Sunday, March 11, 2012

ஓடாத ரயில் பாதைக்கு சாலை மேம்பாலம்!

ஐந்தாண்டுகள் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசிலும் 8 ஆண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசிலும் அங்கம் வகித்த தி.மு.க தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாக மார் தட்டிக் கொள்கிறது.  இவற்றில் சில உண்மைகளும் இருக்கலாம்.  ஆனால் தமிழகத்திற்கான ரயில் திட்டங்களின் அவலத்திற்கு எடுக்காட்டாய் நிற்பது திருவாரூர் - காரைக்குடி ரயில்பாதை.


தமிழகத்தில் நடைபெறும் அகலப்பாதைப் பணிகள் மற்றும் திட்ட ஒதுக்கீடு அனைத்தும் ஆமை வேகத்தில் தான் நடக்கிறது.  ஒதுக்கீடும் தவணை முறையில் தான்.  விழுப்புரம் மயிலாடுதுறை வரை வந்த ஒதுக்கீடு 40 கி.மீ தொலைவிலுள்ள திருவாரூரை அடைய பல ஆண்டுகள் ஆனது.  இன்னும் திருவாரூர் மயிலாடுதுறை ரயில் பாதையில் வண்டிகள் இயக்கப்படாதது வேறு கதை.


நாகூர், காரைக்கால், வேளாங்கண்ணி என அகலமாக்கும் பணிகள் நடைபெற்றதென்னவோ உண்மை தான்.  ஆனால் திருவாரூரிலிருந்து சென்னை செல்ல மயிலாடுதுறை செல்லாமல் இன்னும் ஊர் சுற்றிச் செல்லும் அவலம் நீடிக்கத்தான் செய்கிறது.

காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, தாம்பரம் வழித்தடத்தில் கம்பன் எக்ஸ்பிரஸ் என்ற மீட்டர் பாதை தொடர்வண்டி ஓடிக் கொண்டிருந்ததை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு யாரேனும் நினைவுப்படுத்தினால் நல்லது.  அவருக்கு வரவர எதுவும் நினைவில் தங்குவதில்லை.

தமிழக முன்னாள் முதல்வரும் தி.மு.க தலைவருமான மு. கருணாநிதி சொல்லும் ரயில்வே திட்டங்களை விட தி.மு.க நாடாளுமன்ற குழுத்தலைவரும், நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு சொல்லும் திட்டங்களுக்கே முன்னுரிமை கிடைக்கும் என்பதுதான் இங்குள்ள எதார்த்த நிலை.  நாடாளுமன்ற ரயில்வே நிலைக்குழுத் தலைவராக உள்ள டி.ஆர். பாலு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்.  அதைக் கேள்விகேட்கும் அதிகாரம் தி.மு.க தலைமைக்கு வேண்டுமானால் இல்லாது போயிருக்கலாம்.  இ. காங்கிரஸ், அ.இ.அ.தி.மு.க போன்றவை என்ன செய்து கொண்டுள்ளன?

திருக்குவளையில் துறைமுகம் என்றார்கள்.  வேளாங்கண்ணியிலிருந்து திருக்குவளை வழியாக திருத்துறைப்பூண்டிக்கு புதிய வழித்தடம் என்றார்கள்.  இவை அனைத்தும் என்னவாயிற்று என்று தெரியவில்லை.  ஆனால் நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடிக்கு ரயில் விட்டாயிற்று.  2012-13 ரயில்வே நிதிநிலை அறிக்கையில் இப்பாதையை பட்டுக்கோட்டைவரை நீட்டிக்கப் போவதாக பேசிக் கொள்கிறார்கள்.  இப்படிச் செய்துவிட்டால் பட்டுக்கோட்டை திருத்துறைப்பூண்டி - திருவாரூர் வழித்தடத்தை மூடிவிடலாம் என்றும் திட்டம் வைத்திருக்கிறார்கள்.

