Sunday, April 24, 2011

ஒரு கடவுளின்??? மரணம்..


பகவான் சத்ய சாய் பாபாவின் உயிர் பிரிந்தது:
புட்டபர்த்தி: அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காலமானார். இவருக்கு வயது 85 . கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி மூச்சுத்திணறல், இருதயக்கோளாறு காரணமாக ஸ்ரீ சத்ய சாய் அறிவியல் மற்றும் உயர் மருத்துவகழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மஞ்சள்காமாலையும், கல்லீரலில் கோளாறு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இவரது உடல் நிலை குறித்து சாய் மருத்துவமனை இயக்குனரும், டாக்டருமான சபையா நாள்தோறும் பாபாவின் உடல் நிலை அறித்து அறிவிக்கை வெளியிட்டு வந்தார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையை கவனித்து வந்தனர்.
பாபாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்வித பலனும் இல்லாமல் இருப்பதாகவும், ரத்த அழுத்தம் குறைந்து வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று பாபாவின் உயிர் பிரிந்தது. 

- நன்றி.தினமலர்


முதலில் விமர்சனங்களுக்கும்,அவரது கொள்கைகளுக்கும் அப்பாற்பட்டு, சாய்பாபா என்ற நபர் செய்த பல்வேறு நலத்திட்டங்களை கருத்தில் கொண்டு அவரது இறப்பிற்கு சகமனிதன் என்ற முறையில் எனது இறங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

விஷயத்துக்கு வருவோம்..இவர் ஒரு சாதாரண மனிதர் என்பதை கடந்து கடவுளாகவும்,கடவுளின் அவதாரமாகவும், பூஜிக்கப்பட்டு,அவரை வணங்கவும், அவரிடம் ஆசிபெறவும்,பெரும் பெரும் தலைவர்கள், அறிவியலாளர்கள் முதற்கொண்டு பலகோடி மக்கள் உலகம் முழுவதிலும் உள்ளனர்.இவரை கடவுளாக ஏற்று வழிபடும் மக்கள் சமீபகாலமாக கடவுள் மரணித்துவிடக்கூடாதென்று பிராத்திக்க ஆரம்பித்துவிட்டிருந்தனர்.கடவுள் உடல்நலக்குறைவு காரணமாக மனிதர்களின் உதவி வேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொடுமை வேறு.இப்படிப்பட்ட பலகீனமான கடவுள்,கடவுள்தானா???... முதலில் தன்னை போன்ற மனிதனை கடவுளாகக் கொண்டாடுவதே அறிவுக்கு பொருந்தாத மூடத்தனம் இல்லையா..

சரி.கடவுளின் வரையறைதான் என்ன?கடவுளை அத்துனை எளிதில் வரையறுத்திட முடியாது...இருந்தாலும் குறைந்தபட்ச தன்மைகளின் படி, கடவுளானவன் முழுமையாக இப்பேரண்டத்தை படைத்து,பரிபாலித்து,மனித மற்றும் இன்னபிற உயிர்களை படைத்து,பாதுகாத்து உணவளித்து, அண்டசராசர இயக்கங்களை தன்வசப்படுத்தி,முக்காலமும் அறிந்து, தனக்கு இணை எதிலும்,யாரும்,எப்போதும், இல்லை என்ற தன்மையுடையவனாய் இருத்தல் வேண்டுமே...அல்லது இவர்களின் குறைந்தபட்ச அறிவானது கடவுளானவன் குறைந்தது பிறப்பு,பிணி,மூப்பு, மரணம் போன்ற ஏதும் அண்டாதவனாகவாவது இருக்கவேண்டுமே..என ஏன் சிந்திக்கவில்லை.

