Thursday, November 13, 2008

பைபிள் வசனம் - போப் மறுப்பு!!!

இயேசு காட்டிய நேர்வழியில் மக்கள் நடக்காமல் இருப்பது தான் வரலாற்றின் சோகமான உண்மை. இறையருளால் சில சீடர்கள் தான் அவரை ஆதரித்து அவரது வழியில் நடந்தனர். இதைவிடவும் நம்பிக்கையற்ற சிலர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் இறைத்தூதர் முஹம்மது நபியைக் கொல்ல முயற்சி செய்தது போலவே இயேசுவையும் கொல்ல முயற்சி செய்தனர்.

ஆனால் இறைவன் அந்த சதிகாரர்களின் செயல் அறிந்து அதை விட உயர்ந்த திட்டம் வைத்திருந்தான். இயேசுவுக்காகவும் அவரது சீடர்களுக்காகவும் இதைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்காணும் வசனங்களை விளக்குகிறது.

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது; ''அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?'' என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாதிய்யூன். ''நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம். திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்'' எனக் கூறினர். ''எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!'' (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். ''ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன். மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன். பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்'' என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 3:53-56)

மேற்கூறிய வசனங்கள் குறித்துக் காட்டுவது போல் இயேசு தனது மரணத்திற்கு முன்பே வானத்தில் உயர்த்தப்பட்டார். இதன் பொருள் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! இதைத் திருக்குர்ஆன் எடுத்தோதுகிறது. இயேசுவின் எதிரிகள் அவரை சிலுவையில் கொல்லப் பார்த்தனர். ஆனால் இறைவன் இயேசுவைக் காப்பாற்றினார். யாரோ ஒருவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையும் இந்த சதியும் மர்யம் (மேரியை) பற்றிய அவதூறும் நம்பிக்கையற்ற யூதர்களால் செய்யப்பட்டது என்று திருக்குர்ஆனின் கருத்து. இது பற்றிய திருக்குர்ஆனின் வசனம் வருமாறு :

இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிப்பட்டனர்). இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:156-159)

அப்படியானால் இயேசுவுக்குப் பதிலாக அறையப்பட்ட மனிதன் யார்? இதைப்பற்றி திருக்குர்ஆன் விளக்கவில்லை. இந்தக் கேள்விக்குரிய பதிலையும் கூறவில்லை!

திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை எழுதியவர்கள் சில பெயர்களைக் குறித்து காட்டியுள்ளனர். திருக்குர்ஆனோ நபிகள் நாயகத்தின் அறிவுரை - விளக்கவுரைகளோ இவர்களுடைய யூகங்களுக்கு ஆதரவாக இல்லை.

இதன் பொருள் நீதித் தீர்ப்ப நாளுக்கு முன்னர் இயேசு மீண்டும் பூவுலகிற்கு வருவார் என்பதையே காட்டுகிறது. எனினும், திருக்குர்ஆன், விரிவுரையாளர்கள் மேற்சொன்ன வசனத்தின் கடைசிச் சொற்றொடர்களை வைத்து விளக்கம் தந்துள்ளனர்.

இயேசு மீண்டும் வருவார். அப்போது கிறிஸ்துவர்களும், யூதர்களும் இயேசு இறப்பதற்கு முன் அவரை நம்புவார்கள் என்று தெளிவுரையாளர்கள் கூறுவதற்கு நபிகள் நாயகத்தின் அருள்வாக்குகள் ஆதாரம் தருகின்றன.

கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்

இந்தக் கருத்துக்களைப் படித்தவுடனேயே கிறிஸ்துவாகள் கூறக் கூடும், பாருங்கள், இது தான் முஸ்லிம்கள். இயேசுவைப் பற்றி இவர்கள் இப்படிக் கூறுவதால் தான் இவர்கள் மறுப்பாளர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றனர்! என்பர்.

இவர்கள் இப்படிக் கூறினாலும் திருக்குர்ஆனின் கருத்துக்கள் கூர்மையான ஆராய்ச்சிக்கு உரியதாக இருக்கிறது. யார் உள்ளபடியே இறை நம்பிக்கையையும் கிறிஸ்துவ மார்க்கத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றார்ளோ அவர்கள் கீழக்காணும் காரணங்களை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.

1. திருக்குர்ஆன் என்பது இறைவன் இறுதியாக அருளிச் செய்த வேதம். அந்த வேதத்தில் சொல்லப்பட்டது அனைத்தும் முழுமையான உண்மை. இதை நம்பாதவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் பெரிதாகத் தென்படாது. ஆனால் திருக்குர்ஆன் பற்றிய வரிக்கு வரியான திறனாய்வும், விஞ்ஞான அடிப்படையிலான ஆராய்ச்சியும் அந்த வேதத்தினலுள்ளது அனைத்தும் உண்மைதான் என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குர்ஆன் என்பது முஹம்மத் நபி (ஸல்) அவர் கூறப்பட்டது என்று சிலர் கூறுவர். கிறிஸ்தவ யூத வேதங்களைக் காப்பி அடித்தது என்றும் கூறுவர். அவர்களுக்கு உலக வரலாறும் தெரியாது. குர்ஆனும் புரியாது. நபிகள் நாயகம் பற்றியும் அறிந்திருக்கவில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்கு இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தான் அரபி மொழியில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.

அது தவிர நபிநாதர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பதையும், அவர் வாழ்ந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மத வேதங்கள் என்பன தேவாலயங்கள் சர்ச்சுகள் தவிர வெளியுலகில் புழக்கத்தில் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்.. மேற்சொன்ன குற்றச்சாட்டிலுள்ள அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.

2. இறைவனின் செய்தியிலுள்ள ஓரிறைத் தன்மையையும் உலகளாவிய வாக்கையும் புரிந்து கொண்டால் இறைத்தூதர்களை மக்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இறைத்தூதரில் ஒருவரை நிராகரித்தாலும் அது அனைத்து இறைத்தூதர்களையும் நிராகரிப்பதற்குச் சமம். யூதர்கள் இயேசுவின் இறைத்தூதையும் நபிகள் நாயகம் அவர்களின் இறைத்தூதையும் நிராகரிக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறைத்தூதை நிராகரிக்கிறார்கள். முஸ்லிம்களோ அனைத்து இறைத்தூதையும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அதிலுள்ள தவறான சரித்திரத் திரிபுகளையும் - மனிதன் நுழைத்த கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள்.

3. திருக்குர்ஆன் கூறுவது காரணமாகவே முஸ்லிம்கள் தங்களது நபிநாதரை நேசிப்பது போலவே இயேசுவையும் நேசிக்கிறார்கள். மேலும் கிறிஸ்துவர்களின் புதிய ஏற்பாட்டில் கூறப்படாத இயேசுவின் அற்புதங்கள் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக இயேசு தொட்டிலிலிருந்து பேசுகிறார். மக்கள் எதை உண்கிறார்கள், எதைத் தங்களது களஞ்சியத்தில் வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் (திருக்குர்ஆன் வசனங்களின்படி)

4. இயேசு ஒரு தெய்வம் என்ற கருத்து புனிதபால் மற்றும் அவரது சீடர்களால் கிறிஸ்து மார்க்கத்தில் நுழைக்கப்பட்டது. இதை எதிர்த்த பல லட்சக்கணக்கான கிறிஸ்துவர்களின் சவங்களின் மீது இந்தக் கருத்து நிலைநாட்டப்பட்டது. இதைப் பற்றி காஸ்டிலோ என்பவர், ஒரு மனிதனை நெருப்பில் எரிப்பது ஒரு கொள்கையை நிலைநாட்டியது ஆகாது என்றார்.

5. சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன் என்பவரின், தலைமையில் நடந்த கிறிஸ்துவ மாநாட்டில் தான் தற்போதுள்ள கிறிஸ்துவர்களின் நான்கு புதிய ஏற்பாடுகள் அங்கீகாரம் பெற்றன. இதுவும் அந்தப் பேரரசரின் அரசியில் லாபங்களுக்காகச் செய்யப்பட்டன.

ஏராளமான பைபிள் புத்தகங்களும் ஏற்பாடுகளும் மதக் கிரந்தங்களும் தள்ளுபடி ஆகமம், என்ற பெயர் இடப்பட்டன. இதில் பல புத்தகங்கள் இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டவையாகும். இவற்றில் பர்னபாஸ் ஆகமம் - ஹெர்மாசின் மேய்ப்பன் போன்ற பைபிள் புத்தகங்கள் திருக்குர்ஆனோடு ஒத்துப் போகின்றன.

6. இயேசுவின் ஓரிறைக் கொள்கையும், மனிதக் கருணைக் கொள்கையும் முஸ்லிம்களால் மட்டும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. யூதர்களாலும், பழைய காலத்துக் கிறிஸ்தவர்களான எபியோனியர்கள் - செரிந்தியர்கள், பாசிலிடியன்கள், காபோகிரேடியன்கள், ஹைபிஸ்சிஸ்டிரியன்கள் போன்றவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.

அரியன்கள், பாசிலியன்கள், கோத்துகள் போன்றவர்களாலும் இறைத்தூதர் தான் இயேசு என்பதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இப்போதும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள ஓரிறை சர்ச்சுகளும், ஜெஹோவா காட்சியாளர்களும் இயேசுவைக் கடவுள் என வணங்குவதில்லை.

7. கூர்மையான பைபிள் ஆராய்ச்சி - இயேசுவும், அவரது சரிதம் எழுதியவர்களும் சொல்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.

இது பற்றி ஹெய்னிஸ் ஜாஹ்ர்ன்ட் என்பவர், இயேசு பேசாத சொற்களை அவரது வாயிதழில் வைத்தனர். அவர் நடத்தாத அற்புதங்களை அவர் நடத்தியதாகக் கூறினர் என்றார். இது போலவே பல முடிவுகளை தேவாலய ஆயர்கள் அறிந்திருந்த போதிலும் அவற்றை ரகசியமாக வைத்திருந்தனர். ஆராய்ச்சி நிபுணர்களுக்கு மட்டும் அறிவித்தனர். சர்ச்சுகள் இயேசுவைப் பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று மனித குமாரன் இயேசு என்ற நூலில் ரூடால்ஃப் அகஸ்டீன் எழுதியுள்ளார். (ஜெர்மனிய மொழியில் இந்தப் புத்தகம் 1972 ல் வந்தது. 1977 ல் மொழி பெயர்க்கப்பட்டது).

8. இயேசுவின் இயற்கைக் குணம் - இறைத்தூது - சிலுவை மரணம் - விண்ணேற்றம் இவை பற்றிய தவறான எண்ணங்களில் இருப்பது தான் கிறிஸ்துவ மார்க்கத்தில் இன்றுள்ள பிரச்சினை. இதைப் பலரும் அறை கூவி ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இங்கிலாந்திலுள்ள பல அறிஞர்கள் எழுதி ஜான் ஹிக் என்பவரால் ஒழுங்கு செய்யப்பட்டு, கடவுள் அவதாரப் புராணம் என்ற நூல் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அந்த அறிஞர்கள் இயேசு என்ற மனிதர் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவர், தெய்வீக நோக்கத்துக்காக அவர் செயல்பட்டார். பிற்காலத்தில் அவரே கடவுள் அவதாரம் என்று கூறப்பட்டது. இது புராண பாணியில் கவிதையின் உயர்வு நவிற்சி முறையில் அவரது முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காக நமக்குக் கூறப்பட்டது தான் என்று சொல்லியுள்ளார்கள்.

ஆனால் ஜார்ஜ் கேரிப் என்பவர் இந்தப் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் போது இயேசுவைக் கடவுள் அவதாரம் என்று ஒப்புக் கொள்ளவில்லை எனில் இயேசுவின் இறைத்தூதை முழுமையாக உணர முடியாது. மக்களை வழிநடத்தும் ஆளுமையை விளக்க முடியாது என்று கூறியுள்ளார்.

ஆனால் உறுதியாக இது பலவீனமான வாதம் ஆகும். ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மத் நபி (ஸல்) போன்ற மிகப் பெரிய தூதர்கள் தங்களது மக்களின் மீது அளப்பரிய வழி நடத்தும் ஆளுமையை பெற்றிருக்கிறார்கள். இவர்களில் யாரும் தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ கூறிக் கொள்ளவில்லை.

9. பிதா மகன் பரிசுத்த ஆவி என்ற திரியேகத்தத்துக் கொள்கை இன்றிருக்கும் பைபிளில் கூடக் காண முடியாது. நமது இறைவனான கர்த்தர் ஒரே ஒருவர் தான் (மத்தேயு) என்று இருக்கிறது. திரியேகத்துவத்தை மறுக்கிறது. சுவிசேஷக்காரர்கள் பலரும் இது போல் எழுதியுள்ளனர்.

10. தான் ஒரு தெய்வம் என்று இயேசு கூறியதாக இப்போது இருக்கிற பைபிளில் கூடக் கூற முடியாது. கடவுளின் குமாரன் நான் என்ற சொல் இயேசுவின் வாயிலிருந்து வந்ததாகவும் பைபளில் கூற முடியாது.

பைபிள் அகராதி என்ற நூல் ஹேஸ்டிங்கினர் கூறுகிறார். தன்னைக் கடவுள் என்று இயேசு கூறினாரா என்பது சந்தேகத்திற்குரியது. எனது பைபிள் ஆராய்ச்சியில் கடவுளின் குமாரன் என்ற சொற்களை யோவான் சுவிசேஷத்தில் 5-7 ஆகிய அத்தியாயங்களில் காண முடிகிறது. பிறர் தான் அந்தச் சொற்களை சில இடங்களில் கூறுகிறார்கள். கடவுளின் குமாரன் என்று இயேசுவே கூறியிருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கீழ்க்கண்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Þ அந்தக் குமாரன் எனும் சொல் ஹெலெனிஸ்டிக் என்ற மொழி வகையைச் சார்ந்தது. இயேசுவும் அவரது சீடர்களும் புழங்கிய மொழி வகை அது. செமிடிக் மொழியில் நிச்சயமாக அந்தப் பொருள் வராது.

Þ கிரேக்க மொழியிலுள்ள பைபிள் குமாரன் என்ற சொல்லுக்கு பியாஸ் - பியாடா எனும் சொற்கள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் இதற்கு ஊழியன் - ஊழிய மகன் என்பதே! இது வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது இயேசுவுக்கு மகன் என்ற சொல்லையும் மற்றவர்களுக்கு ஊழியர் என்ற சொல்லையும் பயன்படுத்தினர்.

Þ மனித குமாரன் என்று இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்ட சொல் சுவிசேஷங்களில் 81 முறை வருகிறது. இது இயேசு தன்னுடைய மனித நிலைமையைக் குறித்து அறிவார்ந்த முறையில் கூறியதாகும். இந்த இலக்கியப் பூர்வமான சொல் இயேசுவின் மனிதப் பாத்திரத்தைப் புற்றிய அழுத்தமான வெளிப்பாடாகும். இப்போது வாழும் கிறிஸ்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?

பைபிள் வசனம் - போப் மறுப்பு

யூதத் தலைமைப் பூசாரியாலும், யூத மூப்பர்களாலும் திட்டமிடப்பட்டு – உத்தரவிடப்பட்டது தான் இயேசு கைது செய்யப்பட்டார். சிலுவையில் அறையப்பட்டார் என்பது பரம்பரையான பைபிள் கூறும் கதை.

1960 ஆம் ஆண்டுகளில் இந்தக் கதை கிறிஸ்துவர்களின் மிக உயரிய அதிபதியான போப்பாண்டவரால் மறுக்கப்பட்டது. சிலுவையில் இயேசு அறையப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பில்லை எனக் கூறினார். இக் கூற்று பைபிள் கதையையே மறுப்பதாகும்.

இது (இஸ்ரேல் நாட்டுக்காகச் செய்யப்பட்ட) அரசியல் ரீதியான அறிவிப்பு என நீங்கள் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்ந்து கூறி வருகின்ற ஒரு உண்மையை இந்த அறிவிப்பு நிலைநாட்டுகிறது.

