்.

மேற்காணும் வர்க்கத்தினரிடம் ஏற்கனவே இருக்கின்ற செல்வத்துடன் தொடர்ந்து கொட்டுகின்ற செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றுத் தெரியாமல் விழிப் பிதுங்குவதே அவர்களை பெரும்பாலும் தடம் புரளச் செய்து விடுகின்றது.  

அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மொத்தம் இரண்டு அல்லது மூன்று பேர் இருப்பர் ஆனால் அவர்களின் வீட்டு வாசலில் டூ வீலரிலிருந்து ஃபோர் வீலர் வரை பஸ்ஸைத் தவிர அனைத்து வாகனமும் அணி வகுத்து நிற்கும் அவைகளும் ஆறு மாதத்திற்கு ஒரு முறை லேட்டஸ்ட் மாடலில் மாறிக் கொண்டே இருக்கும்.

நடுத்தர வர்க்கத்தினர் சாதாரண ஒரு டூ வீலரை வைத்துக் கொண்டு இவர்களின் வித விதமான வாகனங்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். 

இன்னும் அவர்கள் நடத்தும் ஆடம்பர விருந்துகள், களியாட்டங்கள், கலேபரங்கள் அனைத்தையும் நடுத்தர வர்க்கத்தினர் முகம் சுளிக்காமல் சகித்துக் கொள்ள வேண்டும். அவர்களின் பகட்டையம், படாடோபத்தையும் எதிர்த்து கேள்விகள் கேட்டால் அதற்கு அவர்கள் பதிலளிக்காமல் தங்களின் எடுபிடிகளை விட்டு பதிலளிக்க விடுவார்கள்,  

பல இடங்களில் அளிக்கப்பட்டும் இருக்கிறது எதிர்த்தப் பின்னர் எப்பொழுது எங்கு என்ன நடக்கும் என்றேத் தெரியாது அதற்காக எப்பொழுதும் கழுத்தைத் தயராகவே வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனால் பணத் திமிர் பிடித்துத் திரியும் படா டோபப் பேர்வழிகளின் வரம்பு மீறல்கள் எதையும் கண்டு கொள்ளாமல் வெந்ததை உண்டு விட்டு விதி வந்தால் சாக வேண்டியது தான் எனும் சங்கட நிலை நடுத்தரவர்க்கத்தினருக்கு ஏற்படுகிறது.   

புது பணக்காரர்களின் அல்டாப்.
இதில் பூர்வீக பணக்காரர்களை விட புது பணக்காரர்களின் அல்டாப் அறவேத் தாங்க இயலாது புதிதாக பணத்தைக் கண்டவர்கள் தங்களிடம் வசதி வந்துவிட்டதைப் பிறருக்குக் காட்டுவதற்காக அவர்கள் அமைத்துக் கொள்ளும் நடை, உடை பாவனை பூமியேப் பிளந்து விடுமோ எனும் அளவுக்கு இருக்கும்.

இவர்களில் சிலர் பைசாவைப் பார்ப்பதற்கு முன் சமமாகப் பழகியவர்களை எங்காவது பார்க்க நேரிட்டால் பல வேளைகளில் சிரிக்கவும் கூட மாட்டார்கள், எதையாவதுக் கேட்டு விடுவாரோ அல்லது பழைய ஞாபகத்தில் நெருங்கி வந்து உட்கார்ந்து பிளேடைப் போட்டு விடுவாரோ என்றெண்ணி பார்க்காதது போல் பாவனை செய்வார்கள் அல்லது சடேரென முகத்தையும் கூட திருப்பி விடுவார்கள் அதையும் மீறி நேருக்கு நேர் சந்திக்க நேரிட்டால் உங்களை எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே என்று வேண்டுமென்றேக் கூறிப் புறக்கனிப்பார்கள். 

  • பணமும் பதவியும் வரும் பொழுது பலருக்கு பகட்டும் பந்தாவும் கூடவே வந்து பழைய வாழ்க்கையை மறக்கடிக்கச் செய்வதற்கு எது காரணம் ? 
  • அவைகள் வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ? 

நபித்தோழரின் வாழ்க்கையில் ஓர் நாள்

அப்துல்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி)அவர்கள் மிகப்பெரும் செல்வந்தரும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 பேரில் ஒருவருமாவார் அவரின் வணிகக் கூட்டம் நகருக்குள் வரும் பொழுது நகரேக் குலுங்கும் அப்படிப்பட்ட செல்வந்தர் பல வேளைகளில் தங்களுடைய தோழர் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டப் பொழுது போதாத கஃபன் துணியை காலுக்கும் தலைக்கும் இழுத்து கடைசியில் இலைகளை கூடுதலாக வைத்து அடக்கம் செய்த வறுமை நிலையை நினைத்து அழுவார்களாம். உயர் தர உணவு வகைகள் அவருக்கு முன் வைக்கப்பட்டால் கடந்த காலத்தில் இஸ்லாமிய வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு உணவுக்குக் கூட வழியில்லாமல் வாடிய நபித் தோழர்களை நினைத்து அழுவார்களாம்.

