Tuesday, February 28, 2012

விபசாரி மகன்.மனுதர்மம்


கலைஞரா பிராமணர்களை சீண்டுகிறார்? முதலில் உம்மை பிராமணன் என்று சொல்லிக் கொள்வது பார்ப்பனர் அல்லாத மக்களைச் சீண்டுவது ஆகாதா? நீவீர் பிராமணன் என்றால் நாங்கள் யார்? சூத்திரர் கள் என்று எங்களை மறைமுகமாகச் சொல்லிச் சீண்டுவது ஆகாதா?
உங்கள் மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது?
சூத்திரன் ஏழு வகைப்படும்: 1) யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன் 2) யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன். 3) பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியஞ் செய்கிறவன். 4) விபசாரி மகன். 5) விலைக்கு வாங்கப்பட்டவன், 6) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்  7) தலைமுறையாக ஊழியம் செய்கிறவன்.
(மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).
ஓ பிராமணர்களே! - எங்களை நீங்கள் விபசாரி மகன் என்று எழுதி வைத்துள்ளீர்களே.அதனை இன்று அளவுக்கும் உறுதிபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளை ஏற்படுத்திக் கொண்டு, நாங்கள் துவி ஜாதியினர் இருபிறப்பாளர்கள், நாங்கள் பிராமணர்கள், பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று விடாப்பிடியாக இந்நாள் வரை பூணூலைப் புதுப்பித்துக் கொண்டு திரிகிறீர்களே இது எங்களைச் சீண்டுவது ஆகாதா?
விபசாரி மகன் என்று எங்களை இன்றுவரை சொல்லும் நிலையில்கூட பொறுமை காத்துக் கொண்டிருக்கிறோம் என்ற திமிரில் இன்றைக்கும் பூணூல் அணிந்து கொண்டு திரிகிறீர்களே,
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர், உரிமை என்றால் சூத்திரன் பஞ்சமன் கருவறைக்குள் நுழைவதா? சாமி தீட்டுப்படும் என்று கூறுகிறீர்களே - உச்சநீதிமன்றம் வரை சென்று தடுக்கிறீர்களே! இவ்வளவும் செய்துவிட்டு கருணாநிதி சீண்டுவதாகக் கூறலாமா?
தந்தை பெரியார் தனது இறுதிப் பேருரையில் (மரண சாசனம்) (19.12.1973) திட்டவட்டமாகவே கூறினாரே!
இந்து நூற்றுக்கு மூன்று பேர் பார்ப்பனர்களைத் தவிர பாக்கி 97 பேர் தேவடியாள் மக்கள், என்று பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள் என்று சட்டத்திலே எழுத வைத்திருக்கிறார்கள்.  இதற்கெல்லாம் காரணம், என்ன? திருப்பிச் சொல்லாத காரணம் அவர்களைக் கண்டிக்காத காரணம் என்ன?  திருப்பிச் சொல்லாத காரணம், அவர்களைக் கண்டிக்காத காரணம், பார்ப்பானைக் கண்டால் வாப்பா தேவடியாள் மகனே, எப்ப வந்தே? என்று கேட்க வேண்டும். ஏண்டா அப்படிக் கேட்கிறாய்? என்றால் நீ எழுதி வைத்ததடா - என்னைத் தேவடியாள் மகன் என்று! எனவே உன்னைத் தேவடியாள் மகன் என்று கூப்பிடுகிறேன் என்று சொல்ல வேண்டும்! என்ன தப்பு?
- என்று தந்தை பெரியார் இறுதி உரையில் மரண சாசனமாக கூறியுள்ளார் என்பதை நினைவூட்டுகிறோம்.
பார்ப்பனர்களே துள்ளாதீர்கள்! துள்ளாதீர்கள்!
தந்தை பெரியார் சொன்னபடி நாங்கள் உங்களைப் பார்க்கும் இடங்களில் எல்லாம் கேட்கவும் நேரிடும் எச்சரிக்கை!
---- நன்றி விடுதலை,28-02-2012

Friday, February 24, 2012

மரண அறிவிப்பு


புதுமனை தெரு வை சார்ந்த மர்ஹும் முசெமு அப்துல் மஜீத் அவர்களின் மகனும் வக்கீல் முனாஃப், மர்ஹும் அப்துல் வாகித், பொளஜூல் அமீன், இவர்களின் தகப்பனாரும் ஜம்ரூத் அவர்களின் மாமனாருமான எம் எஸ் எம் அப்துல் காதர் (75) அவர்கள் இன்று மதியம் காலமாகி விட்டார்கள்(இன்னா...) அன்னாரின் ஜனாசா நாளை காலை 8 மணியளவில் மறைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செயப்படும் என அன்னாரின் நெருங்கிய உறவினர்கள் கூறினர்.
தொடர்புக்கு : முனாஃப் 9791947724
---------------------------------------------------------------

“நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

அல் குர்ஆன்

Thursday, February 23, 2012

என்னதான் இருக்கிறது நபிமொழியில்..?


                                                                 ஓரிறையின் நற்பெயரால்

"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு இருவர் மட்டும் தனியே ரகசியம் பேசாதீர்கள்..! " (1)

இப்படி தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமின்றி அத்தகைய செயல் அந்த மூன்றாம் நபருக்கு மனரீதியாக உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக அறிந்து இந்த செயலை தவீர்க்க சொன்னது யாரென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா...?

. . . 

