Thursday, February 11, 2010

இந்தியாவின் நாயகன்


பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் டாக்டர்.ஜாஹிர் நாயக் பிரபல நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள 2010 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த 100 இந்தியர்களில் ஒருவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தப் பட்டியலில் 7 முஸ்லிம்களும் இடம் பிடித்துள்ளனர். டாக்டர் ஜாஹிர் நாயக் 89வது இடத்தை பிடித்துள்ளார்.ஆனால் இந்துமத குருவாக கருதப்படும் பாபா ராம்தேவிற்கு 99-வது இடமும், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு 100-வது இடமுமே கிடைத்துள்ளது. இந்தப்பட்டியல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரசின் துணை ஏடான சண்டே எக்ஸ்பிரஸ் இதழில் வெளியிடப்படுள்ளது.

இதர முஸ்லிம்கள் பிடித்துள்ள தரவரிசை வருமாறு:

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அஹ்மத் பட்டேல்(10-வது இடம்). ஏ.ஆர்.ரஹ்மான்(31-வது இடம்), அமீர்கான்(39-வது இடம்),
ஷாருக்கான்(47-வது இடம்),
உமர் அப்துல்லாஹ்(57-வது இடம்),
அஸீம் பிரேம்ஜி(60-வது இடம்).

100 சக்தி வாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் 89-வது இடத்தைப் பெற்றிருக்கும் ஜாஹிர் நாயக்கிற்கு 44-வயது ஆகிறது. 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆன்மீக தலைவர்கள் பட்டியலில் டாக்டர் ஜாஹிர் நாயக் பாபா ராம்தேவ் மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு அடுத்தப்படியாக 3-வது இடத்தை பிடித்திருந்தார். ஆனால் 2010 ஆம் ஆண்டில் அவர்கள் இருவரையும் முந்திவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஜாஹிர் நாயக் சமீபத்தில் வெளியான உலகை அதிகம் ஈர்த்த 500 முஸ்லிம்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை அமெரிக்காவிலிலுள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

டாக்டர் ஜாஹிர் நாயக்கைப் பற்றி சண்டே எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிமுகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறது. "சூட் கோட்டை அணிந்து ஆங்கிலத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யும் இவாஞ்சலிஸ்ட் ஜாஹிர் நாயக் சக்தி வாய்ந்த பேச்சாளர். இவரது உரையை இவர் நிறுவியுள்ள Peace TV யின் வாயிலாக 125 நாடுகளைச்சார்ந்த 100 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள். கடந்த ஆண்டு வட அமெரிக்காவிலும் Peace TV தனது ஒளிபரப்பை துவங்கியது. இவ்வலைவரிசையின் உருது சானலை 50 மில்லியன் மக்கள் பார்க்கின்றார்கள்.

கடந்த 14 ஆண்டுகளில் இவர் 1300 பொதுநிகழ்ச்சிகளில் உரை நிகழ்த்தியுள்ளார். இதில் 100 உரைகள் கடந்த 2009 ஆம் ஆண்டிலாகும். கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் நடைபெற்ற Peace Conference இல் 10 லட்சம் மக்கள் கலந்துக்கொண்டனர். டாக்டர் ஜாஹிர் நாயக்கின் உரையை மட்டும் கேட்க 2 லட்சம் மக்கள் கூடினர். இதில் மலேசியாவின் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீமும் உட்படுவார்.

இந்த ஆண்டு டிசம்பரில் Peace TV பெங்காளி மொழியில் அலைவரிசையைத் துவக்குகிறது. செய்திச்சானல்களை 2012 அல்லது 2013 ஆண்டுல் துவக்கும்.

7 comments:

  1. அவருடைய வெப் சைட் முகவரி

    http://irf.net/

    ReplyDelete
  2. அவருக்கு எதுக்காக அந்த இடம் கொடுத்தாங்க!?
    என்ன அடிப்படையில் இந்த தரவரிசை!?

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சகோதரரே.தன் பேச்சுக்கள் மூலம் அமைதியை பரப்புவதற்காக, இந்த அவார்ட்

    ReplyDelete
  4. //வருகைக்கு நன்றி சகோதரரே.தன் பேச்சுக்கள் மூலம் அமைதியை பரப்புவதற்காக, இந்த அவார்ட் //

    ஏ.ஆர்.ரகுமானும், சாருக்கானும் என்ன அமைதியை ஏற்படுத்தினார்கள்!
    ஏகப்பட்ட அரசியல் இருக்கும் போலயே!

    ReplyDelete
  5. hm.. i like his speech.. unlike other speakers, he just says the like unlike things between the religions and not hurting anyone's belief.. that habit is most important thing to be friendly with anyone in this world.. nice work Mr nayak.. keep it up..!

    ReplyDelete
  6. சகோதரர் சக்தி அவர்களே,நீங்கள் சொல்வது உண்மைதான்.

    ReplyDelete
  7. brother sakthi,Brother zakir naik's speech is translated in to tamil.Please click this link to watch in our language.it is wonderful

    http://www.readislam.net/videoislam-zakirnaik.htm

    ReplyDelete

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!