Thursday, September 16, 2010

ஆறு நாள் உலகப்படைப்பு -அபத்தமா?

                                                        ஓரிறையின் நற்பெயரால்...

குர்-ஆனில் ஆறு நாளில் உலகை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இதனடிப்படையில், இவ்வாக்கியத்தை உற்று நோக்கும் எவருக்கும் பொதுவாக இரண்டு அடிப்படை சந்தேகங்கள் ஏற்படுவது இயல்பே!
1.சர்வ வல்லமையுள்ள கடவுள் என சொல்லபடுபவர் ஏன் உலகை படைக்க 6 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
2.உலக உருவாக்கம் இலட்சக்கணக்கான ஆண்டுகள் என அறிவியல் விஞ்ஞானம் சொல்லும்போது 6 நாட்களில் உலகை படைத்தாக சொல்லுவது லாஜிக்கே இல்லாமல் இருக்கிறதே...?
            குர்-ஆன் அறிவியலோடு உடன் படுகிறது என சொல்கிறார்கள்.... பார்த்தீர்களா... எவ்வளவு பெரிய விஞ்ஞான முரண்பாடு. ஆஹா.....    குர்-ஆன் பொய், இஸ்லாம் மாயை...முஹம்மது நபி தான் குர்-ஆனை இயற்றினார்...என இதர இணையங்களில் கட்டுரை எழுதும் தோழர்கள் இஸ்லாமை தவறான புரிதலுடன் அணுகுகிறார்கள் அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் காண்கிறார்கள் என்பது தான் உண்மை!
        மேற்குறிப்பிட்ட இரு கேள்விகளும் தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அழகான, திறமையான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும் திறமையான கேள்விகளுக்கு பதில் இல்லை என்ற விதியும் இல்லை.குர்-ஆனில் இதற்கான பதில் இல்லாமலும் இல்லை.தன்னின் கேள்விகளில் ஏற்படும் திருப்தியால் கிடைக்கும் பதிலில் விரக்திதான் மிஞ்சும்.எனவே நியாயமான தன் கேள்விகளுக்கு கிடைக்கப்பெறும் பதில் நடுநிலையாக உள்ளதா..என சிந்திக்க கடமைப்பட்டு தொடருங்கள்
    
முதலில் இரண்டாம் கேள்விக்கான தெளிவை பார்த்தப்பின் முதல் கேள்விக்கு செல்லலாம்...
   திருக்குர்-ஆனில் 07:54, 10:03,11:07, 25:59, 50:38, 57:04 ஆகிய வசனங்கள் 6
நாட்களில் உலகை படைக்கப்பட்டது குறித்து பேசுகிறது
   இவ்வசனங்களில் நாட்கள் (DAYS) என பொருள்கொள்ளும் வகையில்
அமைந்த மொழிப்பெயர்ப்புக்கு நேரடியான அரபு மூல சொல் அய்யாம் (AYYA'M). இது பன்மையே குறிக்கும் சொல்.இதன் ஒருமை யவ்ம் என்பதாகும். பொதுவாக காலத்தை குறிக்கும் அரபு சொல்லாக இது பயன் படுத்தப்பட்டாலும், இச்சொல்லுக்கு படிகள்,கட்டங்கள்,நிலைகள் (STEPS/ STAGES )என்ற பொருளும் கொள்ளலாம்.அதை அடிப்படையாக வைத்து இப்போது குர்-ஆன் கூறும் அவ்வசனங்களை பார்ப்போம்.காண்போரின் வசதிக்காக அவ்வசனங்களின் அரபு மூலங்களை அப்படியே ஆங்கிலத்திலும் தருகிறேன்,
அத்தியாயம் :அல்-அஃராஃப் (07)
வசனம் :54
நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்
Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yughshee allayla a(l)nnah[a]ra ya[t]lubuhu [h]atheethan wa(al)shshamsa wa(a)lqamara wa(al)nnujooma musakhkhar[a]tin bi-amrihi al[a] lahu alkhalqu wa(a)l-amru tab[a]raka All[a]hu rabbu alAA[a]lameen(a)

அத்தியாயம் :யூனுஸ் (10)
வசனம் :03
     நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
    Inna rabbakumu All[a]hu alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yudabbiru al-amra m[a] min shafeeAAin ill[a] min baAAdi i[th]nihi [tha]likumu All[a]hu rabbukum fa(o)AAbudoohu afal[a] ta[th]akkaroon(a)

அத்தியாயம் :ஹுது (11)
வசனம் :7
        மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) "நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்" என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், "இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை" என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
   Wahuwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min wak[a]na AAarshuhu AAal[a] alm[a]-i liyabluwakum ayyukum a[h]sanu AAamalan wala-in qulta innakum mabAAoothoona min baAAdi almawti layaqoolanna alla[th]eena kafaroo in h[atha] ill[a] si[h]run mubeen(un)