  முஸ்லிமல்லாதவர்களுக்கு பெரும்பாலும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்ச முஸ்லிம்களுக்கே அதிலும் மார்க்க சூழலில் வளர்ந்த முஸ்லிம்களுக்கே இவை நபிமொழிகள் என அறிய வாய்ப்புகள் இருக்கிறது.

இதற்கு யார் காரணம்...? எது காரணம்..?

  தாடி வைப்பதும் , தொப்பி அணிவதும், வார நாட்களில் மற்றும் குறிப்பிட்ட தினங்களில் நோன்பு வைப்பதும், உபரியான தொழுகைகள் நிறைவேற்றுவதும் மட்டுமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்) என பொதுவாக இச்சமூகத்தில் முஸ்லிம்களால் புரிய வைக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்களால் புரிந்துக்கொள்ளப் படுகிறது.

வெறும் ஆன்மிகத்தை மட்டுமே போதிக்க வந்தவர்களாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் இருந்தால் அவர்களை அல்லாஹ் குர்-ஆனில் அகிலத்தாருக்கு அழகிய முன்மாதிரி - என கூற வேண்டிய அவசியமில்லை. ஆக ஆன்மிகம் மட்டுமில்லாது., அரசியல் தொடங்கி அனைத்துத்துறைகளிலும் மக்களுக்கு உரித்தான பாடங்கள் அவர்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கபெற வேண்டும் என்பதைதான் மேற்கண்ட இறைவசனம் பறைச்சாற்றுகிறது.


  பொன்மொழிகள் எனபன மனித வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை அறிவுரீதியாகவும், அனுபவரீதியாகவும் விளக்கிக்கூறுவதே. ஒருவர் கூறும் பொன்மொழிகளை அவரது வாழ் நாள் முழுவதும் பின்பற்றி நடந்திருப்பார் என்பதற்கு எந்த வித ஆதாரமும் தெளிவாக இல்லை!

ஆனால் நபிமொழிகள் எனபன அப்படியல்ல., நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் செயல்படுத்தியது.  பிறரை செயல்படுத்த தூண்டியது மற்றும் செயல்படுத்தியதற்கு அங்கீகாரம் கொடுத்தது. இவை முழுவதும் தொகுக்கப்பட்டவையே நபிமொழிகள் என அழைக்கப்படுகிறது.


சரி அப்படி அவர்கள் எதைத்தான் சொன்னார்கள்...? 

கடை நிலை பாமரன் கூட நம் வாழ் நாளில் ஒன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் அவர்கள் முன்மொழிந்த வார்த்தைகள் இருப்பது தான் கூடுதல் அழகு. ஆன்மிகத்தை அன்றாட வாழ்வியலோடு இணைத்த பெருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்றால் அது மிகையாகாது. மக்களின் அன்றாடச்செயல்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அதை தம் வழிமுறையாக்கினார்கள் - இறைவனிடத்தில் அவை நன்மை பயக்கும் என்றார்கள்.  ஒருவர் இயல்பாக அதை தொடர்ந்து செய்ய ஆர்வமூட்டினார்கள். அவர்களின் கூற்றில் சிலவற்றை பார்ப்போம்.

உனது மனைவிக்கு ஒரு வாய் உணவு கவளத்தை ஆசையோடு ஊட்டுவதற்கும் இறைவனிடத்தில் நன்மை உண்டு (2) என்றார்கள். அதுமட்டுமா...

ஒருமுறை தம் தோழர்கள் மத்தியில் உரையாடியபோது
"உங்கள் மனைவியோடு வீடுக்கூடுவதற்கும் இறைவனிடத்தில் வெகுமதி உண்டென்றார்கள் - (3)
அறிவு மிகுதிபெற்ற அண்ணலாரின் தோழர்களில் ஒருவர்
" நாயகமே! எங்களது இச்சைகளை தவிர்த்துக்கொள்வதற்காக செய்யும் இச்செயல் எப்படி இறைவனிடத்தில் வெகுமதி பெற்றுதரும் என்றார்.

  அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம், மனைவியோடு கூடாமல் மாற்றரோடு கூடினால் "விபச்சாரமென" அதற்கு இறைவனிடத்தில் தண்டனையுண்டல்லவா...? இறைவனுக்காக அதை தவிர்த்து ஆகுமானவற்றோடு வாழ்வதற்கே அந்த வெகுமதியென்றார்கள்.

 சர்வசாதரணமாக இல்லங்களில் நாம் செய்யும் சராசரி செயலுக்குக்கூட இறைவனிடத்தில் அங்கீகாரம் உண்டு என்று இல்லறவியலுக்கு புதுவிலக்கணம் வகுத்தார்கள்.

 சமூகத்தில் எல்லோரிடமும் நம்மால் நற்பெயர் பெற முடியும். அல்லது அஃது பெறுவதற்கு அவர்களுக்கு முன்னால் நம்மால் போலியாய் கூட நடிக்க முடியும். ஏன், நமது தாய்,  தந்தை,  சகோதரங்கள்,  மகன் என எல்லோரிடமும் அஃது நம்மால் நற்பெயர் எடுக்க முடியும்.

  ஆனால் உண்மையற்ற நிலையில் மனைவியிடத்தில் மட்டும் நற்பெயர் பெற முடியாது. ஏனெனில் இந்த உலகத்தார் அனைவரிலும் நம் அந்தரங்கங்களை அதிகம் அறிந்தவள் நம் மனைவி மட்டுமே. ஆக அவளை போலியாக நடித்து ஏமாற்றுவது என்பது எல்லா காலத்திலும் சாத்தியமில்லை. ஆதலால் தான்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
"மனைவியரிடத்தில் சிறந்தவரே மக்களில் சிறந்தவர்..!"-  (4) என்றார்கள்.
 மக்களில் சிறந்தவர் என்ற பெயரோடு நாளை இறைவனிடத்தில் செல்வதற்கு இன்று மனைவியிடத்தில் உண்மையாக நடந்துக்கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகிறது.

