Monday, July 25, 2011

சிந்திக்க சில நபிமொழிகள்


1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

2) மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக! எனக்கூறிவிட்டு (மக்கள் அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர் வெட்டிக்கொள்ளும் காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்: புஹாரி (121). 

3) ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில் நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள் விரல்களை கோர்த்துக் காட்டினார்கள்.அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி (481). 

4) ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன் அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு வடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442). 

5) உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும் உதவி என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444). 
6) ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல் முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).
7) ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045). 

8) மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம். 

9) இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.

10) வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 

11) ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 

12) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி. 

13) மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம். 

14) ''நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான். (2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

15) பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி). நூல் : திர்மிதி

16) கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன் அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம். 

17) பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.

18) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

19) எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.
20) செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி).  நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

21) நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா (ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு ஹிப்பான். 

22) இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள் அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸயி. 

23) இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி). நூல் :திர்மிதீ. 

24) தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

Thanks and Regards,
H. JAMEEL AHAMED

இஸ்லாம் பார்வையில் "உபரியான வணக்கம்"

நஜ்த் என்ற ஊரைச் சேர்ந்த ஒருவர் தலை பரட்டையாக நபி அவர்களிடம் வந்தார். அவருடைய குரல் செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. நபி அவர்களின் அருகில் வந்ததும் இஸ்லாத்தைப்பற்றி கேட்டார். அப்போது நபி அவர்கள், "இஸ்லாம் (என்பது) இரவிலும் பகலிலும் ஐவேளை தொழுகைகள்" என்றார்கள். உடனே அவர், "அந்தத் தொழுகையைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பிச் செய்தாலே ஒழிய வேறில்லை" என்றார்கள்

அடுத்து, "ரமலான் மாதம் நோன்பு நோற்பதும் ஆகும் "என்று நபி அவர்கள் கூறினார்கள். உடனே அவர், அதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என் மீது கடமை உண்டா?" என்றார். அதற்கு அவர்கள், "நீர் விரும்பி செய்தாலே ஒழிய வேறில்லை என்றார்கள்.

அவரிடம் நபி அவர்கள் ஸகாத் பற்றியும் சொன்னார்கள். அதற்கு அவர், "அதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது கடமையா?" என்றார். அதற்கு அவர்கள் "நீராக விரும்பிச் செய்தாலே தவிர வேறு தர்மங்கள் கடமை இல்லை" என்றார்கள். உடனே அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இவற்றை விட கூட்டவும் மாட்டேன், குறைக்கவும் மாட்டேன்" என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது நபி அவர்கள், "இவர் கூறியதற்கு ஏற்ப நடந்து கொண்டால் வெற்றி அடைந்து விட்டார்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரழி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரை பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன் . நான் என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும். எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான். அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன். அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை. (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறுகின்றார்கள் :
நிச்சயமாக ஒர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றி தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி," என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்" என்று அல்லாஹ் கூறுகின்றான். அறிவிப்பவர் : தமீமுத் தாரி(ரலி) நூல்: தாரமீ

உங்களில் ஒருவர் தன் நற்செயலினால் (மட்டும்) சொர்க்கத்தில் புகமுடியாது' என்றார்கள். இதைக்கேட்ட நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா? எனக் கேட்டனர். அதற்கு, ஆம் நானும் தான், என்றாலும் இறைவன் தன் அருளால் என்னை பாதுகாத்துக் கொண்டான். எனவே வணக்கத்தில் பேணுதலாகவும், இரவும் பகலும் நெருங்குங்கள். மேலும், இவற்றில் (வணக்கங்களில்) நடுநிலையை மேற்கொள்ளுங்கள்!. என்று நபி அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: முஸ்லிம், புகாரி

உயிர் பயம்:குஜராத்தில் தகவல் உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைகிறார்கள்