அத்தியாயம் :அல்-ஃபுர்கான்(25)
வசனம் :59
  அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்;. பின்னர் அவன் அர்ஷின் மீது அமைந்தான். (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.
    Alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi a(l)rra[h]m[a]nu fa(i)s-al bihi khabeer[a](n)

அத்தியாயம் :காஃப் (50)
வசனம் :38
நிச்சயமாக நாம் தாம் வானங்களையும், பூமியையும் அவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தோம்; (அதனால்) எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை.
   Walaqad khalaqn[a] a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a wam[a] baynahum[a] fee sittati ayy[a]min wam[a] massan[a] min lughoob(in)

அத்தியாயம் :அல் ஹதீத்(57)
வசனம் :04
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
 Huwa alla[th]ee khalaqa a(l)ssam[a]w[a]ti wa(a)l-ar[d]a fee sittati ayy[a]min thumma istaw[a] AAal[a] alAAarshi yaAAlamu m[a] yaliju fee al-ar[d]i wam[a] yakhruju minh[a] wam[a] yanzilu mina a(l)ssam[a]-i wam[a] yaAAruju feeh[a] wahuwa maAAakum ayna m[a] kuntum wa(A)ll[a]hu bim[a] taAAmaloona ba[s]eer(un)

  மேற்கூறிய அரபு மூல வார்த்தையோடு இவ்வசனங்களை அணுகும்போது 6 நாட்கள் எனும் சொல்லுக்கு பொருத்தமாக,உலகம் 6 படிகளில், 6 நிலைகளில், 6 கட்டங்களில் படைக்கப்பட்டது என பொருள் கொள்ளலாம். அதுதான் சரியானதும் கூட...
   ஆக நாள் என்ற பதம் மேற்கூறிய வார்த்தைகளின் அடிப்படையிலேயே தமிழ் மற்றும் ஏனைய மொழிப்பெயர்ப்புகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே திருக்குர்-ஆன் கூறும் உலக படைப்பு 6 கட்டங்களாக நிகழ்த்தப்பட்டது என்பதை அரபு மூலத்துடன் ஒப்பிடும் சிந்தனையாளர் எவரும் மறுக்க மாட்டார்கள்.
   இல்லை...இல்லை நாட்கள் என தெளிவாக குறிப்பிட பட்டுள்ளது எனவே அது குறிப்பிட்டது 6 நாளை தான் என மொழிப்பெயர்ப்பை பற்றிப்பிடித்து கொள்ளும் நண்பர்களுக்காக..  6 நாட்கள் தான் என்ற ரீதியில் குர்-ஆனை அணுகினாலும் மேற்குறிப்பிட்ட அதன் நிலைப்பாட்டை உண்மைப்படுத்தலாம்.
குர்-ஆன் அவ்வசனத்தில் குறிப்பிடும் நாள் என்ற பதமும்,நடைமுறையில் நம் வழக்கில் உள்ள நாள் என்ற பதமும் ஒன்றா...?
   பொதுவாக, நாம் சூரியனை மையமாக வைத்து பூமி தன்னைத்தானே ஒரு முறை சுழலுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவான 24 மணி நேரத்தை ஒரு நாள் என்கிறோம்.ஆக இதை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உலகம் படைக்கப்படுவதற்கு எடுத்துக்கொண்ட கால அளவு
                                                   6 X 24 = 144
                   144 மணி நேரத்தில் உலகம் படைக்கப்பட்டது என்பது அறிவுக்கு பொருந்தாத வாதம் எனவே குர்-ஆன் கூறுவது பொய் எனலாம்.இந்த கணக்கீடு சரி,ஆனால் அந்த காலஅளவீட்டையா குர்-ஆன் சொல்கிறது?ஆமாம் அந்த அளவீட்டைதான் சொல்கிறது என குர்-ஆனை பொய்யாக்க விளைவோர் கூறுவார்களேயானால் உண்மையாகவே பொய்யாக்குகிறார்கள்.,  குர்-ஆனை அல்ல விஞ்ஞானத்தை.
ஒரு நாளை கணக்கிடுவதற்கு இரு செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஒன்று பூமி தன்னில் தானே சுழல வேண்டும்.அதே நேரத்தில் சூரியனையும் மையமாக கொள்ள வேண்டும்.அப்போது தான் ஒரு நாள் என்பது நமக்கு கிடைக்க சாத்தியம்.ஆனால் மேற்கூறப்பட்ட திருக்குர்-ஆனிய வசனங்களை சற்று பொறுமையாக, கவனமாக பார்வையிடுங்கள். அவ்வசனங்கள் பூமியும்,வானமும் படைக்கப்ப்ட்டதே 6 நாட்களில் என்கிறது ,ஆக நாட்களை கணக்கிடும் பூமியே அதுவரை அங்கு உருவாகவில்லை எனும்போது எதன் அடிப்ப்டையில் அல்லாஹ் இங்கு நாட்களை கணக்கிட முடியும்?ஆக அல்லாஹ் நாட்கள் என குறிப்பிடுவது மனிதர்கள் கூறும் கால கணக்கின் அடிப்படையில் அல்ல என்பதும் பிரத்தியேகமாக அவன் உண்டாக்கிய வேறு கால அளவு என்பதும் தெளிவு!
   மேலும் வசனம் 50:03 ல் இறுதியாக- "எத்தகைய களைப்பும் நம்மைத் தீண்டவில்லை" என முடிக்கிறான். அவனது வல்லமையின் வெளிபாடாக கூறும் இவ்வாசகத்தில் ஓர் அறிவியல் உண்மையும் ஒளிந்துருக்கிறது.பொதுவாக களைப்பு என்பது சிறு செயல்கள் மற்றும் குறைவான நேரத்தில் செய்து முடிக்கும் பணியின் காரணங்களுக்காக ஏற்பாடது.மாறாக அதிக பளுவாக வேலைகளோ,தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கடின செயல்களாலோ ஏற்படுகிறது என்பதை கடைநிலை பாமரன் கூட அறிவான்.தான் மேற்கொண்ட உலக படைப்பின் கால அவகாசம் நீண்ட,நெடியது என்பதையும் அவ்வாறு மேற்கொண்ட போதிலும் சிறு களைப்பும் தம்மை வந்தடையவில்லை என்று அவன் குறிப்பிடுவதிலிருந்தே -சிந்திக்கும் எவருக்கும் அவனது இவ்வசனம் அத்தாட்சியாக இருக்கும்.
 ஆக அய்யாம் என்ற அரபு மூலத்தின் அடிப்படையில் அணுகினாலும், நாட்கள் என்ற மொழிப்பெயர்ப்பு பதத்தின் வழி அணுகினாலும் 6 நாட்கள் உலக படைப்பு அறிவியலுக்கு முரணானதல்ல.

