Thursday, August 4, 2011

இது கற்பதற்கான பயணம் அல்ல! விற்பதற்கான பயணம்




அவசரச் சென்னையின் இப்படி அமைதியான ஒரு இடம் இருப்பது அன்றுதான் தெரிந்தது.

சென்னை என்றாலே அசுத்த நகரம், என்ற ஒரு அவப் பெயர் உண்டு. ஏன் என்றால் பார்க்கும் இடமெல்லாம் குப்பை கூலங்களும், கழிவுகளும், சாக்கடைக்களும், அசுத்தத்திற்கே பேர் பெற்ற கூவம் நதியும் இங்குதான் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நகரில் இப்படியும் ஒரு இடம் உண்டுமா என்று எண்ணத் தலைப்படும் அளவுக்கு செம்மொழிப் பூங்கா மிகவும் அழகாக இருந்தது.

அடர்த்தியான மரங்களும், அழகிய புல்கள் நிறைந்த தரையும், வெளிநாடுகளில் கொண்டு வந்து நடப்பட்ட வித விதமான மரங்களும், பூச்செடிகளும் அங்கு நிறைந்து காணப்பட்டது.

இவ்வளவையும் விட மனதுக்கு இதமான செய்தி என்னவெனில் அங்கு அசுத்தமான நிலையைக் காண முடியவில்லை. மிகவும் நேர்த்தியாக பராமரிக்கப்படுகிறது என்பது தெளிவாக தெரிந்தது. அந்தப் பூங்காவின் அழகையும், தூய்மையையும் பார்த்தால் சென்னை மாநகராட்சிக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது.


கலைஞர் ஆட்சியின் ஒரு சிறப்புப் பக்கம் என்று உண்டென்றால் இதையும் அதில் சேர்த்துக்கொள்ள முடியும்.

இனி விஷயத்திற்கு வருவோம்........


இவ்வளவு அமைதியான இடத்தில் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்த எண்ணி கையில் வைத்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் புரட்டி படிக்க ஆரம்பித்தேன். அல்லாஹ்வின் மிகப்பெரும் அருள் அமைதியான சூழலில் நேரம் செல்வது கூட தெரியாமல் புத்தகம் முழுவதும் படித்து முடிந்தாகிவிட்டது.

மாலை 5.45 அளவில் அங்கிருந்து புரப்படத் தயாராகி வெளியில் வந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் மனதை கலங்க வைத்த ஒரு காட்சி அங்கு நடந்து கொண்டிருந்தது. ஆம் படிப்பதற்கு புத்தகத்தை தூக்க வேண்டிய கரத்தில் விற்பதற்கு புத்தகங்களை தூக்கிக் கொண்டு ஒரு சிறுமி அங்கு வியாபாரம் செய்துகொண்டிருந்தாள்.

முகத்தில் கவலை பாதி, விரக்தி மீதி என்று வாடிய பூச்செடியைப் போல் கவலை தோய்ந்த முகமும், வகிடு எடுக்காத தலை முடியும், அழுக்குத் தோய்ந்த ஆடையும் தான் தனது நிலை என்பதை தோற்றத்திலேயே வெளிப்படுத்திக் காணப்பட்ட அவளுக்கு சுமார் ஐந்து வயதிருக்கும்.

“ஒரு புத்தகத்தையாவது வாங்கிக்கோண்ணே” என்ற சென்னைத் தமிழ் அந்த சிறுமியின் நாவில் இருந்து வெளிப்பட்டது.

சிறுவர்கள் சித்திரம் எழுதிப் பழகுவதற்காக பயன்படுத்தும் “டோரா” என்ற புத்தகத்தைத் தான் அவள் கையில் சுமந்து விற்பனை செய்து கொண்டிருந்தாள்.


ஒரு புத்தகத்தின் விலை இருபது இந்திய ரூபாய்கள். வரைவதற்குறிய தேவை எனக்கில்லை என்றாலும் அந்தப் பிஞ்சி உள்ளத்தின் மன அமைதிக்காக ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டேன். சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுப் பூங்காவும் சேர்ந்து அமைந்திருந்த செம்மொழி பூங்காவிற்கு அதிகமான சிறுவர், சிறுமியர் தங்கள் தாய் தந்தையருடன் வந்து போய்க் கொண்டிருக்கும் அவ்வேலையில் இவள் மாத்திரம் விற்பனைக்கான புத்தகங்களை கையில் சுமந்து கொண்டிருந்தாள்.

சென்னை வாசிகளுக்கோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கோ இது போன்ற நிகழ்வுகள் பழையதாக இருக்களாம் ஆனால் என்னைப் போன்ற வெளிநாடு வாழ் மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவம் என்றே சொல்ல வேண்டும்.

சென்னையில் இது போன்ற நிலையில் நிறைய சிறுவர்களை பார்க்கக் கிடைக்கிறது.