"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பதும் ஓர் நற்செயலாகும்." (5)
பெரும்பாலான குடும்ப பிரச்சனைகளுக்கு மையக்காரணம் சரியான உபசரிப்பிமின்மையே... குறைந்த பட்சம் வாங்க!.. என்று சொல்வதில் கூட ஏற்ற இறக்க உச்சரிப்புதான்!

இவை கூடாதென்று சொல்லி அதை தவிர்க்க சொல்வதோடு உரிய முறையில் அவர்களை நோக்குவதே... இறைவனிடத்தில் நன்மையை பெற்று தரும் செயல்களில் ஒன்றாக மாற்றினார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்.

இப்படி குடும்பவியல் செயல்களை இறை நேசத்திற்கு உரித்தான செயலாக மாற்றமடைய வழிச்சொன்ன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் பொருளியலிலும் சமூக மத்தியிலும் அதே நிலையே தான் கையாண்டார்கள்.

வட்டியே தடை செய்து வியாபாரத்தை ஊக்குவித்த நபிகள்
ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது(6) என்று ஒருவர் தம் சொந்த கால்களில் நிற்பதற்கு தன்னார்வத்தை ஏற்படுத்தினார்கள். மேலும் தேவை ஏற்படும் நிமித்தமாக பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதையும் சபித்தார்கள்.

அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க நான் மட்டும் வயிறார உண்பவன் உண்மை இறை விசுவாசியல்ல!(7) என்று ஏனையவர்களின் மீதும் நமக்குள்ள கடமையே சுட்டிக்காட்டினார்கள். அதை செயல்படுத்தியும் காட்டினார்கள்.

இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராக இருந்தாலும் அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் அவர் பெற்ற கடனை தவிர(8)என கொடுக்கபட்ட கடனும், கொடுத்தவரின் நிலையும் இறைவனிடத்தில் எவ்வளவு மதிப்புடையது என்பதை தெளிவுறுத்தினார்கள்.

மக்கள் நடக்கும் நடைபாதைகளில் குறுக்கே அமர்ந்து அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதையும், நிலக்குறிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு சேதம் ஏற்படுத்துவதையும் தடை செய்த (9) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவை இறைவனின் கோபத்திற்கு ஆளாக்கும் இழிசெயல் என்றும் எடுத்துரைத்தார்கள்.

அனாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்கு சமமானது (10) என அநியாய செயலை விளக்கி அஃது செயல்படுவோர் அதே நிலையில் இறைவன் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்கள்.
மேலும் அனாதைகளை பற்றிக்கூறும் போது, "அவர்களை நல்ல முறையில் பராமரிப்பவர்களும் நானும் மறுமையில் இப்படி (நெருக்கமாக) இருப்போம் என தனது ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் ஒன்றிணைத்து காட்டினார்கள். (11)

 பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை என்ன தான் மிகப்பெரிய வணக்கசாலியாக இருந்தாலும் அவனை இறைவன் மன்னிப்பதில்லை.  (12) என்ற நபிமொழியில் தனிமனித உரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை உணரலாம்!

இன்னும் பார்த்தால்....  தெருக்களில் கிடக்கும் சிறு முள்ளை அகற்றுவதையும் ஈமான் எனும் உயர் இறையச்சத்தோடு உள்ளடக்கிய ஒரு பகுதியாக (13) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் கூறுவதிலிருந்தே தனி மனித மற்றும் சமூகத்திற்கு பயன்படும் அனைத்துமே அவர்களது கூற்றில் அடங்கிருப்பதை சிந்தனை ரீதியாக உணரும் எவருக்கும் நிரூபணம்!

  சில உதாரணங்கள் தான் இவை. இன்னும் அனேக நபிமொழிகள் இருக்கின்றன, ஆனால் அவை இந்த மனித மத்தியில் தெளிவாக வழிமொழியப்படாமல், பொன்மொழிகள் என்ற அளவிலே வைத்து பார்க்கப்படுவதால் நாம் நடைமுறைப்படுத்தும் அண்ணலாரின் வழிமுறைகள் இன்று சமூகத்தின் கவனத்திற்கு வருவதில்லை.

மேற்சொன்ன செயல்கள் மட்டுமல்ல. நாம் புது ஆடை அணிவதிலிருந்து, மரணித்தப்பின் நமக்கு வெள்ளாடை தரிக்கும் வரையிலான நிகழ்வுகளின் வழிக்காட்டுதல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வாழ்வியலிருந்தே பெறப்படுதல் சாத்தியம் என்பதை இச்சமூகத்திற்கு உணர்த்த வேண்டும். அது எல்லோராலும் எளிதாகவும் பேணப்படவும் முடியும் என்பதையும் தெளிவுறுத்த வேண்டும்.

 நபிகளாரின் செய்கைகளை நினைவூட்டுவதற்காக வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் மீது புகழ்பாக்களாக படிப்பதால் அதை உணர்த்த முடியாது! அதற்கு அவர்களின் வழிமுறைகளில் ஒவ்வொன்றையும் முடிந்த அளவிற்கு பின்பற்றி வாழ்வதே பொருத்தமானது! 