தங்களுடைய பாதுகாப்பையும், சட்டத்தை அமுல்படுத்துவதில் மோடியின் அரசு காண்பிக்கும் அலட்சியத்தையும் கவனத்தில்கொண்டு யூனியனை உருவாக்க குஜராத் மாநில தகவல் உரிமை ஆர்வலர்கள் தீர்மானித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் தகவல் உரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் பரிதாபகரமான சூழல் நிலவுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
52 சதவீத விண்ணப்பங்களையும் குஜராத்தின் தகவல் உரிமை ஆணைய கமிஷனர் நிராகரிக்கின்றார். குஜராத்தில் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட சட்டவிரோத செயல்களை வெளிக்கொணர்ந்த தகவல் உரிமை ஆர்வலர்கள் மீது தாக்குதலும் நடத்தப்படுவதும், கொலைச் செய்யப்படுவதும் குஜராத்தில் நடைபெறுவதாக தகவல் உரிமை ஆர்வலர் பரத் சிங் ஸாலா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
தகவல் உரிமை ஆர்வலர்களுக்கு குஜராத்தில் பாதுகாப்பு இல்லை. மாநில அரசிடமிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதில்லை. ஆகையால் அமைப்பு ஒன்றை உருவாக்க தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மோடியின் அரசு தகவல் உரிமை ஆர்வலர்களை அடக்கி ஒடுக்க முயல்வதாக சமூக ஆர்வலரும், பிரபல நடன கலைஞருமான மல்லிகா சாராபாய் கூறினார். எனது மகன் என்னை நம்பி ஒப்படைத்த பணிக்காக கடைசிவரை போராடுவேன் என ஒருவருடம் முன்பு கொல்லப்பட்ட தகவல் உரிமை ஆர்வலர் அமீத் ஜெத்வாவின் தந்தை பிகு ஜெத்வா தெரிவித்துள்ளார்.
கீர் வன பகுதியில் சட்டவிரோத சுரங்கத்தை வெளியுலகிற்கு அறிவித்ததைத் தொடர்ந்து அமீத் ஜெத்வா கொல்லப்பட்டார். ஒரு முன்னாள் அமைச்சரின் ஒத்துழைப்புடன் சவுராஷ்ட்ரா பகுதியில் நடக்கும் சட்டவிரோத சுரங்க தொழிலுக்கு எதிராக புகார் அளித்ததை தொடர்ந்து நில மாஃபியாக்களால் தான் தாக்கப்பட்டதாக இன்னொரு தகவல் உரிமை ஆர்வலர் பாகுபாயி தேவானி குற்றம் சாட்டினார்.

Sunday, July 24, 2011

தடையை மீறி கரசேவை

ஆக்ரமிக்கப்பட்ட மசூதியின் சொத்துக்களை மீட்க வலியுறுத்தித் தடையை மீறி கரசேவையில் ஈடுபட்ட மனித நேய மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை, பேட்டை செக்கடி பகுதியில் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான நவாப் வாலாஜா மசூதி உள்ளது. இந்த மசூதியின் சொத்துக்களைத் தனியார் ஆக்கிரமித்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மதிப்புள்ள இந்தச் சொத்துக்களை மீட்டு வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக பல போராட்டங்களையும் நடத்தியுள்ளது.

மேலும் இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஜூலை 24ல் அக்கட்சியின் தலைவர் பாளை ரபீக் தலைமையில் கரசேவை போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் தடை மீறி கரசேவைக்காக பேட்டை நோக்கி வந்தனர். டவுண் காட்சி மண்டபம் அருகே வந்தபோது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

தகவல் அறிந்ததும் கமிஷனர் வரதராஜூ, ஆர்டிஓ ராஜகிருபாகரன் ஆகியோர் அங்கு வந்து மமமுக தலைவர் பாளை ரபீக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "பிரச்னைக்குரிய இடம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்ற உத்தரவுக்குப் பின்புதான் நடவடிக்கை எடுக்க முடியும்" என அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தனர்.

இதற்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை மோசடி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை என்று ரபீக் கூறினார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திடீரென அவர்கள் கரசேவையில் ஈடுபட முயன்றனர். உடனே காவல்துறையினர் ரபீக் மற்றும் அவருடன் வந்த தொண்டர்கள் சுமார் 300 பேரைக் கைது செய்தனர். அப்போது கைதானவர்கள் ஆவேசமாக கோஷம் எழுப்பினர்.

கைதான அனைவரையும் ரெட்டியார்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவல்துறையினர் அடைத்து வைத்திருந்தனர்.