இத்தோடு சேர்த்து இங்கு ஒரு துணை விளக்கம்
   அத்தியாயம் 41 வசனம் 9,10,11&12 இவ்வனங்களை மேற்கோள் காட்டி சிலர் உலகம் 8 நாட்களில் படைக்கப்பட்டதாக கூறி அது ஏனைய 6 நாட்கள் குறித்த வசனங்களோடு முரண்படுவதாக நிறுவ முயல்கிறார்கள்.அந்த வசனங்கள் இதோ,
  "பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்" என்று (நபியே!) கூறுவீராக.

அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).

பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் "நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் "நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்" என்று கூறின.

ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.

இதில் முதல் வசனத்திற்கு - 2 நாட்கள்
இரண்டாம் வசனத்திற்கு        -4 நாட்கள்
நான்காம் வசனத்திற்கு           -2 நாட்கள்
  ஆக 2+4+2 =8 நாட்கள் என்கிறார்கள்.இந்த எண்ணிக்கையை கூட்டினால் சரிதான். ஆனால் இங்கு அதை கூட்டவேண்டிய அவசியமென்ன., ஏனெனில் குர்-ஆன் கூறும் இவ்வசனங்கள் கூட்டல் அடிப்படையில் நாட்களை வகைப்படுத்தவில்லை.மேற்கண்ட நாளளவில் நடைபெற்ற செய்கையை பற்றித்தான் குறிப்பிடுகிறது.ஏனெனில் இறுதியாக கூறும் வசனத்தில் குறிப்பிடும் அந்த இரண்டு நாட்களில், அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் என்றே கூறுகிறது .மாறாக வானம் படைக்கப்பட்டதாக கூறவில்லை. எனவே மேற்கூறிய வசனங்கள் 6 நாட்கள் உலக படைப்பின் விவரிப்புகளே!

