Monday, November 7, 2011

மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் இறையடி சேர்ந்தார்கள்



மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், IFT வெளியிட்டுள்ள திருக்குர்ஆன்  தமிழ் மொழிப்பெயர்ப்பாளருமான மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்கள் 6.11.2011 அன்று மாலை சிங்கப்பூரில் இறையடி சேர்ந்தார்கள்.  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜீவூன்.

தமிழகத்தில் இஸ்லாமிய இயக்கத்தை அனைத்து பகுதிகளில் வேரூன்ற செய்ததில் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்கள்.  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார்கள்.  மேலும் இறைமார்க்கத்தை மேலோங்க செய்கின்ற பணிகளில் தனது இறுதி காலம் வரை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.  தனது 76 வயதிலும் இஸ்லாமிக் சென்டர் வேலூரில் நடைபெற்றுவரும் குல்லியத்துஸலாம் அரபிக்கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்தார்கள்.

இறுதி வரை இறைமார்க்கத்திற்காக பணியாற்றிய மெளலவி குத்புதீன் அஹமத் பாகவி அவர்களது மறுமை வெற்றிகாகவும், அவர்களது குடும்பத்தார்கள் அனைவருக்கும் அமைதி நிலவவும் பிராத்திக்கின்றோம்.

No comments:

Post a Comment