Wednesday, April 30, 2014

வென்று காட்டிய தாருத் தவ்ஹீத்,உதவி செய்த அல்லாஹ்வுக்கு நன்றி

அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்று 30.4.2014இல் தொடங்கும் காட்டுப்பள்ளி தர்கா கந்தூரியைத் தடை செய்ய வேண்டி, மாவட்ட ஆட்சியருக்கு அதிரை தாருத் தவ்ஹீத் மனு ஒன்றை அனுப்பியது (இணைப்பு1).

அதைத் தொடர்ந்து நேற்று (29-04-2014) மாலை 4 மணி அளவில் பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் 'சமாதானக் கூட்டம்' ஏற்பாடு செய்யப்பட்டு, கந்தூரிக் கமிட்டியினரும் கந்தூரியை எதிர்க்கும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரும் அழைக்கப்பட்டிருந்தோம்.
கலந்து கொண்டவர்கள்:

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக
1. எம்.பி. அஹ்மத் (அமீர்)
2. ஜமீல் எம் ஸாலிஹ் (செயலர்)
3. நிஜாமுத்தீன் (பொருளாளர்)
4. கமாலுத்தீன் (இஸ்லாமியப் பயிற்சி மையப் பொறுப்பாளர்)
5. அஹ்மது ஹாஜா
6. மாஜுதீன்
கந்தூரிக் கமிட்டி சார்பாக
1. எம்.எம்.எஸ் ஷேக் [அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு கமிட்டித் தலைவர்]
2. சுல்தால் அப்துல் காதர் (36)
3. மஸ்தான் கனி
4. பத்ருஸ் ஸமான் ( மதார் சா)
5. அப்துல் வாஹித் (கித்தில்)
 
 
தொடக்கமாக, கோட்டாட்சியரின் முன்னுரையை அடுத்து எங்களிடம் கருத்துகள் கேட்டபோது, தாருத் தவ்ஹீத் தொடங்கப்பட்ட 1982லிருந்து 32 ஆண்டுகால தாருத் தவ்ஹீதின் பிரச்சாரங்களில் இதுவரைக்கும் எந்தவொரு சிறு அசம்பாவிதமும் நடந்ததில்லை என்பதையும் சட்டம்-ஒழுங்குக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இதுவரை நாங்கள் நடந்துகொண்டதில்லை என்பதையும் தகவலாகப்  பதிவு செய்துகொண்டு, "எங்களுடைய கருத்துகளைக் கேட்டுப் பதிவு செய்து அதை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என்று நகரக் காவல்துறை ஆய்வாளர் எங்களை அழைத்தார். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது; அதற்குத் தடை வேண்டும் என்ற எங்களுடைய உறுதியான கருத்துகளை ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலமாக அனுப்பிவிட்டோம்" என்றும் சுட்டிக் காட்டினேன். "லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருள் உங்களுக்கே தெரிந்திருக்கும். வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே என்று அதற்குப் பொருள். கந்தூரியை வழிபாடு என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள். கந்தூரிக் கமிட்டியினரும் வழிபாடு என்றே குறிப்பிடுகின்றனர்.  இரண்டு பேருக்கு வழிபாடுகள் என்பது இஸ்லாத்தில் கிடையாது. உள்ளூரிலும் வெளியூரிலும் வசூல் செய்து, ஒருவருடைய இறந்த தினத்தை மேள தாளங்களோடு மகிழ்ச்சியோடு கொண்டாடுவது என்பது கந்தூரிக் கமிட்டியாரின் வழக்கமாக இருக்கிறது. இது எவ்வளவு மோசமான செயல்?
சட்டம்-ஒழுங்கைப் பற்றி மட்டும் உங்களுக்குப் பிரச்சினை. எங்களுடைய பிரச்சினை என்னவென்றால், கந்தூரி என்பது இஸ்லாத்தில் உள்ளதுதான் என்பதை நிறுவச் சொல்லுங்கள்; நாங்களும் சேர்ந்து செய்கிறோம். கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு எதிரானது என்பதை நாங்கள் நிறுவுகிறோம்; நிறுத்திவிடச் சொல்லுங்கள்" என்று தீர்வு சொன்னேன்.
நாகூரிலும் அஜ்மீரிலும் முத்துப்பேட்டையிலும் போய் நிறுத்திவிட்டு வரும்படி அதிமேதாவித்தனமான பதிலை மதார் சா வைத்தார்.
"நாகூர் கந்தூரியைப் பற்றி நாகப்பட்டின ஆர்டிஒ ஆஃபிசிலும் முத்துப்பேட்ட கந்தூரியைப் பற்றி திருவாரூர் ஆர்டிஓ ஆஃபீஸிலும் பேச்சுவார்த்தை நடக்கும். பட்டுக்கோட்டை ஆர்டிஓ ஆஃபீஸில் நாம் உட்கார்ந்திருப்பது அதிராம்பட்டினத்துக் கந்தூரியைப் பற்றிப் பேசுவதற்காக" என்று விளக்கினேன்.
கந்தூரியை நிறுத்துவதற்குத் தமக்கு அதிகாரம் இல்லை என்று கோட்டாட்சியர் கூறிவிட்டு, கந்தூரியை அமைதியாக நடத்துவதற்கு உங்களுடைய கண்டிஷன் என்ன? என்று கேட்டார். அதற்கு, "கந்தூரியே கூடாது என்பதுதான் அவர்களுடைய கண்டிஷன்" என்று காவல்துறை ஆய்வாளர் பதிலளித்தார். நாங்கள் ஆமோதித்தோம்.
எம்.எம்.எஸ் ஷேக் அவர்கள் [அதிரை அனைத்து முஹல்லா கமிட்டி தலைவர்], கந்தூரிகள் ஆல் ஓவர் இந்தியாவில் நடப்பதாகக் குறுக்கிட்டார்.
அதுவரை பொறுமையாக இருந்த அமீர் அவர்கள் தம்மை ஆங்கிலத்தில் கோட்டாட்சியரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, "இந்தியா முழுக்கவும் நடந்தாலும் கந்தூரி என்பது இஸ்லாத்துக்கு முரணானது" என்பதை ஆங்கிலத்தில் எடுத்துக் கூறினார். கந்தூரி எதிர்ப்பாளர்களின் வீட்டுக்கு எதிரே வேண்டுமென்றே பாட்டும் கூத்தும் நெடிய நேரம் நடத்துவது வழக்கமாயிருக்கிறது என்ற அமீரின் குற்றச்சாட்டுக்கு, "பெண்கள் கூட்டம் நின்றால், கூத்து நடக்கத்தான் செய்யும்" என்று மஸ்தான் கனி கூறியதும் ஹாஜாவுக்குப் பற்றிக் கொண்டது. மறைந்த சகோ. அபுல்ஹஸன் அவர்களின் வீட்டுக்கு எதிரே நடந்த நீண்ட நேரக் கூத்தும் அதற்கு எதிர்வினையாக மிளகாய்த் தண்ணீர் அபிஷேகமும் நடத்தப்பட்டதை எடுத்துச் சொல்லி, யார் வீட்டுப் பெண்கள்? முஸ்லிம் வீட்டுப் பெண்கள் வீட்டுக்கு எதிரே கூத்துப் போடுவதுதான் வழிபாடா? அப்படி நடந்தால் கலவரம் ஏற்படாதா? எனப் பொங்கிவிட்டார். கோட்டாட்சியர் அமைதிப்படுத்த முயன்றபோது, தான் இரண்டாண்டுகளுக்கு முன்னர் இதே மேலத்தெரு கந்தூரி ஊர்வலத்தில் கொலைவெறியுடன் தாக்கப்பட்டதையும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியால் பாதிக்கப்பட்டு இன்றுவரை ச்சார்ஜ் ஷீட் போடப்படாமல் காவல்துறை இழுத்தடிப்பதையும் தான் ஹஜ்ஜுக்குப் போவது தாமதப்படுவதையும் எடுத்துரைத்தார்.
மேலத்தெருவில் கந்தூரிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதாக நிஜாமுத்தீன் கூறியபோது எம்.எம்.எஸ் ஷேக், மேலத்தெரு கமிட்டிதானே கந்தூரி நடத்துகிறது? மேலத்தெருவில் எதிர்ப்பு எப்படி வரும்? எனக் கேட்டார். அதற்கு, "நாளைக்கு மேலத்தெரு ஜமா அத் கூட்டத்தைக் கூட்டுவோம். அப்போது தெரியும் எவ்வளவு எதிர்ப்பு இருக்கிறதென்று" என்று நிஜாமுத்தீன் புள்ளி வைத்தார். கந்தூரி முடிந்து கூட்டுவோம் என்று எம்.எம்.எஸ் ஷேக் பதிலளித்தார். நிஜாமுத்தீன் விடாமல், "நாளைய கந்தூரிக்கு எதிர்ப்பு எவ்வளவு எனத் தெரிந்துகொள்வதற்குக் கந்தூரி முடிந்தபின் கூடி என்ன பிரயோஜனம்?" என்று எதிர் கேள்வி கேட்டபோது பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத பேச்சுகள் குறுக்கிட்டன.
அல் பாக்கிதத்துஸ்ஸாலிஹாத் பள்ளி அருகில் பதட்டம் இருப்பதை நிஜாமுத்தீன் பதிவு செய்தபோது, மதார் சா "அவர்களில்தான் யாராவது சிலர் பிரச்சனை உண்டாக்குவார்கள்" எனப் பழியை எங்கள் மீது சுமத்தப் பார்த்தார். அதற்கு, "L&O பிரச்சனை வரக்கூடாது என்பதால்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளோம். L&O problem உண்டு பண்ணிதான் தீர்வு என நாங்கள் நம்பினால் அதையும் நாங்கள் செய்வோம்.  இரண்டாம் தர வேலை செய்ய மாட்டோம். நீங்கள் அதை விரும்பினால் அமைதிப் பேச்சு வார்த்தை மெத்தேடை மாற்றிக்கொள்வோம். எப்படி வசதி?" என நிஜாமுத்தீன் எதிர்க் கேள்வி வைத்தார்.
"மழையில்லாமல் செடிகளெல்லாம் கருகிக் கிடக்கின்றன. எங்கள் வீட்டுக்கு அருகில் வைத்துதான் வெடி விடுகிறார்கள். தீ விபத்து நடப்பதற்கு முன்னெப்போதையும்விட இந்த வறட்சி காலத்தில் வாய்ப்புகள் அதிகம்" என்பதை மாஜுதீன் பதிவு செய்தார்.
இறுதியாக சமாதானக் கூட்ட நடவடிக்கைகள் ப்ரிண்ட் செய்து வந்தது.
அதிலிருந்த 'மேலத்தெரு ஜமாஅத்தினரும்' என்பதை நிஜாமுத்தீன் எதிர்த்ததில் அது முழுதும் நீக்கப்பட்டது. காட்டுப்பள்ளிவாசல் என்பது காட்டுப்பள்ளி தர்கா என்று திருத்தப்பட்டது. கடைத்தெரு சாலையின் வடக்குப் பக்கம் முழுமையாகக் கந்தூரி ஊர்வலம் போகாது என்று கந்தூரிக் கமிட்டியினரால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட உறுதியை எழுத்தில் (ஆறாவது ப்பாயிண்ட்டாக) இணைக்க வலியுறுத்தினோம் (இணைப்பு).
 
