மூளைச்சாவு சதியா ? பரபரப்பு ரிப்போர்ட் !
ICU விலிருந்து வெளியே வந்த... அந்நாட்டின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்... கையை பிசைந்து கொண்டே சொன்னார்....
"சார்... வந்து... மனசை தேத்திக்குங்க... ஒரு அதிர்ச்சியான செய்தி சொல்ல போறேன்.."
"டாக்டர், என்ன சொல்றீங்க.."
....செய்தியை கேட்கும் முன்னரே அதிர்ந்தார்... மாநிலத்தின் 'டாப் தர்ட்டி ரிச் பிசினஸ் மேக்நேட்ஸ்' -ல் ஒருவரான அந்த பிரபல நிறுவனத்தின் அதிபர்..!
"ஆமா சார், எங்களால் ஆன எல்லா முயற்சியும் பண்ணி பார்த்துட்டோம்... ம்ஹூம்... முடியலை... உங்க பையனின் இதயம் செயல் இழந்துக்கிட்டு வருது... இன்னும் சில நாட்கள்தான்.... அதிக பட்சம் பத்து நாட்களே... அவரின் இதயம் துடிக்கும்..!
"என்னா சொல்றீங்க டாக்டர்..? ஊரிலேயே பெரிய ஹாஸ்பிடல்... மாநிலத்திலேயே
பெரிய டாக்டர்... அவ்ளோதானா உங்க பவுசு எல்லாம்...??? ஆயிரக்கணக்கான கோடி
ரூபாய் சொத்துக்கு ஒரே வாரிசு டாக்டர் அவன்...!!! BE, MBA எல்லாம்
அமெரிக்காவில் படிக்க வச்சு என்னோட இன்னொரு கம்பெனிக்கு போன மாசம்தானே அவனை
MD ஆக்கி இருக்கேன்... இப்போ போயி இப்படியா...?!?!? ஏதாவது செய்யிங்க
டாக்டர்... ஏதாவது செஞ்சே ஆகணும் நீங்க... எத்தனை கோடி செலவானாலும் நான்
தாரேன் டாக்டர்..."
"ம்ம்ம்... அப்படின்னா... ஒரு வழி இருக்கு..."
"சொல்லுங்க... சொல்லுங்க..."
"யாரேனும் ஒருத்தரை ஹார்ட் தானம் தர ஏற்பாடு பண்ணுங்க சார்..."
"பணத்தை வாங்கிட்டு இதயத்தை தானம் தந்துட்டு சாக யாராச்சும் ஒத்துக்குவாங்களா..?"
"உங்க மகன் பிழைக்க அது ஒண்ணுதான் சார் வழி..."
"அப்போ... இதயத்துக்கு நீங்க ஏற்பாடு பண்ணுங்க..."
"ஏன், பையனுக்கு அப்பாவா நீங்க ஏற்பாடு பண்ண மாட்டீங்களா சார்..?"
"ஸ்ஸ்ஸ்.... ஓகே...சொல்லுங்க... என்ன செய்யணும்..?"
"நீங்க யாரையாவது ஒரு ஏழை அப்பாவியை அடியாள் செட் பண்ணி வச்சு அடிச்சு
போட்டுட்டு... குற்றுயிரும் குலையுயிருமா எங்கிட்டே அவரை காப்பத்த
தூக்கிட்டு வாங்க... அதனாலே வரும் போலிஸ்-கோர்ட் -கேஸ் எல்லாம நீங்கதான்
பாத்துக்கணும்... நான் பேஷன்ட் கிட்டே இருந்து ஹார்ட்டை மட்டும்
எடுத்துட்டு... "சாரி.. ஆபரேஷன் சக்சஸ்...பட் பேஷன்ட் டைட்"ன்னு
சொல்லிருவேன் ... போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஹார்ட் காணோம்ன்னு
பிரச்சினை பண்ணினால்... அந்த அரசு டாக்டரை நீங்கதான் சரி கட்டனும்...
ஓகேவா...?"
"டாக்டர்... இது ரொம்ப சிக்கலா இருக்கும் போல இருக்கே... எனக்கு போலிஸ்
கோர்ட் கவர்மென்ட் ஹாஸ்பிடல் இதிலெல்லாம் அவ்வளவா ஆளு இல்லையே டாக்டர்..."