இப்பொழுது முதல் கேள்விக்கு வருவோம்.,
சர்வ வல்லமையுள்ள இறைவன் உலகை படைக்க நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டது ஏன்?
குர்-ஆனில் இறைவன் வல்லமையை குறித்து எந்த வசனமும் இல்லாதிருந்தால் அவனது இத்தகையே நீண்ட கால படைப்புக்கு விடை தேவைப்ப்டலாம்.ஆனால் அவன் தன் வல்லமையே குறிப்பிடும்பொழுது
  ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு பொருளை (உண்டு பண்ண) நாடினால் நாம் அதற்காகக் கூறுவது, 'உண்டாகுக!' என்பது தான். உடனே அது உண்டாகிவிடும்.(16:40)
(மேலும் பார்க்க:3:59, 36:82, 40:68,46:33,50:38)
     ஆக இறைவனின் ஒரு படைப்புருவாக்கத்தை பற்றி மேலதிக விளக்கம் இல்லாமலே எளிதாக தெரிந்துக்கொள்ளலாம்.எனினும் சில விசயங்களை தான் நாடிய விதத்தில் செய்கிறான்.சிலவற்றை தனது அத்தாட்சிக்காக நிறுவுகிறான்,சிலவற்றை தாமதித்து வெளியாக்குகிறான்.சிலவற்றை வெளிப்ப்டையாக அல்லது அந்தரங்கமாக தெரிய செய்கிறான்- தங்களுக்கு எந்த பதில் பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ளுங்கள் ஏனெனில்

  அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (21:23)

                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Tuesday, September 14, 2010

அரபு நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

அன்பானவர்களே,சமீபத்தில் ஒரு ஈமெயில் வழியாக வந்த எச்சரிக்கை செய்தியை இங்கு                                       உங்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று கருதுகிறேன்.                               


அமீரகத்தில் இருக்கும் ஒரு இந்திய சகோதரரின் நண்பர் லண்டன் செல்வதற்காக துபாய் வழியாக வந்துள்ளார். அவர் தான் கொண்டுவந்த லக்கேஜில் நம்ம ஊர்களில் விருந்து சமையளுக்காக பயன்படுத்தப்படும் கஸகஸா இருந்துள்ளது. கஸகஸா (paapy seeds) போதைப் பொருட்கள் தயாரிக்க உதவும் கொடுமையான பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டு, பல அரபு நாடுகளில் சமீப காலமாக தடைசெய்து, இதை கொண்டு வருபவர்களுக்கு கடுமையான தண்டனையை நிர்ணயித்துள்ளார்கள். அந்த அப்பாவி மனுசனுக்கு தெரியாது போல இங்கு அனேக அரபு நாடுகளில் கஸகஸா தடை செய்யப்பட்ட பொருள் என்று.

துபாய் போலீஸ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சிறையில் உள்ளார். அவரை வெளியில் கொண்டுவர அவரின் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறார்கள். கைதானவர் மிக கடினமான பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க இங்குள்ள வக்கீல்களுக்கு ஆகும் செலவு  இந்திய ரூபாய் 12 லட்சம் மேல் செலவு ஆகுமாம்.

என்னா கொடுமை பார்த்தீங்களா சிறிய கவனகுறைவால் வந்த வினை.

இந்த செய்தியை வெளிநாடுகளில் இருக்கும் சகோதரர்களுக்கும், இந்தியாவில் இருந்து அரபு நாடுகளுக்கு பயனம் செய்பவர்களுக்கும், டிரான்சிடாக வருபவர்களுக்கும் தெரிவிப்பது நம் அனைவரின் கடமை.

தடை செய்யப்பட்ட சில பொருள்கள்:

1. கஸகஸா

2. பான்

3. சுபாரி (beetal nuts), பான் பராக்

அமீரகத்தில் தடை செய்யப்பட்ட பொருள்கள் மட்டும் இது தொடர்பான சட்டங்களை தெரிந்துக்கொள்ள இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள்.

இது போன்று ஏற்கனவே இணையத்தளங்களில் படித்ததாக இருந்தாலும், மேலே உள்ள செய்தி எப்போது நடந்தது என்ற தகவல் தெரியவில்லை, இச்செய்தி நமக்கு ஒரு நல்ல எச்சரிக்கை என்பது மட்டும் உண்மை.

உண்மையில் அந்த சகோதரர் அப்பாவியாக இருந்தால் அவரின் விடுதலைக்காக நாம் துஆ செய்வோமாக. இன்ஷா அல்லாஹ்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலும் தகவல்கள் தெரிந்தவர்கள், நம் மக்களுக்கு புரியும்படி இங்கு பகிர்ந்துக்கொண்டால் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து பயணங்களில் இருக்கும் சகோதரர்கள் தான் கொண்டுவரும்  பொருட்களிலும், அமானித பொருட்களிலும் கஸகஸா இல்லாமல் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.

-- தாஜுதீன்

 இது தொடர்பான ஆங்கில மடல் செய்தியை அனுப்பிய சகோதரர் முதுவை ஹிதாயத் அவர்களுக்கும், மற்ற சகோதரர்களும்  மிக்க நன்றி.