இவர் செய்த சாகசங்கள்,சித்துவிளையாட்டுக்கள் அனைத்தும் யூட்யூபில் குவிந்து கிடக்க,அவர் என்ன செய்தாலும்,எப்படி இருந்தாலும்,அவரின் காலை கழுவி புண்ணியம் தேடிக்கொள்ளலாம் என்று எண்ணும் மூடத்தனத்தை என்ன்வென்று சொல்வது??..இந்த கடவுள்???,உறக்கம்,உணவு,ஓய்வு,கழிவு, வலி, சுத்தம்,நோய்,மருந்து,என அத்துனையிலும் மனித பலகீனத்தை கொண்டவராகவும்,அனைத்தின் மீது தேவையுடையவர்ரகவும் இருக்க,எந்தத் தகுதி இவரை கடவுளாக்கியது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தக் கடவுள்?? பிறர் தேவையை நிறைவேற்றுவது இருக்கட்டும்,இவர் எல்லாக்காலங்களிலும்,தேவையுடையவராகவே இருந்து,கடைசியில் யாருடைய தேவையும் பயனளிக்காமல்,பிறந்து விட்ட ஒவ்வொரு உயிரும் சுவைத்தே தீரவேண்டிய மரணத்தை சுவைத்துவிட்டார்.இனி இவர் பெயரில் இன்னொறு அவதாரம் தயாராகிக் கொண்டிருக்கும்,விரைவில் வெளிவரும்... அதையும்..துக்கி உக்காரவைத்து காலைக்கழுவி நன்மையை பெற்றுக்கொள்ள மக்கள் அலைமோதத்தான் போகிறார்கள்....

மனிதன் எல்லாக்காலத்திலும் தேவை உள்ளவனாகவே இருக்கிறான்.மனிதன் அவ்வாறே படைக்கப்பட்டுள்ளான்.அவனை படைத்ததும் பரிபாலிப்பதும் ஒருவனாக இருக்க...அவனை நிராகரித்துவிட்டு,கண்ணில் கண்டவர்களையெல்லாம் கடவுளாக்கி வண்ங்கி முக்தி பெற்றுவிடலாம் என எண்ணிக்கொண்டிருக்கும் மனிதன்,தான் தவறான முகவரிக்கு மடல் அனுப்பிவிட்டு பதிலுக்காக காத்திருக்கிறோம் என்பதை ஒருபோதும் உணர்வதில்லை.

உதாரணமாக கருணாநிதி நமக்கு ஓர் உதவி செய்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம்,அதற்கு நாம் ஒரு கரப்பான் பூச்சிக்கு நன்றி சொல்லிவிட்டு, அவருக்கே நன்றி சொல்லியதாக கருதிக்கொண்டு இருக்க. நாளை அவரை நேரில் சந்திக்கும் போது,அவர் கேட்பாரா மாட்டாரா...என்னப்பா...உனக்கு உதவியவன் நானாக இருக்க நன்றியை எனக்கு அறிவிக்காமல் கரப்பானுக்கு சொல்லி இருக்கிறாயே என்று???

இல்லை இல்லை..என்னால் அப்போது உங்களை நேரில் சந்திக்க முடியாததால்,கரப்பானை நீங்கள் என உருவகித்து அதற்கு நன்றி சொல்லிவிட்டேன்...என்றால்??? எப்படி இருக்கும்..அப்படியா..சரி போ...என விட்டுடுவாரா என்ன...நன்றி சொல்லாவிட்டால் கூட பரவாயில்ல..என்னைய கேவலம் ஒரு கரப்பான் பூச்சியாவா கற்பனை பண்ணுனன்னு கோபப்படுவாரா, மாட்டாரா??போயும் போயும் சக மனிதனாக இருக்கும் கருணாநிதிக்கே தன்னை கரப்பான் பூச்சியாக்கியதை பொருத்துக் கொள்ள முடியாதே... அனைத்தையும் படைத்து,இயக்கி,தனக்கு எப்போதும் யாரிடத்தும், எத்தேவையும் இல்லாத,கடவுளுக்கு,இணையாக எதுவுமே இல்லை என இருக்கும் நிலையில்,அவன் படைத்த மனிதனையும் மனிதனிலும் கெட்ட அற்ப பொருள்களையும் அவனுக்கு இணையாக்கி...படைத்தவனின் திறனை கேலிக்கூத்தாக்குவது அவனுக்கு தகுமானதாக இல்லையே..

நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்..கடவுள் நேரடியாக வந்து உதவுவதில்லை..அவர் மக்களுக்கு உதவ,உபதேசிக்க ஒருவரை தன் அவதாரமாக அனுப்பிவைக்கிறார்.அவர் கடவுளின் பிரதிநிதியாக இருப்பதால் அவருக்கு நன்றியை செலுத்திவிடுகிறோம்.அவரிடம் வேண்டியதை கேட்கிறோம். ஏன் முஹம்மது நபி(ஸல்) அவர்களை கடவுளின் தூதராக முஸ்லீம்கள் நம்புவதில்லையா?அப்படித்தான்...