படிக்கும் வயதில் புத்தகம் விற்கும் சிறுவர்கள்.

காலை எழுந்தவுடன் வீடுகள் தோறும் பத்திரிக்கை பங்கு வைக்கும் சிறுவர்கள்,

டீ கடையில் வேலை பார்ப்பவர்கள்,

ரயில்வே ஸ்டேஷனில், பஸ் ஸ்டான்டில் கடலை விற்பவர்கள்,

மெரீனா கடற் கரையில் சுண்டல் வியாபாரம் செய்யும் சிறுவர்கள்,

பஸ்களில் ஏறி பிச்சை எடுக்கும் குழந்தைத் தொழிலாளர்கள் என்று இந்திய நாட்டின் எதிர்காலத் தலை முறையான சிறுவர்களின் ஆரம்ப நிலை இப்படியென்றால் இந்திய தேசம் எப்படி வல்லரசாக முடியும்?

“இளைஞர்களைக் கொண்ட சமுதாயம் இந்தியச் சமுதாயம்” என்று வாய் கிழியப் பேசுபவர்கள் அந்த இளைஞர்களின் ஆரம்ப நிலையை சரியான முறையில் வழிகாட்டுதல் வழங்காமல் வளர்த்தெடுப்பதில் இந்தியாவிற்கு என்ன இலாபம் வந்துவிடப் போகிறது?

அரசியல்வாதிகளுக்குப் பின்னால் ஒரு கூட்டம், சினிமாக் கூத்தாடிகளுக்குப் பின்னால் ஒரு கூட்டம் என்று ஆளுக்கால் கூட்டம் சேர்ப்பதற்குத் தான் இங்குள்ளவர்கள் ஆசைப் படுகிறார்களே தவிர, குழந்தை முன்னேற்றத்திற்காக முயற்சிப்பதாக தெரியவில்லை.

இந்தியாவின் இந்த நிலையைப் போன்ற பாரதூரமான ஒரு நிலையை மற்ற எந்த நாட்டிலும் காணமுடியாது.

சிந்தனை..........

சிறுவர்களின் இந்த அவல நிலைக்கான காரணங்களை அலசிப்பார்த்து அதற்கான தீர்வை நாம் சிந்தித்துப் பார்க்கும் போது, இந்தப் பிரச்சினைக்குறிய சரியான தீர்வை யார் தர முடியும்?

உயர் நீதி மன்றம் தருமா?

ஆளும் அரசாங்கம் தருமா?

கோவில் சாமியார்கள் தருவார்களா?

சிறுவர் பாதுகாப்பு இயங்கள் தருமா?

சிசுக் கொலைத் தடுப்புச் சட்டத்திற்கான அமைப்பு பெற்றுத் தருமா?

சீரழிக்கும் சினிமா ஹீரோக்கள் தீர்வைத் தருவார்களா?

அல்லது இங்குள்ள இயக்கங்களும், சங்கங்களும் பெற்றுக் கொடுக்குமா? 

இல்லவே இல்லை ஏன் என்றால் அனைவரும் தங்கள் சுய இலாபத்திற்காகத் தான் சிறுவர் முன்னேற்றம் பற்றிப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள், கருத்துத் தெரிவிக்கிறார்களே தவிர உண்மையான உணர்வுடன் யாரும் செயல்படவில்லை.

அப்படியானால் இதற்குத் தீர்வுதான் என்ன?

ஒரே வார்த்தை!

ஒரே தீர்வு! அது என்ன?

இஸ்லாம்.................. இஸ்லாம்......................... இஸ்லாம்................ இஸ்லாம் மாத்திரமே இதற்குறிய சரியான தீர்வாக அமைய முடியும்.

சிறுவர்களின் மனதில் இடம் பிடித்து, அவர்களுக்குறிய சரியான வழியைக் காட்டி, சிறுவர்களை நாளைய சீரிய தலைவர்களான மாற்றும் சக்தி இஸ்லாத்திற்கு மாத்திரமே உண்டு என்றால் அது மிகையில்லை.

உதாரணமாக உலகத்திற்கு இறுதித் தூதராக இறைவனால் அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் நடந்து கொண்ட சில முறைகளைப் பாருங்கள் இது போல் நாம் எப்போதாவது நடந்த்துண்டா என்பதை சிந்தையில் எடுத்துப் பாருங்கள்.

அனஸ் பின் மாலிக்  (ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ, நூல்: புகாரி (6247)

மேலும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி அவர்களை மகிழ்விப்பவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூஉமைர் என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தான். அப்போது அவன் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தான் என்றே எண்ணுகிறேன். நபி (ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்), அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கிறது? என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது தொழுகைக்குத் தயாராகி விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்யுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டி, சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6203)
தம்மிடம் வேலை செய்பவர்களிடமும் பணிவுடன் நடந்துள்ளார்கள். அவர்களிடம் தாம் மிகப் பெரிய தலைவர் என்று ஆணவத்துடன் நடந்து கொண்டதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாளியான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்என்று கூறினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், இதை ஏன் இப்படிச் செய்தாய்? என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை? என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (2768)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போக மாட்டேன் என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது. நான் புறப்பட்டுச் சென்ற போது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்த போது அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா? என்று கேட்டார்கள். நான்,ஆம்! செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4626)

இறுதியாக........................