இச்சம்பவத்தால் பேட்டை பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அங்கு ஏராளமான காவலர் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
கரசேவை போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து பேட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பேட்டை அறிவு திருக்கோயிலிலிருந்து அரசு ஐடிஐ வரை காவலர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் பேட்டையில் பதற்றமான பகுதிகளிலும் ஆயுதப்படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வஜ்ரா வாகனமும் பேட்டை மசூதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட பேட்டை நவாப் வாலாஜா மசூதி பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
 
 
 

Saturday, July 23, 2011

இஸ்லாம் மட்டுமே

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்கள் பணியாளர்கள் உங்களுடைய சகோதர்கள், அவர்களை உங்களுக்குக் கீழே நியமித்தவன் இறைவனே! எனவே, ஒருவர் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் சகோதரர்க்கு தான் உண்பவற்றிலிருந்து உணவளிக்கட்டும். தாம் உடுத்துவதைப் போன்றே அவருக்கும் ஆடைகள் அளிக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளை அவர்களுக்கு கொடுக்காதிருக்கட்டும். அப்படி (அவர் சக்திக்கு மீறிய பணியை) கொடுக்க நேரிட்டால் அவர்களுக்கு அப்பணியில் தாமும் உதவி செய்யட்டும்.''
அறிவிப்பாளர் : அபூதர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உம்முடைய பணியாளர் உமக்காக உணவைக் கொண்டு வரும்பொழது, நீர் அவரை உம்மோடு அமர்ந்து உணவருந்த அழைக்காவிடினும், அதிலிருந்து ஒரிரு கவள மேனும் அவருக்கு உணவளிப்பாயாக! அடுப்பின் வெம்மையில் சிரமம் ஏற்று அந்த உணவை சமைத்தவர் அவரே!''
அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி) நூல் : முஸ்லிம்

எத்தனை முறை நம்முடைய பணியாளர்களை மன்னிக்க வேண்டும்'' என்று ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். இறைத்தூதர் மவுனமாக இருந்தார்கள். அந்த மனிதர் மீண்டும் வினவினார். மூன்றாவது முறையும் அவர் வினவியதும், ரஸூல் (ஸல்) அவர்கள் விடை பகர்ந்தார்கள்: ''நாளொன்றுக்கு எழுபது முறை (அதவாது அதிகமதிகம்) அவரை மன்னித்து விடுவீராக''
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) நூல் :அபூதாவூதது

சுபுஹானல்லாஹ்....

பணியாளர்களை நேசிக்க வேண்டும். என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம்.
இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கமும் இஸ்லாம் மட்டும் தான்!

Wednesday, July 20, 2011

ஸ்ரீராமசேனாவின் பகிரங்க பயங்கரவாத பயிற்சி:பயிற்சி அளிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள்


ஹிந்து தீவிரவாத அமைப்பான ஸ்ரீராமசேனா நடத்தும் பயங்கரவாத பயிற்சி முகாமில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இளைஞர்கள் பயிற்சி அளிக்கின்றனர். பெல்காம் மாவட்டத்தின் அதானிக்கு அருகில் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆயுதமில்லாத தாக்குதல் கலைகளை பயிற்சி அளித்துவருகின்றனர். மலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் உள்ளிட்ட குண்டுவெடிப்புகளை நிகழ்த்திய ஹிந்துத்துவா பயங்கரவாதி கர்னல் புரோகித் அளித்த ராணுவ பயிற்சிக்கு சமமான பயிற்சியாகும் இது.
ஸ்ரீராமசேனாவின் தேர்வு செய்யப்பட்ட 100 உறுப்பினர்களுக்கு அதிகாலை முதல் இரவு வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதங்கள் உபயோகித்து நடத்தும் பயிற்சிக்கு போலீஸ் தடை விதித்துள்ளதால் ஆயுதங்கள் இல்லாமலேயே இத்தகைய பயங்கரவாத தாக்குதல் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இளைஞர்களை கொண்ட ஆயுதப்படையை உருவாக்கும் நோக்கில் இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற 4 அதிகாரிகள் இப்பயிற்சியை அளிப்பதாக பிரமோத் முத்தலிக் தெரிவித்துள்ளார். தனது தொண்டர்களுக்கு போலீஸ் பயிற்சி அளிக்கவேண்டும் என பிரமோத் முத்தலிக் கோரியுள்ளார். துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை உபயோகிப்பதற்கான அனுமதி இல்லாததால் கர்நாடகா போலீஸின் சிவிலியன் ரைஃபிள்ஸ் ட்ரைனிங் ப்ரோக்ராமில் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்று திரும்பிவர பிரமோத் முத்தலிக் இளைஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தின் பல பகுதிகளில் நடக்கும் சிவிலியன் பயிற்சியில் நுழைய ஸ்ரீராமசேனா தனது உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதர மத சமூகங்களுக்கு எதிராக உபயோகிக்கும் தரத்தில் படையை உருவாக்க முத்தலிக் திட்டமிட்டுள்ளார். சமூகத்தில் வகுப்புவாத பிரிவினையை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவில் நடந்த பல்வேறு தீவிரவாத தாக்குதல்களின் வீடியோ காட்சிகளை பயிற்சியில் கலந்துக் கொள்ளும் உறுப்பினர்களுக்கு காட்டப்படுகிறது.
அதே வேளையில் ஸ்ரீராமசேனாவுக்கு போலீஸ் பயிற்சி அளிக்கமுடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலீஸின் சிவிலியன் ரைஃபிள் பயிற்சியில் ஊடுருவ முடியாது என உயர் போலீஸ் அதிகாரிகள் கூறினர். வகுப்புவாத பிரிவினையை தூண்டுவதில் பிரசித்திப் பெற்ற ஸ்ரீராமசேனா பயங்கரவாத தாக்குதல் பயிற்சியை துவங்கி பல நாட்கள் கழிந்தபிறகும் போலீஸ் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ள தயாராகவில்லை.