சரிதான்..கடவுள் நேரடியாக வந்து உதவுவதில்லைதான்..எனக்கு கஷ்டம் ஏற்படும்போது,எனக்கருகில் இருக்கும் மனிதனைக்கொண்டுதான் எனக்கு உதவுகிறான்...அதனால் எனக்குதவிய அம்மனிதன் கடவுளாகிவிடுவானா.. உதவிய மனிதனுக்கு எனது நன்றியை தெரிவித்துவிடுவேன்,ஏனெனில் மனிதனுக்கு நன்றி செலுத்தமுடியாதவன் கடவுளுக்கு நன்றி செலுத்துபவனாக இருக்க முடியாதே,....ஆனால் உதவி புரிந்த இறைவனுக்கு முழுமையாக அடிபணிவதே அவனுக்கும்,அவனுடைய அருளுக்கும் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும்.அதுமட்டுமல்லாது,நபி முஹம்மது (ஸல்) அவர்களை முஸ்லீம்கள் ஒருபோதும் இறைவனுக்கு ஒப்பாக்கியதில்லை. அவர்களை நாம் மனிதராகவும் மனிதரில் புனிதராகவுமே பார்க்கிறோம்..நம்மை படைத்த இறைவனின் அந்தஸ்த்து மிகவும் உயர்ந்தது,அதை நாம் எத்தனை முயன்றாலும் முழுமையாக கூறிடமுடியாது.

ஆக இறைவன் இதை இதையெல்லாம் செய்தால் கோபம் கொள்வான்,அவன் இத்தகைய பாவங்களை மன்னிப்பதே இல்லை, தண்டனை உண்டு என்றால்...சிலர் கேட்கிறார்கள்...சரி...இப்படிப்பட்ட உயரிய இறைவன் அன்பிலும் பாசத்திலும் யாவரையும் மிகத்தவனாகத்தானே இருக்கமுடியும்...அப்படி இருக்க...அவன் மனிதன் செய்யும் தவறுகளை மன்னித்து அவன் மீது அன்பு செலுத்துவது தானே சரியாக இருக்கும்.அப்படிப்பட்ட கடவுள் எத்தனை பரிவுடையவனாக இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு தகப்பன் தான் வாங்கிய புத்தம்புது காரை தன் குழந்தை கீரி நாசப்படுத்திவிட்டால் அவனை தண்டித்துவிடுவானா??? தான் பெற்ற பிள்ளைய தண்டிக்காத மனிதன் தகப்பனாக இருக்கும் போது,..நான் செய்த தவறுக்கு என்னை தண்டிக்காதவன் தான் கடவுளாக இருக்கமுடியும் என வியாகியானம் பேசுகின்றனர்..

சரிதான்,தன் குழந்தை தனது காரை வீணாக்கிவிட்டால் எந்த தகப்பனும், தண்டிப்பதில்லைதான்.அது அறியாதது என அவன் அறிவான்.அதுவே வளர்ந்த முழுமையான அறிவு பெற்ற நல்லது கெட்டது தெரிந்த தன் பிள்ளை செய்தால்,சிறிய தவறாக அது இருந்தாலும், அவனை தண்டிக்காமல் இருப்பதில்லை.சிலர் தண்டிக்காமலும் இருக்கலாம்...

ஆனால் அதே பிள்ளை..நீ என் தகப்பனே இல்லை..நீ என்னை பெறவே இல்லை.என சொன்னாலும் பரவாயில்லை..இன்னொருவனை தகப்பனாக ஏற்றால் எந்த மனிதப்பதரும் கோபப்படாமல் இருப்பதில்லை..அற்ப மனிதனுக்கே இந்த விஷயத்தில் இத்தனை கோபம் வரும்போது....

அனைத்தையும் படைத்த சர்வ வல்லமை கொண்ட வல்லோன்,தான் படைத்த மனிதன் தன்னை வழிபடாமல்,அவனைப்போன்ற ஒருவனை,அல்லது அதனினும் கீழானதை தனக்கு இணை என கற்பிக்க...,கடவுள் கோபம் கொள்ள்க்கூடாது,தண்டிக்கக்கூடாது என வாதிடுவது அறிவுக்கு பொருந்தாத முட்டாள்தனம் என்பது விளங்கும்....

