Wednesday, April 19, 2017

பாபர் மசூதி வழக்கு: அத்வானி மீதான விசாரணையின் பின்னணியில் மோடி; லாலு பரபரப்பு

பாபர மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் உயிர்ப்பளித்துள்ள நிலையில் இதன் பின்னணியில் பிரதமர் மோடியின் தந்திர அரசியல் இருப்பதாக லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

அதாவது, குடியரசுத்தலைவர் பதவிப் போட்டிக்கு அத்வானி பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக பிரதமர் மோடியின் ‘நன்கு சிந்தித்த தந்திர அரசியல்’ இது என்று லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கில் இருந்து வருகிறது சிபிஐ. அதனால்தான் உச்ச நீதிமன்றத்தில் நின்று அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணையை உயிர்ப்பித்துள்ளது.

பிரணாப் முகர்ஜிக்குப் பிறகு அத்வானி அடுத்த குடியரசுத் தலைவராகலாம் என்ற செய்திகள் எழுந்த நிலையில் மோடியின் தந்திர அரசியல் இந்த வழக்கின் பின்ணணியில் உள்ளது. 

அரசு என்ன விரும்புகிறதோ அதைச் செய்வதுதானே சிபிஐ வேலை. 

தனக்கு எதிரி யார் என்றாலும் சரி அவரை எதிர்கொள்ள அபாயகரமான அரசியலில் ஈடுபடுவதில் பாஜக-வுக்கும் மற்ற அரசியல் கட்சிகளுக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை” என்று கூறிய லாலு, பாஜக தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஏன் உடல் நலமின்றிப் போனார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று இன்னொரு குண்டைத் தூக்கி போட்டார். 

“ஒரு புறம் காந்தியின் சிலைக்கு மாலையிடுவார்கள், மறுபுறம் அவரைக் கொன்ற நாதுராம் கோட்ஸேவுக்கு சல்யூட் அடிப்பார்கள், இதுதான் பாஜக.” என்றார் லாலு பிரசாத் யாதவ்.

http://m.tamil.thehindu.com/india/பாபர்-மசூதி-வழக்கு-அத்வானி-மீதான-விசாரணையின்-பின்னணியில்-மோடி-லாலு-பரபரப்பு/article9649759.ece

No comments:

Post a Comment