Monday, July 18, 2011

பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்


shanmugam.jpgஇளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’  என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தகவல் இளைஞான்குடி யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா 

Sunday, July 17, 2011

முதல் விசாரனை

 “நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்டகடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)..ஆனால்,இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடையஇடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையைவீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)

தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப்பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன்63:9)
குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.
இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடையகுடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்குஉள்ளானவராவார்.
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: - நபி صلى الله عليه وسلمஅவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின்அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்கவழிபாடுகளும் சீராகவே அமையும். அதுசீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில்நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்தநியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: - அல்லாஹ் கூறுகிறான்: -நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாகஇருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்;தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும்இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன்30:31)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: -ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ளஉடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)
“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோநிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி
தொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள்ஏற்றுக்கொள்ளப்படாது: -
“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள்அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்;மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள்வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன்9:54)
யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)
தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: -
‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில்உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)
‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன்அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர்,உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணைஇறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)
கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்
 

Wednesday, July 13, 2011

ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கு பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி


 ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரமலான் மாதம் நோன்பு கடைபிடிப்பவர்களுக்கு கஞ்சி தயாரிக்க, நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம், மொத்த அனுமதி பெற்ற பள்ளிவாசல்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, அனுமதி பெற்ற பள்ளிவாசல்கள், தேவையான அரிசிக்கு உரிய மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட கலெக்டர்கள் நேரடியாக பள்ளிவாசல்களுக்கு வழங்குவர்.

ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிக்க, 3,801 டன்கள் அரிசியை, தமிழகத்தில் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளும், இம்மாதம் 29ம் தேதியே தயாராக வைத்திருக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே, தமிழகத்தில் அனுமதி பெற்று, ஏற்கனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் பள்ளிவாசல்கள், மொத்த அனுமதியை புதுப்பித்து, மாவட்ட கலெக்டரிடம் பெற்று, நுகர்பொருள் வாணிபக் கிடங்கிலிருந்து அரிசியைப் பெறலாம் என, தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, July 9, 2011

யாரிடமும் சொல்லாதே


ஒருவரிடம் ரகசியம் சொல்பவர், யாரிடமும் சொல்லாதே என்ற நிபந்தனையிட்டே அந்தச் செய்தியைச் சொல்கின்றார். அவரும் அதை ஒப்புக் கொண்டு, யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி அளித்த பின்னர் தான் அந்தச் செய்தியைப் பெறுகின்றார். அதன் பின்னர் தெரிந்தோ,தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ அதைப் பரப்புகின்றார் என்றால் இவர் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுகின்றார் என்று தான் அர்த்தம். வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும். (அல்குர்ஆன்17:34)

ரகசியம் காத்த அனஸ் (ர­லி) நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு காரியமாக அனுப்பி வைத்தார்கள். அதனால் நான் என்னுடைய தாயாரிடம் வர தாமதமாகி விட்டேன். பிறகு வந்ததும், ''தாமதமானதற்கான காரணம் என்ன?'' என்று என் தாயார் வினவினார்.''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்'' என்று பதிலளித்தேன். ''அவர்களுடைய அந்தக் காரியம் என்ன?'' என்று கேட்டார். ''அது ரகசியமாகும்''என்றேன். ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே'' என்று கூறினார். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி), நூல்: முஸ்­லிம் 4533

Thursday, July 7, 2011

உன் தாயின் கருவறையில் உனக்கு சுவாசகாற்றை தந்தது யார்?