 http://adirainirubar.blogspot.com/2014/04/blog-post_30.html

Tuesday, April 29, 2014

தர்காக்களை இடிக்குமா புதிய அரசு! முஸ்லிம்கள் கோரிக்கை!!

மே மாதம் 16ல் இந்தியாவின் ஆட்சிக் கட்டிலில் அமரப் போவது யார் என்று தெரிந்துவிடும்.எந்தக் கட்சியாக இருந்தாலும்,மனிதர்கள் என்ற முறையில் மட்டும் பார்த்து நல்லாட்சியை வழங்க வேண்டும் என்பதே எல்லோரின் ஆசை.இதில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவன் என்று கூறு  போடும் யாரையும் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்பது திண்ணம்.எல்லா மக்களும் சமமே.

அதே நேரத்தில்,அந்த, அந்த மதத்தை சேர்ந்த மக்களுக்கு ஒரு கடமை இருக்கிறது.

இந்துக்கள் அல்லது கிறிஸ்தவர்கள் அவர்களின் மத கூற்றுக்கு மாறாக செயல்படும் அந்த, அந்த மக்களுடைய பிரச்சனைகளை அரசிடம் பேசி தீர்வு காணவேண்டும்.

உதாரணமாக,இந்துக்கள் தங்கள் இந்து மத பெயர் சொல்லி பெண்களை ஏமாற்றும் சாமியார்களையும்,கிறிஸ்தவர்கள் தங்கள் மத பெயர் சொல்லி அசிங்கங்கள் செய்யும் பாதிரிமார்களையும் தங்கள் மதம் தானே அவர்கள் என்று பாராமல் அரசிடம் சொல்லி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போன்று முஸ்லிம்களும் செய்ய வேண்டும்.

அதோடு, முஸ்லிம்களுக்கு கூடுதலாக இன்னொரு ஒரு கடமையும் உண்டு.

இஸ்லாத்திற்கும் தர்கா கலாச்சாரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.எனவே,புதிதாக ஆட்சிக்கு வரப் போகும் அரசிடம் இனியும் காலம் தாழ்த்தாமல்,இந்தியா முழுக்க உள்ள தர்காக்களை இடித்து தரை மட்டமாக்கிவிட்டு அங்கெல்லாம் மருத்துவ மனைகள்,பள்ளிக் கூடங்கள்,மதரசாக்கள் கட்ட வேண்டும்,மேலும் இஸ்லாத்திற்கு சம்பந்தம் இல்லாத தர்காக்களை வைத்து பிழைப்பு நடத்துவோரை கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம்கள் எழுப்ப வேண்டும்.தான் வயிறு வளர்க்க,இஸ்லாத்தின் மேல் பொய் உரைக்கும் அவர்களை முஸ்லிம்கள் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
மேலும்,முஸ்லிம்கள் வழிப்படும் இடம் மஸ்ஜித்கள்தான் என்பதை புரிய வைக்க வேண்டும்.
இது குறித்து,இந்து, கிறிஸ்தவ சகோதரர்களுக்கு புரிய வைத்து,இந்தியாவில் சாந்தியும் சமாதானமும் நிலவ முஸ்லிம்கள் உழைக்க வேண்டும்.

Sunday, April 27, 2014

ஆட்சி அமைக்கப்போவது யார்!கருத்து திணிப்பு முடிவுகள்!!

ஆட்சி அமைக்கப்போவது யார்!கருத்து திணிப்பு முடிவுகள்!!

அல்லாஹ்வே ஆட்சியை தருகிறான்.அல்லாஹ்வே ஆட்சியிலிருந்து அகற்றுகின்றான்.எல்லா ரகசியங்களும் அவன் மட்டுமே அறிந்தவன்.எனவே,யார் ஆட்சி அமைக்கப் போவது என்பதும் அவன் மட்டுமே அறிந்தது.

எல்லா மீடியாக்கலையும் அலசி,பெறப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பே மன்னிக்கவும் கருத்து திணிப்பே இது.

எனவே,இது போன்று நடக்கவும் செய்யலாம்,அல்லது நடவாதும் போகலாம்.அல்லாஹு மிக அறிந்தவன்.

இனி

பாஜக கூட்டணி      223
காங்கிரஸ் கூட்டணி 180
மூன்றாம் அணி      120
(அதிமுக,திமுக,திரிணாமுல்,கம்யூனிஸ்ட்,மற்ற சில மாநில கட்சிகள் சேர்த்து)
ஆம் ஆத்மி            15
சுயேச்சைகள்           5

மொத்தம்             543

யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது.

Saturday, April 26, 2014

மெளலானா தானீசரி அவர்களுக்கு தூக்கு தண்டனை,தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவு!

மெளலானா தானீசரி அவர்களுக்கு தூக்கு தண்டனை,தில்லி உயர்நீதி மன்றம் உத்தரவு!

ஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்த ஊர் பல வரலாற்றுச் சம்பவங்களுக்கு சொந்தமானது. இவற்றுள் சில வெறுப்புகளும் சில சிறப்புகளும் உள்ளன. அவற்றுள் ஒன்று , இஸ்லாமிய மெளலானாக்களையும் மார்க்க அறிஞர்களையும் அடக்க நினைத்த ஆங்கில அரசு அவர்கள் மேல் புனையப்பட்ட பொய் வழக்குகளைப் போட்டதுமாகும். அத்தகைய வழக்கால் பாதிக்கப் பட்ட ஒரு வீரத் தியாகியின் வரலாற்றின் பக்கங்களைப் பகிரும் முன்பு இந்த அம்பாலாவில் உள்ள சிறையைப் பற்றிய ஒரு சிறப்பை சொல்லிவிட மகிழ்வுடன் மனம் துடிக்கிறது. ஆம்! இந்தியாவில் எந்த சிறைக்கும் கிடைக்காத சிறப்பு இந்த சிறைக்குக் கிடைத்தது. தேசத்தந்தை- மகாத்மா காந்தியை ஒரு முஸ்லிம் போல் வேடமிட்டு தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு கொடூரமாக சுட்டுக் கொன்ற கோட்சேயை தூக்கிலிட்டு அவன் பிணத்தை தொங்கவிட்ட பெரும்பேறு இந்த அம்பாலா சிறைக்குத்தான் கிடைத்தது. 
சதி வழக்குகளும் அவதூறு வழக்குகளும் பொய்வழக்குகளும் புனையப்பட்ட வழக்குகளும் இன்றைய அரசியலில் மட்டும்தான் என்று இல்லை. அன்றைய அரசியலிலும் இருந்தன. அன்று இத்தகைய வழக்குகளை வெள்ளைக்காரன் போட்டான்; இன்று இந்த வழக்குகளை சொந்தக்காரன் போடுகிறான். ஆக, ஆட்சி அதிகாரம் இருந்தால் ஆணவம் பிடித்து அலையும் கூட்டம் அன்று மட்டுமல்ல இன்றும் இருக்கின்றன.
இந்திய சுதந்திர வரலாற்றில் "அம்பாலா சதி வழக்கு" என்ற ஆங்கிலேயரால் சதிவலை பின்னப்பட்ட வழக்கொன்று உண்டு. இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கள் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களாவார்கள். இந்த மார்க்க அறிஞர்கள் லக்னோ, அலிகர் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இவர்களுள் மெளலானா முகமது ஜாபர் தானீசரி, மெளலானா யஹ்யா அலி, முகமது ஷாபி லாஹூரி ஆகியோர்களாவார்கள். இவர்களுள் மெளலானா முகமது ஜாபர் தானீசரி அவர்கள் எழுதி வைத்த நாட்குறிப்பின் ஏடுகள் நமது நரம்புகளைப் புடைக்கச் செய்யும் சில செய்திகளை நமக்குச் சொல்கின்றன. தம்முடைய சொந்த வார்த்தைகளால் மெளலானா அவர்கள் வடித்துத்தரும் வரலாற்றின் வடுக்களையும் அவர்கள் அனுபவித்த வலிகளையும் இன்று இங்கு பகிர்வோம்.
இதோ மெளலானா தானீசரி அவர்களின் நாட்குறிப்பு நம்மோடு பேசுகிறது :-
“என் கை கால்களில் விலங்கிடப்பட்டேன். கழுத்தில் ஒரு கனத்த இரும்பு வளையம் மாட்டப்பட்டு , அதை ஒரு சங்கிலியால் பிணைத்து அதன் நுனியை ஒரு காக்கி உடை அணிந்த காவலன் தந்து கையால் பிடித்து இருந்தான். கால்நடைகள் போல நாங்கள் கட்டி இழுத்துவரப் பட்டோம். எனக்கு வலப்புறமும் இடப்புறமும் காவல்துறையின் உயர் அதிகாரியான பார்ஸனும் இன்னொருவனும் அமர்ந்திருந்தார்கள். அவர்களின் கரங்களில் கைத்துப்பாக்கிகள்! நான் அசைந்தாலும் என்னைச் சுட்டு எனது உடம்பை சல்லடையாக்கும் சக்திபடைத்த கைத்துப்பாக்கிகள். அலிகாரில் எங்களை ஏற்றிக் கொண்டு டில்லி நோக்கிப் புறப்பட்ட அந்த காவல்துறை வேன் வழியில் எங்குமே நிறுத்தப்படவில்லை. எனக்கு உணவோ, குடிக்கத் தண்ணீரோ தரப்படவில்லை. சிறுநீர் கழிப்பதற்கும் அவர்கள் விடவில்லை. ஆனால் தொழுகை நேரம் வரும்போதெல்லாம் உடனிருந்த அதிகாரிகளின் அனுமதி இல்லாமலேயே “ தயம்மம்” செய்து கொண்டு உட்கார்ந்த நிலையிலேயே தொழுது எனது இறைவனை வணங்கிக் கொண்டேன். எனது இந்தச் செயலை யாரும் தடுக்க முற்படவில்லை. 
டில்லியின் உயர் அதிகாரியின் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். அங்கிருந்த ஒரு இருண்ட சுரங்க அறையில் அடைக்கப்பட்டேன். மறுநாள் டில்லியில் இருந்து முதலில் கர்நாளுக்கும் அதன்பின் அம்பாலாவுக்கும் என்னைக் கொண்டு சென்றனர். அம்பாலாவில் தூக்கு மரம் ஊன்றி நடப்பட்டிருந்த அறையில் உண்ண உணவின்றி அடைக்கப்பட்டேன். பின்னர் , அளவு குறைந்த உணவு தரப்பட்டேன். இதே நிலையில் 1863 டிசம்பர் முதல் 1864 ஏப்ரல் வரை ஐந்து மாதங்கள் அடைக்கப்பட்டுக் கிடந்தேன். அப்போது நான் அடைக்கபப்ட்டதாக அல்ல புதைக்கப்பட்டதாகவே உணர்ந்தேன்.
இடையில் புனித ரமலான் மாதம் வந்தது. நான் நோன்பு பிடிக்கத் தொடங்கினேன். அந்த நிலையில் என்னைத் தனி அறையில் வைத்து நாங்கள் செய்த சதியின் திட்டங்கள் என்ன – அதில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று விசாரித்தார்கள். நான் உண்மைகளைச் சொன்னால் விலங்குகளைக் கழற்றி விடுவித்துவிடுவதாக ஆசை காட்டினார்கள். நான் வாய் திறக்காவிட்டால் தூக்கில் இடுவோமென்று மிரட்டினார்கள். நான் எதற்கும் வாய் திறக்கவில்லை. 
இந்த நிலையில் பார்ஸன் என்கிற உயர் அதிகாரி என்னை அடித்தான். காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணிவரை என் மீது விழுந்த அடிகள் உலகில் மற்ற எவர் மீதும் விழுந்து இருக்குமா என்பது கேள்விக்குறி. இந்த மாதிரி சோதனையான நேரங்களில் அவற்றைத் தாங்கும் வல்லமையை வழங்கும்படி எனது இறைவனிடம் துஆச் செய்து கொள்வேன். அவ்வளவு அடிகளையும் நோன்பு பிடித்துக் கொண்டே தாங்கிக் கொள்ளும் வல்லமையை அந்த வல்லவன் வழங்கினான். நோன்பு திறப்பதற்கு மரங்களின் இலைகளைக் கூடப் பறித்துத் தின்னும் நிலமைகளெல்லாம் ஏற்பட்டன. 
நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்ட போது நீதிபதி என்னை நோக்கி, "நீ உனது மார்க்க அறிவை தெளிவாக ஓதிப் படித்து இருக்கிறாய். எனது கண்களுக்கு அறிவாளியாகவும் கல்வியாளராகவும் தென்படுகிறாய். ஆனாலும் உனது அறிவையும் ஆற்றலையும் ஆங்கில அரசுக்கு எதிராக இயங்க பயன்படுத்தினாய். இந்த அரசின் எதிரிகள் என்று கருதப் படுபவர்களுக்கு பணமும் படையும் உணவும் கிடைப்பதற்கு உதவி செய்து அவர்களுக்கு ஊக்கமூட்டினாய். பலமுறை விசாரித்தும் அதன் உண்மை விபரங்களை வெளியிடவும் மறுத்துவிட்டு உண்மைகளை ஒப்புக் கொண்டு ஒத்துழைப்பும் தரவில்லை. ஆகவே,
  • உனக்கு தூக்கு தண்டனை வழங்குகிறேன் ; 
  • உனது அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடுகிறேன் ;
  • உனது உடல் கூட உனது சொந்தக்காரர்களிடம் தரப்படாமல் இறுதிக் காரியங்கள் செய்யவும் உத்தரவிடுகிறேன்"

என்று கடுமையானதும் கொடுமையானதுமான தீர்ப்பை வழங்கினார். 
நீதிமன்றத்தில் கூடி இருந்த எனது உறவினர்களும் நண்பர்களும் இந்த தீர்ப்பைக் கேட்டு கதறி அழுதனர். ஆனால் எனக்கோ, எனது இறைவன் எனது நாட்டுக்காக நான் செய்யும் தியாகத்துக்குப் பரிசாக தனது சொர்க்கத்தின் கதவைத் திறந்ததாகவே உணர்ந்தேன். அந்த சொர்க்கம் எனது கண்முன் நிழலாடியது. அதனால் எனது மனம் மகிழ்ந்ததை உணர்ந்தேன். 
எனக்கு மரண தண்டனை வழங்கப் பட்டதற்குப் பிறகு சிறைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள், “அழவேண்டிய நீ ஆனந்தப்படுகிறாயே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டனர். அதற்கு நான் ‘ஷஹாதத்’ என்கிற உயிர்த் தியாகம் செய்யும் பெரும் பேறு எனக்குக் கிடைக்கிறது என்ற நிலைமை என்னை மகிழ்ச் செய்துவிட்டது என்று பதில் அளித்தேன். 
தூக்கில் இடப்படும் நாளை, நானும் எனது நண்பர்களும் எதிர்பார்த்து இருந்த இடைப்பட்ட நாட்களில் எங்களுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி மாரடைப்பால் மாண்டு போனான் என்கிற செய்தியையும் என்னை கடுமையாகவும் கொடுமையாகவும் அடித்து சித்ரவதை செய்த பார்ஸன் என்கிற அதிகாரிக்கு பைத்தியம் பிடித்ததாகவும் கேள்விப்பட்டோம். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்த பெரியவன். 
அப்போது அல்லாஹ் இன்னொரு மாற்றத்தை எங்கள் வாழ்வில் ஏற்படுத்தினான். 1844ஆம் வருடம் செப்டம்பர் 16 ஆம் தேதி அம்பாலா சிறைகூடத்தின் தலைவர், நாங்கள் அடைபட்டுக் கிடந்த அறைக்கு வந்து, “நீங்கள் தூக்கு தண்டனையை வரவேற்று மகிழ்கிறீர்கள். அது உங்களின் இறைவனின் பரிசு என்று எண்ணுகிறீர்கள். உங்களை அப்படிப்பட்ட மகிழும் நிலையில் வைக்க இந்த அரசு விரும்பவில்லை ஆகவே உங்களின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படுகிறது” என்று சொன்னான். இறைவன் தரும் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் எங்களிடம் இருந்ததால் இதையும் ஏற்றுக் கொண்டோம். பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனிடம் உதவி தேடினோம். 
அத்தோடு எங்களை அந்தமான் தீவில் இருந்த செல்லுலார் சிறைக்கு இட மாற்றம் செய்தார்கள். அந்த சிறைச்சாலையின் சட்டப்படி எங்களின் தாடி, மீசை மற்றும் தலை முடிகள் மழித்து சிரைக்கப்பட்டன. அப்போதுதான் எங்களுக்கு முதன்முதலில் கண்ணீர் வந்தது. எங்களில் மெளலானா யஹ்யா அலி அவர்கள் துண்டிக்கப்பட்டு தரையில் வீசப்பட்ட தாடியின் முடிகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு இந்த நாட்டின் சுதந்திரத்துக்கான அல்லாஹ்வின் பாதை என்று நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையின் வழியில் நீயும் பிடிக்கப்பட்டு துண்டிக்கப்பட்டாயா? என்று கேட்டு கண்ணீர் வடித்துக் கதறினார். “
இப்படி நம்மிடம் பேசிய மெளலானா தானீசரி அவர்களின் நாட்குறிப்பு அவர்களின் தியாகத்தின் ஒவ்வொரு நிலைகளையும் நம்மை நினைக்கச் சொல்லி நம்மை கண்ணீர் வடிக்க வைக்கிறது. 
நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தை அல்லாஹ்வின் பாதையின் போராடும் தூய போராட்டமாகவே மார்க்கம் படித்த அறிஞர்கள் கருதினார்கள் என்பதை மெளலானா தானீசரி அவர்களின் வரலாறு அவரது வார்த்தைகளிலேயே நமக்குச் சொல்கிறது. 
இன்ஷா அல்லாஹ் இந்தத் தொடர் விரைவில் நிறைவுறும்.
இபுராஹீம் அன்சாரி
==================================================================
எழுத உதவியவை:- 
வேலூர் அல்-பாகியாத் நூற்றாண்டு விழா மலர். 
பேராசிரியர் மு அப்துல் சமது அவர்களின் “தியாகத்தின் நிறம் பச்சை.”
 