நபித்தோழர் அப்துல்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை அவர்களிடம் குவிந்து கிடந்த செல்வம் தடம் புரளச் செய்யாததற்கு எது காரணம் ? தான் கஸ்டப்படும்பொழுது தன்னுடன் நெருங்கிப் பழகிய தோழர்களின் நட்பை மறக்கடிக்கச் செய்யாததற்கு எது காரணம் ?

  • இறையச்சத்தைத் தவிற வேறெதுவும் இல்லை! 
  • இறையச்சம் என்ற கடிவாளம் பூட்டப்பட்டால் மட்டுமே வாழ்க்கை பயணத்தில் ஆடம்பரம், ஆணவம் என்ற பள்ளத்தில் சறுக்கி விழ விடாமல் இழுத்துப் பிடித்து நிருத்தும்.

செல்வங்களை வாரிசுகளுக்காக சேர்ப்பது, பாட்டன் முப்பாட்டனுடைய செல்வத்துக்கு வாரிசாக இருப்பது, அவற்றை அனுபவிப்பது  யார் மீதும் குற்றமாகாது. அதற்கு இஸ்லாத்தில் தடையும் இல்லை, மாறாக தாராள அனுமதி உண்டு  ஆனால் அதை இஸ்லாம் அனுமதித்த வழியில் அனுபவிக்க வேண்டும்  அதை விட்டுச் செல்வதற்கு முன் அதை அனுபவிக்கும் வாரிசுகளுக்கு தான் எவ்வழியில் பொருளீட்டினோமோ அவ்வழியில் பொருளீட்டவும், தான் எவ்வாறு அதை அனுபவித்தோமோ அதேப் போன்று அனுபவிக்கவும் வஸியத் செய்வதுடன் இறையச்சத்தையும், ஒழுக்கத்தையும் சேர்க்க மறக்கக் கூடாது.

இறையச்சம் எவரிடத்தில் இல்லையோ அவரே முறையற்ற வழிகளில் பொருளாதாரத்தை ஈட்டி அவற்றை முறையற்ற வழிகளிலும் செலவிடுகின்றார். அதனால் மேற்காணும் தீயபண்புகள் குடிகொண்டு விடுகின்றது.

இறையச்சம் எவரிடத்தில் இருக்குமோ அவர் முறையான வழிகளில் பொருளீட்டுவதுடன், பாட்டன், முப்பாட்டன் விட்டுச் சென்ற செல்வத்தையும் முறையாக பராமரிப்பார் செல்வத்திற்கு மேல் செல்வம் குவிந்தாலும் மேற்காணும் பகட்டும், பந்தாவும் வரவே வராது !

அழகிய உபதேசம்.
லுக்மான் (அலை) அவர்கள் தங்கள் மகனுக்கு செய்த உபதேசம் உலகம் முடியும் காலம் வரை உலக மக்கள் அனைவரும் பின்பற்றியொழுகக் கூடிய சிறப்பான உபதேசமாகும்.

அல்லாஹ்வை மட்டும் வணங்கு,அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே, சகமனிதர்களைப் பார்த்து முகத்தை திருப்பாதே,   பெருமை அடிக்காதே,     கர்வம் கொள்ளாதே,  சப்தத்தை உயர்த்தாதே, நடையில் நடுநிலையை பேணு.

இதில் எந்த ஒன்று எவரிடத்தில் இல்லையோ அவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான், மாறாக வெறுப்பான் என்று முத்தாய்ப்பான உபதேசங்களைக் கூறினார்கள்.  
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.திருக்குர்ஆன். 31:18

''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்). திருக்குர்ஆன். 31:19

மனிதர்களில் சிலர் இப்படியும் பிற்காலத்தில் தோன்றுவார்கள் என்பதை நன்கறிந்த இறைவன் தன் தூதர் லுக்மான் (அலை) அவர்கள் மூலமாக அவர்களின் மகனுக்கு மேற்காணும் அறிவுரைகளை கூறச் செய்து அதை முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளிய இறுதி வேதம் திருமறைக்குர்ஆனிலும் இடம் பெறச் செய்தான்.

நரகவாசிகள்

இந்த பிரபஞ்சத்தை படைத்து அதில் உயிரினங்களை தோற்றுவித்து அவைகள் உண்டு புசித்து களைப்பாறுவதற்கு ஏற்றாற்போல் இந்த பூமியை வடிவமைத்துக் கொடுத்த சர்வ வல்லமை பொறுந்திய இறைவன் ஒருவன் மட்டுமே பெருமைக்குரியவன்; அவனல்லாது வேறு யாருக்கும் பெருமை வரக் கூடாது என்பதற்காக பெருமை, வல்லமை இரண்டும் எனக்குரியது அதில் யாரும் போட்டி இடக் கூடாது என்று இறைவன் கூறுவதாகவும் மீறினால் அதற்கு தண்டனை நரகத்தைத் தவிற வேறில்லை என்று இறைவனின் இறுதித்தூதர்(ஸல்)அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்து விட்டார்கள்.