ஏனெனில் நாம் இச் சமூகத்தில் செய்யும் ஒவ்வொரு நற்கருமங்களும் அவர்களின் வாழ்வியல் வழிமுறை என்பதை விளக்க வேண்டும் அப்போது அவர்கள் மீது நாம் கொண்ட நேசத்தை உண்மைப்படுத்துவதாக பொருள். மாறாக அவர்களை மிகைப்படுத்தி புகழ்வதில் இல்லை.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்:
 முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான தலைவர் என்ற மாயை எண்ணத்தை அகற்றுங்கள். ஏனெனில் அதற்காக மட்டும் தான் அவர்களின் வருகை இருந்திருந்தால் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற மார்க்க கடமைகளை விவரிப்பதோடு அவர்களின் பணி முடிவுற்று இருக்கும்.

ஆனால் அவர்களின் இறுதி பேரூரையில்
"பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.....

இப்படி -வர்த்தக ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கும் மக்களின் எதார்த்த வாழ்வை மையப்படுத்தி கூறினார்கள். அரேபியர்களுக்கோ ஒரு இனத்திற்கோ தனிப்பட்ட முறையில் அவர்களின் வரவு அமைந்திருந்தால் இப்படி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. யாராக இருப்பினும் இறைவன் முன் அனைவரும் சமம் என்றே பிரகடனம் படுத்தினார்கள். ஆக குர்-ஆன் எப்படி மானிட சமூகத்திற்கு பொதுவான நூலோ அதுப்போலவே நபிகளும் இந்த மனித சமுதாய முழுமைக்குமான தலைவர்!

                                                        அல்லாஹ் நன்கு அறிந்தவன் .


நீல நிறத்தில் இருப்பவைகள் அனைத்தும் சஹீஹான ஹதிஸ்களே. எளிதாக புரிந்துக்கொள்வதற்காக இயல்பு தமிழில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


ஹதிஸ் விபரம்:
01.அறிவிப்பவர் :  இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி
02. அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56
03.
04. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082
05. அறிவிப்பாளர்கள்: அபூதர் (ரலி)  நூல் : திர்மிதி 2022, 2037)
06.  நூல் :  புஹாரி,எண் 2072 
07. அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : மிஷ்காத் 
08. அறிவிப்பாளர்: சலமா பின் அக்வஃ (ரலி) நூல் புகாரி: 2289
09. அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).  நூல் :   புஹாரி.
10.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2766) முஸ்லிம்.
11. அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம், திர்மிதி (1983)
12. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 2448
13.


Tuesday, February 21, 2012

இப்போது ANDROID வடிவில்.........குரான் தஃப்சீர் இப்னு கதீர்


குரான் தஃப்சீர்  இப்னு கதீர் எழுதியது

தமிழாக்கம் முதல் பாகம்  ரஹ்மத் அறக்கட்டளை வெளியிட்டது 

இப்போது ANDROID வடிவில்

நீங்களும் படித்து உங்கள் நண்பர்க்களுக்கும் தெரியபடுத்துங்கள் 

அல்லாஹ் நாம் அனைவருக்கும் ரஹ்மத் செய்வானாக ஆமீன்.  

கீழே உள்ள லிங்க்கை கிளிக் பண்ணவும். 

by

Z.NAZRUL ISLAM

Saturday, February 18, 2012

கடவுள் எந்தத் தேவையும் இல்லாதவன்


பொதுவாகக் கடவுள் மறுப்பாளர்கள் உருவானதற்குக் காரணமாக இருந்தது மதத்தின் பெயரால் நடக்கும் சுரண்டல் தான். கடவுளுக்குக் காணிக்கைகள் போடப்படுகின்றன. போடப்படும் காணிக்கைகள் கடவுளுக்குப் போகவில்லை என்பதையும்கடவுளுக்குப் பூஜை நடத்துபவர்களே அவற்றைப் பங்கிட்டுக் கொள்வதையும் மனிதன் நேரடியாகப் பார்க்கிறார்கள்.

'கடவுளின் பெயரைச் சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்களேஎன்ற கோபம் ஏற்படுகிறது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு தான் கடவுள் மறுப்புக் கொள்கை.

நமது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர் என்று நம்பப்படும் கடவுளுக்கு முன்னால் உணவுப் பொருட்கள் படைக்கப்படுகின்றன. அவற்றை அந்தக் கடவுள் சாப்பிடுவதில்லை. கடவுளுக்குக் காட்டப்படும் உணவுப் பொருளின் சக்தியை மட்டுமாவது அவர் உறிஞ்சி எடுத்துக் கொள்கிறாராஅதுவுமில்லை. கடவுளுக்குப் படைத்து விட்டு அதை மனிதர்கள் தான் உண்கிறார்கள். கடவுளை மறுத்துத் தான் ஆக வேண்டும் என்ற எண்ணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது.

கடவுள் என்பவன் ஒரு தேவையும் இல்லாதவன் என்று நம்ப வேண்டும். கடவுள் என்பவனுக்குத் தேவை இருந்தால் அவன் என்ன கடவுள்என்று இஸ்லாம் கேள்வி எழுப்புகிறது. கடவுளுக்கு நாம் காணிக்கை செலுத்த வேண்டும். கடவுளுக்கு நாம் தேங்காய் உடைக்க வேண்டும். கடவுளுக்கு நாம் வேறு பூஜை பொருள் கொடுக்க வேண்டும் என்றால் அவன் நம்மிடம் வாங்குபவனாக இருக்கின்றான்.