எனவே, அதற்கேற்றவாறு காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டை வரை மட்டும் நிதி ஒதுக்கீடு செய்து பட்டுக்கோட்டை - வடசேரி -மன்னார்குடி வழி புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி இந்த வழியில் கம்பன் எக்ஸ்பிரசை இயக்குவதுதான் தி.மு.க வின் திட்டம்.  இது நடந்துவிடும் என்ற அச்சத்தால் வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி பகுதிவாழ் பொதுமக்கள், வணிகர்கள் சென்ற மாதத்தில் (டிசம்பர் 2011) ஒரு நாள் கடையடைப்பு செய்தனர்.  இதற்கு அமோக ஆதரவு இருந்தது.

தஞ்சை - பட்டுக்கோட்டை, பட்டுக்கோட்டை - மன்னார்குடி போன்ற தொடர்வண்டிப் பாதை இல்லாத இடங்களை அவற்றால் இணைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  அதற்காக இருக்கின்ற வழித்தடங்களை பலியிடுவதை எக்காரணம் கொண்டும் ஏற்க முடியாது.  எனவே, இருக்கின்ற திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை - காரைக்குடி வழித்தடத்தை முற்றிலும் அகலப்பாதையாக்க வேண்டும்.  கூடவே திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் - அகஸ்தியாம்பள்ளி - கோடியக்கரை தடத்தையும் அகலப்படுத்தி பயணிகள் ரயில் போக்குவரத்திற்கும் உப்பு ஏற்றுமதிக்கும் வழிவகுக்க வேண்டும்.

     சுற்றுச்சூழல், கடலோர மக்களின் வாழ்வாதாரம் போன்றவை பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை என துறைமுகங்கள், அனல்மின் நிலையங்கள், இருப்புப்பாதைகள் என தனியார் முதலாளிகள் வளம் கொழிக்க திட்டங்கள் தீட்டும் மத்திய - மாநில அரசுகள், வேதாரண்யம் கடற்கரையில் உற்பத்தியாகும் உப்பை எடுத்துச் செல்வதற்கு இருக்கின்ற இருப்புப் பாதையை அகலப்பாதையாக்க மறுக்கும் மக்கள் விரோதப்போக்கை எப்படிப்புரிந்து கொள்வது?

திருவாரூர் - காரைக்குடி, திருத்துறைப்பூண்டி - கோடியக்கரை வழித்தடங்களை அகலப்பாதையாக்குவதைக் காட்டிலும் வடசேரி கிங் கெமிக்கல்ஸ், அங்கு அமையப்போகும் சாராய வடிப்பாலை வழியாக ரயில்பாதை அமைப்பதுதான் டி.ஆர். பாலுவிற்கு முக்கியமாகப்படுகிறது.  எனவே தான் இப்பகுதி மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்.  மு. கருணாநிதிக்கு திருக்குவளையை விட கனிமொழி உள்ளிட்ட குடும்ப அங்கத்தினர்கள் முக்கியம்.  தானொரு கம்யூனிஸ்ட் என்று ஓயாமல் சொல்லி வரும் மு. கருணாநிதி தானும் பெருமுதலாளியாகி டி.ஆர். பாலு போன்ற பெருமுதலாளிகளை உருவாக்க முடிந்ததுதான் வரலாற்றின் மாபெரும் சோகம்.


உப்பை மட்டும் உற்பத்தி செய்யும் காரணத்தால் இன்று வேதாரண்யம் வெறும் தீவாகிப் போயிருக்கிறது.  கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) வேளாங்கண்ணியைத் தாண்டியதும் திருத்துறைப்பூண்டிக்குள் நுழைந்து உள்நாட்டுச் சாலையாகி விடுகிறது.  அகலப்பாதை வசதியுமின்றி பிறப்பகுதிகளிடமிருந்து வேதாரண்யம் துண்டிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுச் சாலையாக மாறிப்போன கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருத்துறைப்பூண்டி அருகே ஒரு சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  அதன் கீழே வேதாரண்யம் தொடர்வண்டிப் பாதை செல்கிறது.  நாட்டிலேயே ஓடாத ரயிலுக்கு இங்குதான் சாலை மேம்பாலம் அமைந்துள்ளதை அதிசயமாக பார்க்கக் கூடிய சூழல் வெகு விரைவில் வரலாம்.