 நன்றி
 
http://adirainirubar.blogspot.com/2014/04/blog-post_26.html

Thursday, April 24, 2014

அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு,25 தொகுதிகளில் சர்வே,யார் வெற்றி ! சர்வே எண் 4

அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு,25 தொகுதிகளில் சர்வே,யார் வெற்றி !

வெற்றி அல்லது தோல்வி தருவது இறைவன் மட்டுமே.நம்மைப் பொருத்தவரை களத்தில் நின்று சர்வே எடுக்கலாம்.ஏற்கனவே வந்த கருத்து கணிப்புக்களை அலசி,அதன்படி சர்வே பண்ணலாம்.இதில் உண்மையாக உள்ள கணக்கெடுப்பும் உண்டு,பணத்துக்கு,தான் சேர்ந்த கட்சிக்கு என்று போலியான சர்வேயும் உண்டு.

இந்த சர்வே,பல sources களையும் அலசல் செய்து,எடுத்த கருத்து கணிப்பு. ஒரு change க்கு கருத்து திணிப்பு

இப்போ யாருக்கு வெற்றி கிடைக்கலாம் என பார்க்கலாம்,இறைவன் மிக அறிந்தவன்.
 
 
ஸ்ரீ பெரும்புதூர்      திமுக
திருவண்ணாமலை  திமுக
கள்ளக்குறிச்சி       அதிமுக
சேலம்               அதிமுக
திண்டுக்கல்          அதிமுக
கரூர்                  அதிமுக
பெரம்பலூர்           அதிமுக
தென்காசி             புதிய தமிழகம்
திருவள்ளூர்          அதிமுக
தென் சென்னை       திமுக
கிருஷ்ணகிரி          அதிமுக
விழுப்புரம்              திமுக
நாமக்கல்              அதிமுக
திருப்பூர்               தேமுதிக
நீலகிரி                  திமுக
தேனி                   காங்கிரஸ்
கோவை               திமுக
பொள்ளாச்சி           திமுக
அரக்கோணம்         அதிமுக
தருமபுரி               பா ம க
ஆரணி                 அதிமுக
ஈரோடு                 அதிமுக
விருதுநகர்              மதிமுக
தூத்துக்குடி              அதிமுக
பாண்டிச்சேரி            காங்கிரஸ் 


 

அதிமுக                   16
திமுக                     12

காங்கிரஸ்                 5
இ யூ முஸ்லிம் லீக்       1
பாமக                       1    
மதிமுக                     1
தேமுதிக                    1
ம ம க                      1
பு தமிழகம்                  1
வி சிறுத்தைகள்             1
பாஜக                        0
ஆம் ஆத்மி                  0

மொத்தம்                    40


Wednesday, April 23, 2014

அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு,5 தொகுதிகளில் சர்வே,யார் வெற்றி ! சர்வே எண் 3

அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு,5 தொகுதிகளில் சர்வே,யார் வெற்றி !

வெற்றி அல்லது தோல்வி தருவது இறைவன் மட்டுமே.நம்மைப் பொருத்தவரை களத்தில் நின்று சர்வே எடுக்கலாம்.ஏற்கனவே வந்த கருத்து கணிப்புக்களை அலசி,அதன்படி சர்வே பண்ணலாம்.இதில் உண்மையாக உள்ள கணக்கெடுப்பும் உண்டு,பணத்துக்கு,தான் சேர்ந்த கட்சிக்கு என்று போலியான சர்வேயும் உண்டு.

இந்த சர்வே,பல sources களையும் அலசல் செய்து,எடுத்த கருத்து கணிப்பு. ஒரு change க்கு கருத்து திணிப்பு

இப்போ யாருக்கு வெற்றி கிடைக்கலாம் என பார்க்கலாம்,இறைவன் மிக அறிந்தவன்.
 
 
திருச்சி                அதிமுக
கடலூர்                அதிமுக
மயிலாடுதுறை        மனிதநேய மக்கள் கட்சி
சிவகங்கை             காங்கிரஸ்
மதுரை                  அதிமுக 


அடுத்த ரவுண்டில் என்ன?

இன்ஷா அல்லாஹ் நாளை பார்க்கலாம்

Tuesday, April 22, 2014

அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு,5 தொகுதிகளில் சர்வே,யார் வெற்றி ! சர்வே எண் 2

அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு,5 தொகுதிகளில் சர்வே,யார் வெற்றி !

வெற்றி அல்லது தோல்வி தருவது இறைவன் மட்டுமே.நம்மைப் பொருத்தவரை களத்தில் நின்று சர்வே எடுக்கலாம்.ஏற்கனவே வந்த கருத்து கணிப்புக்களை அலசி,அதன்படி சர்வே பண்ணலாம்.இதில் உண்மையாக உள்ள கணக்கெடுப்பும் உண்டு,பணத்துக்கு,தான் சேர்ந்த கட்சிக்கு என்று போலியான சர்வேயும் உண்டு.

இந்த சர்வே,பல sources களையும் அலசல் செய்து,எடுத்த கருத்து கணிப்பு. ஒரு change க்கு கருத்து திணிப்பு

இப்போ யாருக்கு வெற்றி கிடைக்கலாம் என பார்க்கலாம்,இறைவன் மிக அறிந்தவன்.
 மத்திய சென்னை திமுக
நாகை திமுக
திருநெல்வேலி திமுக
வட சென்னை அதிமுக
காஞ்சிபுரம் அதிமுக

இனி அடுத்த ரவுண்டில் பார்க்கலாம்

Monday, April 21, 2014

அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு,5 தொகுதிகளில் சர்வே,யார் வெற்றி !

அதிரடி தேர்தல் கருத்து திணிப்பு,5 தொகுதிகளில் சர்வே,யார் வெற்றி !


வெற்றி அல்லது தோல்வி தருவது இறைவன் மட்டுமே.நம்மைப் பொருத்தவரை களத்தில் நின்று சர்வே எடுக்கலாம்.ஏற்கனவே வந்த கருத்து கணிப்புக்களை அலசி,அதன்படி சர்வே பண்ணலாம்.இதில் உண்மையாக உள்ள கணக்கெடுப்பும் உண்டு,பணத்துக்கு,தான் சேர்ந்த கட்சிக்கு என்று போலியான சர்வேயும் உண்டு.

இந்த சர்வே,பல sources களையும் அலசல் செய்து,எடுத்த கருத்து கணிப்பு. ஒரு change க்கு கருத்து திணிப்பு

இப்போ யாருக்கு வெற்றி கிடைக்கலாம் என பார்க்கலாம்,இறைவன் மிக அறிந்தவன்.

தஞ்சாவூர் - திமுக
ராமநாதபுரம் - காங்கிரஸ்
கன்னியாகுமரி - காங்கிரஸ்
வேலூர் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்
சிதம்பரம் - விடுதலை சிறுத்தைகள்