நமக்குத் தருபவனாக கடவுள் இருக்க வேண்டும். நம் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தான் கடவுள் தேவை. அவ்வாறில்லாமல் நாம் கொடுக்கும் பொருள் அவனுக்குத் தேவையென்றால் அவன் என்ன கடவுள்? அதனால் தான் அல்லாஹ் எந்த விதத் தேவையுமற்றவன் என இஸ்லாம் கூறுகிறது.

கடவுளை வணங்குவதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது அங்கே உண்டியல் இருக்காது. காணிக்கை கிடையாது. எந்தப் பொருளையும் வாங்கிச் செல்ல வேண்டியது இல்லை. கடவுளுக்காக எதுவுமே கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறும் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

கடவுளை நான் வணங்கப் போகிறேன்அதற்காக 100 ரூபாயை நான் பள்ளிவாசலுக்குக் கொடுத்து விட்டு வரப் போகிறேன் என்றால் அவன் கடவுளை நம்பவில்லை. நம்ப வேண்டிய விதத்தில் நம்பவில்லை.

கடவுள் தன் படைப்புகளின் தேவைகளை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டுமே தவிர படைப்புகளிடம் எதையும் எதிர்பார்ப்பவனாக இருக்கக் கூடாது என்று தெளிவாகப் பல வசனங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்துதொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும்மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்சகிப்புத் தன்மை மிக்கவன்.
திருக்குர்ஆன் 2:263

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும்பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
திருக்குர்ஆன் 2:267

வானங்களில் உள்ளவையும்பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. 'அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என்று உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரையும்உங்களையும் வலியுறுத்தியுள்ளோம். நீங்கள் (ஏக இறைவனை) மறுத்தால் வானங்களில் உள்ளவையும்,பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் தேவையற்றவனாகவும்புகழப்பட்டவனாகவும் இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:131

உமது இறைவன் தேவையற்றவன்இரக்கமுள்ளவன். வேறு சமுதாயத்தின் வழித் தோன்றல்களிலிருந்து உங்களை உருவாக்கியது போல் அவன் நாடினால் உங்களைப் போக்கி விட்டு உங்களுக்குப் பின் அவன் நாடியதை உங்கள் இடத்துக்குக் கொண்டு வருவான்.
திருக்குர்ஆன் 6:133

உழைப்பவர் தமக்காகவே உழைக்கிறார். அகிலத்தாரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்.
திருக்குர்ஆன் 29:6

மனிதர்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள். அல்லாஹ்வே தேவையற்றவன்புகழுக்குரியவன்.
திருக்குர்ஆன் 35:15

மனிதனைப் பண்படுத்தும் மறுமை நம்பிக்கை
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்புபவன் இன்னொன்றையும் நம்புதல் வேண்டும்.

இந்த உலகம் ஒரு நேரத்தில் கடவுளால் அழிக்கப்படும். மொத்த உலகத்தையும் கடவுள் ஒரே நேரத்தில் அழிப்பார். அப்படி அழித்த பிறகு திரும்பவும் இந்த மொத்த உலகத்தையும் கடவுள் உயிர் கொடுத்து எழுப்புவார். மனிதனின் செயல்கள் பற்றி விசாரணை செய்வார். நல்லவனுக்குப் பரிசு கொடுப்பார். கெட்டவனுக்குத் தண்டனை கொடுப்பார். இதை மறுமை என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுள் இருக்கின்றான் என்றால் அவன் நீதி வழங்க வேண்டும்நியாயம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அத்தனை பேர்களுக்கும் ஒழுங்கான தீர்ப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்காத கடவுள் நமக்குத் தேவையில்லை.

கடவுள் என்று ஒருவன் இருந்தால் கடவுள் தன்னுடைய வேலையைச் செய்ய வேண்டுமாஇல்லையாகடவுளுடைய வேலை என்ன?

எங்கெங்கே அக்கிரமம் நடக்கின்றதோ அங்கே நீதி வழங்க வேண்டும். நியாயம் வழங்க வேண்டும். ஆனால் இந்த உலகத்தில் நியாயம் கிடைப்பதை நாம் பார்க்க முடியவில்லை. ஒன்பது கொலை செய்தவன் வெளியே வந்து விடுகின்றான். இவனை யார் தண்டிப்பது?

எத்தனையோ பயங்கரவாதிகள் தங்கள் குற்றங்களுக்குத் தண்டிக்கப்படாமலே இவ்வுலகில் சொகுசாக வாழ்ந்து மரணிக்கின்றனர். சட்டத்தில் மாட்டிக் கொண்டாலும் குறுக்கு வழியில் தப்பித்துக் கொள்கின்றனர்.

இந்தக் கொலைகாரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த உலகத்தில் அது முடியவில்லை. ஒன்பது கெலை செய்தவனைத் தண்டித்தால் கூட ஒரு தடவை தான் அவனைக் கொலை செய்ய முடியும். ஒன்பது பேர் துன்பப்பட்ட அளவுக்கு இவனைத் தண்டிக்க முடியாது. இந்த உலகத்தில் ஒருவனுக்குப் போதுமான தண்டனை கொடுக்க முடியாது.

நீதி செலுத்தும் கடவுள் இருந்தால் அவன் என்ன செய்ய வேண்டும்?இதற்கு எல்லாம் கணக்குத் தீர்க்க வேண்டும். நல்லவனுக்குச் சரியான பரிசு கொடுக்க வேண்டும். கெட்டவனுக்குச் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.

அநீதி இழைத்து விட்டு இவ்வுலகில் சொகுசாக வாழ்பவர்கள் தாங்கள் செய்த ஒவ்வொரு அக்கிரமத்துக்கும் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மனம் குளிர வேண்டும். இதற்குத் தான் கடவுள் தேவை.