Saturday, September 11, 2010

அமெரிக்காவில் இஸ்லாம்! கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா கேள்வி?தொடர் 3

ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு [^] தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் [^] சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது...

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா [^]. 

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.

ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா

Thursday, September 9, 2010

ஈத் முபாரக்


முதல் மனிதர்கள் ஆதம்-ஹவ்வா (அலை) அவர்களின் பிள்ளைகளான முஸ்லிம்,இந்து,கிறிஸ்தவ,யூத மற்றும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் என் உளம் கனிந்த  ஈத் முபாரக்.எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹ் நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்

Thursday, September 2, 2010

"மாற்ற நினைத்தேன், மாறி விட்டேன்"

யூசுப் எஸ்டஸ் (Yusuf Estes), நம் தலைமுறையின் மிகச் சிறந்த இஸ்லாமிய மார்க்க அறிர்களில் ஒருவர். மிக நகைச்சுவையாக பேசுபவர், அதே சமயம் கண்கலங்கவும் வைத்து விடுவார்.

மிக அழகிய முறையில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் வல்லவர். இவரால் இஸ்லாத்தை தழுவியோர் ஏராளமானோர். அல்ஹம்துலில்லாஹ்...  

இவர் இஸ்லாத்தை தழுவிய விதம் பற்றி இவர் சொல்ல நான் கேட்ட சில தகவல்களை இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்...இன்ஷா அல்லாஹ் 

யூசுப் எஸ்டஸ் அவர்கள் அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாகாணத்தை சேர்ந்தவர் (ஜார்ஜ் புஷ்சும் இந்த மாகாணத்தை சேர்ந்தவர் தான்). கிருத்துவ மத போதகராக இருந்தவர் (Preacher).

இவர் வாழ்வின் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்திய அந்த ஆண்டு 1991. யூசுப் எஸ்டஸ் அவர்கள் செல்வ செழிப்பான குடும்ப பின்னணியைக் கொண்டவர். இவரும் இவரது தந்தையும் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திவந்தவர்கள். தொழிலை கவனித்துக்கொண்டே கிருத்துவத்தையும் போதித்து வந்தார். இறைபக்தி அதிகம் உடையவர்.       

1991 ஆம் ஆண்டு, ஒரு வியாபார விஷயமாக எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பரை சந்திக்க வேண்டிய நிர்பந்தம். அதுதான் அவர் வாழ்வை திருப்பிப்போட்ட சமயமும் கூட.

அப்போது வரை யூசுப் எஸ்டஸ் அவர்கள் இஸ்லாத்தை பற்றி எண்ணியிருந்தது ...

"முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பாலைவனத்தில் இருக்கும் ஒரு கருப்பு வடிவத்தை வணங்குபவர்கள், தினமும் ஐந்து முறை தரையை முத்தமிடுபவர்கள்...இது தான் இஸ்லாத்தை பற்றி நான் அறிந்திருந்தது"

"1991 ஆம் ஆண்டின் முற்பகுதி, எகிப்திலிருந்து வரும் முஹம்மது என்பவருடன் தாம் வியாபார ஒப்பந்தம் செய்யப்  போவதாக என் தந்தை என்னிடம் கூறினார். என்ன முஸ்லிமுடனா?, நான் மறுத்து விட்டேன். ஆனால் என் தந்தை வேறு வழி இல்லையென்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.    

இது வியாபாரம் என்பதால் என்னால் முஹம்மதை நிராகரிக்க முடியவில்லை. சரி அவருடன் சேர்ந்து பணியாற்றுவோம். உண்மையான என்னுடைய மார்க்கத்தையும் அவருக்கு போதிப்போம். இதுதான் நான் முதலில் நினைத்தது... 

நான் அவரை சந்திக்க தயாரானேன். ஏசு என் கடவுள் (Jesus is my Lord) என்று எழுதப்பட்டிருந்த ஒரு தொப்பியை அணிந்துக்கொண்டு, கழுத்தில் ஒரு பெரிய சிலுவையை அணிந்து கொண்டு, கையில் பைபிளை வைத்துக்கொண்டு அவரை வரவேற்க காத்திருந்தேன்.    

முஹம்மதும் வந்தார். நான் அதிக நேரம் வீணாக்கவில்லை...

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

ஆம்...