கிறிஸ்துவ மார்க்கத்திற்குள் தேவாலய நிர்வாகங்கள் பல செய்திகளைப் புகுத்திக் கொண்டிருந்தன. இதனால் பல நம்பிக்கைகள் மாறியது மட்டுமல்லாமல் - கிறிஸ்தவ மார்க்கத்தின் பழைய உருவத்தையே மாற்றி முரண்படுகிறது.

கடவுள், பைபிள், இறைவனுடன் மனிதனின் உறவு நிலை பற்றிய தேவாலயங்கள் மதக்கருத்துக்கள் மக்களை துரதிர்ஷ்டவசமான முடிவுகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியது.

இதனால் ஒருவர் விஞ்ஞானியாக - படிப்பாளியாக இருந்து கொண்டு கிறிஸ்துவராகவும் இருக்க முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்தது.

மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்க்க முடியாது என்ற கருத்தை தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் மற்றும் பெரும்பாலான மக்களிடையே தோற்றுவித்தது.

இதன் தாக்கம் பிற மதங்களின் மீதும் ஏற்பட்டது. இயேசுவின் போதனைகளைச் சீர்குலைக்காமலும் - திரிபு செய்யாமலும் இருந்திருந்தால் இது நடந்திருக்காது.

இதனால் தான் இஸ்லாம் இதைப்பற்றிக் கூறும் போது மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கம் முரண்பாடு இல்லை எனக் கூறுகிறது.

விஞ்ஞான உண்மைகள் - இறைவனைப் பற்றிய ஞானத்தை அறிய ஒரு வழி தான். வெளிப்பாடுகள் என்ற முன்னுரைப்புகள் இயேசுவின் போதனைகளிலும் குர்ஆனிலும் உள்ளன. உண்மையான விஞ்ஞான அறிவும் மதமும் - கடவுள் எனும் மூல ஊற்றிலிருந்தே வருகின்றன. ஏனெனில் கடவுள் தனக்கு முரணானதைக் கூற மாட்டார்.

கிறிஸ்துவச் சரித்திரத்திலுள்ள திரிபுகளான - திரியேகத்துவம் கடவுளின் குமாரன், ஜென்மப் பாவம், பாவமன்னிப்பு என்பவை மக்களை மத்த்திலிருந்து விரட்டியுள்ளன. ஆனால் இஸ்லாம் மார்கத்திற்கு இது போன்ற பிரச்சினைகள் இல்லை. இருப்பினும் இஸ்லாமையும் ஒரு மதம் என்றே மேற்கத்திய பாணியில் ஒரு குறிப்பிட்ட வளையத்தில் - பொருளில் நிலை நிறுத்தியுள்ளதால் கிறிஸ்துவ மதம் போலவே இஸ்லாத்தையும் எண்ணிக் கொண்டனர். ஆனால் ஒரு சிலர் தான் இந்த யூகத்திலுள்ள பொய்யைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர்.

குர்ஆனின் வசனங்களுக்கு ஆதாரம்

இயேசுவைப் பற்றிய குர்ஆனின் கண்ணோட்டத்தைத் தயக்கத்தோடும் விருப்பமில்லாமலும் பலர் பார்ப்பதற்கு மேற்கூறிய யூகங்கள் காரணமாகின்றன. ஆனால்சரித்தித உண்மைகளும் சில இருக்கவே செய்கின்றன.

Þ இயேசுவின் மறைவுக்குப் பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவம் என்பது யூத மார்கக்த்தின் ஒரு பகுதி என்றே நினைத்து வந்தனர்.

Þ கிறிஸ்துவ சரித்திரம் முழுவதும் கிறிஸ்துவர்கள் மற்றும் யூதக் கல்வியாளர்களின் பண்பாடு ஒரே மாதிரியாகவே இருந்தது.

Þ பைபிள் ஆராய்ச்சிகளும் விஞ்ஞான ஆய்வுகளும் பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.

Þ கிறிஸ்துவர்களில் சிலர் ஒரு தெய்வத்தை ஒப்புக் கொண்டனர். இயேசுவைக் கடவுளாகவோ - கடவுளின் குமாரராகவோ ஒப்புக் கொள்ளவில்லை.

இன்றைக்கு ஆய்வாளர்களும், பிறரும் கண்டுபிடித்துள்ள இயேசுவின் நிலையைப் பற்றி ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் குர்ஆன் கூறியது. அதிலிருந்து எந்த மாற்றத்தையும் குர்ஆன் செய்து கொள்ளவில்லை.

இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடமிருந்து மறைத்தல்

குர்ஆன் கூறியவற்றை மக்களிடமிருந்து மறைத்து - அதை நிராகரிக்கம் போக்குக்குக் காரணங்கள் சில உண்டு.

1. நீண்ட நெடிய காலததிற்கான வெறுப்பு இஸ்லாம் மீது ஏற்பட்டது (ஜெருஸலம் நகர் யாருக்குச் சொந்தம் என்பதற்காக முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களுக்குள்ளே நடந்த) சிலுவை யுத்தம். அடுத்தது அரபு - இஸ்ரேல் மோதல்.

2. சிலர் கிறிஸ்துவத்தை ஒப்புக் கொள்வதில்லை. அதே நேரத்தில் உண்மை எது என்பதும் புரிவதில்லை.

3. மிகப் பலர் இஸ்லாமை ஒப்புக் கொண்டால் பிறர் கேலி பேசுவார்களே, சுற்றத்தாரிடமிருந்து பிரிந்து போய் விடுவோமே - கிறிஸ்துவ மார்க்கத்தை வெளிப்படையாக கைவிட்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றால் மோதல் ஏற்படுமே என்று தான் நினைக்கின்றனர்.

4. கல்வித் துறையில் குறிப்பாகக் கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாம் மற்றும் குர்ஆன் பற்றி எழுதினால் யாரும் அதைத் திறனாய்வு செய்வதில்லை. அதிலிருந்து மேற்கோள் காட்டுவதில்லை. அதை ஒரு அறிவார்ந்த பணி என்று கூட ஒப்புக் கொள்வதில்லை.

இதை விடப் பெரிய துயரம் - இதனால் சிலர் பதவியையும் இழந்து விடுகின்றனர். 1978 ஜனவரி 3 ஆம் நாளைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைச் செய்திப்படி ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டாக்டர் ராபர்ட் அலெய் தனது மத ஆராய்ச்சித் துறை பதவியை இழந்தார்.

இயேசு ஒரு போதும் தன்னை கடவுளின் குமாரர் எனக் கூறவில்லை என்ற கருத்தை ஆதரித்தார் அவர் என்பதே காரணம்.

பழம்பெரும் பைபிள்களை ஆராய்ந்து டாக்டர் அலெய் எழுதினார்.

இயேசு தன்னைக் கடவுளின் குமாரர் எனப் பேசிய வ சனங்கள் பிற்காலத்தில் பைபிளில் சேர்க்கப்பட்டவையே. தேவாலயங்கள் கூறுவது போல் அவர் பேசவில்லை. இயேசுவின் முழு வாழ்வு முறையைப் பார்த்தாலும் இத்தகைய தெய்வத்தன்மை இருந்ததாகக் கொள்ள முடியாது. இயேசு இறந்த பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவத் தேவாலயம் - யூதத் தேவாலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இயேசுவுக்கு தெய்வத்தன்மை இருந்தது எனக் கூறுவது அவர்களின் இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகும்.

இயற்கை அமைப்பு

இதைத் தவிர இன்னும் ஏராளமான பேர் இயேசு பற்றிய உண்மையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் இஸ்லாம் என்பது வேகமாக வளர்கிற மார்க்கமாக உலகில் இருக்கிறது. மிகுந்த விசுவாசம் கொண்ட கிறிஸ்துவர்களாய் உள்ளவர்கள் கூட கீழ்க்காணும் உண்மைகளை உணர்ந்தவர்களாக உள்ளனர்.

1. இயேசுவை இஸ்லாம் நிரகரிக்கவில்லை. மனித குலத்திற்கு இறைச் செய்தியைக் கூறிய மாமனிதர்களின் வரிசையில் அவரை வைக்கிறது. இறைவன் நபித்துவம், இறைச்செய்தி ஆகியவற்றில் புதிய எழுச்சியை இஸ்லாம் தோற்றுவிக்கிறது.

2. கிறிஸ்துவம், யூத மதம் அல்லது வேறு எந்த மதமானலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடு பார்க்குமானால் ஓரிறைவனையும் அவன் மனித குலத்திற்கு இட்டிருக்கும் கட்டளைகளை உணர்ந்தவர்களாகவும் மிக மிகப் பொருத்தம் உடையவர்களாகவும் இருப்பார்கள். சில பிரச்சினைகளில் ஏன் பைபிள் குளறுபடிகளுடனும் குறைவிடுதல்களோடும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

3. இறைச் செய்தி வெளிப்பாட்டின் மிகப் பெரிய சங்கிலித் தொடரின் கடைசித் தொடராகத் தான் இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. தனக்கு முன்னுள்ள நம்பிக்கையாளர்கள் இஸ்லாம் மீதும் நம்பிக்கை கொள்வார்களானால் மிகப் பெரிய இறை அருள் கிடைக்கும் என்று இஸ்லாம் வாக்குறுதி தருகிறது. யார் தனது மதத்தில் நம்பிக்கை கொள்வதோடு என்னையும் நம்பி - எனக்கு இறைச் செய்தி அளிக்கப்பட்டதாக நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு இரு பரிசு இறைவனால் அருளப்படும் எனக் கூறியுள்ளார் நபி. ஒரு பரிசு தனது மதத்தை நம்புவதற்கு! இன்னொன்று உண்மையை அங்கீகரிப்பதற்கும் - இஸ்லாத்தை நம்புவதற்கும்!

இறுதியாக இயேசுவை இறைவனின் மிகப் பெரிய தூதுவர்களில் ஒருவராகக இஸ்லாம் கருதுகிறது. இயேசுவின் செய்தியே ஓரிறைவன் பற்றிப் போதிப்பதும் - அந்த இறைவனிடம் மனித குலத்தை அழைத்துச் செல்வதுமாகும்!

இயேசு தன்னை இறைவனின் அடியார் - நற்செய்தி கொண்டு வந்த தூதுவர் என்பதைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவரது வாழ்வு - இறைச் செய்தி பற்றி குர்ஆன் ஏராளமான ஆதாரங்களுடன் பேசுகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள், காத்திருக்கிறார்கள்.

இயேசு இரண்டாம் வருகை தரும் போது கிறிஸ்துவர் அல்லாதவர்கள் மீது தீர்ப்புத் தருகிற கடவுளாக வருவதில்லை. இறைத்தூதுவர் இயேசு என்ற அளவில் தான் வருவார்.

தவறாக கருத்துக்களைத் திருத்தவே இயேசு வருவார்!

தன்னைப் பற்றியும் தனது இறைத்தூது பற்றியும் ஏற்கனவே தவறான கருத்துக்களை கொண்டிருந்தவர்களைத் திருத்தவே அவர் வருவார்.

நபிநாதர் வாக்குப்படி இரண்டாம் வருகை தருகின்ற இயேசு நாற்பதாண்டுகள் இவ்வுலகில் தங்குவார். அப்போது உலக வாழ்வே அனைவருக்கும் மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும். அப்போது உலகிலுள்ள ஒவ்வொருவரும் அவரை இறைத்தூதுவர் என்றே நம்புவார்கள் - கடவுளின் குமாரர் அவர் என்று நம்ப மாட்டார்கள்.

இயேசு இரண்டாம் வருகை நிகழ்கிற போது உயிருடன் இல்லாதிருந்தால் அவரைப் பற்றித் தவறான கருத்துக் கொண்டிருந்தோர் என்ன செய்வது?

இப்போதே - இன்றே - சரியான கருத்தை.. .. சத்தியத்தை நம்பிப் பின்பற்ற வேண்டியது தான்!

சத்தியத்தில் விழித்துக் கொண்ட இதயம்!

(இக்கடிதம் பற்றி குறிப்பு இறுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது)

அன்புள்ள ஐயா,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

தாங்கள் தொலைக்காட்சியில் விவாதித்த விவரம் குறித்து மதக் கல்வி மாணவியாக இருந்போதும் அதற்குப் பிறகு உலகத்தின் பல பாகங்களிலும் நான் விவாதித்திருக்கிறேன்.

ஆங்கில நாட்டைச் சேர்ந்த புதிய முஸ்லிம் பெண்ணாகிய நான் இப்போது சௌதி அரேபியாவில் உள்ளேன். உங்களது விவாதம் கூர்மையான வேறுபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சில விஷயங்களில் சிந்தனையையும் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது.

இயேசுவைப் பற்றியும் மேரியைப் பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டிருப்பதும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருப்பதும் எதிர் எதிராக கண்ணோட்டங்களாகும்.

கிறிஸ்துவ நம்பிக்கை இயேசு என்பவர் கடவுளின் குமாரர் என்பதாகும். குர்ஆன் இதை நிராகரிக்கிறது. இயேசு தன்னைப் பற்றி கடவுளின் குமாரர் எனக் கூறாத போது ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்? என்று கேள்வி கேட்க வேண்டியது அவசியமாகிறது.

இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகியவற்றின் அடிப்படைகளை ஆராய்ந்தால் இதற்குரிய பதில் வெளியாகும். முஸ்லிம்களாகிய நாம் இறைவன் ஒருவன் மீது தான் நம்பிக்கை கொண்டுள்ளோம். வசனங்களைக் கொண்டே குர்ஆன் மீதும் விசுவாசம் கொண்டுள்ளோம்.

அது போலவே இறைவனின் தூதவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உண்மையான தூதுவர் - இறைவனின் அடியார். இறைவனுக்கு உண்மையானவர் - கீழ்படிதலுள்ளவர் நீடித்த - முழுக்க முழுக்க, ஒரு மனிதர் - இறைவனின் நல்வழியில் அவனிடம் மக்களை அழைத்துச் செல்லும் இறைக்காரணத்திற்கு ஒரு கருவியாக இருந்தவர் - என்று நம்புகிறோம்.

இப்போது கிறிஸ்து மார்க்கத்தைப் பார்போம். அந்த மார்க்கம் இறைவனை அடிப்படையாக வைத்து எழுப்பப்படவில்லை. வேதப்புத்தகம் என்பது கூட இயேசு இறந்த பின்னர் 150 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டதாகும்.

கிறிஸ்து மார்க்கம் என்பது இயேசுவின் பாத்திரத்தை வைத்தே தொடங்கப்படுகிறது. இயேசு அதிசய அற்புதங்களைச் செயதவர் - இறந்தவரைப் பிழைக்கச் செய்தவர் - குஷ்டரோகிகளைக் குணப்படுத்தியவர், குருடர்களுக்குக் கண் தந்தவர் என்பது உண்மையே. வியத்தகு மனிதராய் - இறைவனின் அருள் பெற்றுப் பிறந்தவராய் - இறைப்பணி புரிந்தவராய் இருந்தார்.

அவரது மறைவுக்குப் பிறகு அந்த மந்திர த் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கடவுளின் குமாரன் என்ற தத்துவம் உதயமாகி அவரைப் பொருத்தமாக நிலை பெறச் செய்யும் முயற்சிகள் தொடங்கின.

கிரேக்க ரோமன் கடவுள்கள் அற்புத உயர் மனிதர்களாய் மதிக்கப்பட்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்துவக் கல்வியாளர்களும், அது போன்ற கருத்துக்களால் தாக்குதல் பெற்றிருந்தனர்.

கிறிஸ்து மார்க்கத்தில் பின்னர் வந்த பவுல் கூட ஹெலன் இன யூதரே. அவர் இயேசுவைப் பார்த்ததுமில்லை. சந்தித்ததும் இல்லை. ஆனால் அவர் கூறிய - எழுதிய அனைத்தும் அந்தக் காலத்து நம்பிக்கைகளால் தாக்கம் பெற்றவையே ஆகும். வாழ்கின்ற தேவன் இயேசு என்ற கூற்றும் பவுலுடையது தான்.

இயேசுவின் அதி அற்புதமான பிறப்பு- அவர் கடவுளின் குமாரன் என்ற தோற்றத்துக்கு அடிப்படை தருவது போல் தோன்றும். 1101ஸ்ரீ2 இரட்டைப் படைத் தத்துவததைக் கொண்டு இதை நிலை நாட்டுகிறார்கள். கடவுள் மேரியின் கர்ப்பத்தில் ஊதினார். மேரி இயேசுவைப் பெற்றார். எனவே இயேசுவின் தந்தை கடவுள்! இயேசு - கடவுளின் குமாரர் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.