நபியவர்களைப் போல் சிறுவர்களுடன் பழகியவர்கள், பழகுபவர்கள் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்?

அன்பானவர்களே!

பெரியவர்களே!

அரசியல் தலைவர்களே!

அறிஞர்களே!

நபியவர்களின் வழி முறையைக் கையில் எடுங்கள் சிறுவர்களின் வாழ்வுக்கான அறிவுக் கண்களை திறப்பதற்கான சாவி அதுதான். சிறப்பான அந்த வழி முறைகளைப் பின்பற்றி உலக மற்றும் மறுமை வாழ்வில் வெற்றி பெருவோமாக

Rasmin M.I.Sc

ஓர் சுயபரிசோதனை இழை


அன்புமிகு சகோதர, சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்.

யாரேனும் இறைவனுக்கு அஞ்சி(யவண்ணம் செயல்படுவாரா)னால் இறைவன் அவருக்கு(ச் சிரமங்களிளிலிருந்து வெளியேறுவதற்கு) ஏதேனும் வழிவகையை ஏற்படுத்துவான். மேலும், அவர் நினைத்துப் பார்த்திராத வகையிலிருந்து அவருக்கு வாழ்வாதாரமும் வழங்குவான். யார் இறைவனையே முழுவதுஞ் சார்ந்திருகின்றாரோ அவருக்கு அல்லாஹ் போதுமானவன் 65:3

புனித ரமளான் மூலம் பல்வேறு படிப்பினைகளை வல்ல அல்லாஹ் நமக்கு தந்துள்ளான். பொறுமையும், வீவேகமும் அதிகமாக பயிற்சி தரும் மாதம் இது. மனிதர்கள் சிறுவிசங்களுக்கு கூட பொறுமை இழந்து காணப்படுவதை தினமும் நாம் பார்ப்போம். ஆனால் ரமளானின் மகத்துவத்தால் இதுபோன்றவைகளிலிருந்து விடுப்பட்டு இருப்போம். இந்த ஒரு மாதத்தில் எடுக்கும் பயிற்சிகள் வருடம் முழுவதும் நம் அனைவர்களுக்கும் பயன்தர கூடியது மட்டுமல்ல நம் வாழ்நாட்கள் முழுவதுமே ஒர் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து காட்டி மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வாய்ப்புள்ளது.

வாழ்க்கை என்பது பல சுற்றுச சூழ்நிலைகளை உட்பட்டு செல்லும் அதில் எத்தனையோ இன்பம், துன்பங்களை கடந்து செல்லுவோம். இறைவன் தரும் கஷ்ட,நஷ்டங்கள் மற்றும் இன்பமான நன்மைகளையும் எந்த விதத்திலும் இறைநம்பிக்கைக்கு குறைவின்றி அதை ஏற்று கொள்ள வேண்டும்.

மேற்கண்ட இறைவனின் வேத வரிகளை பாருங்கள். நம்மில் சிலர் உணர்வாக நடப்பில் பல விசங்களை கண்டு இருக்கலாம், நாம் இறைவனுக்கு அஞ்சி நடந்து வருவோம் அதில் எந்த வித குறைபாடும் இருக்காது. இடையில் எத்தனையோ சோதனையான கஷ்டம், சிரமங்கள் வரும் ஆனால் இறைவனிடம் பொறுப்பை விட்டுவிடுவோம், வல்ல இறைவனும் நமக்கு வந்த சிரமங்களை எளிமைப்படுத்தி விடுவதுடன் முழுவதுமாக துன்பத்திலிருந்து நமக்கு விடுதலை கொடுத்து விடுவான். இதை தான் மேற்கண்ட வசனத்தில் இறைவன் நமக்கு நிணைவுபடுத்துகிறான். நமக்கு ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வு இறைவனிடம் மட்டுமே உள்ளது. எனவே அவனிடம் மட்டுமே உதவியை நாட வேண்டும். அத்துடன் இறைவனே நமக்கு இத்தகைய சிரமங்களில் விடுப்பட வழிவகையை ஏற்படுத்தி கொடுக்கிறான்.