அல்லாஹ் - அளவற்ற அருளாளன்!
சகோதரர்களே
இங்கு அல்லாஹ்வை அளவற்ற அருளாளன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டா? வாருங்கள் சிந்திப்போம்
அல்லாஹ்வின் அருளுக்கு அளவுகோல் உள்ளதா? என்று சிந்தித்துப்பாருங்கள்!· உங்கள் தாயின் கர்ப்பக்கோளரையில் பார்ப்பதற்கே அறுவருப்பான சதைப் பிண்டமாக நீங்கள் இருந்தீர்கள் உங்களுக்கு உருவம் கொடுத்து அருளினான்!· உங்களுக்கு அழகானபொம்மையைப் போன்று உருவம் கொடுத்தால் மட்டும் போதுமா என்று எண்ணி உங்களுக்கு உணர்வையும் கொடுத்தான்!· உணர்வு மட்டும் போதுமா என்று எண்ணி உணர்வை வெளிப்படுத்தும் ஆற்றலையும் கொடுத்தான்· குறிப்பிட்ட மாதங்கள் தாயின் வயிற்றில் தங்க வைத்து உணவையும் கொடுத்தான்!· தாயின் சுவாசக்காற்றுடன் உங்களுக்கும் சற்று சுவாசக் காற்றை சிரமமின்றி கொடுத்தான்!·மூச்சுவிடக்கூட முடியாத கப்ரு போன்ற அந்த கற்பக் கோளரையில்அழகான நித்திரை கொடுத்தான்!· இறுதியாக முழு வடிவம் கொடுத்து உங்களை குழந்தையாக பிறக்க வைத்தான்!· குழந்தை பிறந்ததும் தாயின் மடியில் தவழ்வதற்காக அவளிடம் அன்பைக் கொடுத்தான் தந்தையிடம் பாசத்தை கொடுத்தான்!· அன்பு செலுத்த பெற்ற தாய் தந்தை மட்டும் போதுமா? என்று எண்ணி உற்றார் உறவினர்களின் உள்ளத்தில் மென்மையாக தொட்டுக்கொஞ்சும் கலையை கொடுத்தான்! அனைவரும் உங்களை கொஞ்சி மகிழ்ந்தனர் நீங்களோ கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்தீர்கள்!
அல்லாஹ் - நிகரற்ற அன்புடையோன்
இங்கு அல்லாஹ்வை நிகரற்ற அன்புடையோன் என்று புகழப்பட்டுள்ளது அதற்குப் பொருள் என்ன என்றைக்காவது சிந்தித்ததுண்டா? வாருங்கள் சிந்திப்போம்!
அல்லாஹ்வின் அன்புக்கு அளவுகோல் உள்ளதா? என்று சிந்தித்துப்பாருங்கள்!· சுவாசிக்கும் காற்றைக்கொடுத்து உதவினான்,பருகும் நீரை கொடுத்து உதவினான், அமர்வதற்கு நிலத்தையும்,ரசிப்பதற்கு இயற்கை எழில் கொஞ்சும் அழகையும் கொடுத்தான்! இதுநிகரற்ற அன்பில்லையா?· 
நிலத்தில் உணவுக்காக உழுகிறீர்கள் உங்கள் உழைப்புக்கு ஊதியமாக பயிரை வெளிப்படுத்துகிறான் சிந்தித்துப் பாருங்கள் 
நிலத்தில் பயிர் வெளிப்படாமல் இருந்தால் எதை உண்பீர்கள்! இது நிகரற்ற அன்பில்லையா?· 
சுவாசிக்கும் காற்றின் உதவியுடன் விமானத்தில் பறக்கிறீர்கள், பருகும் நீரில் மீன் பிடித்து மகிழ்கிறீர்கள், நிலத்தில் உழுதும், வீடு கட்டியும்,உங்கள் மலஜலங்களை சுத்தப்படுத்தியும் சுகம் காண்கிறீர்கள் இறுதியாக மரணித்து மண்ணரைக்கு செல்ல இடத்தையும் ஒதுக்கினான் இது நிகரற்ற அன்பில்லையா?சிந்தித்துப்பாருங்கள்!
உங்கள் மலஜலங்களை மண் விழுங்காமலும் விழுங்கியதை மக்கச் செய்யாமலும் இறுதியாக உங்கள் மலஜலம் கெட்ட துர்நாற்றம் பிடித்து காற்றில் கலந்து பரவினால் இந்த உலகில் வாழ முடியுமா?இப்படிப்பட்ட இழிவான நிலைக்கு உங்களை அல்லாஹ்தள்ளிவிட்டானா? அல்லது உங்களை செம்மையாக்கி வாழ வழிவகை செய்தானா?· 
தாயின் வயிற்றில் இருக்கும் போது உங்கள் உடலில் இதயத்தை பொறுத்தியவன் எவன்?· 