குர்ஆனும் கிறிஸ்துவ நூல்களும் மேரி மனதிலும் உடலிலும் விதிவிலக்காக இருக்கின்ற ஒரு பெரும் தூய்மையுடையவராய் இருந்தார் என்றும் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக இந்த உலகில் அவர் அர்ப்பணிக்கப்பட்டார் என்றும் தேவாலயத்திலேயே அவர் கடவுள் பணி ஆற்றினார் என்றும் கூறின.

ஆகவே கடவுளின் சித்தப்படி மேரியே கூட அந்தத் தேவாலயத்தில் அதி அற்புதம் புரியும் தகுதி பெறுகிறார். ஆயினம் இறைவன் மேரியைத் தனது புதிய இறைத்தூதரை உருவாக்கும் கருவியாக ஆக்குகிறார். அவரது கற்பின் தூய்மை பற்றி ஒச்சம் (களங்கம், பங்கம்) வராத அளவுக்கு அந்த அற்புதத்தைச் செய்து காட்டுகிறார்.

மேரி தனது இறைவனுக்குப் பணி புரிகிறாள். ஆகவேஇறைவன் தனது அளப்பரிய கருணையால் மேரியின் கற்புக்கு மேன்மை தருகிறார்.

ஆகவே இயேசுவின் பிறப்பு என்பதைக் கடவுளின் குமாரர் உற்பத்தியாகக் கொள்ள வேண்டியதில்லை. இயேசுவின் பிறப்பு - இறைவனின் படைப்பாற்றலின் புதிய முறை. மகன் என்பதோ தந்தை என்பதோ இல்லை. இறைவனின் நோக்கமும் அப்படிப்பட்டதாயில்லை.

இயேசுவின் போதனைகள் அவரது காலத்திலும் அவருக்குப் பின்னர் சிலகாலமும் எழுதப்படவில்லை. வாய் மொழியாக வழங்கி வந்த இயேசு போதனைகள் காலப் போக்கில் மூலப் போதனைகளிலிருந்து மாற்றம் அடையத் தொடங்கின. முதலில் எழுதப்பட்டது மத்தேயு-லூக்கா-மாற்கு ஆகியோரின் ஏற்பாடுகளே! (சுவிசேஷங்களே!)

யோவான் அதற்குப் பின்னர் கடைசியாகத் தான் எழுதுகிறார். அவர் எழுதியது மதக் கிரந்தம் போல் இருந்தது.

மத்தேய-லூக்கா-மாற்கு எழுதியவற்றில் இயேசுவைப் பற்றிய சித்தரிப்பு அமைதியான- கம்பீரமான பாத்திரத்தையே உருவாக்கியது.

ஒரு இறைத்தூதுவராயும், இறைவனால் அற்புதனம் செய்தவராயும் மனிதகுலத்தின் அனைத்து மக்களையும் நேசிப்பவராயும் - இறைவனைப் பற்றிய விழிப்புணர்வைத் தோற்றுவிக்க அனுப்பப்பட்டவராயும் அந்த மூன்று ஏற்பாடுகள் (சுவிசேஷங்கள்) கூறின.

மேலும் இயேசு மனிதராகிய நமது கண்களைத் திறப்பவராயும் - இறைவினன் நினைப்பு வாழ்வின் எல்லாச் செயல்களிலும் இருக்க வேண்டும் என்று நினைவூட்டுபவராயும் - செயல் - எண்ணம் ஆகியவற்றில் தன்னலமற்ற போக்கை உண்டாக்குபவராயும் - கடவுள்ள சத்தியம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையை விரிவுபடுத்துபவராகவும் அவர் இருந்தார்.

குழந்தையைப் போன்ற எளிய செயல்பாடும் நம்பிக்கையுமே இறைவனின் விண்ணரசை மண்ணுக்குக் கொண்டு வர முடியும். இந்தக் கருத்து இயேசுவின் போதனைகளில் பல் முறை வலியுறுத்தப்பட்டது.

இயேசு கடவுளை மிக நெருங்கினவராக இருந்ததற்குக் காரணயே அவரது பிரார்த்தனைகளே! அதிலிருந்தே அவர் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றலைப் பெற்றார். அந்த அற்புதங்களை நான் கடவுளின் குமாரர் என்று கூறிக் கொண்டு செய்யவில்லை. இயேசு பயன்படுத்திய மகன் அல்லது குமாரன் எனும் சொல் மக்கள அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.

இங்குள்ள ஆண் பெண் அனைவரையும் இறைவனின் குமாரன் அல்லது குமாரத்திகளாகக் கருதி மக்களை பார்த்து அவர் விண்ணகத்திலிருக்கும் நமது தந்தையிடம் பிரார்த்தனை செய்வோம் எனக் கூறினார்.

ஆயினம் புதிய ஏற்பாடுகளிலுள்ள இயேசுவின் சில போதனைகள் நம்பும்படி இல்லை. திரிபோ என ஐயுறும்படி அமைந்திருக்கின்றன. இயேசு பெரும்பாலும் ஏழை – ஒடுக்கப்பட்டோர்- தள்ளி வைக்கப்பட்டோர்- பணியாளர்கள் ஆகியோர் பற்றியே அதிகக் கவலையுற்று இறைப்பணி ஆற்றினார். மதக் கருத்து கலந்த போலியான பக்திச் சாமாச்சாரம் அல்ல.

அவரது அழைப்பு மனித இதயங்களுக்கு விடப்பட்ட அழைப்பு! அவரது கொள்கை – மனித நேயமும் அன்பும்!

இதற்குப் பொருள் தேவாலயங்களை நிறுவுவதா? அவர் தேவாலயம் நிறுவ விரும்பினார். ஆனால் இப்போதிருக்கின்ற தேவாலயங்களைப் போல் அல்ல!

இயேசு ஆன்மீகத்தோடும் இருந்தார். நடைமுறை உலகத்தோடும் இருந்தார். அவர் இறை நம்பிக்கையோடு மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துகின்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பினார்.

இனம் - கொள்கை பாகுபாடற்ற ஒரு குடும்பம் போன்ற அழகிய உறவுடன் - இறைவனின் வழிகாட்டுதலோடு அமைந்த சமூகமே அவர் அமைக்க விரும்பியது. அவரது போதனைகளைக் கூர்ந்து கவனித்தால் இத்தகைய சமூக அமைபில் அவரே முழுக்க முழுக்க தனி ஒளி வீசுபவராக இருக்க வேண்டும் எனக் கருதியதில்லை. இறைவனின் கைகளிலே உள்ள கருவியாக இயேசு தன்னைக் கருதினார்.

ஆனால் இது கடவுளின் சித்தத்திற்கு ஏற்ப டந்த இயேசுவின் எளிய பண்பாடான பாத்திரத்திற்கு முரணானதாகும். மக்களை இறை நம்பிக்கை கொள்ளச் செய்ய இயேசுவுக்கு இறைவன் அளித்த அற்புத சக்தியைத் திசை மாற்றியதுமாகும். இதன் மூலம் கிறிஸ்துவத் தேவாலயங்கள் இயேசுவின் தனித்தன்மையான எளிமையைத் தோற்கடித்து விட்டது ஆகாதா?

திரியேத்துவத்திலும் (பிதா-மகன்-பரிசுத்த ஆவி) தங்களது மதமே உயர்ந்தது எனக் காட்ட நினைக்கிற முயற்சியாகும். இதன் மூலம் இயேசுவை ஒரு புதிராக்கி அதற்கு விளக்கமும் தரப்படுகிறது.

இறைவனின் ஆன்மீக சக்தி என்பது ஆப்ரஹாம், மோஸே காலத்தில் இருந்தது போன்றே முஹம்மது நபி (ஸல்) காலத்திலும் இருந்தது. ஆனால் இந்த திரியேகத்தும் இவர்களின் மீது தத்துவமாகச் சுமத்தப்படவில்லை.

இஸ்லாம் மார்க்கத்தின் வருகையை கிறிஸ்துவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி அல்லது அந்திக்கிறிஸ்துவின் வருகையாகக் கருதுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.

இந்த அந்திக் கிறிஸ்துவக் கதை- யோவானின் வெளிப்பாட்டில் கூறப்பட்டுள்ளதால் தான் இந்த நிலை.

ஜெருஸலம் நகருக்காக நடந்த சிலுவைப் போரில் ஒரு ஐரோப்பிய பிரபுவுக்க குர்ஆனில் இயேசு பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பாருங்கள் என்று ஒரு மொழி பெயர்ப்புப் புத்தகம் முஸ்லிம்களால் தரப்பட்ட போது அதை அவர் படிக்காமல் தூர வைத்து விட்டார்.

இது இஸ்லாம் பற்றிய கிறிஸ்துவர்களின் நிராகரிப்பைப் புலப்படுத்தியது. இந்தப் போக்கு இன்றைக்கும் இருந்து வருகிறது.

சிலுவைப் போர்களின் நினைவுகளை இன்னும் உயிர் வாழச் செய்வதன் மூலம் முழுமையான ஞான சூன்யத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.

இப்போது முஸ்லிம்களின் கடமை தங்களது ஓரிறை நம்பிக்கையை உறுதி செய்து கொள்வதோடு – உண்மையை அறிய விரும்பும் கிறிஸ்துவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை விளக்கததைக் கூற வேண்டும்.

சத்தியத்தையும் உண்மையையும் தேடி அலையும் ஆன்மாக்களுக்கு இஸ்லாமும் அதனுடைய போதனைகளும் பாலைவனத்தில் வற்றாது பாயும் மலை அருவி போன்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

வஸ்ஸலாம்!

தங்களின் உண்மையுள்ள,

ஜஹ்ரா அஜீஸ்.

மேலே உள்ள கடிதம் பற்றி...

இயேசுவின் இறைப்பணி பற்றிய இஸ்லாம் மார்க்கத்தின் கருத்துக்கள் காரணகாரிய விளக்கத்தோடு இருப்பவை. அவரை மிகப் பெரிய இறைத்தூதராக மதிப்பதாகும்.

துடிப்பான சிந்தனையோடு இருக்கும் மக்கள் இயேசு பற்றி இஸ்லாம் கூறுவதை ஒப்புக் கொள்வர்.

எனினும் இஸ்லாம் நோக்கி வருபவர்கள் திறந்த மனதோடும்- சார்பற்ற தன்மையிலும் வந்தால் இஸ்லாம் கூறுகின்ற வாத நேர்மையையும் ஒப்புக் கொள்ள வைக்கிற தன்மையையும் இயேசுவின் விஷயத்தில் காண்பார்கள். இயேசுவைப் பற்றிய பலவிதமான கிறிஸ்துவத் தத்துவங்களோடு வாதிட்டுப் போராடிப் பார்த்தவர்கள் இஸ்லாமியக் கருத்துக்களை நிச்சயமாக ஒப்புக் கொள்வார்கள்.

சவூதி அரேபியாவிலுள்ள தொலைக்காட்சி இரண்டாவது அலைவரிசையில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்பான போது மேலே உள்ள கடிதம் ஒன்று வரப் பெற்றேன். இஸ்லாம் மார்க்கத்தில் இயேசு என்ற நிகழ்ச்சியைக் குறித்தும் இந்தக் கடிதம் வரப் பெற்றது. கீழ்க்காணும் காரணங்களுக்காக அந்தக் கடிதம் இணைக்கபட்டுள்ளது.

Þ இந்தக் கடிதத்தை எழுதியவர் - மதக் கல்வியில் மாணவராகவும் - அதில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார்.

Þ இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்துவர்களின் நம்பிக்கையையும் உணர்ச்சிகளையும் புரிந்தவராக அவர் இருக்கிறார்.

Þ அவர் எப்படி இயேசுவின் போதனைகளிலிருந்தும் இறைச் செய்திகளிலிருந்தும் கிறிஸ்துவர்கள் வழிமாறிச் செல்கிறார்கள் என்றும் எவ்வாறு அவர்கள் இயேசுவின் மீதான நம்பிக்கையில் தவறாக இருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.

இந்த வெளியீட்டில் அவரது கடிதத்தையும் இணைக்க அனுமதித்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.

- டாக்டர் அல்ஜொஹானி

பொதுச் செயலாளர்

உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை

ரியாத், சவுதி அரேபியா.

(இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்).

Source: http://www.tamilislam.com/TAMIL/OTHERS/truth_about_jesus.HTM

Tuesday, November 11, 2008

பேண்ட்டும் போடலாம், வேஷ்டியும் கட்டலாம், லுங்கியும் அணியலாம் !!!

கிறிஸ்வர்களானாலும், இஸ்லாமியர்களானாலும் அடிப்படையில் நாம் தமிழர்கள். சிறுபான்மை சமுதாயத்தவர் பொங்கல் கொண்டாடுவதில்லை. அதை ஒரு இந்து மதவிழா போன்று நினைத்துப் புறக்கனிப்பதைப் பார்க்க முடிகிறது. எந்த மதத்தவரும் சொந்தம் கொண்டாட முடியாத, குறிப்பாக கிறிஸ்த்தவர்களும், இஸ்லாமியர்களும் கொண்டாடி தமிழர் விழாவைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. எனெனில் அதற்குப் பல பெயர்கள் சூட்டி அதை ஒரு மதப்பண்டிகையாக ஆக்க கடுமையான முயற்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குர்ஆனிலோ, இஸ்லாத்திலோ அது வலியுறுத்தப் படாவிட்டாலும் உங்கள் அமைப்பின் சார்பாக பொங்கள் திருவிழாவை அனைவரும் கொண்டாட நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

வேல்முருகன் - மதுரை



சகோதரர் வேல்முருகன் அவர்கள் நல்ல அழகான விஷயங்களை கோரிக்கைகளாக முன் வைத்தார்கள். இது சம்பந்தமாக சில விஷயங்களை இங்கு நான் முன் வைக்க விரும்புகிறேன்.அவைகளை வைத்து தமிழுக்கோ தமிழர்களுக்கோ நான் எதிரி என நீங்கள் முடிவு கட்டிவிடக் கூடாது. வேஷ்டி அணிவது இந்துக்களின் கலாச்சாரம் எனவும் சாறம்(கைலி) அணிவது இஸ்லாமியர்களின் கலாச்சாரம் எனவும் நினைக்கிறார்கள். உடைகளில் பேதம் காட்டக்கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு. உடையைப் பொறுத்த வரையில் அவரவர்களின் உடலமைப்புக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதை அணிவதில் தடை ஏதுமில்லை. முஸ்லிம்களுக்கென்று தனி ஆடை இஸ்லாத்தில் இல்லை.

பேண்ட்டும் (முழு நீளக் காற்சட்டை) போடலாம். வேஷ்டியும் கட்டலாம். லுங்கியும் அணியலாம். ஆனால் மறைக்க வேண்டிய பகுதிகள் மறைக்கப் பட வேண்டும். பட்டு ஆடையை ஆண்கள் அணியக்கூடாது. காவி நிறத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் இம் மூன்று விதிகளைத் தவிர வேறெதுவுமில்லை.

காற்று வீசும்போது வேஷ்டியின் மூலம் தனது அவயங்களை மறைத்துக் கொள்ள முடியாது எனக் கருதும் ஒருவர் லுங்கி அணியலாம். அதுவும் பாதுகாப்பானது அல்ல எனக் கருதுபவர் முழுநீள காற்சட்டை அணிந்து கொள்ளலாம். இங்கு கலாசரம் எனக் கூறிக்கொண்டு நமக்கிருக்கும் வசதி வாய்ப்புகளை சீரழிப்பது சிறப்பல்ல. மாட்டு வண்டியில் செல்வதுதான் நமது கலாசாரம் என எடுத்துக் கொண்டு பிடிவாதம் கொள்வது சரியல்ல. போக்குவரத்தில் வந்து விட்ட நவீனங்களை, முன்னேற்றங்களை பயன் படுத்திக் கொள்கிறோம். உடையிலும் அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதில் தவறு என்ன இருக்கிறது? அதுபோன்று ஒரு கலாச்சார விழா நமது நாட்டில் தொடர்ந்து நடை பெற்று வருகிறது என்ற காரணத்திற்காக அதைச் செய்யும்படி எவரையும் வற்புறுத்த முடியாது. பொங்கல் விழாவை பொறுத்தமட்டில், தானியம் விழைந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக அவ்விழா கொண்டாடப் படுகிறது எனக் கூறப்படுகிறது.