"ஏதாவது... ரவுடி, தீவிரவாதி சேசிங்... ஷூட்டிங் ஆர்டர்...
என்கவுண்டர்ன்னு... இப்படி ஏதாச்சும் நடந்தா...நேக்கா சுட்டு...
ஸ்பாட்டிலேயே அவன் செத்துடாம... பாதுகாப்பா இங்கே இட்டாந்தா... ஹார்ட்டை
எடுத்துடலாம். ஆனால், உங்களுக்குத்தான் போலீசில் யாரையும் தெரியாதுன்னு
சொல்லிட்டீங்க... அது மட்டுமில்லாம... அப்படியான சம்பவங்கள் இப்போ உடனே
நடக்க சான்ஸ் இல்லை..."
".........ஹூம்........."
".........ஹூம்........."
"ம்ம்ம்.... சரி... இப்போ, இன்னொரு ஐடியா சொல்றேன்... இது கொஞ்சம்
புதுசு... ஆனால்... இதுக்கு இன்னும் அதிக செலவாகுமே... ஏன்னா... ரிஸ்க்
எடுக்குறது முழுக்க முழுக்க நானு..."
"பரவாயில்லை... சொல்லுங்க... எவ்வளவு செலவு ஆனாலும் நான் தாரேன்.."
"நல்லா கவனிங்க....சிட்டியில் தினமும் இருபது முப்பது விபத்து நடக்குது. நம்ம ஹாஸ்பிடல் ரோட்டில் கூட தினமும் ஏதேனும் ஒன்னு ரெண்டு விபத்து நடக்குது. அதெல்லாம் நம் ஹாஸ்பிடளுக்குத்தான் எமர்ஜென்சி கேசுன்னு வருது. அடுத்த சில நாளில் அப்படி வரப்போகும் ஒரு பேஷண்டை நான் டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு... மயக்க ஊசி போட்டுட்டு, "மூளைச்சாவு" ஏற்பட்டு இருக்குன்னு பேஷண்டின் குடும்பத்துகிட்டே சொல்லிருவேன்."
"................."
அவங்க கிட்டே..."ஒரு 'மூளைச்சாவு' பேஷண்டை அம்பது வருஷம்... அறுபது வருஷம்ன்னு... வாழ்நாள் முழுதும் வச்சி காப்பாத்த எவ்ளோ செலவு ஆகும் தெரியுமா... அதைவிட... நீங்க தெனைக்கும் எவ்ளோ கஷ்டப்படனும் தெரியுமா... பொழுதன்னிக்கும் சோறூட்டி... தண்ணீர் புகட்டி... விழுங்காம வாந்தி எடுத்த துடைத்து... புரை ஏறினால்... சளி சிந்தி... சிறுநீர் கழுவி... மலம் அள்ளி தொடச்சி விட்டு... இப்படி நடுவீட்டில் வச்சி காலமெல்லாம் இவனை காப்பாத்துவீங்களா...?" என்று எல்லாத்தையும் டீஈஈஈ......ட்டைலா நீங்க விளக்க்க்க்க்க்க்கி சொல்லி... 'அதுக்கு பதிலா இன்னிக்கே சில பல லட்சங்களுக்கு 'உடல்தானம்' (actually...உயிர்தானம்) செஞ்சிட்டா... அது உங்களுக்கு எவ்ளோ பெரிய நன்மை பயக்கும்' என்று நீங்க விளக்கி சொல்லனும்... இன்னிக்கி பெருசா மனித நேய சேவை... இறைவனிடம் நல்ல பெயர் வாங்க தொண்டு... புள்ள பாசம்... என்று உங்க கூட அந்த உடலை(?)வச்சி காப்பாத்த முடிவு எடுத்தா... அப்புறம் சில வருஷம் கழிச்சு ஒருநாள் உங்க முடிவில் வெறுப்பு வந்துட்டா... 'அன்னிக்கு வந்த சான்ஸ் போச்சே'ன்னு அப்போ கவலை பட்டு புண்ணியம் இல்லே...!"ன்னு நைச்சியமா சொல்ல வேண்டிய விதத்தில் எடுத்து சொல்லுங்க சார்..! வழிக்கு வருவாங்க பாருங்க..!