 
நம் குடும்ப வகையில், நண்பர்கள் வட்டாரத்தில் அல்லது ஊரில் சிலரை பார்ப்போம் அவர் எந்த நேரமும் இறைவனின் திருப்பொறுத்ததை வேண்டியே செயல்படுவார், அவருக்கு அவர் நினைத்து பார்த்திராத வகையில் வசதி, வாய்ப்பு மற்றும் செல்வாக்கை கொடுத்து வாழ்வில் மேன்மைப்படுத்தி காட்டுவான். அதே சமயத்தில் இப்படி கொடுக்கப்பட்டவர்களில் சிலர் இறைவனை மறந்து இந்த வசதி வாய்ப்புகள் அனைத்தும் என் உழைப்பு, திறமையால் வந்தது என்ற கர்வமிக்கவர்களாக வளம் வருவார்கள், இவர்கள் சிறிது காலம் மனிதர்களால் பெரிய அளவில் புகழப்படுவார்கள் ஆனால் திடீர் என்று ஏதோ ஒரு வகையில் வசதி, வாய்ப்புகளை இழந்து தனி ஒரு ஆளாக ஒதுக்கப்படும் நிலைக்கு வருவதை நாம் கண்டு இருக்கிறோம்.

 இறைவனுக்கு எந்த நேரத்திலும் நன்றியை நாம் உகந்த வகையில் கொடுத்து வர வேண்டும். இறைவன் நம்மிடமிருந்து எந்த தேவையும் அற்றவன் ஆனால் நாம் முழுவதும் இறைவனிடமிருந்து தான் தேவையுடையவர்களாக இருக்கிறோம்

சுயபரிசீலனை இன்ஷா அல்லாஹ் நாளைதொடருவோம்.

உங்கள் அன்பு சகோதரன்
தோப்புத்துறை அ.முகம்மது நூர்தீன்
அமெரிக்காவிலிருந்து.

உங்களின் இறைவன் கருணை பொழிவதைத் தன்மீது கடமையாக்கிக்கொண்டுள்ளான். உங்களின் எவரேனும் அறியாமையால் ஒரு தவறைச்செய்து விட்டு பின்னர் அதற்காக மன்னிப்புக்கோரி, மேலும் தன்னைதிருத்திக் கொண்டால் திண்ணமாக இறைவன் (அவரை) மன்னித்துவிடுகிறான், மேலும் அவருடன் இரக்கத்தோடு நடந்து கொள்கிறான் (6:54)




வானம் பிளந்து விடும் போது...


மனிதர்களின் நிலை:

உலக முடிவு நாளின் போது  மனிதர்களின் நிலை படுபயங்கரமானதாய் இருக்கும். அந்த நாளில் அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு மோசமான நிகழ்வுகளும் அவர்களை கிலி கலங்கச் செய்யும். அந்த நிலை அதிகரிக்க, அதிகரிக்க தம்மைத்தாமே மறந்தோராய் அலைவர்.
இவ்வுலகில் உறுதியான உறவுகளில் ஒன்றுதான் ஒரு தாயானவள் தன் பிள்ளை மீது வைத்துள்ள அன்பும் பாசமுமாகும். இத்தகைய உறுதியான உறவு கூட மறுமை வந்து விடில் தகர்த்தெறியப்படும். குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் தாய் அச்சத்தினால் தன் குழந்தையை மறந்திடுவாள். கர்ப்பிணிப் பெண் அந்நாளின் அச்சத்தால் வயிற்றிலுள்ள குழந்தையை ஈன்றெடுத்து விடுவாள். இதே போல் அந்த நாளில் மனிதர்கள் அனைவரும் புத்தி பேதலித்தோரைப் போல நடமாடித்திரிவர்.

'மனிதர்களே ! நீங்கள் உங்களது இரட்சகனைப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக மறுமை நாளின் அதிர்ச்சி மகத்தானதாகும். அதனை நீங்கள் காணும் அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொருத்தியும் தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து போவாள். கர்ப்பமுடைய ஒவ்வொருத்தியும் தன் சுமையை வைத்திடுவாள், மேலும் மனிதர்களை (பீதியின் கடுமையால்) மதிமயக்கமுடையோராயிருக்க நீர் காண்பீர். அவர்கள் (மதுவினால்) மதிமயங்கியோருமல்ல. எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடினமானதாகும். (ஹஜ் 1-2) 

குழந்தைகளின் தலைமயிர்களெல்லாம் அந்நாளின் கடுமையினால் வெளிறி அவர்கள் வயோதிபர்களாய்த் தோற்றமளிப்பர்.
' நீங்கள் நிராகரித்து விட்டீர்களாயின், குழந்தைகளை நரைத்த(கிழ)வர்களாக ஆக்கிவிடும் அந்நாளில் , (நமது பிடியிலிருந்து தப்பித்து உங்களை) நீங்கள் எவ்வாறு காத்துக் கொள்வீர்கள் ? அ(ந் நாளில் நிகழும் பெரும் பெரும் அமளியான)தன் காரணமாக வானம் வெடித்துப் போய் விடும். அவனது வாக்கு (சந்தேகமின்றி) செயற்படுத்தப்பட்டதாகி விடும். ( முஸம்மில் : 17:18)
முதல் ஸுர் ஊதப்பட்டதும் வானங்கள் மற்றும் பூமியில் அல்லாஹ் நாடியோரைத் தவிர ஏனையோர் இறந்திடுவர். பின்பு இரண்டாவது ஸுர் ஊதப்படும்.