ஆச்சர்யமான பதில். நான் தொடர்ந்தேன். இப்ராகிம்(அலை), இசாக்(அலை), இஸ்மாயில்(அலை) என்று பைபிளில் இருக்கும் நபிமார்களிடம் இருந்து ஆரம்பித்தேன். அதன் பிறகு நான் பலமுறை அவருடன் என் மார்க்கத்தை பற்றி பேசியிருக்கிறேன், விவாதித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் தான் வென்றதாக நினைப்பேன். ஆனால் இன்றோ, அதைப் பற்றியெல்லாம் நினைக்கும் போது, உண்மையில் முஹம்மது தான் வென்றார் என்பது புரிகிறது.                 

முஹம்மதின் பண்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. முஹம்மதை அவர் வழியில் விட்டுவிடுமாறு என் தந்தை என்னிடம் கூறினார். என்ன, இப்படி ஒரு பண்புள்ளவர் ஒரு  தவறான கொள்கையில் இருப்பதா? இல்லை.. இவரை எப்படியாவது என் மதத்திற்கு அழைத்து வருவேன். 

  
இதற்கு நான் முதலில் செய்தது, அவரை என் வீட்டிலேயே குறைந்த வாடகைக்கு தங்க வருமாறு அழைத்தது. பணம் முக்கியமல்ல, அவருக்கு நான் கொடுக்கக் கூடிய போதனை தான் முக்கியம். முஹம்மதும் எங்களுடன் தங்க ஒப்புக்கொண்டார்.

இது நடந்து கொண்டிருந்த அதே வேலையில், என்னுடைய நண்பரான மதகுரு ஒருவர்(Priest, father) மாரடைப்பு காரணமாக மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தினமும் சென்று சந்தித்து வருவேன். அப்போது அந்த அறையில் தங்கிருந்த பாதர் பீட்டர் ஜகோப்ஸ் (Father Peter Jacobs) அவர்கள் எனக்கு நன்கு பழக்கமானார். அவரும் மாரடைப்பு காரணமாக தான் அந்த மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

நலமாகி வந்தவுடன் அவரை என்னுடன் வந்து வசிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் எங்களுடன் வசிக்க சம்மதித்தார்.

இதுதான் நான் எதிர்பார்த்த நேரம். மாட்டினார் முஹம்மது. இப்போது ஒரே வீட்டில் நான், என் மனைவி, என் தந்தை மற்றும் பாதர் பீட்டர் ஜகோப்ஸ், எல்லோரும் கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள். இனி முஹம்மதை எங்கள் வழிக்கு கொண்டு வந்து விடவேண்டியதுதான். 

ஒவ்வொரு நாளும், இரவு உணவின் போது நாங்கள் அனைவரும் முஹம்மதை சுற்றி அமர்ந்து கொள்வோம். கேள்விகளை தொடுப்போம். 

பல கேள்விகள்...

நாங்கள் அனைவரும் ஒவ்வொரு விதமான பைபிளை வைத்திருப்போம், உதாரணத்துக்கு நான் RSV (Revised Standard version) பைபிள், என் தந்தை கிங் ஜேம்ஸ் பதிப்பு (King James version) பைபிள் என்று பல பைபிள்கள்"

கிருத்துவத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இங்கு ஒரு தகவல். கத்தோலிக்க கிருத்துவர்களின் பைபிள் 73 புத்தகங்களை கொண்டது. protestant கிருத்துவர்களின் பைபிள் 66 புத்தகங்களை கொண்டது.   

"ஆனால் முஹம்மதோ ஒரே ஒரு புத்தகத்தை கொண்டு வந்து வைத்தார். அது கடவுளிடமிருந்து வந்தது என்றும், அன்றிலிருந்து இன்றுவரை மாற்றமடையாதது என்றும் கூறினார். இது எனக்கு ஆச்சர்யமான தகவல்கள். 

பிறகு ஒருமுறை திரித்துவத்தை (Trinity, it is nothing but a christian belief that teaches the unity of Father, Son, and Holy Spirit as three persons in one Godhead). பற்றி விவாதம் திரும்பியது. முஹம்மது, திரித்துவத்தை லாஜிக்காக நிரூபியுங்கள் என்று கேட்டார்...

என்ன லாஜிக்கா? மதம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது, இங்கு லாஜிக்கெல்லாம் பார்க்ககூடாது...

எங்கள் மார்க்கத்தில் இரண்டும் உண்டு....

இது போன்ற பதில்கள் தான் எங்களை திக்குமுக்காட செய்தன... நான் வீம்புக்காக அவருடன் வாதம் செய்துகொண்டிருந்தேன், ஆனால் அவருடைய பதில்களில்தான் அதிகம் அர்த்தமிருந்தது...இப்படியே சில நாட்கள் சென்றன..

ஒருமுறை பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள், முஹம்மதிடம், தன்னை மசூதிக்கு அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொண்டார். சென்று வந்த அவரிடம்... 