ஆக திமுக கூட்டணி 3
      காங்கிரஸ் 2
இனி அடுத்த ரவுண்டில் பார்க்கலாம்

Sunday, April 20, 2014

மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன் பேட்டி

உலகை உலுக்கிய புகைப்படங்களில் ஒன்று குதுபுதீன் அன்சாரியினுடையது. உடலில் காயங்களுடனும் சட்டையில் ரத்தக் கறைகளுடனும் கண்களில் மரண பயத்துடனும் இரு கைகளையும் கூப்பி உயிர்ப் பிச்சை கேட்கும் குதுப்பின் படம்தான் குஜராத் கலவரத்தின் கொடூர முகத்தை உலகம் முழுவதும் கொண்டுசென்றது. 2002, பிப்ரவரி மாதத்தில் முஸ்லிம்கள் மீது இந்து அமைப்புகள் நடத்திய வெறியாட்டத்தை நரேந்திர மோடியின் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சூழலில், அகமதாபாதில் துணை ராணுவப் படைகள் நுழைந்தன. அகமதாபாத் நகரின் மேல் கரும் புகை சூழ்ந்திருந்தது. ஆங்காங்கே தீவைக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளில் ஒன்று குதுப்பினுடையது. இரு நாட்களாகவே வெவ்வேறு கும்பல்கள் அந்தப் பகுதியையே சூறையாடிக்கொண்டிருந்த நிலையில், உயிருக்குப் பயந்து பதுங்கியிருந்தார் குதுப். அன்று காலை அந்த வீடும் கலவரத்துக்கு இலக்கானது. வீட்டைச் சுற்றிலும் தீ சூழ்ந்திருந்த நிலையில் - மரணத்தின் தீ நாக்குகள் - நெருங்கிக் கொண்டிருந்த சூழலில்தான் - அதிர்ஷ்டவசமாக ஒரு ராணுவ வாகனம் அந்தப் பகுதியில் நுழைந்தது. குதுப் மீட்கப்பட்டார். ‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனத்தில் பணியாற்றிய அர்கோ தத்தாவால் எடுக்கப்பட்ட குதுப்பின் படம் மறுநாள் உலகெங்கும் உள்ள பல முன்னணிப் பத்திரிகைகளிலும் வெளியான பின் அந்தப் படம் குதுப்பை வாழ்நாள் முழுக்கத் துரத்தத் தொடங்கியது. அவர் உயிர் பிழைக்க குஜராத்திலிருந்து மகாராஷ்டிரம் சென்றார்; அங்கிருந்து அவர் வேலையை விட்டு அந்தப் புகைப்படம் துரத்தியது. மேற்கு வங்கம் சென்றார்; அங்கும் துரத்தியது. 10-க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் படத்தைப் பற்றித் தெரியவந்த பின்னர், அவரை வேலையை விட்டுத் துரத்தினர். ஒருகட்டத்தில் குதுப்பே இந்தத் துரத்தலுக்கு முடிவுகட்டினார். அவர் மீண்டும் குஜராத் திரும்பினார். அடிப்படையில் ஒரு தையல்காரரான அவர், தன் தையல் இயந்திரத்திடம் தன்னை ஒப்படைத்துக்கொண்டார். சிறிய வீடொன்றை அவர் இப்போது கட்டியிருக்கிறார். அங்கு தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வசிக்கும் குதுப்பைச் சந்தித்தேன். இன்னமும் மறையாத பயமும் நிறைய தயக்கமும் உறைந்திருக்கும் குதுப்பிடமிருந்து வெளிப்படும் வார்த்தைகள் நேரடியானவை அல்ல. ஆனால், அவற்றின் பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. மனிதத்தின் மனசாட்சியை உலுக்கும் வார்த்தைகள் அவை.
கலவரத்தில் நீங்கள் சிக்கியிருந்த அந்தக் காலகட்டத்தை இன்றைக்கு நினைவுகூர முடியுமா?
நான் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நாட்டுக்கே தெரியும், அப்போது என்ன நடந்தது என்று. நான் மீண்டும் அதைச் சொல்ல விரும்பவில்லை. ஒரு விஷயம் மட்டும் சொல்வேன். நான் அன்றைக்குச் செத்துவிட்டேன். அப்படியான நிலையில் உயிர் மட்டும் உள்ள ஒரு பிணமாகத்தான் இருந்தேன். கடவுள் அருளால் பிழைத்தேன்.
ஆளும் கட்சியிடமிருந்து உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறதா?
நான் இதெல்லாம்பற்றிப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள். ஏதோ இருக்கும் காலத்தைக் கொஞ்சமாவது நிம்மதியுடன் வாழ நாங்கள் நினைக்கிறோம்.
மன்னியுங்கள்... அந்தப் படம் இன்னமும் உங்களைத் துரத்துகிறதா?
இங்கே குதுப் வீடு எது, எங்கிருக்கிறது என்று கேட்டால், யாராவது ஒருவர் வழிகாட்டிவிடுவார். ஒரு சாமானிய வாழ்க்கை வாழ்பவனுக்கு இப்படிப்பட்ட அடையாளம் சுமை. (அருகில் உள்ள மேஜைக்கு அடியில் உள்ள ஒரு பெரிய பையை எடுப்பவர் அதிலிருந்து நான்கு புகைப்படங்களை எடுத்துக் காட்டுகிறார். சமீபத்தில் வெளியான ஒரு இந்திப் படத்தின் ஒரு பாத்திரம், சுவரில் மாட்டியிருக்கும் குதுப் படத்தைத் துப்பாக்கியால் குறிபார்க்கும் படங்கள் அவை. அவற்றைக் காட்டிச் சொல்கிறார்...) இப்படி எவ்வளவோ இடங்களில் தேவையே இல்லாமல் நான் குறிவைக்கப்படுகிறேன்.
கலவரங்களின்போது முற்றிலுமாகத் தீக்கிரையான பகுதிகளில் இதுவும் ஒன்று. இப்போது ஓரளவுக்கு எல்லா வீடுகளுமே புதுப்பித்துக் கட்டப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அரசாங்கம் உதவியதா?
நாங்கள் இப்போது முன்பைவிட மேம்பட்டிருக்கிறோம் என்றால், முன்பைவிடக் கடுமையாக உழைக்கிறோம் என்பதுதான் அதன் அர்த்தம். எங்கள் வாழ்க்கைக்காக, குழந்தைகளுக்காக, எதிர்காலத்துக்காக மிகக் கடுமையாக உழைக்கிறோம். அது ஒன்றுதான் காரணம்.
மிகக் கடுமையான வன்முறையைப் பார்த்த நீங்கள், அந்த அரசாங்கமும் உங்களுக்குச் சாதகமாக இல்லாத நிலையில், பின் எந்த நம்பிக்கையில் மீண்டும் குஜராத் திரும்பினீர்கள்?
இரண்டு நம்பிக்கைகள். ஒன்று, இந்த குஜராத்தான் எங்கள் பூர்வீக மண். என் தந்தையும் தாத்தாவும் அவர் முன்னோர்களும் பிறந்து வளர்ந்த மண். இத்தனை தலை முறைகளாக எங்களைக் காத்த மண் கைவிட்டுவிடாது என்ற நம்பிக்கை. இன்னொரு நம்பிக்கை, இத்தனை தலைமுறைகளாக இதே இந்து சகோதரர்கள் மத்தியில்தான் நாங்கள் இணைந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இனியும் அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை.
அற்புதமான விஷயம். இந்த நன்னம்பிக்கை துளிர்விட எது காரணமாக அமைந்தது என்று தெரிந்துகொள்ளலாமா?
கலவரத்தின்போது ஏதோ ஒரு தீய சக்தி எல்லோரையும் இயக்கியதேயன்றி, கலவரத்துக்குப் பின் எல்லோரையுமே இந்தக் கலவரம் சங்கடப்பட வைத்தது. இங்கே எங்களுக்கு நிறைய இந்து சகோதரர்கள் உதவினார்கள். அன்றைய காலகட்டத்தில் அவர்கள் செய்த சின்ன உதவிகள்கூட எங்களுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருந்தது. என்னை மீண்டும் குஜராத்துக்கே அழைத்தவர்களில் இந்து நண்பர்களும் உண்டு. இந்தக் காரணங்கள்தான் என் நம்பிக் கைக்கான அடிப்படை.
மோடியைப் பற்றியும் அவருடைய ஆட்சியைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்?
மோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.
குஜராத் கலவரங்களுக்குப் பின் மோடி முஸ்லிம்களுக்காக நிறையச் செய்திருப்பதாகவும் அவருக்கு முஸ்லிம்களின் ஆதரவு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது...
எனக்குத் தெரிந்து இங்கு முஸ்லிம்களில் ரியல் எஸ்டேட் காரர்களைப் போன்ற பெருவியாபாரிகள், தரகர்கள் சிலர் தங்கள் பிழைப்புக்காக அவரை ஆதரிப்பது உண்டு. மற்ற வர்கள் யாருடைய நம்பிக்கையையும் அவர் பெறவில்லை.
கலவரத்துக்குப் பின், பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நம்பிக்கையைப் பெற அவர் ஒன்றுமே செய்யவில்லையா?
உங்களுக்கு அசோக் மோச்சியைத் தெரியும்தானே... குஜராத் கலவரத்தில் என் புகைப்படத்தைப் போலவே, கத்தியுடன் கைகளை உயர்த்தியபடி சத்தமிடும் அவர் படமும் பிரபலம். பின்னாளில் அவர் மனம் மாறினார். முஸ்லிம்களுக்குத் தான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்பு கேட்டார். இன்றைக்கு என் குடும்பத்தில் அவரும் ஒருவர். மோடிஜி அப்படியெல்லாம் ஒரு வார்த்தை வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதுதான் உண்மை.
இன்றைக்கு இந்தியா முழுவதும் மோடியைப் பற்றியும் அவர் குஜராத்தில் கொண்டுவந்திருப்பதாகச் சொல்லப்படும் வளர்ச்சியைப் பற்றியும்தானே பேசுகிறார்கள்...
ஒரேயொரு உதாரணம். சகோதரர் அசோக் மோச்சியையே எடுத்துக் கொள்வோம். அன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருந்தார், இன்றும் அவர் செருப்புதான் தைத்துக்கொண்டிருக்கிறார். வசதியானவர்கள் மேலும் வசதியாவதை நான் வளர்ச்சியாக நினைக்கவில்லை.
அப்படியென்றால், உங்கள் பார்வையில் எதை வளர்ச்சியாக - ஒரு அரசாங்கம் உருவாக்க வேண்டிய விஷயமாக - கருதுகிறீர்கள்?
காலையில் எழுந்திருக்கிறோம். வேலைக்குப் போகிறோம். கடுமையாக உழைக்கிறோம். மாலையில் வீடு திரும்புகிறோம். இரவாவது குடும்பத்தோடு உட்கார்ந்து சாப்பிட முடிய வேண்டும். அவர்களோடு நிம்மதியாகப் பேச முடிய வேண்டும். முக்கியமாக, பயம் இல்லாமல் தூங்க முடிய வேண்டும். அதுதான் மனித வாழ்க்கையின், வளர்ச்சியின் வெளிப்பாடு. சந்தோஷமான சூழலின் வெளிப்பாடு. ஒரு அரசாங்கம் அதைத்தான் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்தப் பேட்டியில் என் கேள்விகள் முடிந்துவிட்டன. இந்தக் கேள்விகளுக்கு அப்பாலும் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா?
நாம் எல்லோரும் சேர்ந்து வாழத்தான் இறைவன் இவ்வளவு பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறார். இந்த நாட்டின் விசேஷமும் அதுதான். யாருக்காகவும் எதற்காகவும் நாம் பிரிந்து நிற்கக் கூடாது. இந்த நாட்டைச் சிதைத்துவிடக் கூடாது.
-ஆரத் தழுவி விடைகொடுக்கிறார் குதுப்.
தொடர்புக்கு: samas@kslmedia.in 

 http://tamil.thehindu.com/

Saturday, April 19, 2014

யார் இந்த ஹக்கீம் ?