அறுவடை செய்பவர்கள் தங்கள் தானியம் தமது வீட்டிற்கு வந்தடையும் வேளை மகிழ்ச்சியில் மூழ்குவது இயல்பே! இவர்கள் கொண்டாடினால் அதற்கு அர்த்தம் உண்டு. ஆனால் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்களால் இது கொண்டாடப்படுகிறது.

தானியத்தைப் பற்றி எதுவுமறியாத, விவசாயத்தைப் பற்றி எந்தக் கவலையுமற்ற சென்னைவாசிகள் ஆந்திர விவசாயிகளின் அரிசியை வாங்கி உண்ணுகின்றனர். உண்ணும் இவர்களைக் கொண்டாடுமாறு கேட்டு இவர்கள் கொண்டாடினால் அது இயல்பான கொண்டாட்டமாக இருக்காது. அவர்களின் மனோ நிலை சந்தோசமானதாய் இருப்பதற்குப் பதிலாக பண்டிகை வந்துவிட்டதே! செலவாகி விடுமே என்ற கவலை நிறைந்ததாகவே காணப்படும். இது ஒன்று.

இரண்டவது, எந்த நேரத்திலும் மனிதன் பகுத்தறிவை இழந்து விடக்கூடாது என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய விதிகளில் ஒன்று. எந்த நிலையிலும் மனிதனை விட மேம்பட்டதாக எப்பொருளையும் நினைக்கக் கூடாது. ஆடு, மாடு போன்ற மிருகங்களை விட எல்லா வகையிலும் மனிதன் உயர்ந்தவன் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இந்த அடிப்படை விதிகளுடன் பொங்கல் விழாவை நோக்கும்போது அதிக முரண்பாடுகளை அங்கே காண முடியும்.

மாடுதான் எல்லாவற்றையும் தந்தது என நம்மிக் கொண்டு அதற்கு நன்றி செலுத்துகிறோம் என்ற பெயரில் மாட்டுப் பொங்கல் என்ற ஒரு வழிபாட்டைச் செய்கிறார்கள். அப்படி ஒரு கலாச்சாரத்தில் கேள்வி கேட்ட சகோதரர் வேல்முருகன் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட உண்மை நிலை அதுதான். மாட்டைக் கூம்பிடுகிறார்கள். அதற்கு வழிபாடு செய்கிறார்கள்.

மனிதனுக்கு ஏற்ற வகையில் தானாக இயங்கும் சிந்தனை மாட்டுக்கு கிடையாது. அதை எதற்கு நாம் பயன்படுத்துகிறோமோ அதை அது செய்யும் உழுதல், குத்துதல், சண்டையிடுதல் போன்ற வேலைகளுக்கு பழக்கப்படுத்தி நாமே அதைப் பயன்படுத்துகிறோம். நாம் அதைப் பயன்படுத்தி விவசாயம் செய்திருக்க அதற்கு பூஜை வழிபாடு எதற்கு? இதைச் செய்ய முற்படுகின்ற போது கடவுள் வழிபாடு போன்ற ஒரு தோற்றம் உண்டாகி விடுகிறது.

தம் கரங்களால் செய்த ஒரு பொருளான பானைக்கும் பூஜை செய்கிறார்கள். அதற்கு சில கோலங்கள் இட்டதும் புனிதத் தன்மை வந்துவிட்டதாக மக்கள் நினக்கிறார்கள். மாட்டுக்கும் கோலம் போட்டு கடவுளாக ஆக்கியது போல் இதுவும் அமைந்து விடுகிறது. இப்போது இஸ்லாத்திற்கு நேர் எதிர் மாறான கொள்கை செயற்பாடுகள் வந்து நுழைந்து விட்டன.ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்திருக்கலாம். அந்த நிலமைக்கு அதை நீங்கள் கொண்டு வாருங்கள் ஆட்சேபனை இன்றி எல்லோரும் கொண்டாடுவோம்.

கும்பிடக்கூடிய. பலதெய்வ வணக்கங்களை உண்டாக்கக்கூடிய விதத்தில் அவ்விழாக்கள் செல்லும்போது அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் எம்மைப் பணிக்கிறது. நாம் தவிர்த்துக் கொள்ள காரணம் இதுவே தவிர காழ்ப்புணர்ச்சியல்ல.

Sunday, November 9, 2008

தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச் சூழலில்....

நகைச்சுவை என்கிற பெயரில் தமிழ்ச் செல்வன் தொடங்கி விக்ரமாதித்தன் வரை சமகாலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரையும் கேலி செய்து எழுதியுள்ள ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.
--------------------------------------------------

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.

தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.

1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.

பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.

அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.

``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?

ஏதோ பாகிஸ்தானில் பாலும் தேனும் ஓடுவதாகவும், ஜனநாயகம் செழித்திருப்பதாகவும் நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். அமெரிக்க விசுவாசத்திலாகட்டும், சொந்த மக்களை ஒடுக்குவதிலாகட்டும் இந்திய அரசுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல பாகிஸ்தான்.

காஷ்மீர் பிரச்சினையை, 1. பாகிஸ்தானின் தூண்டுதல், 2. `ஜிஹாதி' பயங்கரவாதம், 3. தேசப் பிரிவினையின் எச்ச சொச்சம் ஆகியவற்றின் விளைவு என்பதாக மட்டுமே முன்னிறுத்தி காஷ்மீர மக்களின் சுய நிர்ணய உரிமை, சுதந்திர வேட்கை என்கிற அம்சத்தை மூடி மறைப்பது இந்திய ராஜ தந்திரத்தின் சதித் திட்டங்களில் ஒன்று. இந்தச் சதியைத் தோலுரித்து அவர்களின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்திக் காட்டுவதே அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களின் கடமையாகிறது. ஒரு எழுத்தாளனின் கடமை அதுதானே. வாழுங் காலத்தின் சமூக அநீதிகைளக் கண்டு கொதித்து சம காலத்தையே நிராகரிப்பவன்தானே எழுத்தாளன். டால்ஸ்டாய் முதல் ஆஸ்கார் வைல்ட் வரை அப்படித்தானே வாழ்ந்துள்ளனர். எழுத்துக்கள் காலத்தைக் கடந்து நிற்கவில்லை என்பதன் பொருளும் இதுதானே.

பாகிஸ்தான் தூண்டுதல், பயங்கரவாதப் பிரச்சினை எல்லாவற்றையும் மறைத்து அதை ஒரு சுதந்திர வேட்கையாகச் சொன்னதைச் சுட்டிக் காட்டி அதற்காகவே அருந்ததியை `குருவி மண்டை' எனவும், கூலிக்கு எழுதுபவர் எனவும் இழிவு செய்கிறார் ஜெ.மோ. ஒரு எழுத்தாளனின் மண்டைக்குள் சம கால ராஜதந்திரியின் மூளை அமைந்துள்ளதெப்படி? ஜெ.மோ. ஒரு வினோதப் பிராணிதான்.

ஒன்றைச் சொல்லியாக வேண்டும். உலகெங்கிலும் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களுக்கும், காஷ்மீரி மக்களின் போராட்டத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு. காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றக் கோரித்தான் போராடிக் கொண்டுள்ளனர். காஷ்மீரி மக்களின் விருப்பைக் கேட்டு அதன்படி முடிவெடுப்பது என்கிற வாக்குறுதியை இந்திய அரசு ஐ.நா. அவையின் முன் அளித்தது. இந்த நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுக்காகவும், அரசியல் துரோகங்களை எதிர்த்துமே காஷ்மீரிகள் இன்று போராடிக் கொண்டுள்ளனர்.

இன்று காஷ்மீர மக்கள் அமைதி வழியை நோக்கித் திரும்பியுள்ளனர். ஒற்றைக் கோரிக்கையுடன் ஒருங்கிணைந்துள்ளனர். இந்தியாவிலிருந்து காஷ்மீரத்திற்குச் சுதந்திரம் என்பதன் இன்னொரு பக்கம் காஷ்மீரத்திலிருந்து இந்தியாவிற்கும் சுதந்திரம் என்பதே. காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் போதே இந்திய மண்ணில் பயங்கரவாதம் முடிவுக்கு வரத் தொடங்கும். தினந்தோறும் இந்த அம்சத்தில் செலவிடப்படும் ரூ.500 கோடியையும் இந்திய மக்களின் நலனுக்குச் செலவிட இயலும்.

ஜெயமோகன் கக்கியுள்ள இதர விஷக் கருத்துக்களைச் சுருக்கம் கருதி விட்டு விடுகிறேன். இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் அஃப்சல் குருவின் மனைவி குடியரசுத் தலைவரைச் சென்று மிரட்டினாராம். ``இந்தியச் சமூகம் அளிக்கும் வாய்ப்புக்கள்'' மூலம் முஸ்லிம்களில் பெரும்பகுதியினர் முன்னேறி வருகிறார்களாம் (பார்க்க : சச்சர் அறிக்கை); உலகப் பரப்பில் வாழும் முஸ்லிம் சமூகங்களை ஆங்காங்கு புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளாக மாற்றுகின்றனவாம் முஸ்லிம் அமைப்புகள் (எத்தனை கொடூரச் சித்திரிப்பு பாருங்கள்); மாற்று தேசியங்களை மத நோக்கில் அழிக்க முஸ்லிம்களுக்குத் தயக்கம் இருக்காதாம்.

``காரணம், இஸ்லாம் என்பது ஒரு தேசிய கற்பிதம் - ஒரு தேசிய கற்பிதம் - ஒரு மதமோ வாழ்க்கை முறையோ மட்டும் அல்ல. அது பிற தேசிய அற்புதங்களை ஏற்காது'' - ஜெ.மோ.

ஜெயமோகனுக்கு இஸ்லாம் பற்றியும் ஒன்றும் தெரியாது என்று மட்டுமே மேற்குறித்த வாசகங்களிலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். இஸ்லாமின் `தேசியம்' என்கிற கருத்தாக்கமே கிடையாது. `உம்மா' - சமூகம், நம்பிக்கையாளர்களின் கூட்டமைப்பு என்பதற்கே அங்கு முக்கியத்துவம். பிற நம்பிக்கையாளர்களுடன் சமூக இணக்கத்தை அது மறுத்ததில்லை. காஷ்மீர மக்கள் அதற்கொரு நடைமுறை எடுத்துக்காட்டு.

சமூக அநீதிகளுக்கு எதிராக நிற்கும் தமிழ் எழுத்தாளர்களைப் பெயர் குறித்து ஏசுகிறார் ஜெ.மோ. மாவோயிஸ்டுகளுக்கு சீனாவிலிருந்து நிதி வருகிறதாம். ``ஆங்கில இதழ்களின் ஞாயிறு இணைப்பில்'' வரும் கட்டுரைகளைப் பார்த்து தமிழில் எழுதுகிறவர்களாம் இத்தகைய அறிவுஜீவிகள். இப்படிச் சொல்வதற்கு ஜெயமோகனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்பதை, ``மனச்சாட்சியுள்ள வாசகர்கள்'' யோசிக்க வேண்டும். தமிழில் வெளிவந்த நூற்களையே ஈயடிச்சான் காப்பி அடித்து பொ. வேல்சாமி போன்றவர்களிடம் மாட்டிக் கொண்டு குடும்ப சகிதமாக அவமானப்பட்டவர் ஜெ.மோ. இவர் ஆங்கில இதழ்களைப் பார்த்து கட்டுரை எழுதுவதில்லை என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இவர் ஆங்கிலத்தில் எதையும் படிப்பதில்லை. மலையாளத்தில் வரும்வரை அவர் காத்திருப்பார்.

``தேசபக்தியே பாவமென்றாகிவிட்ட இச் சூழலில், முத்திரை குத்தப்பட்டு, வசைபாடப்பட்டு, அவமதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டு நின்ற போதும் உரக்கச் சொல்வோம் நண்பர்களே `வெல்க பாரதம்' '' எனக் கட்டுரையை முடிக்கிறார் ஜெ.மோ. அவரது கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள் - முத்திரையை வேறு யாரும் அவர் மீது குத்த வேண்டுமா என்பது விளங்கும். முத்திரை குத்துவதற்கு அவர் முதுகில் இடமில்லை. அவரது உடல் முழுவதும் காவி முத்திரை படிந்துள்ளதற்கு இந்தக் கட்டுரையே சாட்சி.

`தேசபக்தி பாவமென்றாகி விட்ட சூழல்' என அவர் சமூகச் சுரணையுள்ள எழுத்துக்களைக் குறிப்பிடுகிறார். உண்மைதான். தேசபக்தியைப் பாவமென்று மட்டுமல்ல, கொடூரம், அயோக்கியத்தனம், vicious என்றெல்லாம் பெரியார் ஈ.வெரா மட்டுமல்ல, டால்ஸ்டாய் உள்ளிட்ட மனிதரை நேசித்த, சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் அவ்வளவுபேரும், ஆம் அவ்வளவு பேரும் சொல்லித்தான் உள்ளனர்.

ஜெயமோகனைச் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு `தேசபக்தி', `தேசியம்' ஆகியன குறித்தும் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்போம்.

குறிப்பு : ஜெ.மோ போன்றவர்களுக்காக ஒரு தகவல்: காஷ்மீர் பயணம் முழுக்க முழுக்கச் சொந்தச் செலவில் மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொருவர் செலவு ரூ.19,200/-.
அ.மார்க்ஸ்

Saturday, November 8, 2008

நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்....

அன்று அபிஸீனிய மன்னராக இருந்தவர் நஜ்ஜாஷி. இந்த நஜ்ஜாஷியின் பெயர் ‘அஸ்ஹமா இப்னு அல்அப்ஜர்' ஆகும். ஹிஜ்ரி 6ன் கடைசியில் அல்லது ஹிஜ்ரி 7. முஹர்ரம் மாதத்தில் அம்ர் இப்னு உமய்யா (ரழி) மூலம் இவருக்காக கடிதமொன்றை நபி (ஸல்) அவர்கள் எழுதி அனுப்பினார்கள். நபியவர்கள் நஜ்ஜாஷிக்கு எழுதிய கடிதத்தின் வாசகமாவது:

‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் எழுதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதிடமிருந்து ஹபஷாவின் மன்னர் நஜ்ஜாஷிக்கு எழுதும் கடிதம்.
நேர்வழியை பின்பற்றுவோருக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நிச்சயமாக நான் உமக்கு முன்பாக அல்லாஹ்வைப் புகழ்கிறேன். அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை. அவன்தான் அரசன் அவன் மிகத் தூய்மையானவன், ஈடேற்றம் வழங்குபவன், பாதுகாவலன்,கண்காணிப்பவன். நிச்சயமாக மர்யமின் மகன் ஈஸா (அலை) அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிரும், அவனது வார்த்தையுமாக இருக்கிறார். அவன்தான் அவ்வார்த்தையைப் பரிசுத்தமான பத்தினி மர்யமுக்கு அனுப்பினான். அவர் அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட உயிலிருந்தும், அவனுடைய ஊதுதலில் இருந்தும் உண்டான ஈஸாவை தனது கர்ப்பத்தில் சுமந்தார்.
எவ்வாறு அல்லாஹ் ஆதமை தனது கையினால் விஷேசமாக படைத்தானோ அவ்வாறே ஈஸாவையும் படைத்தான்.
தனித்தவனான துணையற்ற அல்லாஹ்வின் பக்கம் உம்மை அழைக்கிறேன். அவனுக்கு வழிப்படுவதிலும் வணங்குவதிலும் நீர் எனக்கு இசைந்து என்னை நீர் பின்பற்ற வேண்டும் என்று நான் உம்மை அழைக்கிறேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன். மேலும், உம்மையும் உமது படையினரையும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். நான் நிச்சயமாக எடுத்துரைத்து விட்டேன். உமக்கு உபதேசம் செய்து விட்டேன். எனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளும். நேர்வழியைப் பின்பற்றியவர்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும்.''