நுரையீரைலையும், கல்லீரலையும் பொருத்தயவன் எவன்?· 
பற்களையும் நாக்கையும் உதடுகளையும் பொறுத்தியன் எவன்?· 
மலஜலம் கழிக்க அந்தரங்க உறுப்புகளையும் அதன் அருகில் வீரியமிக்க விந்துத் துளிகளையும் பொறுத்தியவன் எவன்?·
எலும்புகளையும் நரம்புகளையும் அவற்றை இயக்க சிந்திக்கும் மூளையையும் அதற்கென்று நரம்புகளையும், தோலையும் பொருத்தியன் எவன்?· துள்ளிக்குதிக்கும் நீரை உங்கள் முதுகுத்தண்டு வடப்பகுதியில் செம்மையாக்கியவன் எவன்?· 
முகவரியற்ற உங்களுக்கு முகவரியைக் கொடுத்து உதவியவன் எவன்? இதன் மூலம் உலகில் வாழவழிவகை செய்து உங்களுக்கு உங்கள் மனைவியை கொடுத்து அவளின் மூலம் கட்டுக்கடங்காத மிருகத்தனமான உங்கள் உடல் சுகத்தை தனிப்பவன் எவன்?
ஓ மாண்புமிகு மனிதர்களே!உங்களில் நல்லோரும் உள்ளனர்,உங்களில் தீயோரும் உள்ளனர் நல்லோர் படைத்த இறைவனின் அருளையும் அன்பையும் நினைத்து புகழ்ந்துக்கொண்டும் அஞ்சிக்கொண்டும், தீயோர் படைத்த இறைவனின் அன்பையும்அருளையும் மறந்து தங்கள் நாதாக்களையும், மரணித்த மனிதர்களிடம் உதவி தேடியும் அலைகின்றனர்.உங்கள் நாதாக்களும் அவ்லியாக்களும் எதைப் படைத்தனர் என்பதை பட்டியல் போட்டு காட்ட முடியுமா? அற்பமான ஒரு ஈ-யின் இறக்கையைக்கூடஅவர்களால் உருவாக்க முடியுமா? அல்லது அந்த ஈ-யிடும் முட்டையின் ஓட்டைக் கூட உருவாக்க முடியுமா?
உங்களில் வசதிபடைத்தோர் ஏழைகளை உதாசீனப்படுத்துகிறீர்கள் வலிமையான ஆற்றல் படைத்தோர் வலிமைற்ற மனிதர்களை அடக்குமுறைகளால் அடக்கிக்கொண்டும் வாழ்கிறிர்கள்! பெற்ற தாய் தந்தையரை வயதான காலத்தில் துரத்துகிறீர்கள், கட்டிய மனைவியை காசுக்காக மிதிக்கிறீர்கள், பெற்ற பிள்ளைகளை முறையாக பேணாமல் அநாதைகளைப் போன்று அங்கும் இங்கும் அலைய விடுகிறீர்கள் இந்த பாவங்களையெல்லாம் செய்துக் முஸ்லிமாகிய நான் சுவனம் போகவேண்டும் என்று எண்ணினால் உங்கள் ஆசை நிறைவேறுமா?
மஹ்சரில் அல்லாஹ்வின் கேள்விக்கணைகளிலிருந்து உங்களால் தப்பித்து ஓடிவிட முடியுமா? வாதத்திறமையால் தவறான வழியில் அடைந்த சொத்து சுகங்கள் பயனளிக்குமா?எதற்கும் சக்தியற்று,உழைக்க வசதியற்ற வக்கற்றவர்களாக பிறந்தீர்கள்! வாழ்க்கையைக் கொடுத்தான்! வசதிவாய்ப்புகளைக் கொடுத்தான் தாயைக் கொடுத்தான், தாரத்தை கொடுத்தான் பிள்ளைச் செல்வத்தை கொடுத்தான், உங்களை நேர்வழிப்படுத்த அருள்மறைக் குர்ஆனையும் நல்வழிப்படுத்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிமுறைகளான ஹதீதுகளையும் உங்களிடம் கூலியை எதிர்பார்க்காமல் இலவசமாக அருளினானே இந்த அன்பிற்கு நிகராக வேறு ஏதாவது அன்பு உள்ளதா? இந்த அருளுக்கு நிகரான அருள் உலகில் ஏதாவது உள்ளதா? 
சிந்தித்துப்பாருங்கள் இனியாவது அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் உணர்ந்து அவனுக்கு அஞ்சிவாழும் மூமின்களாக மாற முயற்சி செய்யுங்கள்! 
உங்கள் மீது அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
-குலசை சுல்தான்.