INFM IDUKKAINATHAN
M . ANSARI

thanks

http://adiraixpress.blogspot.com/2012/03/blog-post_7908.html?showComment=1331493218187#c630537712339795911 

Saturday, March 10, 2012

முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்


இன்றும் முஸ்லிம் நாடுகளில் இதே நிலைதான் காணப்படுகிறது. முஸ்லிம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும் எழுச்சியும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டுள்ளன. ஆட்சிக்கு வருபவர்கள் இஸ்லாத்தை முறையாகக் கடைப்பிடித்தால் அல்லாஹ்வின் உதவி நிச்சயமாகக் கிடைக்கும். 
முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்தியாஇலங்கை போன்ற நாடுகளில் இயங்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் சமூக அமைப்புகளுக்கும் ஸ்பெயின் ஒரு நல்ல பாடமாகும். சிறுசிறு குழுக்களாக இருந்துதங்களின் வலிமையைச் சிதறடித்துவிடாமல்,பொதுப் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு உண்டு. 
அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் இறைவன் உங்கள் எதிரியை அழித்துவிட்டுபூமியில் (அவனது இடத்தில்) உங்களை அமரவைக்கக்கூடும். பின்னர் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதை அவன் கூர்ந்து கவனிப்பான். (7:129)



TO KNOW MORE CLICK THIS LINK               http://khanbaqavi.blogspot.in/ 


Thursday, March 8, 2012

ராயல் அப்துல் ரஜாக் மொழி




தக்தீரை(விதியை)நம்பு,
அல்லாஹ்வை (திக்ரு)தியானம் செய்,
பொறுமையுடன் இரு,
கடுமையாக உழை,
முயற்சியை விடாதே,
காலத்தை எதிர் பார்.

ராயல் அப்துல் ரஜாக்  அவர்கள் 


Wednesday, March 7, 2012

“ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” - RTI !



1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.


2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.


3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.


4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.


5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.


6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.


7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.



தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ?



எடுத்துக்காட்டாக,


1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?


2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?


3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?


4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.


5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.


6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.


7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?


8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.


9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?


10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?


11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?


12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ?



இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.



மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர்,

காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,

( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 ,அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )தேனாம்பேட்டை, சென்னை - 600 018

தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580




மத்திய அரசு தகவல்கள் பெற :-
 
Shri Satyananda Mishra

Chief Information Commissioner

Room No.306, II Floor August Kranti Bhavan

Bhikaji Cama Place New Delhi - 110 066.

Phone:- 011 - 26717355



குறிப்பு : மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.


சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.



இறைவன் நாடினால் ! தொடரும்......................

Sunday, March 4, 2012

“நிலங்கள்” வாங்குவோர் கவனத்திற்கு !