(ஜாதுல் மஆது, ‘‘ரஸ_லே அக்ரம் கீ ஸியாஸி ஜிந்தகி - டாக்டர் ஹமீதுல்லாஹ்'')

நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை அம்ரு இப்னு உமைய்யா, நஜ்ஜாஷியிடம் ஒப்படைத்தார். அதை நஜ்ஜாஷி பெற்று, தனது கண்ணில் ஒத்திக் கொண்டார். தனது சிம்மாசனத்தை விட்டும் கீழே இறங்கி, பூமியில் உட்கார்ந்து, ஜஅஃபர் இப்னு அபூதாலிபின் கையில் இஸ்லாமைத் தழுவினார். பின்பு நபியவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். அதன் வாசகமாவது:

‘‘அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் முஹம்மதுக்கு அஸ்ஹமா நஜ்ஜாஷி எழுதுவது. அல்லாஹ்வின் நபியே! அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு ஈடேற்றமும், அவனது கருணையும், அருள்களும் உண்டாகட்டும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை.

அல்லாஹ்வின் தூதரே! ஈஸாவைக் குறித்து தாங்கள் வரைந்த தங்களின் மடல் எனக்குக் கிடைத்தது. வானம், பூமியின் இறைவன் மீது சத்தியமாக! ஈஸாவும் நீங்கள் கூறியதைவிட பேரீத்தம் பழத்தின் நார் அளவுகூட அதிகமாகத் தன்னைப் பற்றிக் கூறியதில்லை. நிச்சயமாக ஈஸா நீங்கள் கூறியவாறுதான் (அல்லாஹ்வின் வார்த்தையால் படைக்கப்பட்டவர்). நீங்கள் எங்களுக்கு அனுப்பிய விஷயங்களை நாங்கள் அறிந்து கொண்டோம். உங்கள் தந்தையின் சகோதரன் மகனுக்கும், உங்களது தோழர்களுக்கும் விருந்தோம்பல் செய்தோம். நிச்சயமாக நீங்கள் உண்மையானவர் உண்மைப்படுத்தப்பட்டவர் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி கூறுகிறேன். நான் உங்களிடமும் உங்களது தந்தையின் சகோதரன் மகனிடமும் சத்திய வாக்குறுதி செய்து கொள்கிறேன் அகிலத்தார்களின் இறைவனுக்கு அடிபணிந்து இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறேன் என்று அவரிடம் வாக்குப் பிரமாணம் செய்து கொடுக்கிறேன்.''

ஜஅஃபர் (ரழி) அவர்களையும் அவர்களுடன் இருக்கும் முஹாஜிர்களையும் தன்னிடம் திரும்ப அனுப்புமாறு நபி (ஸல்) நஜ்ஜாஷியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர் அம்ர் இப்னு உமய்யா வுடன் அவர்கள் அனைவரையும் இரு கப்பல்களில் அனுப்பி வைத்தார். அம்ர், அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நபி (ஸல்) கைபரில் இருந்தார்கள்.

(இப்னு ஹிஷாம்)

தபூக் போர் நடைபெற்ற பின் ஹிஜ்ரி 9, ரஜப் மாதத்தில் இந்த நஜ்ஜாஷி மன்னர் இறந்தார். அவர் இறந்த தினத்திலேயே அவன் மரணச் செய்தியை நபி (ஸல்) மக்களுக்கு அறிவித்தார்கள். அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள்.

அர்ரஹீக்குல் மஃதூம்

Friday, November 7, 2008

இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும்,தேவரும்....

கடவுள் தூதரை அனுப்பியதற்குக் காரணம், தன்னை நேரடியாக "நான்தான்" கடவுள் என்று கூறி மக்களை நம்பவைக்க முடியும். ஆனாலும், தூதுவரை அனுப்பியதற்குக் காரணம், "நான் அனுப்பியதாகச் சொல்லு!" சொன்னால்தான், மக்கள் "கடவுள்தான் அனுப்பினாரா?" என்று சிந்தித்துப் பார்ப்பார்கள், எண்ணிப்பார்ப்பார்கள் என்று.

தத்துவக் காட்டிலே சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கும் உலகுக்கு தக்கதோர் வழிகாட்டும் ஒளி விளக்காக இஸ்லாத்தை நாங்கள் கருதுகிறோம்.
மதம் என்று சாதாரணமாக உணரப்படுவதை போன்றதல்ல இஸ்லாமிய மதம். எனவே இஸ்லாத்திலுள்ள மேலோர் இஸ்லாத்தை மதம் என்று அழைப்பதை விட மார்க்கம் என்றே அழைக்கின்றனர். இஸ்லாத்திலுள்ள ஒளியும், அந்த ஒளியிலுள்ள மாண்பும் வரவேற்கத்தக்கது.

மனித சிந்தனை வளர்ச்சியுறாத காலத்திலே மனிதர்களுக்கு ஏற்பட்ட ஐயப்பாடுகளை நீக்கவே தூதர்கள் தோன்றினார்கள். நபிகள் நாயகம் இறுதி நபியாகத் தோன்றியதால் அவர்களுக்கு பின்னரும் பலர் நானும் நபிதான் என்று சொல்லி மக்களிடையே குழப்பத்தை உண்டு பண்ண முடியவில்லை.

ஆண்டவன் மனிதனுக்குச் சிந்தனையை அருளியதே அவனுடைய தன்மையை அறிந்து கொள்ளத்தான்.

இஸ்லாத்திலே இறைவனுக்கு இணைவைக்கக்கூடாது. என்று கூறப்பட்டிருப்பதை நினைத்து நினைத்து மகிழ்ந்திருக்கிறேன். ஏனெனில் ஆண்டவனுக்கு ஒன்றை இணைவைப்பது என்றால் அதைப் பற்றி முன்னரே அறிந்திருக்கவேண்டும்.

ஆண்டவனுக்கு இணைவைப்பதால் தான், அவனைக்காட்ட எட்டணா தரகு வேலையும் ஆரம்பமாகிறது. இஸ்லாமிய மார்க்கம், மனிதனைப் பூரண மனிதனாக்கத்தக்க மார்க்கமாய் விளங்குகிறது.

ஆண்டவன் தானாகத் தோன்றி உபதேசிக்காமல் தூதர்களை அனுப்பியதேன் என்றால் மனிதர்களுக்கு வெறும் நம்பிக்கையை யூட்டுவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய ஐயங்களைத் தெளிவாக்கி அவர்கள் பின்பற்றுவதற்கு வழிகாட்டிகளாகவே அனுப்பியிருக்கிறான். இஸ்லாமிய மார்க்கம் கூறும் ஆண்டவன் தான், உருவத்திற்குள்ளே தன்னை அடக்கிக்கொள்ளாத ஆண்டவனாக இருக்கிறான். அந்த ஆண்டவனும் சிந்தித்து உணரத் தூண்டுகிறான்.

இஸ்லாத்தின் மிகச்சிறந்த மாண்பு அதன் சமுதாய அமைப்பாகும். சாதிப் பீடையை அது ஒழித்துக்கட்டுவதாகும். முதுகுளத்தூரிலே இன்று அடித்துக்கொண்டிருக்கும் ஹரிஜனும் தேவரும் அப்துல்சத்தாராகவோ, அப்துல் சமதாகவோ மாறிவிட்டால் இந்த வேற்றுமைகள் எல்லாம் மறைந்து விடுகின்றன.....!

Thursday, November 6, 2008

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால்........

கேள்வி: மறுபிறவி இருப்பது உண்மையா?

மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி நிரூபித்து விடலாம். அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப் பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த வினை தான். இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகல இன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர். மனிதனோடு மட்டும் இதை நிறுத்திக் கொள்வதில்லை. மற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்.

நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம். அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய், நாயாகப் பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும் என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக் கவனியுங்கள். இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். நூறு வருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே சென்று கொண்டே இருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள். இன்னும் முன்னேறிச் சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.

மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒரு ஜோடியில் போய் முடியும். அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிலிருந்து தான் பல்கிப் பெருகின. மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம் கணக்கு இல்லை. உதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக் கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது ஒரு கோடி உயிரினங்கள் இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாது. இந்த ஒரு கோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க வேண்டும். வேண்டுமானால் ஆடு மனிதனாக, மனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிர, ஒரு கோடியை விட அதிகமாகவே கூடாது.
ஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாக பெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி அல்ல. புதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூற வேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார். அப்போது இந்தியாவில் முப்பது கோடி மக்கள் இருந்தனர். அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பது கோடி தான் இருக்க வேண்டும். 70 கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம். நாம் மட்டும் அதிகமாகவில்லை. அனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிர பழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது. பெருக முடியாது. மறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச் சான்றும் தேவையில்லை. அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள் கூறும் தத்துவம் என்ன? இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது. இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது. அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாக வாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா?

எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லை. காரண காரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.

Wednesday, November 5, 2008

அமெரிக்காவின் புதிய அதிபர் முபாரக் ஹுசைன் ஒபாமா!

அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பராக் ஒபாமா தேர்தெடுக்கப்பட்டுள்ளார.கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க மக்கள் தற்போது சவால்களை எதிர்நோக்குகிறார்கள் என்றும் அமெரிக்க மக்களின் கவலைகளை தாம் கவனத்தில் எடுப்பதாகவும் வெற்றி பெற்ற பிறகு தமது ஆதரவாளர்களிடையே உரையாற்றும் போது அவர் தெரிவித்தார்.

அமெரிக்க மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது தொடர்பில் தான் அமெரிக்க மக்களிடம் உண்மையாக நடந்து கொள்வேன் என்றும் அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். தேசத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் அனைவரின் ஆதரவும் தேவை என்றும், ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள் வரும் போது மக்களிடம் கருத்துக்களை கேட்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது வெற்றியானது நாட்டில் மாறுதல் ஏற்படுவதற்கான ஒரு உண்மையான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும் கருத்து வெளியிட்டுள்ளார் பராக் ஒபாமா.

இராக் மற்றும் அமெரிக்காவிடையே புதிய பாதுகாப்பு உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், அமெரிக்கப் படைகள் தமது நாட்டிலிருந்து வெளியேற ஒரு திட்டமிட்ட கால அட்டவணை தேவை என்பதை இராக் முன்னெடுத்து வருகிறது. எனவே இந்த நிலைப்பாட்டை பொறுத்த வரை தற்போது அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ள ஜான் மெக்கெயினை விட அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா அவர்கள் நெருக்கமாக இருப்பதாக இராக்கியர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் இராக்கின் முன்னுரிமைகளை விட அமெரிக்காவின் முன்னுரிமைகள் என்ன என்பது குறித்துதான் புதிய அதிபரின் கொள்கைகள் இருக்கும் என்கிற கவலைகளும் இருக்கின்றன.

ஒபாமா அவர்களின் வெற்றியை இராக் வரவேற்றுள்ள போதிலும், மற்ற அரசியல்வாதிகள் நாடு இன்னமும் ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு நிலையில் இருக்கும் வேளையில் அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம் எனக் கோரியுள்ளனர்.

ஆப்கானிய அதிபர் தமது நாட்டின் ஆதரவு அமெரிக்காவுக்கு உண்டு என்றும், தமது அரசு அமெரிக்க அரசை பெருமளவு சார்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார். ஆப்கானின் மிக சக்தி வாய்ந்த கூட்டணி நாடாகவும் அந்நாட்டுக்கு பெரிய அளவில் உதவிகளை அளிக்கும் நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு துருப்புகளால் ஆப்கானிய பொதுமக்கள் கொல்லப்படுவது மேலும் அதிகரிக்கின்றன என்கிற கூறப்படுகின்ற நிலையிலும், மக்களிடையே இது தொடர்பில் விரக்தி மேலோங்கி வரும் நிலையிலும் ஆப்கான் அதிபரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்களின் வேலைகள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்படாமல், அமெரிக்காவுக்கு உள்ளேயே செய்யப்படுவதை தாம் ஊக்குவிக்கப்போவதாக ஒபாமா அவர்கள் கூறியிருப்பது, இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் பெருகிவந்த அவுட்சோர்சிங் துறையை பாதிக்கக்கூடும் என்றும், இது இந்திய நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அதிபர் தேர்ததலோடு நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.

பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளதை ஆப்பிரிக்காவிலுள்ள மக்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
தென்னாப்பிரிக்காவின் அதிபர் தொடக்கம், சோமாலியாவின் அதிபர் வரை ஆப்பிரிக்காவின் பல தேசத்து தலைவர்கள் தமது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் வெற்றி, உலகத்தை மேம்பட்ட ஒரு வாழ்விடமாக்க விழையும் கனவை அனைவராலும் காண முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளது என்று நெல்சன் மண்டேலா கருத்து கூறியுள்ளார்.

பராக் ஒபாமாவின் தந்தையின் நாடான கென்யாவில் வியாழக்கிழமை அவரது வெற்றியை கொண்டாடும் முகமாக தேசிய விடுமுறையாக அதிபர் ம்வாய் கிபாக்கி அறிவித்துள்ளார்.

அதிபராக அவர் பதவியேற்றுக் கொள்ள இன்னமும் 75 நாட்களுக்கு மேல் உள்ள நிலையில், தமது புதிய ஆட்சியில், பாதுகாப்பு, நிதித்துறை, வெளியுறவுச் செயலர் உட்பட பல்லாயிரம் அதிகாரிகளை அவர் தேர்தெடுத்து நியமிக்க வேண்டியுள்ளது. புதிய அரசு எப்படிபட்ட புதிய பாதையில் செல்லப் போகிறது என்பதில் அடுத்த 70 நாட்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

ஆக,ஸ்பானிஷ் பேசும் மக்கள்,அயல்நாட்டை சேர்ந்த அமெரிக்க வாழ் மக்கள்,எல்லா நாடுகளையும் சேர்ந்தமுஸ்லீம் மக்கள்,ஆப்ரோ-அமெரிக்க (கறுப்பின)மக்களின் பேராதரவு,மற்றும் வெள்ளை இன மக்களின் ஆதரவும் ஒபாமாவுக்கு கிடைத்து,அதிபர் ஆகிவிட்டார்.அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு பதவி அளிக்கிறான்.அப்பதவியை அவர்கள் இப்போது எப்படி பயன் படுத்தப் போகிறார்கள்,அதன் மூலம் எல்லா மக்களின் நலன்களும் பேணப்படுமா என்பதே இப்போதிய கேள்வி?

புதிய அதிபருக்கு உலக முஸ்லிம்கள் மற்றும் அதிரை மக்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Tuesday, November 4, 2008

அடடே இது விளம்பர உலகமப்பா

விளம்பரம் இன்றி தொழில் மட்டுமல்ல,எதுவும் மக்களை சென்றடைவதில்லை.பளிச்சென்ற பற்களை காட்டித்தான் டூத் பேஸ்ட் விற்கமுடியும்!இது மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு மட்டுமல்ல-நாளிதழ்கள்,மாத இதழ்கள் போன்ற பிரிண்ட் மீடியாக்களுக்கும் பொருந்தும்.(பெஸ்ட் கண்ணா பெஸ்ட்,புதுசு கண்ணா புதுசு,ஹிஹி,இது குங்குமம் விளம்பரங்கோ)இது அதிரை எக்ச்பிரசுக்கும் பொருந்தும்.(அட்லீஸ்ட் வாய் வழி விளம்பரமாவது).ஆக,விளம்பரம் அவசியம்.(அடடே இது விளம்பர உலகமப்பா).

இன்று விளம்பரம் தொலைக் காட்சி,இன்டர்நெட்,பத்திரிக்கை,ரேடியோ,படங்கள்,கட் அவுட்கள்,பிட் நோடிஸ்கள்,சுவர்,மற்றும் டிஜிடல் என விளம்பரம் எல்லா வகையிலும் வியாபித்துள்ளன.சரி,சரி,அதுக்கு என்ன ? என கேள்விகள் எழலாம்.இதன் விடை,இந்த விளம்பர யுகத்தை ஏன் நாம் பயன்படுத்தக்கூடாது?இஸ்லாத்தின் அழகிய நெறியை பாரெல்லாம் பரப்ப,இவ்விளம்பரத்தை நாமும் ஏன் பயன்படுத்தக்கூடாது?