யிரத்திற்கும் அதிகமானவர்கள் கூடியிருந்த அந்த அரங்கில் அனைவரது பார்வையும் மேடையில் இருக்க, பார்வையில் இல்லாத ஒருவர் மேடை ஏற்றப்பட்டு இவர்தான் இந்த ஆண்டில் சிறந்த இளம் சாதனையாளர் ஹக்கீம் என்று அறிவித்து 'பெட்டகம்' அமைப்பினர் கௌரவ விருதினை வழங்கியபோது மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியது
யார் இந்த ஹக்கீம்
கோவை போத்தனுாரில் கூலி தொழிலாளியான முகம்மதிற்கும், சாலிஹாவிற்கும் பிறந்தவர்தான் ஹக்கீம். பிறவியிலேயே பார்வை இல்லை. ஆனால் அதை குறையாக எண்ணாமல் அடுத்து என்ன என்ற எண்ணத்துடன் வளர்ந்தார்.
பார்வை குறைபாட்டை கொடுத்த அதே இறைவன் இவருக்கு அபார ஞாபகசத்தியை கொடுத்தார். இதனால் ஆரம்பத்தில் பார்வையற்ற பள்ளியில் படித்தவர் அனைவருக்குமான பள்ளியில் பிரமாதமாக படித்தார், படிக்கும் போதே தான் ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து. நினைத்தபடியே இரண்டாயிரத்து எட்டாம் ஆண்டில் ஆசிரியர் பணியில் அமர்ந்தார்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகிறது ஆசிரியராகி இப்போது இவரது வகுப்பு என்றால் மாணவர்களுக்கு பிரியம் அதிகம் அந்த அளவிற்கு மிகச்சிறப்பாக பாடம் நடத்துகிறார், மாணவர்களை மதிப்பெண் எடுக்கவைக்கிறார். மொத்தத்தில் தான் பயிற்றுவிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகிறார்.
இதுவரை இவரிடம் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படித்துள்ளனர் அனைவருமே சமூக அறிவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளனர். இதற்கு இவர் பாடம் நடத்தும் முறையும் ஒரு காரணம்.தனது அபார ஞாபக திறன் காரணமாக பாடப் புத்தகங்களையும், பாடதிட்டங்களையும் உள்வாங்கிக் கொண்டுள்ள இவர் அதனை மாணவர்கள் மனதில் உட்காரும் வகையில் அருமையாக சுவராசியமாக நடத்துகிறார். இதன் காரணமாக மாணவர்கள் துாக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட பதில் சொல்லுமளவிற்கு பாடத்தில் தெளிவாக இருக்கின்றனர்.
முப்பத்திரண்டு வயதான ஹக்கீமுக்கு திருமணமாகிவிட்டது மனைவி சபியா.கணவரின் கண்ணாக செயல்படுகிறார்.
ஹக்கீம் போத்தனுாரில் இருந்து தனியாகவே பஸ் ஏறி பள்ளிக்கு வந்துவிடுவார், கேட்டால் என்னால் முடியும் என்ற நம்பிக்கை முதலில் எனக்குள் வரவேண்டும் அப்படி வந்தால்தான் நான் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கமுடியும் என்பவர் எப்போதுமே யாரிடம் இருந்தும் இரக்கத்தை எதிர்பார்ப்பவர் அல்ல.
மாணவர்கள் குறும்பானவர்கள்தான் ஆனால் அவர்களை மதித்தால் அவர்களைப் போல அன்பானவர்களை எங்கும் பார்க்கமுடியாது அவர்களது அகக்கண்ணை திறக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும் அந்த பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று சொல்லும் ஹக்கீமை பாராட்ட நினைப்பவர்கள் அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9344479898.(பள்ளி நேரங்களிலும்,பாடதிட்டத்தை தயாரிக்கும் நேரங்களிலும் போனை எடுக்கமாட்டார் பிறகு வீட்டில் உள்ளோர் துணையுடன் மிஸ்டு கால் பார்த்து அனைவருடனும் பேசிவிடுவார்)
- எல்.முருகராஜ்
http://www.dinamalar.com/news_detail.asp?id=958105

பாகிஸ்தானுக்கு போ!முஸ்லிம்களுக்கு பாஜக பகிரங்க மிரட்டல் !!

மோடியைப்பற்றி விமர்சிப்பவர்களுக்கு  இந்தியாவில் இடம் இல்லை, அவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என்று பீகார் மாநில பாஜக தலைவர்களுள் ஒருவரான கிரிராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பேசிய கிரிராஜ் சிங், பாஜக பிரமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கு தடையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம். வருங்காலத்தில் அவர்களுக்கு இந்தியாவில் இடம் இருக்காது. பாகிஸ்தானில் மட்டுமே இடம் இருக்கும். என்றார். சர்சைக்குரிய வகையில் பேசிய கிரிராஜ்க்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 http://www.dinamani.com/latest_news/2014/04/19/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/article2177598.ece

Wednesday, April 16, 2014

ஒருமுறை என்னை மன்னித்து விடுங்கள், இனி பாஜகவுடன் சேர மாட்டேன்,ஜெயலலிதா கெஞ்சினார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தேர்தல் ஆதரவு நிலைப்பாடு சுயநலனா ?. சமுதாய நலனா ?.

சிதம்பரம்,திருவள்ளூர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி,
தென்காசி - புதிய தமிழகம் கட்சி
,
மயிலாடுதுறை, தேனி,கன்னியாகுமரி - காங்கிரஸ் கட்சி
மற்ற தொகுதிகளில் திமுக வுக்கு நிபந்தனையுடன் ஆதரவு.


ஏன் இந்த மாற்றம் ?. இந்த மாற்றததிற்கு காரணம் சுயநலனா ?. சமுதாய நலனா ?.

---சுயநலன் என்றால் ?.

ஜெயலிலதாவுக்கு ஆதரவு என்றதும் எழுந்த எதிர்ப்பலைகளின் போதே மாற்றி இருக்க முடியும் !. எந்தளவுக்கு எதிர்ப்பு கிளம்பியது என்றால், முதுபெரும் மார்க்க அறிஞரும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத்தலைவருமாகிய சகோதரர் பீஜே அவர்களை ஜெயலலிதாவின் காலில் விழுவதைப் போல் சில கயவர்கள் க்ராஃபிக்ஸ் செய்து இணையத்தில் வெளியிட்டனர்.

மாநிலத் தலைவர் மட்டுமல்லாமல் நிர்வாகிகள் முதற்கொண்டு உறுப்பினர்கள் வரை கடும் சொற்களால் காயப்படுத்தப்பட்டனர். கடும் மனஉலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

இதற்கெல்லாம் சொல்லப்பட்ட ஒரே காரணம் சமுதாய காவலர் கலைஞரை விட்டு மோடியின் சகோதரி ஜெயலலிதாவிடம் போகலாமா என்பது தான்.

அர்த்தமற்ற இந்த காரணத்துக்காக, வரலாறு தெரியாதவர்களின் புலம்பலுக்காக அவற்றை அனைவரும் சகித்துக்கொண்டனர். சகித்துக்கொண்டால் சமுதாயத்திற்கு மிகப்பெரிய நன்மை பயக்கும் என்பதை கருத்தில் கொண்டே சகித்துக்கொள்ளப்பட்டது. அதனால் அப்பொழுது அதிமுகவுக்கான ஆதரவு எனும் நிலைப்பாட்டை மாற்றவில்லை.

---சமுதாய நலனே காரணம்.

ஆனால் பொதுசிவில்சட்டம் நடைமுறைபடுத்தப்படுமேயானால் அதற்கு கீழ் இந்த இடஒதுக்கீட்டை அனுபவிப்பதை விட மடிவது மேல். அல்லாஹ்வின் சட்டத்தை விட்டுக்கொடுத்து வயிறு வளர்ப்பதை விட, இருப்பதைக் கொண்டு வாழ்ந்து அல்லாஹ்வின் சட்டத்தை மேலோங்கச் செய்வதே மேல்.

இடஒதுக்கீடா ?, பொதுசிவில் சட்டமா ?. என்றால் பொதுசிவில் சட்டம் தடுக்கப்படுவதே மேல், அதனடிப்படையில் இதற்கு எதிர்ப்புதெரிவிக்காத ஜெயலலிதாவை விட்டு விலகியதனால் இதில் சுயநலமில்லை, இது சமுதாய நலனை பிரதிபலிக்கிறது.


---தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தே முன்மாதிரி:

பொதுசிவில் சட்டம் என்பது கன்டிப்பாக இந்த நாட்டில் எந்த கொம்பனாலும் நடைமுறைப்படுத்தவே முடியாது, அப்படி ஒரு நிலை வரும் என்றால் ஒவ்வொரு முஸ்லீமும் தங்களது உயிரைக் கொடுத்தேனும் அதை தடுப்பார்கள்.