இஸ்லாம் கூறுகின்ற மறுமை நம்பிக்கை இதற்குச் சரியான தெளிவைத் தருகிறது. கடவுள் நம்பிக்கையை அர்த்தமுள்ளதாக்குகிறது. இவ்வுலகம் மிகவும் அற்பமானது. இது ஒரு சோதனைக் களம். இங்கே தீயவர்கள் சொகுசாக வாழ்வதைக் கண்டு விரக்தியடையாதீர்கள்! நல்லவர்கள் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு உள்ளாவதைக் கண்டு துவண்டு விடாதீர்கள்!

நல்லவன்கெட்டவன் அனைவரையும் கடவுள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவார். ஒவ்வொரு மனிதனின் தீய செயல்களுக்காகத் தண்டிப்பார். அந்தத் தண்டனைதீயவனால் பாதிப்படைந்தவனின் மனதைக் குளிரச் செய்யும் அளவுக்கு இருக்கும்.

நல்லவனுக்குப் பரிசு வழங்குவார். நாம் வாழ்நாளை வீணாக்கவில்லை;பட்ட பாட்டுக்குப் பலன் கிடைத்து விட்டது என்று பெரு மகிழ்ச்சி அடையும் அளவுக்கு அந்தப் பரிசு அமையும்.

இப்படி ஒரு நம்பிக்கை மனித உள்ளத்தில் ஏற்பட்டால் கடவுள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறார்பார்க்கிறார்கேட்கிறார். அவருக்கு இயலாதது இவ்வுலகில் ஒன்றுமே இல்லை என்ற உணர்வு ஏற்படுகிறது. இவ்வாறு நம்பிக்கை கொள்ளும் போது மனிதன் தவறு செய்ய மாட்டான்.
மதவாதிகள் தவறு செய்கிறார்களேமுஸ்லிம்களும் தவறு செய்கிறார்களேஎன்று கேட்கக் கூடாது. அப்படிச் செய்கிறார்கள் என்றால் அவர்கள் கடவுளை நம்பும் விதத்தில் நம்பவில்லைஅறை குறையாக நம்புகிறார்கள்.

கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுள் கேட்டுக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றிற்கும் ஒரு விசாரணை மன்றம் இருக்கிறது. மிகப் பெரிய சுப்ரீம் கோர்ட் இருக்கிறது. அந்த சுப்ரீம் கோர்ட்டில் அகில உலக மக்களுக்கெல்லாம் விசாரணை இருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வந்து விட்டால் அவன் மது அருந்த மாட்டான்விபச்சாரம் செய்ய மாட்டான். மோசடி செய்ய மாட்டான்ஏமாற்ற மாட்டான்திருட மாட்டான்கொள்ளையடிக்க மாட்டான்கொலை செய்ய மாட்டான். வட்டி வாங்க மாட்டான். இந்த மக்களின் கண்களில் மண்ணைத் தூவி நாம் தப்பித்தால் கூட இன்னொரு வாழ்க்கையில் கடவுளிடம் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று நம்புபவன் தவறு செய்ய மாட்டான்.

அறியாமல் அவனை மீறி ஒரு சில நேரங்களில் தவறு செய்யக் கூடுமே தவிர அதையே தொழிலாகவாடிக்கையாகக் கொள்ள மாட்டான். இது போன்று நல்ல பண்பட்ட சமுதாயம் உண்டாக வேண்டும் என்றால் வல்லமை மிக்க ஒரு கடவுளை நம்ப வேண்டும். அந்தக் கடவுள் எல்லோருக்கும் நியாயம் வழங்குவார் என்று நம்ப வேண்டும்.

இப்படிப்பட்ட நம்பிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களுடைய சமுதாயத்திற்கு ஊட்டிய காரணத்தினால் தான் அந்தச் சமுதாய மக்களிடம் புரையோடிக் கிடந்த எல்லாத் தீமைகளும் அகன்றன. இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிற தீமைகளை விட அந்தச் சமுதாயத்தில் தீமைகள் அதிகமாக இருந்தன.

அப்படிப்பட்ட மோசமான சமுதாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருத்தி பண்படுத்தினர். இப்படி எல்லாத் தீய செயல்களிலிருந்தும் மனிதனை விடுவித்ததற்கு அடிப்படையாகத் திகழ்ந்தது கடவுளை நம்ப வேண்டிய விதத்தில் நம்ப வைத்து சரியான முறையில் அந்த மக்களின் உள்ளத்தில் பதியச் செய்தது தான்.

PJ


கடவுளை நம்ப வைக்கும் பகுத்தறிவு

http://www.youtube.com/watch?v=GTPayOUv268


Thursday, February 16, 2012

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஆஸ்பத்திரித் தெருவை சார்த்த மர்ஹூம் செய்யது முஹம்மது (சேனா அப்பா)அவர்களின் மகளும், மர்ஹும் ஹாபீஸ் செ.மு.அ .முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மனைவியும், ஏ.ஷம்சுதீன் அவர்களின் தாயாரும் எம்.ஷம்சுத்தீன் அவர்களின் மாமியாருமாகியமுஹம்மது மரியம் அவர்கள் இன்று வியாழக்கிழமை இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ


அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் சுவர்க்க வாழ்விற்க்காக வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

Saturday, February 11, 2012

என்ன நடந்தது...?