பொதுவாக,தொலைக் காட்சி,இன்டர்நெட்,ரேடியோ,பத்திரிகைகள்,என இஸ்லாம் குறித்த விவரங்கள் உலா வருவது நாம் அறிந்ததே.நான் சொல்ல விழைவது,"சுவர் விளம்பரங்கள்" பற்றியதே.

உதாரணமாக நம் ஊரை எடுத்துக்கொண்டால்,ஒரு தெருவில் பல சீர்கள்(லைன்கள்) இருக்கும்.ஆக,அந்த லைனில் உள்ள ஒரு வீட்டை தேர்ந்தெடுத்து,வீட்டாரின் முன் அனுமதி பெற்று,நல்ல அழகு கையெழுத்தில்,பெரிய எழுத்துக்களில் ஆயில் பெயிண்டிங் கொண்டு திருக் குரான்,ஹதீஸ் வசனங்களை எழுதி வைத்தால்,அப்பக்கம் போவோர் வருவோர் கண்களில் பட்டு குரான்,ஹதீஸ் வசனங்கள் மனனம் ஆகும்,மேலும் அல்லாஹ்வின் அச்சமும்,உதாரணமாக,விபச்சாரம்,குடி,வட்டி,ஷிர்க் வைத்தல்,தர்கா வழிபாடு போன்ற செயல்களால் அல்லாஹ்வின் கோபம் ஏற்பட்டு,நரகம் கிடைக்கும் என்பதையும்,தொழுகை,நோன்பு,ஜகாத்,ஹஜ்,போன்ற கடமைகளை செய்வதன் மூலம் கிடைக்கும் கூலியும் அதன் பால் வரும் சொர்க்கம் போன்ற கருத்துக்களையும் மக்களிடம் விளம்பரப் படுத்தினால் இன்ஷா அல்லாஹ்,இதன் மூலம் பயன் கிடைக்கும்.

நம் ஊரின் விசாலமான தெருக்களும்,அந்த தெருக்களினூடே உள்ள லைன்களையும் கணக்கிட்டால் நிறைய குரான் ஹதீஸ் எழுத முடியும்.அப்ப என்ன சுவர் விளம்பரம் எழுத ரெடிதானே!

'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்

ஆதாரம் புகாரி

Monday, November 3, 2008

இயேசு அழைக்கிறார்…!

கிறித்தவ சகோதர சகோதரிகளுக்கு,

அன்பான சகோதர, சகோதரிகளே….! கர்த்தருடைய நீதி விசாரணை நாள் நெருங்கி வருகிறது.

அந்த நாளையும், அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
(பைபிள் புதிய ஏற்பாடு – மத்தேயு 24:36)

சகோதர சகோதரிகளே…! கர்த்தர் சொல்லும் அந்த நாள் நம்மை நெருங்கி வருகிறது…அது எப்பொழுது வருமோ என நாம் பயத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், நாம் இந்த உலகத்து அற்ப வாழ்வில் நன்மை செய்திருந்தால் பரலோக ராஜியத்தில் வெற்றியும், இவ்வுலகில் தீமை செய்திருந்தால் பரலோகத்தில் நமக்கு இழிவும், நாசமும் கொண்ட நரகத்தையும் தருவதாக கர்த்தரே சொல்கிறார்.

நாம் செய்த கருமத்துக்கு அந்நாளில் நாம்தானே அனுபவித்தாக வேண்டும்…? வேறு யாரும் நம்முடைய கருமங்களுக்கான பொறுப்பைச் சுமக்க முடியாது என்பதை பின்வரும் வசனம் தெளிவு படுத்துகிறது:

பாவம் செய்கின்ற ஆத்மாவே சாகும். குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. தகப்பன் குமாரருடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை. நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கிறது. துன்மார்க்கனுடைய துன்மார்க்கம் அவன் மேல்தான் இருக்கும். (பழைய ஏற்பாடு – எசக்கியேல் 18:20)
ஆக, தப்பிச் செல்ல முடியாத அந்த மகத்தான நாளின் ராஜா கர்த்தர் மட்டுமே…!

கர்த்தரே மெய்யான தெய்வம். அவர் ஜீவனுள்ள தேவன். நித்திய ராஜா. அவருடைய கோபத்தினால் பூமி அதிரும். அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்க மாட்டார்கள். (பழைய ஏற்பாடு – 10:10).

அப்படிப்பட்ட ஒரே தேவனாகிய கர்த்தரை மட்டுமே நாம் வணங்கவேண்டும். அப்படி கர்த்தரை மட்டும் வணங்காமல் இருந்தால் பரலோக ராஜியத்தில் இடமில்லை என்பதை ஏசுவே கூறுகிறார்.

பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜியத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கி;றவன் பிரவேசிப்பதில்லை. (புதிய ஏற்பாடு – மத்தேயு 7:21).

ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்கவேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்கச்செல்வது, ஏசு சொன்னதற்கு மாற்றமாகாதா…? ஏசுவின் பெயரைச் சொல்லி இல்லாத காரியம் பண்ணுகின்றவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார்.
இதோ: அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா…? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லை… அக்கிரமச் செய்கைகாரரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு – 7:21-23)

அன்பான சகோதர, சகோதரிகளே…! ஏசு வணங்கப்படுபவர் அல்லர். ஏசுவுடன் சேர்ந்து நாமும் வணங்கவேண்டியது அந்த கர்த்தரை மடடும்தான்! கர்த்தர் என்பதைத்தான் ஆங்கிலத்தில் (God ) என்றும் அரபி மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கின்றனர். அந்த கர்த்தராகிய அல்லாஹ், ஏசுவைப் பற்றி இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறார். ஏசுவை திருக்குர்ஆன் ஈஸா என்று கூறி 25 இடங்களிலே அவர் பெயரைச் சிறப்பிக்கிறது.

பைபிளிலும் ஏனைய வேதங்களிலும் கூறப்படாத அற்புதமான பல அரிய செய்திகளை திருக்குர்ஆன் மேரியயைப்பற்றியும் அவரது குடும்பத்தைப் பற்றியும், இயேசுவைப்பற்றியும் புகழ்ந்து பேசுகிறது.

உலகிலேயே மிகச்சிறந்த பெண் மர்யம் (மேரி)

திருக்குர்ஆன் கூறுகிறது: தமது கற்பைக் காத்துக் கொண்ட மர்யம்(மேரி)நம்பிக்கை கொண்டோருக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்குகிறார். ( குர்ஆன்: 66:12). மர்யமே! அல்லாஹ் உம்மைத்தேர்வு செய்து தூய்மையாக்கி உலகப் பெண்களைவிட உம்மைச் சிறப்பித்துள்ளான். (குர்ஆன் : 3: )

மர்யம் (மேரியின்) பெயரால் குர்ஆனில் ஒரு அத்தியாயமே இடம் பெற்று உள்ளது.

இறைவனின் அத்தாட்சிகள் மர்யமின் குடும்பம், அவரது பிறப்பு, வாழ்வு யாவும் இறைவனின் அதிசய அத்தாட்சிகள் என்றே குர்ஆன் 3:33,34,37 வசனங்கள் கூறுகின்றன.

தொட்டிலில் குழந்தை பேசியது பைபிளே கூறாத இன்னொரு அதிசயத்தையும் குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.

‘தொட்டிலில் குழந்தை பேசியது’

‘பின்னர் (மேரி என்ற மர்யம் பிள்ளையைப் பெற்று ) அக்குழந்தையைச் தம் சமூகத்தாரிடம் சுமந்துகொண்டு வந்தார். அவர்கள் கூறினார்கள்: மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான காரியத்தைச் செய்துவிட்டீரே! ஹாரூனின் (ஆரோன்) சகோதரியே…! உமது தந்தை கெட்டவராக இருந்ததில்லை.உம் தாயாரும் நடத்தை கெட்டவளாக இருக்கவில்லை (என்று பழித்துக் கூறினார்கள்).

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும்படி) அதன்பால் மேரி சுட்டிக்காட்டினார். (அப்போது அவர்கள்) ‘நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்? என்று கேட்டார்கள். உடனே அவர் (அக்குழந்தை), நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன். அவன் எனக்கு வேதத்தைக் அருளியிருக்கி;றான். மேலும் என்னை இறைதூதராகவும் ஆக்கியிருக்கின்றான். இன்னும் நான் எங்கிருந்தாலும் அவன் என்னை நற்பாக்கியமுடையவனாக ஆக்கி இருக்கின்றான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜக்காத்தையும் (ஏழை வரி) நிறைவேற்ற எனக்குக் கட்டளையிட்டிருக்கின்றான். என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்). நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறங்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர்பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும் என்று (குழந்தை – ஏசு) கூறியது.’
இ(த்தகைய)வர்தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஏசு ஆவார்). எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்களோ அதைப்பற்றி உண்மையான சொல் இதுவேயாகும்). (திருக்குர்ஆன் அத்தியாயம் 19. வசனம் 27-34).

ஏசு கொல்லப்படவில்லை

அதுமட்டுமல்ல. ஏசு என்ற ஈஸா (அவர் மீது சாந்தி நிலவட்டுமாக) மனிதர்களால் கொல்லப்படவும் இல்லை. எதிரிகள் அவரைக் கொல்ல நினைத்தபோது கர்த்தர் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டார்.

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை’.

இன்னும் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் (மேரியின); குமாரராகிய ஈஸா (ஏசு) மஸீஹை கொன்றுவிட்டோம் என்று அவர்கள் (யூதர்கள்) கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). ‘அவரை அவர்கள் கொல்லவில்லை.; அவரை அவர்கள் சிலுவையிலும் அறையவில்லை’. ஆனால் அவர்களுக்கு (அவரது தோற்றத்தைப் போன்ற) ஒருவனை ஒப்பாகக் (காண்பிக்);கப்பட்டது.(அதாவது ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது) மேலும் இ(வ்விஷயத்)தில் கருத்து வேறுபாடு; கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கி;றார்கள். வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் (ஆதாரமும்) கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக்கொண்டான். இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 157,158)

இயேசு மீண்டும் உலகிற்கு வருவார்.

கர்த்தர் அளவில் உயர்த்தப்பட்ட ஏசு நெருங்கிவரும் இறுதிநாளின் அத்தாட்சியாக மீண்டும் இந்த உலகில் தோன்றவிருப்பதை முஸ்லிம்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

நிச்சயமாக அவர் (ஏசு) இறுதி காலத்திற்குரிய அத்தாட்சி ஆவார். ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம். மேலும் என்னையே பின்பற்றுங்கள். இதுவே நேரான வழியாகும். (திருக்குர்ஆன் அத்தியாயம் 43. வசனம் 61)
இதற்குப் பின்னர் ஏசுவையோ அல்லது அவரது தாயாரையோ அல்லது சிலுவையையோ வணங்குபவர்களுக்கும், கர்த்தர் இறக்கியருளிய இறுதி ஏற்பாடான திருக்குர்ஆனை நம்பாதவர்களுக்கும் எதிராக நீதி விசாரணை நாளில் ஏசுவே சாட்சி சொல்லவிருக்கிறார்.

கர்த்தரைத்தவிர எவரையும் ஏசு வணங்கச் சொல்லவில்லை.

இன்னும், மர்யம் (மேரி) உடைய மகன் ஈஸா (ஏசு)வே, அல்லாஹ்வை (கர்த்தரை) அன்றி என்னையும், என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா? என்று விசாரணை நாளில்)அல்லாஹ் கேட்கும்போது (ஏசுவாகிய) அவர், (இறைவா!) நீ மிகவும் தூய்மையானவன், எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை, அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிவாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன் என்று அவர் கூறுவார்.

நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே (கர்த்தரையே) வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய் (என்றும் கூறுவாh). (திருக்குர்ஆன் அத்தியாயம் 5. வசனம் 116, 117)

அன்பான கிறிஸ்தவ சகேதர, சகோதரிகளே…! எல்லாம்வல்ல கர்த்தராகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதன் மூலம் மட்டுமே பரலோக ராஜியத்தில் மோட்சத்தை அடைய முடியும் என்று இதன் மூலம் அறியலாம். அறியாமையில் இருந்து விடுபட்டு நேர்வழியின்பக்கம் வரும் கிறிஸ்தவர்களை நோக்கி எல்லாம் வல்ல கர்த்தர் இதோ கூறுகிறார்:-
கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்கள்

கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்க மிகவும் நெருக்கமானவர்கள் என்பதற்கு வரலாறில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்டபோது அவரது மனைவி வரக்கத் இப்னு நவ்ஃபல் என்பவரிடம் அழைத்துச் சென்றார்.அவர் ஒரு கிறித்தவப்பாதிரி.அவர் தான் “இவரே முன் வேதங்களில் அறிவிக்கப்பட்ட இறுதி இறைதூதர்” முன்னறிவிப்புச் செய்தார்.மேலும் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பின் இவரது பிரச்சாரத்துக்கு உதவுவேன் என்றார்.அவர் விரைவிலேயே இறந்து விட்டார்.

முஸ்லிம்களுக்கு மக்கத்து மக்களால் எதிர்ப்பும் தொல்லையும் ஏற்பட்டவேளை பக்கத்து கிறித்தவ நாடான அபிஸீனியாவிற்குச் சென்று குடியேறுமாறும் அவர் முஸ்லிம்களை அரவணைத்து நிற்பார் என்றும் முஹம்மது நபி (ஸல்) தமது தோழர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அவ்வாறே முஸ்லிமகள் அங்கு சென்றபோது அவர்களை அம்மன்னர் வரவேற்று முஹம்மது நபியைப்பற்றி தெரிந்து கொண்டு இஸ்லாத்தையும் தழுவினார்.

அடுத்து திருக்குர்ஆன் நபியிடம் கூறுகிறது:-

‘நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் விசுவாசிகளுக்குக் கடும் பகைவர்களாகவே (தூதரே!) நீர் காண்பீர். நிச்சயமாக நாங்கள் கிறிஸ்துவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, விசுவாசிகளுக்கு (முஸ்லிம்களுக்கு) நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே) நீர் காண்பீர். ஏனென்றால், அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்பு கொள்வதுமில்லை. இன்னும் (இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை (திருக்குர்ஆன் வசனத்தை)ச் செவியேற்றால், உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கைக் கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்துகொள்வாயாக! என்றும் அவர்கள் கூறுவார்கள். (திருக்குர்ஆன் அத்தியாயம் 5. வசனம் 82-84)

அன்பார்ந்த கிறித்தவ சகோதரர்களே…!

ஒருவரை நாம் உண்மையிலேயே மதிக்கிறோம் என்றால், அவர் சொல்வதை அப்படியே எடுத்து நடப்பதுதான். ஏசுவின் பெயரால் அவர் அல்லாதவர்கள் சொல்வதையெல்லாம் பின்பற்றுவது சரியா? அல்லது எந்த ஏசுவை நீங்கள் உயிருக்குயிராக மதிக்கிறீர்களோ அந்த ஏசுவை அப்படியே பின்பற்றுவது சரியா? சற்று பொறுமையுடன் சிந்தித்துப் பாருங்கள்…!

சத்தியத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் நாம் வாழ்ந்திட, ஏசு அழைக்கும் மெய்வழியான இஸ்லாமிய நெறியின் பக்கம் வாருங்கள்…! பரலோக ராஜியத்தில் பரிபூரண வெற்றியைப் பெறுங்கள்…! கர்த்தர் நம் அனைவருக்கும் கிருபை செய்வாராக…!

நன்றி: அல்பாக்கவி.காம்

Sunday, November 2, 2008

தலித் ஒருவர் விரும்பினால் ஐயராக முடியாது !

'மதங்கள் அர்த்தமற்றவை' என்று விமர்சனம் செய்யும் சிந்தனையாளர்கள் எடுத்து வைக்கும் மற்றொரு வாதம் ''மதங்கள் கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்கின்றன'' என்பதாகும்.