பாதர்...அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? பலி கொடுத்து இறைவனை வணங்கி கொண்டிருந்தார்களா? 

இல்லை..அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...வந்தார்கள், தொழுதார்கள், சென்றுவிட்டார்கள்...

என்ன அவ்வளவுதானா....எந்த மாதிரி பாடல்களை பாடினார்கள்? எந்த மாதிரி இசைக்கருவிகளை வைத்திருந்தார்கள்? 

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை?

என்ன இசைக்கருவிகள் இல்லாமல் கடவுள் வழிப்பாடா? 

இவையெல்லாம் எனக்கு வியப்பை தரும் தகவல்கள். முஸ்லிம்களின் கடவுள் வழிபாடு என்பது மிகவும் எளிதான, வலிமையான ஒன்று என்பதை புரிந்துக்கொண்டேன். 

இஸ்லாம் என்னை நெருங்கி வந்துக்கொண்டே இருந்தது. இப்போது என் மதத்தில் பல கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்...

சில தினங்களுக்கு பிறகு, பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் மறுபடியும் முகம்மதுடன் மசூதிக்கு சென்றார். அவருக்காக நான் காத்திருந்தேன். இந்த முறை என்ன புது செய்தி கொண்டுவருவார் என்று பார்ப்பதற்காக.                

கார் வந்தது, இருவர் இறங்கினார்கள். ஒருவர் முஹம்மது, அது எனக்கு நன்றாகவே தெரிந்தது, யார் அந்த மற்றொருவர்?, நீண்ட ஆடையுடன், தலையில் குல்லா அணிந்துக்கொண்டு, யாரவர்?...

உற்று கவனித்தேன்....என்னால் நம்பமுடியவில்லை...பாதர் பீட்டர் ஜகோப்ஸ்சா அது? ஆம் அவரேதான்...என்ன, அவர் இப்போது முஸ்லிமா? அமெரிக்கா, மெக்ஸிகோ என்று நாடு நாடாக சென்று கிருத்துவத்தை போதித்தாரே, அவரா இவர்? அதிர்ச்சியில் உறைந்தேன். 



பாதர் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் என்னிடம் வந்தார், 

நிச்சயமாக இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகிறேன்...   

நான் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என்னிடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது அது. 

மாடியில் இருந்த என் மனைவியிடம் சென்றேன்.

கவனித்தாயா?, இப்போது பாதர் பீட்டர் ஜகோப்ஸ் ஒரு முஸ்லிம். இஸ்லாமிய மார்க்கம் நான் நினைத்தது போல் இல்லை, அது எனக்கு நல்ல மார்க்கமாகவே படுகிறது.

எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்...

ஹேய்... இரு..................இரு..................நான் சொன்னதை தவறாக எடுத்துக்கொண்டாயா? நான் முஸ்லிமாகவில்லை, அவர்தான் முஸ்லிம். நான் இன்னும் கிருத்துவன் தான். அப்படியே நான் முஸ்லிமாகினாலும் நீ என்னுடன் தாராளமாக வாழலாம், ஏனென்றால் ஒருமுறை முஹம்மது சொல்ல கேட்டிருக்கிறேன், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் ஆண் ஒரு கிருத்துவ பெண்ணை திருமணம் செய்யலாம். ஆனால் ஒரு முஸ்லிம் பெண்தான் கிருத்துவ ஆணை திருமணம் செய்யக்கூடாது...

அதனால் தான் கேட்கிறேன் எனக்கு விவாகரத்து வேண்டுமென்று...

என்ன? 

ஆம், முஸ்லிம் பெண்ணாகிய என்னால் கிருத்துவ ஆணாகிய உங்களுடன் வாழ முடியாது...                           

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...நான் நிதானத்திலேயே இல்லை...சிறிது நேரத்தில் சுதாரித்துக்கொண்டேன்...

இரு...அவரசப்படாதே, உன்னிடம் ஒன்றை நான் சொல்ல வேண்டும். இஸ்லாம் எப்போதோ என் மனதில் வந்து விட்டது. நானும் முஸ்லிம்தான்.. 

என் மனைவி என்னை நம்பவில்லை. 

ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறீர்கள், தயவு செய்து இங்கிருந்து வெளியேறிவிடுங்கள்...

நான் வெளியே வந்து விட்டேன். ஒன்றும் புரியவில்லை. ஒரே குழப்பம். தூக்கம் சரிவர வரவில்லை. எழுந்து சென்று முஹம்மதை எழுப்பி வெளியே அழைத்து சென்றேன். ஏதேதோ பேசுகிறேன் அவரிடம், ஒன்றும் புரியாமல்... இப்போதும் அவர் பொறுமையாகவே பேசினார், விளக்கினார். 