அதனடிப்படையில் அனைத்து சமுதாய சேவைகளுக்கும் முன்மாதிரியாக திகழக் கூடிய தமிழ்நாடு தவஹீத் ஜமாத் இந்த பொதுசிவில் சட்டம் என்ற ஆரிய அடக்குமுறைக்கு எதிராக களமிறங்கி விட்டது. அல்லாஹூஅக்பர்.

ஆதரவு வாபஸ் என்றதும் ஜெயலிலதா அவர்கள் முதன் முதலாக பாஜகவுககு எதிராக குரல் கொடுத்துப் பார்த்தார்கள் இந்த ஆசை வார்த்தைக்கெல்லாம் அடங்கிவிடாது தவ்ஹீத் ஜமாத் என்பதை உணர்த்தப்பட்டு விட்டது.

ஏற்கனவே ஒருமுறை என்னை மன்னித்து விடுங்கள் இனி பாஜகவுடன் சேர மாட்டேன் என்றார் ஜெயலலிதா. அதே போல் மீண்டும் ஒருமுறை அல்லாஹ் சொல்ல வைப்பான்.

முழுக்க முழுக்க சமுதாய நலனை கருத்தில் கொண்டே இந்த முடிவை சிந்தித்து எடுத்த மாநிலத்தலைமைக்கு முஸ்லீம் சமுதாயம் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

Thanks to A.M.Farook,
Adirai

Tuesday, April 15, 2014

முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர்.மமக,ததஜ,SDPI ஆதரவில் திமுக கூட்டணி.கலங்கும் ஜெயலலிதா!

முஸ்லிம்கள் ஓரணியில் திரண்டனர்.மமக,ததஜ,SDPI ஆதரவில் திமுக கூட்டணி.கலங்கும் ஜெயலலிதா!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சியில் கூடி தங்கள் முடிவை அறிவித்தார்கள்.அதன்படி,பா ஜ க வை பற்றி கண்டு கொள்ளாத அதிமுகவிற்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெற்று,திமுக,சிறுத்தைகள்,3 இடங்களில் காங்கிரஸ்,புதிய தமிழகம் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் திமுக கூட்டணி வலுப்பெற்றுள்ளத்தோடு,ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள தமுமுக,sdpi போன்ற அமைப்புக்களில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவும் இருப்பதால்,வலுவான கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

இத் தேர்தலில் எல்லா முஸ்லிம் அமைப்புக்களும் ஒருமித்து முடிவெடுத்து இருப்பதால்,தமிழகத்தின் எல்லா தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்புள்ளது,இன்ஷா அல்லாஹ்.

Monday, April 14, 2014

அமெரிக்காவில் சிவப்பு நிலா ?

அமெரிக்காவில் சிவப்பு நிலா ?

இன்ஷா அல்லாஹ் இன்று இரவு ஏப்ரல் 15 2014 நள்ளிரவு அளவில் (சுமார் இரவு 1 மணியிலிருந்து)சந்திர கிரகணம் ஏற்பட உள்ளதாக nasa அறிவித்துள்ளது.அப்படி ஏற்படும்போது,அது சிவப்பு நிலவாக (red moon) காட்சியளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

எனவே,சந்திர கிரகணம் ஏற்படும்போது அதற்காக ஏகன் அல்லாஹ்விடம் இரண்டு ரக் அத்கள் தொழ வேண்டும் என நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பணித்துள்ளார்கள்.இதை நாமும் தொழுது,மற்றவர்களிடமும் எத்திவைப்போம்.


Sunday, April 13, 2014

PJ என்ன சொல்லப் போகிறார்? எதிர் பார்க்கும் தமிழகம்!

தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு எதிராகப் பேசாததால் அதிமுவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தவ்ஹீத் ஜமாஅத் அறித்துள்ளது. 

தவ்ஹீத் ஜமாஅத் கட்சியின் உயர்நிலைக்குழு சென்னையில் சனிக்கிழமையன்று கூடியது. இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தியபிறகு, அதிமுகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில தலைவர் PJ கூறுகையில், ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்து ஆதரவு அளித்து வந்தோம். ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது புகார் கூறி பேசி வருகிறார். ஆனால், பாஜக பற்றி இதுவரையில் எதுவும் பேசவில்லை. எனவே, எங்களின் ஆதரவை வாபஸ் பெறுகிறோம். அடுத்து என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து வரும் திங்கள் கிழமை ஆலோசித்து அறிவிப்போம்’’ என்றார். 


இந்த திடீர் அறிவிப்பால் முதல்வர் ஜெயலலிதா அரண்டு போய்,இப்போது பீ ஜே பீ பற்றியும் வாய் திறக்க ஆரம்பித்துள்ளார்.ஆனாலும்,கர்நாடக பாஜக பற்றி மட்டுமே குறை கூறியுள்ளார்,மோடி பற்றியோ அகில இந்திய அளவிலோ பாஜக பற்றி வாய் திறக்கவில்லை.எனவே,இது முஸ்லிம்களை ஏமாற்றும் தந்திரம் என்பதில் சந்தேகமில்லை.எனவே,த த ஜ தலைவர் பீ ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு ஆதரவளித்து விடாமல்,முஸ்லிம்கள் அனைவரது ஓட்டுக்களும் சிதறி விடாமல் திமுக விற்கு வாக்களிக்க வேண்டுமென்பதே முஸ்லிம்களின் விருப்பம்.





Thursday, April 10, 2014

மோடிக்கு தூக்கு தண்டனை

நீதிமன்றங்களும், புலனாய்வு அமைப்புகளும் குஜராத் கலவரம் குறித்து முறையான, நேர்மையான விசாரணையை மேற்கொண்டிருந்தால் நரேந்திரமேடிக்கு தூக்குத்தண்டனை கிடைத்திருக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ.,

திருச்சி தொகுதி சிபிஎம் வேட்பாளர் எஸ்.ஸ்ரீதருக்கு ஆதரவாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கிள்ளுக்கோட்டை, அண்டக்குளம், ஆதனக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமையன்று பிரச்சாரம் செய்த அவர் பேசியதாவது:

மத்திய அரசு கடந்த 10 வருடங்களில் 100 முறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக வரலாறுகாணாத விலைவாசி உயர்வு ஏற்பட்டது. உரத்திற்கான மானியத்தை வெட்டிய மத்திய அரசு பெரு முதலாளரிகளுக்கு மட்டும் 21 லட்சம் கோடி ரூபாயை வரிச்சலுகையாக வாரி வழங்கியது. இதில் வெறும் 5 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்குத் தந்திருந்தால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பஞ்சமே வந்திருக்காது. கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருந்த 70 லட்சம் கோடி ரூபாயை மீட்டிருந்தால் இந்தியா வல்லரசாகியிருக்கும்.
 கடந்த 14 வருடங்களாக தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்து பாஜக, காங்கிரஸ் கூட்டணி அரசுகள் கொண்டுவந்த மக்கள் விரோத நடவடிக்ககைகளுக்கு துணைபோன கட்சிதான் திமுக. அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நீலகிரியில் ஆ.ராசாவை அருகில் வைத்துக் கொண்டு ஊழலை ஒழிக்க உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்கிறார்.
குஜராத் படுகொலையில் சம்மந்தப்பட்ட 32 உயர்போலீஸ் அதிகாரிகள் இன்னமும் சிறையில் இருக்கின்றனர். மோடி அரசில் பங்கேற்ற பெண் அமைச்சர் ஆயுள்தண்டனை கைதியாக இருக்கிறார். அந்த அரசுக்குத் தலைமை வகித்த மோடி பிரதமராக வரலாமா? நீதிமன்றங்களும், புலனாய்வுத்துறைகளும் முறையான விசாரனை மேற்கொண்டிருந்தால் மோடிக்கு தூக்குத்தண்டனை கிடைத்திருக்கும்.
பாஜகையோ, மோடியையோ ஒரு வார்த்தைகூட பேசாத ஜெயலலிதா, ஏற்கனவே செத்த மாட்டைப்போல இருக்கின்ற காங்கிரசைப் போட்டு அடி, அடியென்று அடிக்கிறார். பாஜக கூட்டணியில் உள்ள வைகோ, ராமதாஸ், விஜய்காந்த் போன்றவர்கள் ஜெயலலிதாவை பிரச்சாரத்தில் வறுத்து எடுக்கின்றனர். ஆனால் அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பிஜேபியினர் அதிமுகவை ஒருவார்த்தைகூட பேசாமல் அசடு வழிகின்றனர். இது அதிமுகவிற்கும் பிஜேபிக்கும் உள்ள கள்ள உறவைத்தானே காட்டுகிறது.
 சில ஆண்டுகளில் பாராளுமன்றத் தொகுதி வாரியாக மாவட்டங்களை பிரிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்ற இருக்கிறது. அப்படி வரும் பட்சத்தில் புதுக்கோட்டை மாவட்டமே காணாமல் போகும் சூழல் உருவாகும். புதுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதி பறிபோனதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட கட்சிகளே காரணம். இழந்த தொகுதியை மீட்பதற்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து சிபிஎம் வேட்பாளர் எஸ்.ஸ்ரீதரை வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனப் பேசினார்.
-    இரா.பகத்சிங்

 http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=119758

இந்தக் கொலைகாரன் திருமணமானவன்

மோடி தமக்கு திருமணமானதை ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் வழக்கு போட்டு தன்னை அசிங்கப்படுத்துவார் என பயந்து நரேந்திர மோடி திடீரென ஒப்புக் கொண்டார்.


பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தன்னை திருமணமானர்.. தனது மனைவி பெயர் ஜஷோட பென் என வேட்புமனுவில் முதல்முறையாக அறிவித்துள்ளார். 


ஆம் ஆத்மி கட்சியினர் வழக்கு போட்டு உண்மையை உலகுக்கு சொல்ல வைத்துவிடுவார்களோ என்று பயந்துபோய்தான் பாரதிய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தமக்கு திருமணமானதை பகிரங்கமாக இம்முறை ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட போதெல்லாம் வேட்புமனுவில் தமது திருமணம் குறித்த இடத்தில் எதுவும் குறிப்பிடாமல்தான் தாக்கல் செய்து வந்தார் நரேந்திர மோடி. அவர் பொதுக்கூட்டங்களில் பேசும் போது கூட, தமக்கு குடும்பம் எதுவும் இல்லை.. நான் ஏன் ஊழல் செய்ய வேண்டும் என்பதுதான் பேச்சாக இருக்கும்.
இதற்கு பதிலளித்து ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் பேசுகையில், என் மனைவியைத் தவிர என்னை யார் பார்த்துக் கொள்ள முடியும். நான் ஏதாவது தவறு செய்தால் என் மனைவிதான் தடுக்க முடியும் என்றும் கூறி வந்தார். 
அத்துடன் ஆம் ஆத்மிதான் மோடிக்கு திருமணமான விவகாரத்தை அம்பலப்படுத்தி வந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கையும் கூட தாக்கல் செய்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
 
 http://www.adiraixpress.in/2014/04/blog-post_9900.html#.U0bhsaLbVMg

Wednesday, April 9, 2014

சபாஷ் தினமணி

பக்கத்து வீடு பற்றி எரியும்போது நாம் மட்டும் நிம்மதியாகத் தூங்க முடியுமா? இந்தியாவின் துரதிர்ஷ்டம், நம்மைச் சுற்றி இருக்கும் அண்டை நாடுகள் அனைத்திலுமே உள்நாட்டுப் பிரச்னைகள். பிரதமர் மன்மோகன் சிங் மியான்மருக்குத்தான் தனது கடைசி வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். அப்போதாவது, மியான்மரின் உள்நாட்டுப் பிரச்னைகள் இந்திய ஊடகங்களில் முன்னுரிமை பெற்றதா என்றால் இல்லை. இலங்கையில் நடைபெறும் இன அழிப்புக்கு எள்ளளவும் குறைவில்லாத இன அழிப்பு முயற்சி மியான்மரிலும் நடைபெற்று வருகிறது என்பதுதான் அதிர்ச்சியான உண்மை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கு மியான்மர் மாநிலமான ராக்கைனில் வெடித்த கலவரமும் வன்முறையும் நீறு பூத்த நெருப்பாக இருந்தது மாறி, கடந்த ஒரு மாதமாக மியான்மரின் ஏனைய பகுதிகளிலும் தீவிரமடைந்திருப்பது, நாம் கவலைப்பட்டாக வேண்டிய ஒன்று. வங்கதேசத்தையும், நமது மிசோரம் மாநிலத்தையும் ஒட்டிய ராக்கைன் பகுதியில், மியான்மரில் வசிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்
களுக்கு எதிரான இந்த வன்முறைத் தாக்குதல் மனித உரிமை மீறல் பிரச்னையாகவும் மாறியிருக்கிறது.
ராக்கைனிலும், மியான்மரின் ஏனைய பகுதிகளிலும் வெடித்
திருக்கும் கலவரம், பல நூற்றாண்டுகளாக மியான்மரை தங்கள் தாயகமாக்கிக் கொண்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரானது. மியான்மரிலுள்ள அரக்கான் எனும் பகுதியில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் கி.பி.1400 முதல் அந்தப் பகுதியைத் தங்கள் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். நாரமெய்க்லா என்கிற புத்த அரசரின் அவையில் ஆலோசகர்களாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இருந்திருக்கிறார்கள்.
கி.பி.1785இல் தென் மியான்மரிலிருந்து படையெடுத்து வந்த புத்த மதத்தைச் சேர்ந்த பர்மியர்கள், அப்போது அரக்கான் பகுதியில் வாழ்ந்து வந்த ஏறத்தாழ எட்டு லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்களில் குறைந்தது 35,000 பேரையாவது கொன்று குவித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதெல்லாம் பழைய கதை. இப்போது பர்மா என்பது மியான்மராகப் பெயர் மாற்றப்பட்டு, அரக்கான் உள்ளிட்ட ராக்கைன் பிராந்தியம் புத்தமதச் சார்புள்ள ராணுவத்தின் அதிகாரத்தில் இருக்கிறது. பெயருக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, குடியரசுத் தலைவர் இருந்தாலும்கூட மியான்மரின் நிர்வாகம் ராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், சமூக மேலதிகாரம் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டிலும்தான் இருக்கின்றன.
புத்தமத வெறியர்கள் கடந்த ஓராண்டாக மசூதிகள், ரோஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் என்று திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தி, அவர்களை ஓட ஓட விரட்டிக் கொன்றிருக்கிறார்கள். ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைந்து சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் அகதிகள் என்றும், அவர்கள் வங்கதேசத்திற்கு விரட்டப்பட வேண்டும் என்பதும்தான் மியான்மரின் பெரும்பான்மையினரான புத்தமதத்தவர்களின் கருத்து. மியான்மர் முழுவதுமே இந்த இன அழிப்பு திட்டமிட்டே நடத்தப்படுகிறது.
இந்த இன அழிப்பு முயற்சியில் புத்த பிக்குகள் ஈடுபட்டிருப்பது மட்டுமல்ல, மியான்மர் அரசே மறைமுகமாக இதை ஆதரிக்கிறதோ என்றுகூட சந்தேகிக்கத் தோன்றுகிறது. கடந்த இருபது ஆண்டுகளாகவே, மியான்மரின் ராணுவ அரசு சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களை ஆதரித்து, அதன் மூலம் பெரும்பான்மை புத்தமதத்தினரின் நம்பிக்கையைப் பெற முற்பட்ட வண்ணம் இருந்திருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தீன் செய்னின் ஜனநாயக சீர்திருத்த நடவடிக்கைகள் பிடிக்காமல், ராணுவம் மறைமுகமாக இதுபோன்ற கிளர்ச்சிகளை ஊக்குவித்து அதன் மூலம் அரசைக் கவிழ்க்க முயற்சிக்கிறதோ என்கிற ஐயப்பாட்டிற்கும் இடமுண்டு.
ஏறத்தாழ 1,40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இவர்களுக்கு முறையாக உணவு, உடை, மருத்துவ வசதிகள் வழங்கப்படுவதில்லை. ஏறத்தாழ ஏழு லட்சம் பேர் பல கிராமங்களில் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திட்டமிட்டு புத்தமதத்தினரால் நடத்தப்படும் இந்த இன அழிப்பை ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு கண்டித்திருக்கிறது.
இலங்கையில் சிறுபான்மை இந்துக்கள்; மியான்மரில் சிறுபான்மை முஸ்லிம்கள். இதுதான் வித்தியாசம். இந்த இன அழிப்புகளுக்குப் பின்னால் அன்பை போதித்த புத்தரின் வழிநடப்பவர்கள். என்ன அநியாயம் இது...
ஆமாம், ஆங் சான் சூ கீ இதுபற்றி எதுவும் மூச்சுவிடாமல் இருக்கிறாரே, ஏன்? அடக்குமுறைக்கு எதிராகப் போராடியவருக்கு இன அழிப்பு ஒருவேளை தவறாகப் படவில்லை போலிருக்கிறது...
http://www.dinamani.com/editorial/2014/04/10/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82-%E0%AE%95%E0%AF%80-/article2159500.ece

Tuesday, April 8, 2014

வண்ணக் காகிதங்களில் மறைக்கப்பட்ட மதவாத கோட்பாடுகள்

பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை வண்ணக் காகிதங்களில் மறைக்கப்பட்ட மதவாத கோட்பாடுகள், இவை நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி விமர்சித்துள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த அந்தோணி முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், பாஜக தேர்தல் அறிக்கை அக்கட்சியின் மதவாத கொள்கையை தெளிவாக உணர்த்துகிறது என்றார்.
மேலும் அவர் கூறியதாவது, "ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து மீதான அக்கட்சியின் நிலைப்பாடு, பிரிவினைவாதிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் சாதகமாக் அமையும்.
ஆப்கன் அதிபர் தேர்தல் முடிவுகளை இந்தியா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் பாஜக தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து குறித்து வெளியாகியுள்ள கருத்து எல்லை பிரச்சினைகளை அதிகரிக்கும். குறிப்பாக ஆப்கனில் இந்தியாவுக்கு விரோதமான ஆட்சி அமையும் பட்சத்தில் எல்லை பிரச்சினை மேலும் வலுக்கும்.
காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெறும் முடிவு பிரிவினையையே ஊக்குவிக்கும் ஆனால் இத்தருணத்தில் தேசத்திற்கு தேவையானது உணர்வுப்பூர்வமான ஒற்றுமையே.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாடு எதிர்கொள்ளவிருக்கும் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு மக்கள் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கே வாக்களிப்பார்கள். மதச்சார்பற்ற கட்சிகளின் உதவியோடு, ஐ.மு.கூட்டணி மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்". இவ்வாறு அந்தோணி கூறினார். 

The hindu,tamil
 

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!