அன்றாடம் உண்பதற்கு உணவில்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கும் போது கோவில் உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய்கள் போடப்படுகின்றன.
ஒரு மூக்குத்திக்குக் கூட வழியில்லாத ஏழைப் பெண்கள் கோடிக் கணக்கில் இருக்கும் போது சிலைகளும், கலசங்களும், தேர்களும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. செல்வந்தர்கள் இதற்காக வாரி வழங்குகின்றனர்.

தேவையுள்ள மனிதர்களுக்குச் செலவிடாமல் எந்தத் தேவையுமற்ற கடவுளுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படும் மனித நேயமற்ற காரியங்களைப் பார்க்கும் சிந்தனையாளர்கள் ''மதங்கள் அர்த்தமற்றவை'' என்று கருதுகின்றனர்.


இஸ்லாத்தைப் பொருத்த வரை இந்த விமர்சனமும் பொருந்தாது. ஏனெனில் இது போன்ற காரியங்களையும் இஸ்லாம் மறுக்கிறது.


கடவுளுக்குச் செய்ய வேண்டிய வணக்கங்கள் இரு வகைகளாக இஸ்லாத்தில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.


ஒன்று உடலால் செய்வது.


மற்றொன்று பொருளாதாரத்தால் செய்வது.


தொழுகை, நோன்பு போன்றவை உடலால் செய்யப்படும் வணக்கங்களாகும்.


உடலால் செய்யும் வணக்கங்களை இறைவனுக்காக மட்டுமே செய்ய வேண்டும். வேறு எவருக்காகவும் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.


''மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள்'' என்ற விமர்சனம் இதில் எழாது.


பொருளாதாரத்தைச் செலவிடுவதில் தான் மனிதர்கள் மறக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனம் எழும். இது பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?


மனிதர்கள் நோய் வாய்ப்படுகிறார்கள்.


வறுமையில் உழல்கிறார்கள்.


மன நிம்மதியை இழக்கிறார்கள்.


குழந்தைச் செல்வம் கிடைக்காமல் கவலைப்படுகிறார்கள்.


இது போன்ற துன்பங்களைச் சந்திக்கும் போது ''கடவுளே எனக்கு இந்தக் குறையை நிவர்த்தி செய்தால் நான் உணக்காக ஒரு லட்சம் ரூபாய் செலவிடுகிறேன்'' என்பது போல் மனிதர்கள் நேமிதம் (நேர்ச்சை) செய்து கொள்கிறார்கள்.


அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் எந்தக் கடவுளுக்கு நேர்ச்சை செய்தார்களோ அவரது ஆலயத்தில் அந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர்.


துன்பத்திலிருப்பவன் இறைவனுக்காக இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாமும் அனுமதிக்கின்றது.


ஆனால் இறைவனுக்காக பொருளாதாரம் குறித்த எந்த நேர்ச்சையைச் செய்தாலும் அவற்றைப் பள்ளிவாசல் உண்டியலில் போடக் கூடாது. மாறாக ஏழைகளுக்குத் தான் செலவிட வேண்டும்.


''கடவுளே உனக்காகப் பத்தாயிரம் ரூபாய் செலவு செய்கிறேன்'' என்று ஒருவர் முடிவு செய்தால் ஏழைகளின் உணவு, உடை, மருத்துவச் செலவு போன்றவற்றுக்காகத் தான் அதைச் செலவிட வேண்டும்.


கடவுளுக்காக நேர்ச்சை செய்த பணத்தில் பள்ளிவாசல் கட்டுவதோ, பள்ளிவாசலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதோ கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை.


சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பது போல் ''கடவுளின் பெயரால் எந்தப் பொருளாதாரத்தையும் செலவிடாதே'' என்று ஒருவனிடம் கூறினால், அதை ஏழைக்குத் தான் அவன் செலவிடுவான் என்று கூற முடியாது.


கடவுளுக்கும் செலவிடாமல் ஏழைக்கும் செலவிடாமல் இருந்து விடுவான்.
''ஏழைக்குச் செலவிடுவது தான் கடவுளுக்குச் செலவிடுவது'' எனக் கூறும் போது கண்டிப்பாக ஏழைகள் பயன் பெற்று விடுவார்கள்.


சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இது சிறந்ததாக அமைந்துள்ளது.


''இவ்வுலகத்தை இறைவன் ஒரு நாள் அழித்து விட்டு எல்லா மனிதர்களையும் மீண்டும் உயிர்ப்பித்து விசாரணை நடத்துவான். மனிதர்களின் நன்மை தீமைகளுக்கு ஏற்ப பரிசுகளையோ, தண்டனைகளையோ இறைவன் வழங்குவான்'' என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. இது நியாயத் தீர்ப்பு நாள் எனப்படுகிறது.


நியாயத் தீர்ப்பு நாளில் நடைபெறவுள்ள விசாரணையின் ஒரு காட்சியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றனர்.

''மனிதனே! நான் நோயுற்றிருந்த போது நோய் விசாரிக்க ஏன் நீ வரவில்லை'' என்று நியாயத் தீர்ப்பு நாளில் இறைவன் கேட்பான். ''என் இறைவா! நீயோ அகிலங்களைப் படைத்துப் பராமரிப்பவன். உன்னை நான் எப்படி நோய் விசாரிக்க முடியும்?'' என்று மனிதன் பதிலளிப்பான். ''எனது அடியான் ஒருவன் நோயுற்றதை நீ அறிந்தும் அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை. அவனை நீ நோய் விசாரிக்கச் சென்றிருந்தால் அவனிடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். ''மனிதனே! உன்னிடம் நான் உணவு கேட்டு வந்த போது எனக்கு உணவளிக்க மறுத்து விட்டாயே?'' என்று இறைவன் மீண்டும் கேட்பான். ''நீயோ அகிலத்தையும் படைத்துப் பராமரிப்பவனாக இருக்கிறாய். நான் உனக்கு எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று மனிதன் கூறுவான். ''என் அடியான் உன்னிடம் உணவு கேட்டு வந்த போது அவனுக்கு நீ உணவளிக்க மறுத்தது உனக்குத் தெரியாதா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். ''மனிதனே! உன்னிடம் நான் தண்ணீர் கேட்டு வந்த போது எனக்குத் தண்ணீர் தர மறுத்து விட்டாயே?'' என்று இறைவன் மீண்டும் கேட்பான். ''என் இறைவா! அகிலத்தின் அதிபதியான உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?'' என்று மனிதன் கூறுவான். ''எனது அடியான் ஒருவன் உன்னிடம் தண்ணீர் கேட்டு வந்த போது அவனுக்கு நீ தண்ணீர் புகட்டவில்லை. அவனுக்குத் தண்ணீர் புகட்டியிருந்தால் அங்கே என்னைக் கண்டிருப்பாய்'' என்று இறைவன் கூறுவான். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 4661 )


''மனிதனுக்கு உதவுவது தான் இறைவனுக்குச் செய்யும் வணக்கம்'' என்பதை இறைவனின் இந்த விசாரணை முறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


இஸ்லாத்தில் தொழுகை, நோன்புக்கு அடுத்த கடமையாக ஸகாத் எனும் கடமை உள்ளது.


வசதியுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தனது சொத்துக் கணக்கைப் பார்த்து, அதில் இரண்டரை சதவிகிதம் வழங்க வேண்டும். வயல்களில் உற்பத்தியாகும் பொருட்களில் மானாவாரிப் பயிர்களாக இருந்தால் ஐந்து சதவிகிதமும் மற்ற பயிர்களில் பத்து சதவிகிதமும் வழங்க வேண்டும். ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய கால்நடைகளிலும் குறிப்பிட்ட சதவிகிதத்தை வழங்க வேண்டும். இதுவே ஸகாத் எனப்படுகிறது.


இதை யாருக்கு வழங்க வேண்டும்? பள்ளிவாசல் கட்டுவதற்கோ, மராமத்துச் செய்வதற்கோ, அதன் நிர்வாகப் பணிகளுக்கோ செலவிட வேண்டுமா?


செலவிடக் கூடாது என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.


யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய (முஸ்லிமல்லாத)வர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 9:60)


இந்த எட்டு வழிகளில் தான் அதைச் செலவிட வேண்டும். இந்த எட்டுமே மனிதர்களுக்கானது தான். மனிதர்களுக்கு உதவுவதை மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் ஒரு கடமையாக இஸ்லாம் ஆக்கியுள்ளது.


செலவிட வேண்டிய எட்டு வழிகளில் முஸ்லிமல்லாத மக்களுக்கு வழங்குவதையும் குறிப்பிட்டு மதம் கடந்த மனித நேயத்தை இஸ்லாம் பேணுகிறது.


''கடவுளை மற! மனிதனை நினை!'' என்பார்கள்.


மனிதனை நினைப்பதற்கு கடவுளை மறக்கத் தேவையில்லை. கடவுளை இஸ்லாம் கூறுகிற படி நினைத்தால் ஏழைகள் அதிகமான நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள்.


திருமறைக் குர்ஆனில் பிறருக்கு வாரி வழங்குவது பற்றி அதிகமான அளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


(சொத்தைப்) பங்கிடும் போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்து விட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள்! அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்! (திருக்குர்ஆன் 4:8)


உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரையம் செய்து விடாதீர்! (திருக்குர்ஆன் 17:26)


உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 24:22)


உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர். (திருக்குர்ஆன் 30:38)


அவனை (அல்லாஹ்வை) நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) (திருக்குர்ஆன் 76:8,9,10)


குற்றவாளிகளிடம் ''உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று (நல்லோர்) விசாரிப்பார்கள். ''நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் (குற்றவாளிகள்) கூறுவார்கள். (திருக்குர்ஆன் 74:40 41, 42, 43, 44)


அவர்களது செல்வங்களில் யாசிப்பவர்க்கும், இல்லாதவருக்கும் அறியப்பட்ட உரிமை இருக்கும். (திருக்குர்ஆன் 70:24)


எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! யாசிப்பவரை விரட்டாதீர்! (திருக்குர்ஆன் 93:10)


(கடன் வாங்கிய) அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது. (திருக்குர்ஆன் 2:280)


அல்லாஹ்வுக்காக அழகிய கடன் வழங்குவோர் யார்? அதை அவருக்குப் பன் மடங்காக (இறைவன்) பெருக்குவான். அல்லாஹ் குறைவாகவும் வழங்குகிறான். தாராளமாகவும் வழங்குகிறான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 2:245)


தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன். (திருக்குர்ஆன் 2:261)


அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 2:262)


தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (திருக்குர்ஆன் 2:261)


அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெருமழை விழுந்ததும் அத் தோட்டம் இருமடங்காக அதன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெருமழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன். (திருக்குர்ஆன் 2:265)


நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2:272)


தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு. (திருக்குர்ஆன் 57:18)


தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ''நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:215)


அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (திருக்குர்ஆன் 4:36)


உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போர், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். (திருக்குர்ஆன் 2:177)


மனிதர்களுக்கு உதவுவது தான் கடவுளுக்குச் செய்யும் வணக்கம் என்பதை மேற்கண்ட வசனங்களிலிருந்து அறியலாம்.


எனவே கடவுளின் பெயரால் மனிதனை மறக்கச் செய்யும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.


3. கடவுளின் பெயரால் அக்கிரமங்கள் நியாயப்படுத்தப்படுதல்


மேலோட்டமாகப் பார்த்தாலே அநியாயமாகவும், அக்கிரமமாகவும் தென்படுகின்ற பல காரியங்கள் மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப் படுகின்றன. மதங்கள் அர்த்தமற்றவை என்ற முடிவுக்கு வருவதற்கு இது போன்ற காரியங்களும் காரணங்களாக அமைந்துள்ளன.


கடவுளை வழிபாடு செய்யும் ஆலயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. குறிப்பிட்ட இனத்தவர்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்று வழிபாடு செய்யலாம். மற்றும் சிலர் தூரத்தில் நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். இன்னும் சிலர் ஆலயத்திற்குள் நுழையவே கூடாது என்ற நடை முறையைச் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள். கடவுளின் பெயரால் இது நியாயப்படுத்தப் படுவதையும் பார்க்கிறார்கள்.


கட்டணம் செலுத்துவோருக்கு கடவுளை வழிபடுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதையும், தர்ம தரிசனம் செய்பவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவதையும் காண்கிறார்கள்.


முக்கியப் பிரமுகர்கள் வரும் போது பரிவட்டம் கட்டி தனி மரியாதையும், முதல் மரியாதையும் செய்யப்படுவதையும் சிந்தனையாளர்கள் காண்கிறார்கள்.


வழிபாட்டுத் தலங்களில் மட்டுமின்றி ஊரிலும், தெருவிலும் கூட சிலர் புழு பூச்சிகளை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர்.


* தொட்டாலும், பட்டாலும் தீட்டு


* சில வீதிகளில் நடமாடத் தடை


* தேநீர்க் கடைகளில் தனித் தனிக் குவளைகள்


* செருப்பணியத் தடை


* பெண்கள் ஜாக்கெட் அணியத் தடை


என்றெல்லாம் மனிதனுக்கு மனிதன் செய்யும் அக்கிரமங்களையும், இதை மதத்தின் பெயராலேயே, கடவுளின் பெயராலேயே செய்வதையும் காண்கின்றனர்.


''கடவுள் இப்படித் தான் மனிதர்களைப் படைத்திருக்கிறான். இதை ஏற்றுத் தான் ஆக வேண்டும்'' என்று வேத நூல்கள் கூறுவதையும் காண்கின்றனர்.
இந்த அக்கிரமங்களை நியாயப்படுத்தி விட்டு 'மதங்கள் அர்த்தமுள்ளவை' என்று கூறுவதைச் சிந்தனையாளர்களால் ஏற்க முடியவில்லை.


ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் இஸ்லாம் இதைக் கடுமையாக எதிர்க்கின்றது.


மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன். (திருக்குர்ஆன் 49:13)


இறைவன் நேரடியாக ஒரு ஜோடி மனிதரைத் தான் படைத்தான். அவர்களிலிருந்து தான் இன்று உலகில் வாழும் அத்தனை மாந்தரும் பல்கிப் பெருகியிருக்கிறார்கள் என்று இவ்வசனத்தின் மூலம் அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.


மனித குலம் முழுமையும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் என்றால் அவர்களுக்கிடையே பிறப்பின் அடிப்படையில் எந்த ஏற்றத் தாழ்வும் இருக்க முடியாது.


ஒரு தாய் தந்தைக்குப் பிறந்த இரண்டு மகன்களில் ஒருவனை 'பிறப்பால் உயர்ந்தவன்' என்றும் மற்றவனை 'பிறப்பால் தாழ்ந்தவன்' என்றும் எவரும் கூற மாட்டோம்.


இத்தகைய சகோதரத்துவம் தான் மனித குலத்துக்கு மத்தியில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.


''மனிதன் தனது முயற்சியால் அடையக் கூடிய கல்வி, பதவி, ஆற்றல், திறமை, நற்பண்புகள், நன்னடத்தை போன்றவற்றால் உயர்ந்தவனாக ஆகலாமே தவிர, குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்ததால் உயர்ந்தவனாக ஆக முடியாது'' என்பதையும் மேற்கண்ட வசனத்திலிருந்து அறியலாம்.


இதை வெறும் வரட்டுத் தத்துவமாக மட்டும் இஸ்லாம் கூறவில்லை. 14 நூற்றாண்டுகளாக நடைமுறைப்படுத்தியும் வருகிறது.


''மனிதர்கள் ஆதாம் ஏவாளிலிருந்து தோன்றினார்கள்'' என்று கிறித்தவ மதமும் கூறுகிறது.


ஆனாலும் இஸ்லாம் இதை நடைமுறைப்படுத்தி வருகிறது. கிறித்தவம் நடைமுறைப்படுத்தவில்லை என்பது கவனிக்கத் தக்கது.


நாடார் கிறித்தவர், தலித் கிறித்தவர் என்றெல்லாம் அவர்களின் முந்தைய ஜாதியும், அதனால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வும் கிறித்தவ மதத்தில் தொடர்வது போல இஸ்லாத்தில் தொடர்வதில்லை. இருவருக்கும் தனித் தனி தேவலாயங்கள் இருப்பது போல் முஸ்லிம்களிடையே இல்லை.