சுப்ஹு நேரம் நெருங்கி விட்டது, முகம்மதுடன் நானும் பள்ளிக்கு சென்றேன். அந்த பிளைவூட் தரையில் சஜிதா செய்தேன். 

இறைவா எனக்கு நல்வழி காட்டு....

இருவரும் வீட்டிற்கு வந்தோம். முஹம்மது மற்றும் பீட்டர் ஜகோப்ஸ் அவர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். நான் சஹாதா சொன்ன சிறிது நேரத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். சுபானல்லாஹ்...

என் தந்தையிடம் விஷயத்தை சொன்னேன். 

நான்தான் அப்போதே கூறினேனே இஸ்லாம் ஒரு அழகிய மார்க்கமென்று. எனக்கு நீ இஸ்லாத்தில் இணைந்தது மகிழ்ச்சிதான். 

dad,..... அப்போ நீங்கள்? 

இந்த கேள்விக்கு அவரிடமிருந்து பதில் வரவில்லை. மாதங்கள் சென்றன. எப்போதும் என்னை மசூதியில் விட வரும் என் தந்தை சில நாட்களாக என்னுடன் சேர்ந்து தொழ ஆரம்பித்தார்.

பலரும் என்னிடம் வந்து கேட்க ஆரம்பித்தனர்...

எப்பொழுது உங்கள் தந்தை இஸ்லாத்தை தழுவினார்? 

நான் விளக்கமளித்தேன். ஒரு சமயத்தில் இந்த கேள்விகள் அதிகமாகவே, நான் அவர்களிடம், 

நீங்கள் ஏன் அவரிடமே இந்த கேள்வியை கேட்கக்கூடாது? 

அவர்கள் அவரிடம் சென்று கேட்டனர்... 

அவர் கூறினார் "கடந்த ஒரு வருடமாக...."

சுபானல்லாஹ்...நான் இப்போது, நடந்ததையெல்லாம் திரும்பி பார்க்கிறேன். ஆம் முஹம்மது வென்றுவிட்டார். ஆனால் நானும் வென்றுவிட்டேன். இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதினால்..."

யூசுப் எஸ்டஸ் அவர்களுடைய இந்த வரலாற்றை அவர் சொல்ல நீங்கள் கேட்க வேண்டும். மிகுந்த நகைச்சுவையுடனும், அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் சொல்லுபவர். 

இப்போது யூசுப் எஸ்ட்ஸ் அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பலரையும் இஸ்லாத்தில்பால் அழைத்து வருகிறார். சென்னைக்கும் ஒருமுறை வந்திருக்கிறார். பல இணையதளங்களை நடத்திவருகிறார்.

இறைவன் இவருக்கு தொடர்ந்து நல்ல உடல் நலத்தையும், மன நலத்தையும் கொடுப்பானாக...ஆமின்

இவருக்கு ஒரு செல்லப்பெயர் உண்டு...அது "ATHEIST KILLER" என்பது...ஏன்? இவரது சில வீடியோக்களை பார்த்தால் தெரியும்...

இறைவன் நம் எல்லோருக்கும் நல்வழி காட்டுவானாக...ஆமின்...

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

References:
1. Sheikh Yusuf Estes talk on "priests and Preachers Coming to Islam" - for Islam today.
2. Sheikh Yusuf Estes interview on "How he came to Islam" with eddie - for thedeenshow.  
3. Sheikh Yusuf Estes "How Yusuf estes came to Islam" - Islamtomorrowdotcom/yusuf_story.htm


ஆஷிக் அஹ்மத் அ


T

Sunday, August 29, 2010

நரகத்திற்கே உரித்தான சதை

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்
1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.
6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.
8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள்.    (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)

நன்றி:மனாருல்ஹுதா ஜூலை 2007

Thursday, August 26, 2010

THE REMINDER

ஏக இறைவன் அல்லாஹ்  கட்டளையிட்ட ஏழைகளுக்கு செலுத்தவேண்டிய வரியை (ஜகாத்) செலுத்திவிட்டீர்களா?

அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்!!

புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)
2:177

Sunday, August 22, 2010

நேரடி ஒளிபரப்பு

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மற்றும் மதினாவில் உள்ள மஸ்ஜிதுந் நபவியை இணையதளம் மூலம் மிகத்து துள்ளியமாக பல கோணங்களில் நேரடியாக பின் வரும் இணைப்பின் மூலம் காணலாம்!
மக்கா மதினாவில் ரமளான் மாதத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தை நேரடியாக கண்டு மகிழுங்கள்!
மக்கா
மதினா

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!