'மேலும் ஸுர் ஊதப்படும். பின்னர் வானங்களிலிருப்போரும், பூமிலிருப்பவர்களும் அல்லாஹ் நாடியோரைத் தவிர மூர்ச்சித்துச் (சித்தமிழந்து விழுந்து) விடுவார்கள். பிறகு அதில் மறுமுறை ஊதப்படும். அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்) பார்ப்பவர்களாக (யாவரும் உயிர் பெற்று) எழுந்து நிற்பர்' (அல் ஜுமர் : 68)

மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் அவனின் நாட்டத்தைக் கொண்டு சிலரை அழிக்காது விட்டுவிடுகின்றான் என்கின்றான். இதன்படி அவர்கள் யார் என்பதை இன்னுமொரு வசனத்தில் கூறுகின்றான்.

' ஆகவே ஸுர் ஒரு முறை ஊதப்பட்டால், பூமியும் மலைகளும் உயர்த்தப்பட்டு அவ்விரண்டும் ஒரே தூளாக்கப்பட்டு விட்டால் அந்த நாளில் நிகழ வேண்டியது நிகழ்ந்து விடும். வானமும் பிளந்து அந்நாளிற் பலமற்றதாகிவிடும்.இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளிலிருப்பர். அன்றியும், அந்நாளில் உமதிறைவனின் அர்ஷை (மலக்குகளில்) எட்டுப்பேர் தங்களுக்கு மேலாய்ச் சுமந்து கொண்டிருப்பர்' (அல் ஹாக்கா : 13-17)

இவ்வசனத்தின் மூலம் அவன் நாட்டப்படியுள்ள மலக்குகளில் ஒருவர் தான் இரண்டாவது முறை ஸுர் ஊதுவார் என்பது தெளிவாகின்றது. அல்லாஹ் தனது திருமறையில் ஸுர் ஊதப்படும் நாளை பற்றி அதிகமான வசனங்களில் தெளிவுபடுத்துகின்றான். எனினும், இரண்டாவது தடவையாக ஊதப்படும் ஸுரைப்பற்றித்தான் அதிகமான வசனங்கள் பேசுகின்றன.

முதலாவது ஸுரை விட இரண்;டாவது ஸுர் ஊதுவதற்கு முக்கியத்துவமளித்துக் கூறப்பட்டுள்ளதற்கு நியாயமான காரணங்களுமுள்ளன. முதலாவது ஸுரைப் பொறுத்தவரை இதனை யுக முடிவின் போது வாழ்கின்ற சிலர் மட்டுமே அறியலாம். ஆனால் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடக்கம் இறுதி மனிதர் வரை அறியக்கூடியதாக இரண்டாவது ஸுர் காணப்படுகிறது.

இதே போல மனிதன் அவசியம் அறிய வேண்டியதும், அஞ்சவேண்டியதுமான நாளாக இந்நாளே உள்ளது. ஏனெனில், இந்நாளிலே மனிதர்களனைவரும் அல்லாஹ்வின் முன் ஒன்று சேர்க்கப்படுவர். சம்பாதித்த செல்வங்களோ, அன்பை ஊட்டி வளர்த்த பிள்ளைகளோ அன்று பயனளித்திடாது. 

வாய்களுக்குப் பூட்டுப் போடப்படும். மனிதனின் உறுப்புகள் யாவும் பேசச் செய்யப்படும். அல்லாஹ்வினால் விசாரணை நடாத்தப்படும்.

மனிதர்களின் குறைகள் யாவும் வெளிப்படுத்தப்படும். தாய் தன் பிள்ளையைப் பார்த்தும், பிள்ளை தன் தாயைப் பார்த்தும் , மகன் தந்தையைக் கண்டும், தந்தை மகனைக் கண்டும் பயந்தோடும் நாள், இன்னும் கணவன் மனைவியைக் கண்டும், மனைவி கணவனைக் கண்டும் விரண்டோடுகின்ற அந்நாள், சுவனமா? நரகமா? என அனைவரும் எதிர்பார்க்கும் நாள் என்று பல வகையான வர்ணிப்புகளுடன் கூடிய அந்நாளை அவசியம் அறிந்திட வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் அதிகமாக இரண்டாவது ஸுரைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