சகோதரர்களே !   நாம் அனைவர்களும் இரவு பகல் என பாராமல் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தில் நல்லதொரு செயல் திட்டங்களை தீட்டி நிறைவேற்றுவது  என்பது நிதர்சனமான உண்மை. குறிப்பாக திருமணம் செய்தல், நிலம் வாங்குதல், வீடு கட்டுதல், நகைகள், இல்லப்பயன் தரும் பொருட்கள் வாங்குதல், பிள்ளைகளின் கல்வி, சகோதரிகளின் திருமணம், பெற்றோர்களின் மருத்துவ செலவு மற்றும் நமது அன்றாட செலவுகள் என எண்ணற்ற நம்முடைய ஒவ்வொரு கடமைகளையும் சிறிது சிறிதாக நிறைவேற்றிக் கொள்வோம்.
நமதூரில் வசிக்கக்கூடிய அனைத்து சகோதரர்களுக்கும் நிலம் வாங்கி வீடு கட்டுதல் என்பது ஒரு கடமையாகவோ அல்லது கனவாகவோ இருக்கும். மேலும் நமதூரில்  விற்கக்கூடிய மனைகளின் விலைகளை நன்கு அறிவீர்கள். இவ்வளவுத் தொகையை கொடுத்து வாங்கு முன் நாம் கவனமாக கீழ் கண்ட முறைகளைப் பின்பற்றி பாதிப்புகள் ஏற்படாதவாறு நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
மனைகள் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை :
1.    நிலத்தின் லே-அவுட் ( Layout ) போட்டு அதற்கு அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
2.    நிலத்தின் பகுதி பத்து ஏக்கருக்கு ( அதாவது முப்பது “ மா “ ) குறைவாக இருந்தால், மாவட்ட டீ.டி.சி.பி. ( Directorate of Town and Country Planning – DTCP ) அலுவலகத்தின் அனுமதி தேவை.
3.    நிலத்தின் லே-அவுட்டில் சாலை வசதி, பூங்கா, பொது இடம் என்று இடங்களை ஒதுக்கிருக்க வேண்டும்.
இதனால் சாலை, குடிநீர், மின்சாரம் வசதிகள் விரைவில் நமது உள்ளாட்சியின் மூலம் கிடைக்ககூடிய வாய்ப்புகள் ஏராளம்,  மேலும் நாம் உடனடியாக வீடு கட்டும் சூழ்நிலை உருவானால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் மூலம் ‘ புதிய வரைபட அனுமதி ‘ என பல்வேறுப் பயன்களை அடையலாம்.
சொத்துகள் / மனைகள் வாங்கும் போது  என்ன  என்ன “ டாகுமென்ட்ஸ் “ கள் கவனிக்கப்பட வேண்டியவை ?
1.       பட்டா :  ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், ( Survey Number and Subdivision ), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.

2.       சிட்டா  :  ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா ?  என்பதும் தீர்வை ( வரி ) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.

3.       அடங்கல் :  ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.

4.    வில்லங்க சான்றிதழ் ( Encumbrance Certificate ) :  22 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது. சொத்தின் உரிமை ( Ownership ) , சொத்தின் நான்கு எல்லைகள், பேங்க் அடமானங்கள், நீதி மன்ற வழக்குகள் இவைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

5.    சொத்து ஆவணம் ( பத்திரம் ) :
1.    நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கப்படுகிறதா ? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது. உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் ( Guardian ) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.
2.    அதிகாரம் பெற்ற முகவர் ( Power of Attorney Holder ) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது. அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா ? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை. பவர் பத்திரப்பதிவுக் கட்டணம் ரூ.10 ஆயிரமாகவும், அதே சமயம், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பவர் பத்திரம் பதிவு செய்தால், ரூ.1,000 கட்டணம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3.     மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
4.    முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா ( Original Deed ) அல்லது படி ஆவணமா ( Duplicate copy ) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.
5.    அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும். அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி,  திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும். அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.
6.    விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது. விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.

இறைவன் நாடினால்  !   தொடரும்........................

ஹஜ்ஜு வருது,நீங்க ரெடியா?


தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்துஇந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பைஇந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது.   இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலைரோஸி டவர்மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களைWWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும்உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால்பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.  

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைபயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில்மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Saturday, March 3, 2012

மரண அறிவிப்பு

மர்ஹும் ESM  இப்ராஹீம் அவர்களின் மகளும்,மர்ஹும் அப்துல் காதிர் அவர்களின் மனைவியும்,பாருக் அவர்களின் சகோதரியும்,செய்யது ஹாஷிம் அவர்களின் தாயாரும்,நெய்னா முஹம்மது,ஜாபர் சாதிக்,நிஜாமுத்தீன் ஆகியோர்களின் மாமியாருமாகிய ஜைனப் அவர்கள்,அதிரை- புதுமனை தெரு இல்லத்தில் இன்று காலை மரணமாகிவிட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.


இன்ஷா அல்லாஹ்,அன்னாரின் நல்லடக்கம் தக்வா பள்ளி மைய வாடியில் நடைபெறும். அன்னாரின் மறுமை பேற்றுக்கு துவா செய்யும் படி வேண்டுகிறோம்.

Thursday, March 1, 2012

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!


அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது.

பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப் பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின் வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும் கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய் செய்தியாளர்களிடம் கூறினார்.

யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ் கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!