"ம்ம்ம்..........."
"அப்புறம், கிட்னி... கண்... எல்லாமே நல்ல ரேட்டுக்கு போணியாகும்...
அதுக்கும் எங்க ஹாஸ்பிடலில் டிமாண்ட் இருக்குன்னு சொல்லுங்க. நாங்க
இதெல்லாம் அவங்ககிட்டே நேரடியா சொன்னா எங்கமேலே சந்தேகம் வந்துரும்.
பார்ட்டிக்கு பண ஆசையை காட்டி... எதோ கொஞ்சம் தந்துட்டு... மேட்டரை ஈசியா
சேஃபா முடிங்க... அவங்க ஒப்புதல் வாங்கிட்டா...உடனே... அரசிடம் ஈசியா...
ஹார்ட் ட்ரான்ஸ்பிளண்ட் ஆபரேஷனுக்கு அனுமதி வாங்கிறலாம்... யாருக்கும் எந்த
டவுட்டும் வராது. உங்க மகனும் பிழைச்சிடுவான்.... (சதி) திட்டம் ஓகேவா..?"
"டபுள் ஒகே டாக்டர்... இன்னிக்கி நைட்டே நான் என் 'மிஷனை' ஆரம்பிச்சிடுறேன்.. மறக்காமல் நீங்க இன்னிக்கி நைட் டூட்டி பாருங்க..."
சில நாட்களுக்கு பிறகு...
மாநிலத்தின் பிரபல முன்னணி செய்தித்தாளில் முதல் பக்கத்தில்........
ஒரு ஏழை ரிக்ஷா ஓட்டுனரின் மகனின் உறுப்பு தானம் மிகவும் பெரிதாக பேசப்பட்ட தலைப்புச்செய்தியில்... அந்த பிரபல நிறுவன அதிபரின் மகனும் 'புதிய இதயத்துடன் பிழைத்துக்கொண்டார்' என்ற செய்தியும்... மகன், தந்தை மற்றும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்த டாக்டரின் போட்டோவுடன் போடப்பட்டு இருந்தது.
அதே செய்தித்தாளின் அஞ்சாம் பக்கத்தில்............
சர்வதேச செய்தியில்... "ஜெர்மனி மருத்துவ ஆராய்ச்சியில் ஓர் அதிசயம்" என்ற தலைப்பில்...... 'மூளைச்சாவு ஏற்பட்ட ஒருவர்... மீண்டும் சுய உணர்வுடன் பிழைக்க வைக்கும் புதிய நவீன சிகிச்சை முறை கண்டுபிடிப்பு' என்று ஜெர்மானிய மருத்துவர்களின் ஆய்வு முடிவுகள் பற்றி..... ஓர் அறிவியல் கட்டுரை இறைவனின் விதியை சொல்லிக்கொண்டு இருந்தது...!

--------------------------சிறுகதை முற்றும்-------------------------
சகோஸ்.....
இப்போ உங்களுக்கு டவுட்டு வந்திருக்குமே..?
இதுதான் கதையின் தலைப்பு... // மூளைச்சாவு + உயிர்தானம் : சதியா..? விதியா..? //
'மூளைச்சாவு' என்ற உடனே... உடனடி கருணைக்கொலை... உடனடி உறுப்புதானம்... இதுதான் தீர்வா..? மூளைச்சாவு குணமாகி பிழைத்தால்... பின்னாளில் உயிர் பிழைத்து வாழ்ந்திருக்க வேண்டிய ஓர் உயிரை கொன்றதாகாதா..? அந்த உயிருக்குரிய உடலில் இருந்து அதன் சொந்தமான உறுப்புகளை அந்த அறிவின் அனுமதியின்றி திருடியதாகாதா..? 'மூளைச்சாவு' ஏற்பட்டதாக மருத்துவர்களால் கூறப்பட்ட நோயாளி பிழைக்க வாய்ப்பே இல்லையா..? உலகில் அப்படி எவரும் பிழைத்ததே இல்லையா..? ஏகப்பட்ட பேர் பிழைத்துள்ளனரே சகோ..!

இதோ... உங்கள் பார்வைக்கு சில ஆதார சுட்டிகள்..!
.
.
No comments:
Post a Comment