இவ்வகையில் இரண்டாவது முறை ஸுரின் போது நிகழும் சில நிகழ்வுகளாவன. பூமியானது கடுமையான நடுக்கத்திற்குள்ளாகி மலைகளெல்லாம் துகள்களாக்கப்படும். பூமியானது தன் சுமைகளையெல்லாம் வெளிப்படுத்துகையில் மனிதர்கள் இதற்கு என்ன நேர்ந்தது என வினவிக் கொள்வர். பூமியானது அல்லாஹ் அறிவித்த செய்திகளையெல்லாம் அறிவிக்கும், அனைவரும் விசாரணைக்கென ஒன்று திரள்வர்.
'பூமி மிகப் பலமான அசைவாக அசைக்கப்பட்டால், இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டுவிட்டால்  அப்போது அவைகள் பரத்தப்பட்ட புழுதிகளாகிவிடும்' (அல்வாகிஆ: 4-6)
'பூமியானது  (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அது அசைக்கப்பட்டுவிடும் போது இன்னும் பூமி தனது சுமைகளை  (எல்லாம்) வெளிப்படுத்தி விடும் போது இன்னும் மனிதன் (திடுக்கிட்டு) இதற்கென்ன நேர்ந்தது ? எனக் கூறிவிடும் போது , அந்நாளில் (பூமியான) அது தனது செய்திகளை (மனிதர்களுக்கு) அறிவிக்கும்.நிச்சயமாக உமதிறைவன்  (இவ்வாறு அறிவிக்குமாறு) அதற்கு(க் கட்டளையிட்டு வஹி மூலம்) அறிவித்ததன் காரணமாக அந்நாளில் மனிதர்கள் அவர்களின் செயல்கள் காண்பிக்கப்படுவதற்காகப் பலபிரிவினராக (மண்ணறைகளிலிருந்து) திரும்புவர்' (ஸில்ஸால் :1-6)

'வானம் பிளந்து விடும் போது  அது (பிளந்து விட வேண்டுமெனும்) தன் இறைவனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும் விட்டது. (அவ்வாறு செவி சாய்ப்பது) அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டு விட்டது.பூமியும் (நீண்டதாக) விரிக்கப்பட்டுவிடும் போது அது (தன்னுள் இருப்பதை வெளிப்படுத்திட வேண்டுமெனவும்)தன் இரட்சகனின் கட்டளைக்குச் செவிசாய்த்தும் விட்டது. (அவ்வாறு செய்வது) அதற்குக் கடமையாகவும் ஆக்கப்பட்டு விட்டபோது, மனிதா ! நீ உனது இரட்சகனிடம் செல்லும் வரையில் (நன்மையோ, தீமையோ பல வேளைகளிலீடுபட்டு) கஷ்டத்துடன் முயற்சி செய்து கொண்டே இருக்கிறாய். பின்னர் (மறுமையில்) அவனை நீர் சிந்திக்கிறவனாயிருக்கிறாய்' ( அல் அன்ஷிகாக் : 1-6)

மேலும் அந்நாளில்  உயிருக்குயிராய் நேசித்த எந்த நண்பர்களும் எப்பயனுமளிக்கமாட்டார்கள்.

'வானம் பழுக்கக் காய்ந்த செம்பைப் போலாகும் நாளில், இன்னும் மலைகள் சாயம் ஏற்பட்ட பஞ்சைப் போன்று ஆகும் (நாளில் அது நிகழும்) அன்றியும் , ஒரு நண்பன் மற்றொரு நண்பனைப் பற்றி விசாரித்துக் கேட்க மாட்டான்' (அல் மஆரிஜ் : 8-10)

மனிதர்கள் அனைவரும் உலகில் ஓயாது உழைத்த அனைத்தையும் அன்று காண்பர். 

'வானம் வெடித்து விடும் போது நட்சத்திரங்களும் உதிர்ந்து  (சிதறி) விடும் போது. கடல்களும் பொங்கவைக்கப்பட்டு  (அவைகளின் மத்தியிலுள்ள திரைகள் அகற்றப்பட்டு ஒன்றாகி) விடும் போது மண்ணறைகளும் மேலும் கீழுமாக புறட்டப்பட்டு (மறுமைக்காக) தான் முற்படுத்தியதையும், பிற்படுத்தியதையும் நன்கறிந்து கொள்ளுங்கள். (இன்பிதார் : 1-5)

'சூரியன் (ஒளி நீக்கப்பட்டு) சுருட்டப்பட்டு விடும் போது நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்து விடும் போது, மலைகளும் (பூமியிலிருந்து) பெயர்க்கப்பட்டுவிடும் போது பத்து மாத நிறைக் கற்பமுடைய ஒட்டகங்களும் கவனிப்பாரற்று (அலைய) விடப்படும் போது, வன விலங்குகளும் (ஊர்களுள் வந்து) ஒன்று திரட்டப்படும் போது, கடல்களும் தீ மூட்டப்படும் போது, உயிர்களும் ஒன்று சேர்க்கப்படும் போது , உயிருடன் புதைக்கப்பட்ட (பெண் குழந்தையான) வளும் வினவப்படும் போது (விசாரணைக்காக) மனிதர்களது பதிவுப் புத்தகங்களும் பரிக்கப்படும் போது , வானமும் பிளந்து அகற்றப்படும் போது, நரகமும் கடுமையாக எரிக்கப்படும் போது, சுவனமும் (பயபக்தியுடையோருக்காக அலங்கரிக்கப்பட்டு) சமீபமாய்க் கொண்டு வரப்படும் போது , ஒவ்வொரு ஆத்மாவும் தான் (உலகில் செய்து கொண்டு) வந்ததை நன்கறிந்து கொள்ளும்' (அத்தக்வீர் - 1-14)

இன்னும் மனிதன் இவ்வாறான சம்பவங்களைக் கண்ட அச்சத்தால் தான் தப்பித்துக் கொள்ள எங்காவது இடமுண்டா ? என வினவுவான். எவ்வாறுதான் முயற்சி செய்யா விடினும் அந்நாளிற் தப்பிக்கவே இயலாது. 