மனிதனை மதிப்பதன் இன்னொரு பகுதிதான் அவர்களின் பெயர்களை நினைவில் வைப்பது. சிரமமான விஷயம் இது. ஆனால் அவசியமான விஷயம். குறிப்பாக இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கும், மக்கள் தொடர்பை விரும்புகின்றவர்களுக்கும் இருக்கவேண்டிய பண்பு.
பேருந்துப் பயணத்திலோ வங்கியிலோ, கடை வீதியிலோ திருமண வீட்டிலோ எங்காவது ஒரு தடவை மட்டுமே நாம் சந்தித்த மனிதரை மீண்டும் சந்திக்கும்போது அவரின் பெயரை நினைவில் வைத்து, “வாருங்கள்..............”  என்று பெயர் சொல்லி அழைத்துப் பாருங்கள், நிச்சயம் உங்கள் மீது ஒரு வித அன்பும், மரியாதையும் அவருக்கு ஏற்படும். 

                     பள்ளிக்கூடத்தில்கூட ஆசிரியர் மாணவர்களிடம் “அந்தக் கடைசியில் இருக்கிறியே நீ சொல்லுப்பா...!” என்றோ அல்லது வேறு எதையோ கூறும் ஆசிரியரைவிட “அப்துல்லாஹ், நீ சொல்லு...!” என்று பெயர் கூறி அழைக்கும் ஆசிரியரையே மாணவர்கள் மதிப்பார்கள். தொலைப்பேசி உரையாடலிலும் அவ்வாறே. வெறுமனே “ஹலோ...என்ன விஷயம் சொல்லுங்க” என்று பேசும் மனிதர்களை விட “சொல்லுங்க காலித்...என்ன விஷயம் காலித்...?” என்று பெயர் சொல்லிப் பேசுபவராக நீங்கள் இருந்தால் உண்மையில் உங்கள் அழைப்பு மணிஓசை தொலைப்பேசியில் ஒலிப்பதற்கு முன் அவரின் இதயத்தில் இதமாய் ஒலிக்கும்.  இதனால் தான் சிலர் “மாஷா அல்லாஹ்!  ஒருதடவை தானே சந்திச்சோம்... என் பெயரை இவ்வளவு கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்களே!” என்று வியந்து கூறுவதைப் பார்க்கலாம்.

                      நபி (ஸல்) அவர்களுக்குத் தாயிஃபில் என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். வீதி எங்கும் அடிமைகளும் அடியாட்களும் இரு ஓரங்களிலும் நின்று கொண்டு கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைக் கருங்கல்லாலும், கடுஞ்சொல்லாலும் அடித்தனர், வேதனைப்படுத்தினர். உடலில் இருந்து இரத்தம் வழிகிறது. பாதங்களும் பாதணிகளும் இரத்தத்தால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடுகின்றன. ஊர் எல்லை வரை விரட்டி வந்தனர் மடையர்கள். 
                    மக்காவுக்கும் தாயிஃபுக்கும் இடையே இருந்த ரபீஆவின் மகன்களான உத்பா, ஷைபா ஆகியோரின் தோட்டத்தின் மர நிழலில் சற்று நேரம் தளர்ந்து போய் அமருகிறார்கள் அருமை நபி (ஸல்) அவர்கள். உத்பாவும் ஷைபாவும் நபி (ஸல்) அவர்களைப் பார்க்கின்றார்கள். அவர்களின் கல்மனதிலும் கடுகளவு கருணை பிறக்கிறது.  தங்களின் கிறிஸ்தவப் பணியாளர் ‘அத்தாஸ்’ என்பரை அழைத்து சிறிது திராட்சைக் குலைகளைக் கொடுத்து “இதனை அதோ இருக்கும் மனிதரிடம் கொண்டு கொடு” என்று நபிகளாரின் பக்கம் கை காட்டுகின்றனர். கொண்டு வருகிறார் ‘அத்தாஸ்’.

                 நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் திராட்சைக் குலைகளை வைத்தபோது, அதனை எடுத்து “பிஸ்மில்லாஹ்”என்று கூறியவராகச் சாப்பிடத் தொடங்கினார்கள். பின்னர் நடந்த உரையாடல் இதோ...
அத்தாஸ் : “இந்த ஊர் வாசிகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்களே...”
நபி (ஸல்) : “உமது பெயர் என்ன?”
அத்தாஸ் : “என் பெயர் அத்தாஸ்”
நபி (ஸல்) : “நீர் எந்த ஊரைச் சார்ந்தவர் அத்தாஸ்?”
அத்தாஸ் : “நீனவா”
நபி (ஸல்) :  ‘யூனுஸ் இப்னு மதா அவர்களின் ஊரைச் சார்ந்தவரா நீர் அத்தாஸ்?”
அத்தாஸ் :   ‘ ‘யூனுஸ் இப்னு மதாவை நீங்கள் அறிவீர்களா?”
நபி (ஸல்) : “அவர் எனது சகோதரர் அத்தாஸ்! அவர் ஒரு நபி; நானும் ஒரு நபி”
                         அவ்வளவுதான்...குனிந்தார் அத்தாஸ். 
நபியின் நெற்றி, கை என முத்தமிடத் தொடங்கிவிட்டார். இஸ்லாத்தை ஏற்கிறார்.

என்ன நடந்தது...?