Tuesday, July 5, 2011

”ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி

afreenமும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்து செல்வதில் ஒரு நிகாப அணிந்த சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.

18 வயதிலேயே இஸ்லாத்திற்கு வந்ததோடல்லாமல் திருமணத்திற்கு பின் சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் மக்கள் பிரட்சினைக்காக பாடுபடவும் வேண்டும் என்றதும் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடும் இடத்தில் அக்கறையை மட்டும் மையமாக கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார், சகோ.ஆஃப்ரீன். 

”ஹிஜாப் என்னுடைய அணிகலன், அதை அணிவதால் என் சமூகத்திற்கு பாடுபட எனக்கு எந்த வித தடையுமில்லை” என்கிறார் சகோதரி. நிகாபை அணிவதாலும், முஸ்லிமாய் இருப்பதாலும் இது வரை தடையெதுவும் கண்டதில்லை எனக்கூறும் இந்த சகோதரி, தன் வெற்றிக்கு முதல் காரணமாக அல்லாஹுத’ஆலாவையும், அதன் பின் தன்னுடைய ஒவ்வொரு அடியிலும் துணை நிற்கும் கணவனையுமே புகழ்கிறார். நிகாப் இருப்பதால் வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் இடையூறோ தயக்கமோ இருக்குமே என்றால், எல்லா நிலையிலும் இந்த மக்கள் எனக்கு துணை நிற்பதோடல்லாமல், சில சமயம் எதிர்பார்க்காத அளவிற்கும் ஒத்துழைப்பு நல்கின்றனர் என்கிறார்.

மராத்தி, ஹிந்தி, குஜராத்தி தவிர ஆங்கிலமும் தெரிந்த இவர், தேர்தலில் முக்கிய வாக்குறுதிகள் அளித்தது குடிநீர், ரோடு மற்றும் சுகாதார வசதிகளின் மேல்தான். அதனாலேயே பிரச்சார நேரத்தில் சில பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார். “அன்றைய தினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதி மக்களோ அதிகாலை 4 மணிக்கே எழுந்து குடிநீருக்காக லைனில் நிக்க வேண்டிய நிலை, எனவே அவர்களின் கோபாவேசத்தினாலும், அதில் ஏற்பட்ட சலசலப்பினாலும் கிட்டத்தட்ட என்னுடைய வாகனத்திலிருந்தே கீழே விழும் சூழ்நிலையாகி விட்டது” என்கிறார்.

தன்னுடைய பணியில் சாதனையாக சகோ.ஆஃப்ரீன் நினைப்பது, முனிசிபாலிட்டியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மசோதா. அப்படி என்ன மசோதா? பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு கொண்டு போகும்போதும், போஸ்ட்மார்ட்டம் முடித்து வரும்வரையும் ஒரு பெண் டாக்டரும், உதவிக்கு ஒரு பெண்ணும் கட்டாயம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆணையே அது. ஏன் இப்படி ஒரு மசோதா என்றால், சட்டென பதில் வருகிறது, சகோதரியிடமிருந்து. “ஓர் தடவை ஒரு 20 வயதுப்பெண் விபத்தில் இறந்து போனார். அவருடைய உடலை வாங்க மருத்துவமனைக்கு சென்றபோது ஒரு மனிதன் அந்தப்பெண்ணின் உடலில் போர்வை போர்த்தும் சாக்கில் அவளை அவசியமற்ற விதத்தில் தொடுவதைக் கண்டேன். அன்றெழுந்த முடிவு இது” என்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினையே கல்வியறிவில்லாததும், வேலைஞானமும் இல்லாததுதான் என்னும் சகோ.ஆஃப்ரீன், தன்னுடைய கணவரின் துணை கொண்டு மக்களுக்கென ரேஷன் கார்டு, பிசி, ஓபிசி பத்திரங்கள், வாக்காளர் அட்டை போன்ற அத்தியாவசிய அட்டைகளை பெறுவதற்கான வழிமுறை வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துகிறார். ”நம் முஸ்லிம் சமூகத்தில் இந்த மாதிரி தேவையான அட்டைகளை வாங்கும் வழிமுறைகள் தெரியாததே ஸ்காலர்ஷிப், அரசாங்க வேலை போன்ற பல அரசாங்க உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போக வைக்கிறது” என்கிறார். இதற்காக கோடை காலத்தில் மாதம் முழுக்கவும் கேம்ப்கள் நடத்துகிறார். இவரின் உதவியாளார்கள், வீட்டிற்கு வீடு சென்று கதவை தட்டியழைத்தும் வந்து இவற்றில் பங்கு பெற வைக்கின்றனர்.