'மறுமை நாள் எப்போது (வரும்)? என (அதிசயமாக) அவன் கேட்கின்றான். (அந்நாளின் அமளிகளைக் கண்டு திடுக்கிட்டு) பார்வை நிலை குத்தி விட்டால், சந்திரனும் ஒளியிழந்து (விடுமெனில்) சூரியனும், சந்திரனும் ஒன்றாக்கப்பட்டுவிடும் (ஆனால்) அந்நாளில், (அனைவரின்) தங்குமிடமும் உமதிறைவனிடத்திலாகும. மனிதன் அவன் முற்படுத்தி வைத்ததையும், அவன் பிற்படுத்தி வைத்ததையும் (பற்றி) அந்நாளில் அறிவிக்கப்படுவான்' (அல்கியாமா : 6-13)




பஹீம் தாலிப்

Tuesday, August 2, 2011

இதைப் பாருங்கள்.கண்ணீர் வடியுங்கள்,உதவி செய்யுங்கள்

முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்ட ஆபத்து ! தேவை எச்சரிக்கை


அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்
அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

சில தினங்களுக்கு முன் ஒரு நாள்.   நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை
என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.
இருவரும் சம வயது உடையவர்கள்.   சுமார் 25 வயது இருக்கும்.   அவர்களுள் ஒருவர்
உடல் சுகவீனமானவர்.   இன்னொரு பெண்மணி அவரது தோழி.   அந்த நோயாளிப் பெண்
அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல்
பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம்.
அதுபோலத்தான் அன்றும் நடந்தது.

இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு
மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது.
உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக்
கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சை
பழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற
பரபரப்பில் இருந்தனர்.  

 அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்தது
போல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.  அந்த ஆட்டோவில் ஏற்கனவே
ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர்.   இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும்.
கணவன் மனைவி போலத் தோன்றியது.   ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக
இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக்
கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து "நீங்கள்
எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க, அதற்கு அவர்கள் "பழைய பேருந்து நிலையம்
செல்ல வேண்டும்" என்று சொன்னவுடன், "சரி ஏறுங்கள்" என்று ஓட்டுனர் சொல்ல,
ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்த
முஸ்லிம் பெண்களைப் பார்த்து "வாங்க, வாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்"
என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்க,
அடுத்த சில வினாடிகளில்  தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி
உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும்
உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பென
அறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர்.   ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது.

மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல
5 நிமிடம் கூட ஆகாது.   ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 10 நிமிடங்களாகியும்
நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறு
எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில்
சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகு
தூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது.   என்ன
செய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!"
என்று கதறியழ ஆரம்பித்தனர்.   உடனே, உள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில்
மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில்
வைத்து "சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்" என்று
மிரட்ட, அவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கக்
கரியமணியைப் பறிக்க ஆரம்பித்தாள்.  முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்க
முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே,  முஸ்லிம் பெண் நிலை குலைந்து
போனாள்.   உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும்
செய்ன்கள், தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு,  இருவரையும்
ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர்.   

அந்த
அதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூர்ச்சையுற்று விழ, உடன்
சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள்.
அல்ஹம்துலில்லாஹ்.  பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை
அடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு
ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர்
அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்து
அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார்.
மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக்
கொண்டது.  அதில் சில ஆயிரம் ரூபாய்களும், செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன.
நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள்.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

  ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

 வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்
பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள்.

 தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்
  
 ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின்
எண்ணை குறித்து வைத்துக் கொள்ள  மறவாதீர்கள்.

 அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள்.  அவர்களைக்
கொஞ்சம்  சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.

   பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள்
கை வசம் வைத்துக் கொள்ளவும்.   

அன்புடன்,

அ.பஷீர் அஹமது,
ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி இஞ்சினீயர்,
மஞ்சக்கொல்லை.
செல்: 9442014288.