நபி (ஸல்) அவர்கள் அவருடைய பெயரைக் கேட்டார்கள். பின்னர் அந்தப் பெயரைப் பயன்படுத்தினார்கள். சிறிய இந்த உரையாடலில் 3 தடவை அந்தப் பெயரைப் பயன்படுத்திய நபி (ஸல்) அவர்களின் இந்த வழிமுறை ஒவ்வோர் அழைப்பாளனுக்கும் இன்று தேவை.
நாமாக இருந்தால் என்ன செய்வோம்? உன் பெயர் என்ன என்று கேட்போம். அவர் அஹ்மத் என்று கூறுவார். அவர் சொல்லி முடித்திருக்க மாட்டார் ;  அதற்குள் நாம்...“சொல்லுங்க முஹம்மத்... என்ன விஷயம்?” என்று சம்பந்தம் இல்லாமல் ஒரு பெயரைக் கூறிக் கொண்டிருப்போம். “என் பெயர் முஹம்மத் அல்ல அஹ்மத்” என்று அவர் கூறினால் கூட “ஏதோ ஒன்று ... பெயரா முக்கியம்... விஷயத்திற்கு வா...” என்போம்.

ஏன் மறக்கிறோம் நாம்? காரணங்கள் நிறைய...
1) சந்திப்பவருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் தருவதில்லை.
2) நமக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு மத்தியில் அடுத்தவர் தன்னை அறிமுகம் செய்யும் போது கவனிக்க மறக்கிறோம்.
3) மீண்டும் சந்திக்கவா போகிறோம் என்ற எண்ணம்.
4) பெயரை நினைவில் வைக்கும் அளவுக்கு முக்கியமானவர் அல்ல என்ற எண்ணம்.
5) அவரின் பெயரை மறந்துவிட்டு மீண்டும் கேட்க வெட்கம்.
                   நபி (ஸல்) அவர்கள் கையாண்ட முறையே இதற்கேற்ற அருமருந்து. ஆம். உங்கள் உரையாடலுக்கிடையே மீண்டும் மீண்டும் அந்தப் பெயரைப் பயன்படுத்துங்கள். இதுதான் மிக முக்கியம்.  அல்லது அவர் சென்றபின் அவரின் பேச்சு ஸ்டைல், அவர் சிரித்த சிரிப்பு என்று அவரின் மானரிசம் எதையாவது நினைவு கூருங்கள்.  பெயர் ஞாபகத்தில் இருக்கும்.
           அல் குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் புரியும்; நபிமார்களிடம் நேரடியாக உரையாடும்போதுகூட அவர்களின் பெயர் கூறி அழைக்கிறான் அல்லாஹ்.
‘ ‘இப்ராஹீமே!  இவ்வாறு தர்க்கம் செய்வதை விட்டுவிடுவீராக!”               (11: 76)
“நூஹே! திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்”  (11: 46)
“தாவூதே! நாம் உம்மைப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கியிருக்கின்றோம்”  (38: 26)
“ஆதமே! இவற்றின் பெயர்களை நீர்அவர்களுக்கு அறிவிப்பீராக!”                 (2: 33)
என் பெயரை நீ நினைவில் வை! 
உன்னை நான் நினைவில் வைப்பேன்!

- மௌலவி நூஹ் மஹ்ழரி 
- நன்றி; சமரசம் 

தீக்குண்டத்தில் நிர்வாணமாக


காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.

தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து... இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்... சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?

அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?

அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?

ஆய்வின் முடிவு

இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:

ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காம்ம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!

இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே!அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!

இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?

அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.

எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?

கலாசாரச் சீரழிவு

கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?

பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள். 
(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களேகையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களேங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

எழுதிவிட்டேன் பலதடவை

முஸ்லிம் இளைஞர்களும் இளம்பெண்களும் தமிழ்நாட்டில் காதலின் பெயரால் அழிந்துகொண்டிருப்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் நானும் பலமுறை எழுதிவிட்டேன். கடந்த 2011 ஜூலை 13ல் வெளியான தமிழக அரசின் கெஜட்டில் உள்ளபடி மதம் மாறிய 106 பேரில் 9 பேர் முஸ்லிம்கள் என்ற உண்மையை வெளியுலகுக்குக் கொண்டுவந்து, சமுதாய ஏடுகள் அனைத்திற்கும் கட்டுரை அனுப்பினேன். பெரும்பாலான இதழ்களில் வெளிவந்தது.

நமது வலைத்தளத்திலும் வெளியிட்டோம். பல அன்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவும் செய்தார்கள். தமிழகத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் இக்கொடுமையைத் தடுத்துநிறுத்த ஜமாஅத் நிர்வாகிகளும் உலமாக்களும் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களும் நடந்தன.

சென்னை மஸ்ஜித் மஃமூர் பள்ளிவாசலில் 17.01.2012 அன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதன் ஒலிப்பதிவு நமது முகநூல் பக்கத்தில் வெளியாகியும் உள்ளது. m(அதன் இணைப்புகளை க்ளிக் செய்து செவியுறலாம்) https://www.facebook.com/khanbaqavi?sk=wall http://f.cl.ly/items/1Z2A3m0K1Y432z3M3C0d/Khan%20Baqavi%20Speech%20@%20mamoor%2017.01.2012.mp3 இன்னும் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக வடிவில் சென்னை ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது. சமுதாயத்தில் ஓர் அசைவு தென்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ்...

ஆனாலும், வேகம் போதாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய ஒரு ஆபத்துக்கு, நத்தை வேகத்திலான முயற்சிகள் எப்படி ஈடு கொடுக்கும்? மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் சில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும்அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)
அண்மையில் ஒரு செய்தி படித்தேன்காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.
“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.
கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது;இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243). பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?

தீக்குண்டத்தில் நிர்வாணமாக

நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:

அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்த்து. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)

தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள், இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)

அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.

இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.

இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆக, பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

இது பரசிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப்பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடுபட்டேனும் இந்தச் சமூக்க் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.

நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!