நாடார் முஸ்லிம், தலித் முஸ்லிம் என்பன போன்ற சொற்கள் கூட முஸ்லிம்களிடம் கிடையாது. எந்தச் சாதியைச் சேர்ந்தவன் இஸ்லாத்தை ஏற்றாலும் அவனிடம் இருந்த சாதி அந்த நிமிடமே நீங்கி விடும். அவன் முஸ்லிம் மட்டுமே.


முஸ்லிம்களில் சிலர் அறியாமையின் காரணமாக ஷியா, சன்னி என்பது போல் தங்களைப் பிரித்துக் காட்டினாலும் இஸ்லாம் இதை ஆதரிக்கவில்லை. மேலும் இந்தப் பிரிவுகளைச் சாதியுடன் ஒப்பிடக் கூடாது.


குர்ஆனையும் நபிவழியையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட வேறுபாடு காரணமாக இவ்வாறு பிரிந்துள்ளனர்.


ஷியா பிரிவைச் சேர்ந்த ஒருவர் சன்னி பிரிவில் சேர விரும்பினால் உடனே அதில் சேர முடியும். சன்னி பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஷியா பிரிவில் சேர முடியும்.


ஆனால் தலித் ஒருவர் விரும்பினால் ஐயராக முடியாது.


மேலும் ஷியாக்களின் பள்ளிவாசல்களில் சன்னிகள் போய்த் தொழலாம். சன்னிகளின் பள்ளிவாசல்களில் ஷியாக்கள் தொழலாம்.


மக்காவில் உள்ள கஃபா ஆலயத்தில் ஷியா பிரிவினர் உள்ளிட்ட அனைவரும் சென்று இறைவனை வழிபடுகின்றனர்.


மேலும் உலகில் உள்ள எந்தப் பள்ளிவாசலிலும் குலம், கோத்திரம், பதவி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த முன்னுரிமையும் தரப்படுவதில்லை. இதை யார் வேண்டுமானாலும் கண்கூடாகப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.


யார் முதலில் வருகிறாரோ அவர் தான் முதல் வரிசையில் நிற்பார். கடைசியாக வந்தவர் கடைசியில் நிற்பார்.


இதில் முஸ்லிம்கள் கடுகளவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.
குடியரசுத் தலைவர்களாக இருந்த ஜாகிர் உசேன், பக்ருத்தீன் அலி அஹ்மத் ஆகியோர் தில்லி ஜும்ஆ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டுள்ளனர். அவர்கள் தாமதமாக வந்ததால் இடமில்லாமல் வெட்ட வெளியில் தான் தொழுதனர்.


''குடியரசுத் தலைவர் வந்து விட்டார்'' என்று ஒரு முஸ்லிம் கூட அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க முன் வரவில்லை. குடியரசுத் தலைவரும் ''என்னை முன் வரிசைக்கு அனுப்புங்கள்'' என்று கேட்டதும் இல்லை. கேட்டாலும் முஸ்லிம்கள் இதை ஏற்க மாட்டார்கள்.


கடையநல்லூர் மஜித், சாதிக் பாட்சா, ரஹ்மான் கான், ராஜா முகம்மது, முகம்மது ஆசிப், அன்வர் ராஜா, உள்ளிட்ட எத்தனையோ அமைச்சர்கள் பல சந்தர்ப்பங்களில் பள்ளிவாசலுக்கு வந்ததுண்டு.


காலியாக இருக்கும் இடத்தில் தான் அவர்கள் அமர்ந்தார்களே தவிர அவர்களுக்கு 'பராக்' சொல்லி முதல் வரிசையில் யாரும் அமர வைக்கவில்லை. அவர்களும் அவ்வாறு கேட்கவில்லை.

பள்ளிவாச­லும் எவருக்கும் பரிவட்டம் கட்டப்படுவதுமில்லை.


எனவே கடவுளின் பெயரால் அக்கிரமத்தை நியாயப்படுத்தும் குற்றத்தை இஸ்லாம் செய்யவில்லை.


பள்ளிவாசலுக்கு வெளியிலும் தீண்டாமையை இஸ்லாம் அறவே ஒழித்துள்ளது. ஒரு தட்டில் பலரும் சேர்ந்து சாப்பிடும் அளவுக்கு சகோரத்துவத்தை இஸ்லாம் பேணுகிறது.


4. சுயமரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துதல்


கடவுளை நம்பி அவனை வழிபடச் சொல்லும் மதவாதிகள் படிப்படியாக தங்களையும் கடவுள் தன்மை பெற்றவர்கள் என அப்பாவிகளை நம்ப வைத்து, மக்களைத் தங்களின் கால்களில் விழுந்து வழிபடச் செய்து வருகின்றனர்.


மானத்தோடும், மரியாதையோடும் வாழ வேண்டிய மனிதன், தன்னைப் போலவே மனிதனாக உள்ள மற்றொருவனுக்குத் தலை வணங்கும் நிலையை மதங்கள் தான் ஏற்படுத்தி விட்டன.


எனவே மதங்கள் யாவும் அர்த்தமற்றவை என்பதும் சிந்தனையாளர்களின் வாதம்.


இஸ்லாத்திற்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது. ஏனெனில் மனிதனை மனிதன் வழிபடுவதை இஸ்லாம் எதிர்க்கும் அளவுக்கு சீர்திருத்த இயக்கங்கள் கூட எதிர்த்ததில்லை.


முஸ்லிம்கள் தங்களின் உயிரை விடவும் மேலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கின்றனர்.


எந்த மதத்தவரும், கட்சியினரும், இயக்கத்தினரும் தமது தலைவர்களை நேசிப்பதை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்கள் அதிகம் நேசிக்கின்றனர்.


அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முஸ்லிம்களில் யாரும் வணங்குவதில்லை. அவர்களுக்காகச் சிலை வடிக்கவில்லை. அவர்களை ஓவியமாகத் தீட்டவில்லை. தங்களுக்கு வழிகாட்ட வந்த தலைவர் என்று மதிக்கிறார்களே தவிர அவர்களை முஸ்லிம்கள் ஒருக்காலும் வழிபட மாட்டார்கள்.


தம்மையும் கூட வழிபடக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்து சென்று விட்டார்கள்.


''எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்ற படி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்'' என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறினார்கள்.


இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும் ''நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு'' என்றார்கள். (நூல்: புகாரி 4001, 5147 )


நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். ''இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்'' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து ''நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?'' எனக் கேட்டார்கள். ''மாட்டேன்'' என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி) ; நூல்: அபூதாவூத் 1828 )


தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது ''எந்த மனிதரும் எந்த மனிதரின் காலிலும் விழக் கூடாது'' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.


காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.


எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தங்கள் அபிமானிகளால் இது போன்ற மரியாதை தங்களுக்குச் செய்யப்படும் போது அதை இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.


வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர்.


''எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே'' என்று மக்களுக்குத் தெரியும் வகையில் இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள். (நூல்: அஹ்மத்: 7054 )


எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்! எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்கள்: அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449 )


யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத்தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர். (நூல்: புகாரி 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816 )

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத் தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள் என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 1330, 1390, 4441 )


பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் நபிகள் நாயகம் அவர்களின் அடக்கத்தலத்தில் இன்று வரை எந்த நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதில்லை. அடக்கத்தலத்தில் எவரும் விழுந்து கும்பிடுவதில்லை.


மனிதன் சுய மரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய நபிகள் நாயகம் அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.


சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு இன்று மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம்.


தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம்.


இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.


இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.


நபிகள் நாயகம் அவர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவர்களுக்குச் சிலை வடிக்கவில்லை.


அவர்களின் சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.


அவர்களுக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.


அவர்களின் அடக்கத்தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.


எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவர்களால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.


காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும்! அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் ஏற்கவில்லை.


நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் ''அமருங்கள்!'' என்றனர். ''தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள். (நூல்கள்: திர்மிதி 2769 அபூதாவூத் 4552 )


''உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள்'' என்பதே இதற்குக் காரணம்.


நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள். (நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678 )


ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் ''பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்'' என்று கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 624 )


யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.


அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள்.


அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.


ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது ''நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது'' என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.


தமக்கு மரியாதை செலுத்துவதற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்தார்கள்.


தமக்காக நிற்பதையும், குனிவதையும் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டதால் தான் உண்மையான முஸ்லிம்கள் பெற்ற தாய் உள்ளிட்ட எவரது காலிலும் விழுவதில்லை. எந்த முஸ்லிம் பெண்ணும் கணவனின் காலில் விழுந்து கும்பிடுவதில்லை. எந்தத் தலைவருக்கும் சிலை வடித்து அவர்களை வழிபடுவதுமில்லை.

எனவே மனிதனின் சுயமரியாதையை இஸ்லாம் பேணுமளவுக்கு எந்த இஸமும் பேணியதில்லை.


சுயமரியாதைக்காக இயக்கம் கண்டவர்கள் கூட தமது தலைவருக்கு சிலை வடித்து மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.


கற்சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை எனக் கூறி பகுத்தறிவு இயக்கம் கண்டவர்கள் தமது தலைவரின் கற்சிலைக்கு மாலை அணிவிப்பது எப்படிப் பகுத்தறிவாகும்?


வழிபடும் சிலைகளை மாற்றிக் கொண்டார்கள். வழிபடும் முறையை மாற்றிக் கொண்டார்கள். பூஜைப் பொருட்களை மாற்றிக் கொண்டார்கள். வழிபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.


எனவே சிந்தனையாளர்கள் எதிர்பார்ப்பதை விட இஸ்லாம் மனிதனின் சுயமரியாதையை அதிகமாகவே காப்பாற்றுகிறது.


மத குருமார்களின் கால்களில் விழுவதைப் போலவே சுய மரியாதை இயக்கத்தின் வழிவந்த தலைவர்களின் கால்களில் அவர்களின் தொண்டர்கள் விழுந்து பணிகிறார்கள்.


ஆனால் மத குருமார்களின் கால்களில் விழுந்து பணிவதைக் கூட இஸ்லாம் அடியோடு தடை செய்து விட்டது. எனவே இந்தக் குற்றத்தையும் இஸ்லாம் செய்யவில்லை.


5. புரோகிதமும் சுரண்டலும்


'மதங்கள் யாவும் அர்த்தமற்றவை' என்று கூறுவோர் மதங்களின் பெயரால் நடக்கும் புரோகிதத்தையும், சுரண்டலையும் மற்றொரு சான்றாக முன் வைக்கின்றனர்.


கடவுளை வழிபடுவதாக இருந்தாலும் திருமணம், அடிக்கல் நாட்டுதல், தொழில் துவங்குதல், புதுமனைப் புகுதல், காது குத்துதல், கருமாதி செய்தல் உள்ளிட்ட எந்தக் காரியமானாலும் அதில் மத குருமார்கள் குறுக்கிடுகின்றனர்.


அவர்கள் மூலமாகத் தான் இந்தக் காரியங்களைச் செய்ய வேண்டும் என்று விதி செய்து வைத்துள்ளனர்.


மேலும் பேய், பிசாசு, மாயம், மந்திரம், பில்லி சூனியம், தாயத்து, தட்டு என்று பல வகைகளிலும் மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்களும் மதத்தின் பெயரால் தான் இவற்றைச் செய்கின்றனர்.


இவற்றையெல்லாம் பார்க்கும் சிந்தனையாளர்கள் ''தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக மத குருமார்கள் உருவாக்கியவை தாம் மதங்கள்'' என்று திட்டவட்டமான முடிவுக்கு வந்து விடுகின்றனர்.


ஆனால் இஸ்லாத்துக்கு எதிராக இந்த விமர்சனத்தையும் செய்ய முடியாது.
ஏனெனில் புரோகிதத்தை வேரோடு பிடுங்கி எறிந்த மார்க்கம் இஸ்லாம்.


ஒவ்வொரு மனிதனும், ஆணும் பெண்ணும், நல்லவனும், கெட்டவனும், படித்தவனும், படிக்காதவனும் நேரடியாகவே இறைவனிடம் தனது தேவைகளைக் கேட்க வேண்டும். தனக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் கேட்கலாம். ஏனெனில் இறைவனுக்கு எல்லா மொழியும் தெரியும் என்று இஸ்லாம் கூறுகிறது.


மேலும் ''மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும் புரோகிதர்களுக்கு வேலை இல்லை'' என இஸ்லாம் அறிவிக்கிறது.


நபிகள் நாயகம் காலத்தில் அப்துர் ரஹ்மான் என்ற செல்வந்தர் இருந்தார். நபிகள் நாயகத்தின் தலை சிறந்த பத்து தோழர்களில் இவரும் ஒருவர். இவர் ஒரு நாள் நறுமணம் பூசியவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ''ஏன் நறுமணம் பூசியுள்ளீர்கள்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். ''நேற்று எனக்குத் திருமணம் ஆகி விட்டது'' என்று அவர் விடையளித்தார். ''அப்படியானால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து அளிப்பீராக'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். (நூல்: புகாரி 2048, 2049, 3781, 3937, 5072, 5153, )


''நான் மதகுரு இருக்கும் போது என்னை அழைக்காமல், எனக்குச் சொல்லாமல் எப்படி நீர் திருமணம் செய்யலாம்?'' என்று அவரிடம் நபிகள் நாயகம் (ஸல்) கேட்கவில்லை. என்னை அழைக்காததால் திருமணம் செல்லாது எனவும் கூறவில்லை.


''திருமணத்தை நடத்தி வைக்க மதகுரு அவசியம் இல்லை'' என்பதை இதிலிருந்து அறியலாம்.


''என் மகளை அவளது சம்மதத்துடன் உனக்கு மணமுடித்துத் தருகிறேன்'' என்று பெண்ணைப் பெற்றவர் (அல்லது வேறு பொறுப்பாளர்) கேட்க, ''நான் இதை மனமாற ஒப்புக் கொள்கிறேன்'' என்று மணமகன் கூறினால் திருமணம் முடிந்து விட்டது.


நாளைக்குப் பிரச்சினைகள் வந்தால் உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்ல குறைந்தது இரண்டு சாட்சிகள். மணமகன் மணமகளுக்கு மஹர் எனும் மணக் கொடை அளித்தல் ஆகியவை தான் இஸ்லாமியத் திருமணம்.


மந்திரங்களோ, வேறு எந்தச் சடங்குகளோ இல்லை.


அது போல் குழந்தைக்குப் பெயர் சூட்டுதல், வீடு கட்டுதல் போன்ற காரியங்களிலும் புரோகிதருக்கு வேலை இல்லை.


இறந்தவருக்காக அவரது நெருங்கிய உறவினர் தான் பிரார்த்தனையை முன்னின்று நடத்த வேண்டும். இங்கேயும் புரோகிதருக்கு வேலையில்லை.


வியாபாரமோ, தொழிலோ, வீடோ எதை ஆரம்பித்தாலும் ''இறைவா! எனது இந்தக் காரியத்தைச் சிறப்பாக்கி வை!'' என்று ஒவ்வொருவரும் உளமுருகி இறைவனை வேண்டி விட்டு ஆரம்பிக்கலாம். மதகுருமார்கள் யாரையும் அழைக்கத் தேவையில்லை என்று தான் இஸ்லாம் கூறுகிறது.


மேலும் பேய், பிசாசு, பில்லி சூனியம், மாயம் மந்திரம், சாஸ்திரம், சகுணம், சோதிடம், ஜாதகம், நல்ல நாள், கெட்ட நாள் என்று புரோகிதர்களின் வருமானத்திற்காக உருவாக்கப்பட்ட காரியங்கள் அனைத்தையும் அறவே இஸ்லாம் மறுக்கிறது.


எந்த நாளிலும், எந்த நேரத்திலும் எந்தக் காரியத்தையும் செய்யலாம் என்பது தான் இஸ்லாம் காட்டும் நெறி.


எனவே அர்த்தமற்ற தத்துவம் ஏதும் இஸ்லாத்தில் இல்லை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Saturday, November 1, 2008

வாளால் வளர்ந்த இஸ்லாம்?


பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.


சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள்.


அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.

இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான்.


எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம் அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.


இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.


"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.


தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.

அறிஞர் அண்ணா

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!