Monday, August 1, 2011

மத வன்முறை தடுப்பு சட்டத்திற்கு தமிழக முதல்வர் எதிர்ப்பு- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்


மத வன்முறையை தடுக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வர உள்ள ”மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு” சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கின்றது.
கலவரத்தை தடுக்க மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை ஒரு மாநில முதல்வர் எதிர்ப்பது விசித்திரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் சொல்லும் காரணங்கள் ஏற்கதக்க வகையில் இல்லை.
இந்த சட்டம் ஏதோ அவசரகோலத்தில் உறுவாக்கப்பட்ட சட்டம் அல்ல, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடந்த கலவரங்களில் சிறுபாண்மை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், குற்றவாளிகள் சரியான முறையில் தண்டிக்க படவில்லை, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படவில்லை என அரசால் நியமிக்கப்பட்ட பல கமிஷன்கள் கூறியுள்ளன.
கலவரங்களை விசாரிக்க நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் உறுவக்காப்பட்டது தான் இந்த ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்டம்”.
மேலும் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் அளித்த தேர்தல் அறிக்கையின் அடிப்படையிலும், கடந்த தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையிலும், பல்வேறு சட்ட வல்லுனர்களின் ஆலோசனைபடி தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என தமிழக முதல்வர் கூறியிருப்பது ஏற்கதக்க வகையில் இல்லை.
மனித உயிர்களைவிட மாநில உரிமை பெரிதல்ல என்பதை முதல்வர் உணர்ந்துகொள்ள வேண்டும், எனவே தமிழக முதல்வர் இந்த சட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கேட்டுகொள்கின்றது,
இந்தியாவில் கலவரங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை தண்டிக்கவும், கலவரத்தில் பாதிக்கபட்டோருக்கு நிவாரணம் வழங்கவும், சட்டம் இயற்றிய மத்திய அரசை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பாராட்டுகின்றது
இப்படிக்கு
P. ஜெய்னுல் ஆபிதீன்
மாநில தலைவர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

Sunday, July 31, 2011

ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை ஒடுக்க புதிய சட்டம் வருகிறது!


மத்திய அரசு கொண்டு வர உள்ள மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பயங்கரவாதி அசோக் சிங்கால் கூறியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, "மத வன்முறைகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து தாக்கும் வன்முறைகள் தடுப்புச் சட்ட வரைவு மசோதாவை' தயாரித்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டத்தை இயற்றி, சிறுபான்மையோரை திருப்திபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதன் உறுப்பினர்கள் பெரும்பாலோர் இந்து மதத்திற்கு எதிரானவர்கள். மத வன்முறை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் நிச்சயம்  இனக் கலவரங்கள் ஏற்படும் போது, இந்துக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை பாய்ச்சவே இந்த ஏற்பாடு.

இந்த சட்ட மசோதாவின் விளைவுகளை அறிந்தவர்கள் நிச்சயமாக, நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவர். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தேவைப்பட்டால், அரசியல் கட்சிகளின் ஆதரவும் கேட்கப்படும். புதிய சட்ட மசோதா குறித்து, விஸ்வ இந்து பரிஷத் சார்பில், நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். பார்லிமென்ட் கூட்டத் தொடரில், எம்.பி.,க்களை நேரில் சந்தித்து, மத வன்முறை தடுப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என, கேட்டுக் கொள்வோம்.

சிந்திக்கவும்:  இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களால் கலவரம் நடத்தி சிறுபான்மையினரை கொன்று குவிக்க முடியாமல் போகும். அப்படி மீறி கலவரங்கள் நடத்தினால் அவர்கள் மீது இந்த சட்டம் பாயும். இதனால் தான் வலதுசாரி ஹிந்து தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ். , பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிஷத், மற்றும் அதன் துணை அமைப்புகள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் 1925 யில் தொடங்கப்பட்டது. இதன் துணை அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து தீவிரவாத இயக்கங்களின் ஊற்று கண் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லலாம். இந்த இயக்கம் தொடங்கப்பட்டது முதல் இந்தியா முழுவதும் நடத்திய இனக்கலவரங்கள் பல்லாயிரக்கணக்கில் அடங்கும். அதில் குறிப்பிட்டு சிலவற்றை சொல்லலாம்.

அவை,  பாகல் பூர், பீவாண்டி, குஜராத், மும்பை, நெல்லி, ஒரிசா, ரத யாத்திரை என்கிற ரத்த யாத்திரை இவைகளை கலவரங்கள் என்ற பெயரில் சேர்க்க முடியாது  இவை ஒரு இன அழிப்பு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதில் பல்லாயிரக்கணக்கில் சிறுபான்மை மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். இதை நிகழ்த்தியவர்கள் இதுவரை சட்டத்தின் பிடியில் தண்டிக்கப்படாததும், அவர்கள் சார்ந்த இயக்கங்கள் தண்டிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.இந்த பயங்கரவாதிகளை சட்டத்தின் பிடியில் கொண்டுவரவே இந்த சட்டம் வருகிறது. அதனாலேயே இத்தனை ஆர்ப்பாட்டமும், எதிர்ப்பும்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!