அரசியலில் நுழைந்து விட்டால் ஆண்களின் ஆதிக்கத்தை சந்தித்துத்தானே ஆகவேணும் என்ற நிலையில், சட்டரீதியான, நுணுக்கமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அரசியல் ரீதியான பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் தன் கணவரின் முடிவில் விட்டுவிடுகிறார். 

செய்தி மூலம், ஆங்கிலத்தில் படிக்க : - http://www.coastaldigest.com/index.php?option=com_content&view=article&id=26458:hijab-is-my-ornament-mumbai-corporator-afreen


http://anboduungalai.blogspot.com/



THANKS TO ANNU

Monday, July 4, 2011

துபாய் விசிட், இந்திய தூதரகம் தடை.

இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

பூர்த்திசெய்த படிவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு இணையம் மூலம் பயணியின் விமான நிலையத்திற்கு தகவல் அனுப்பப்படும். இந்தியாவில் குடியேற்ற சோதனையின்போது இந்த விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே,மேற்கொண்டு பயணம் செய்ய முடியும். இந்தப் படிவம் சமர்பிக்கப்படாத பயணிகள், விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் படுவதாக துபாயிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


விசிட்டிங் விசாவில் வேலை தேடுபவர்கள் முறையான ஏற்பாடுகள் இல்லாமல் சிரமப்பட்டு இந்திய தூதரகத்தை அணுகுகின்றனர். மேலும் சிலரோ வழிகாட்டல் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பிட்ட விசா காலத்திற்கும் அதிகமாக தங்கியவர்கள் (OVERSTAY) துபாய் காவல்துறையினரிடம் பிடிபட்டால் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதால், விசிடிங் விசாவில் வருபர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வருவது அவசியம். 


மேலதிக விபரங்களுக்கு துபாயிலுள்ள இந்திய தூதரக தொடர்பு எண்கள் 04-3971222 மற்றும் 050-7347676 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, July 1, 2011

வர்ணாசிரமம், ஹிந்துத்துவா நமக்கு தந்த பரிசு! மேலவளவு!

 மறக்க முடியுமா மேலவளவை. இங்குதான்வர்ணாசிரம ஹிந்து ஆதிக்க வெறியர்களால் ஆறு தலித் சகோதர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த ஜாதி வெறியர்கள் எப்படி தோன்றினார்கள், இவர்களிடம் ஜாதி என்ற அந்த விஷ வித்தை விதைத்து எது என்று பார்த்தால் அதுதான் ஹிந்துதுவாவின் அடிப்படை கொள்கை சித்தாந்தமான வர்ணாசிரம கொள்கை.

இந்த கொள்கைதான் ஒரு சாதாரண மனிதனை ஜாதி வெறி கொண்டவனாக மாற்றி ஆறு அப்பாவி உயிர்களை கொன்று குவிக்க காரணமாக அமைந்தது அன்று என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மேலவளவு பஞ்சாயத்து தலைவராக இருந்தவர் முருகேசன்.

இவர் மற்றும் துணைத்தலைவர் மூக்கன் மற்றும் இதே ஊரைச் சேர்நத ராஜா, செல்லத்துரை, பூபதி, சேவுகமூர்த்தி ஆகிய ஆறு பேரும் கடந்த 1997 ஜூன் 30ம் தேதி மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அங்கு தீயில் எரிந்து குடிசை வீடுகளுக்கான நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் மீண்டும் ஊருக்குச் சென்ற போது ஆறு பேரும் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மேலவளவில் மணி மண்டபம் கட்டப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆண்டு தோறும் இங்கு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அரசியல் கட்சியினருக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டு உள்ளது.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!