கண்ணியம் அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வதைத்து விடுவேன். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக  அபூசயீத் அல்குத்ரீ (ரலி)இ  அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள். முஸ்லிம். 5114

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும்  தான். என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹாரிஸா இப்னு வஹப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நானே உயர்ந்தவன் என்று இறைவனிடம் இப்லீஸ் தர்க்கம் செய்தக் காரணத்தால் தான் அவன் மீது இறைவன் கடும் கோபம் கொண்டு சிறுமை அடைந்தவனாக இங்கிருந்து வெளியேறு என்றுக் கூறி விரட்டினான்.

''இங்கிருந்து நீ இறங்கி விடு! இங்கே நீ பெருமையடிப்பது தகாது. எனவே வெளியேறு! நீ சிறுமையடைந்தவனாவாய்'' என்று (இறைவன்) கூறினான்.திருக்குர்ஆன். 7:13 

சொர்க்கவாசிகள்.

இறைவனுக்கு மட்டும் உரிய பெருமை யாரிடம் இல்லையோ யார் அதை முற்றிலுமாக தடை செய்து கொள்கின்றாரோ அவருக்கு கீழ்காணும் இன்பம் மிகுந்த சுவனம் வேறெந்த செயலாலும் தடைப்படாது என்று இறைவனின் இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

'இரண்டு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவையாகும். 'அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மேலுள்ள 'பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது. என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' புகாரி 7444.

பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே. திருக்குர்ஆன் 28: 83.

அன்புள்ள சகோதரர்களே ! யாருக்காவது தான் ஒருப் பெரிய ஆள் என்றப் பெருமை இருந்தால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் தவ்பா செய்து விடுங்கள், பதவி வந்தப் பிறகு அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு கட்டுப்படாத, கீழ்படியாத யாரையாவது அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் தவ்பா செய்துவிட்டு சம்மந்தப்பட்டவரை சந்தித்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்ளுங்கள்,பணமும் புகழும் வந்தப் பின்னர் பழைய தோழர்களை புறக்கனித்திருந்தால் இந்தப் புனித ரமலான் மாதத்தில் அவர்களை சந்தித்து முகமன் கூறி இணைந்து விடுங்கள், தன்னிடம் குவிந்துள்ள பொருளாதாரத்தால் ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு மன உலைச்சலைக் கொடுத்திருந்தால் இந்தப் புனித ரமளான் மாதத்தில் தவ்பா செய்து விட்டு பெரும் செல்வந்தர் அப்துல்ரஹ்மான் இப்னு அவஃப்(ரலி) அவர்களின் எளிய வாழ்க்கையை நிணைவு கூர்ந்து திருந்திக் கொள்ளுங்கள்.

எழுதியதுப் போன்று என்னையும், வாசித்ததுப் போன்று உங்களையும் அமல் செய்யும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! 

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும்,ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 4:36.

Saturday, August 20, 2011

மூன்று தளங்கள்


நபி(ஸல்) கூறினார்கள்: தான் உண்மை கூறுவதாக இருந்தபோதிலும் தர்க்கம் செய்வதை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் கீழ்தளத்தில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். தமாஷானாலும் (காமெடி) பொய்யை விட்டு விடுபவருக்கு சுவனத்தின் நடுப்பகுதியில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். அழகான குணமுடையவருக்க சுவனத்தின் மேல்பகுதியில் ஒரு வீடு கிடைப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.
(ஆபூதாவூது : அபூ உமாமா அல்பாஹிலி (ரலி)  630
(நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன்)

புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு


அன்பிற்குரிய சகோதரர்களே புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்களுக்கு
 ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தங்களுக்கு தெரிந்த (புதிய) இஸ்லாமிய சகோதரர்களை கலந்து கொள்ள உதவி செய்யுங்கள்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் நற்கூலி வழங்குவானாக . ஆமீன் !!
நேரம் : 11.am  To 6:15.pm
காலம் : 21.8.2011
இடம் : மஸ்ஜித் எ  இக்லாஸ்
பேகம் ஷாபியாஹ் மருத்துவமனை வளாகம்
No. 25, பெரம்பூர் ஹய் ரோடு, பெரம்பூர்.  12.
பேச்சாளர்கள் :
மொவ்லானா ஹபிஸுர்ரமான் உமரீ மதனீ
மொவ்லானா Dr. R K நூர் முஹம்மத் உமரீ மதனீ
மொவ்லானா ஷேக் அனிசூர்ரஹ்மான் அஜமீ உமரி மதனீ
Dr. அப்துல்லாஹ்  பெரியார்தாசன் பேராசிரியர் அவர்கள்
மொலவி சதகதுல்லாஹ் உமரீ
மொலவி அப்துல்லாஹ் பிர்தோஸீ
மொலவி மன்சூர் உமரீ
மொலவி அப்துல் அக்பர்  பிர்தோஸீ
சகோதரர் அமீருத்தீன் (முன்னாள் குருசாமி)
 
மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்க
மொவ்லவி  அப்துல்லாஹ் பிரதோவ்ஸீ
9894442844 , 9841777873

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!