எனவே தெருவில் போகிறவனையெல்லாம் கடவுளாக்கி வழிபடாமல், கடவுளின் தன்மைகளை எவ்வித விருப்பு வெறுப்பின்றி, உணர்ந்து, அறிந்து, அவனை அடையாளம் கண்டு அவன் வழி செல்வதே சரியானதாக இருக்கும்.... அப்படியே செய்வோமாக.....

அன்புடன்
ரஜின்

Wednesday, April 20, 2011

என்னவொரு மாற்றம்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.

இவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.

நான் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது...இன்ஷா அல்லாஹ்....

"ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.

ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன்.

என்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்!!!'

நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன்.

செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றி அன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.

பாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுபதற்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன்.

சரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.

தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.

நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது.என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.

மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது....

ஆ...இன்னொரு பிரச்சனையும் இருக்கின்றது....முஸ்லிம்கள்.....

நான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.

என்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.

எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன்.

நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான்.

அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.


'அஸ்-------ஸ--------லாமு அலைக்கும்'


அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை.

உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.

என் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.

அவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன்.

அவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.

ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும்' மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.

விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.


கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.

அந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.

இஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன்.

நிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.

மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.
ரமலான் மாதம் வந்தது....

இந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா?'


அனுமதித்தேன்.....

சிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ(1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.

ரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.

அது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...

ஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.

இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.

சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.

'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'


அவர் கூற ஆரம்பித்தார்...

'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்'


'நான் எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்'

'முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்'

'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்'

என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...

'முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்'

'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'

என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், ' சகோதரர், நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்"

பின்னால் 'அல்லாஹு அக்பர்(2) ' என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.

நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.

தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.

மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....

உணர ஆரம்பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது.

தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

'சகோதரர், நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்'

அவர் சொன்னார், 'நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அவரை பின் தொடர்ந்து கூறினேன், 'வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.

முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.

நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.
என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்"

சுபானல்லாஹ்...

இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.

முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.

இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.

உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு/பல்கலைகழகத்திற்கு சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.

சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


அரபி வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:

1. ருக்கூ - குனிந்த நிலையில் இறைவனை தொழுவது.

2. அல்லாஹு அக்பர் - இறைவனே மிகப் பெரியவன் (God is Great)

Brother Idris Towfiq's website:

1. idristawfiq.com. link

My sincere thanks to:

1. Canadian Dawah Association.

This article translated from (not a word to word translation):

1. Irish priest embraces Islam - Canadian Dawah Association website. link

2. IQRAA TV - British Catholic priest converted to Islam. link

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹமத் அ


http://ethirkkural.blogspot.com/2011/04/blog-post_19.html

Sunday, April 17, 2011

தடை செய்யப்பட்டவை


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவல ப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற  முஸ்லிம்களின், உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.         

நூல் : முஸ்லிம் : 5010  
 
உலக வாழ்க்கை வீண் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்திடையவர்களுக்கு நிச்சயமாக 
மறுமையின் வீடே மிகவும் மேலானதாகும்.                                                       

அல் குர் ஆன் - 6 : 32   

தேர்வுகள் முடிந்துவிட்டது - விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

10 -ஆம் வகுப்பு மற்றும் 12 - ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது.  மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

விடுமுறை நாள்களின் என்ன பண்ணலாம்?

1. ஆங்கில மொழிதிறனை (English language skill) வளர்த்துகொள்ள முயற்சிக்கவும் : ஆங்கில மொழிதிறன் என்பது இன்று இன்றியமையாத ஒன்றாக உள்ளது. தமிழ் வழி கல்வி பயின்ற மாணவர்கள் ஆங்கில பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம் அல்லது வீட்டில் இருந்தே ஆங்கில மொழி பயிற்சி புத்தகங்களை படிக்கலாம். ஆங்கில திறனை வளர்த்து கொள்ள மிக சிறந்த வழி ஆங்கில குர்ஆனை தமிழ் குர்ஆனுடன் ஒப்பிட்டு வாசிப்பது. குர்ஆனை, வசனத்திற்க்கு வசனம் ஆங்கிலத்திலும் தமிழிலும் படிப்பதின் மூலம் ஆங்கில அறிவும் வளரும், அல்லாஹ்வுடைய கட்டளைகளையும் அறிந்து கொள்ளமுடியும்.

2. தொடர்பு திறனை (Communication skill) வளர்ப்பது : வேலைவாய்ப்பு பெற மிக முக்கிய தகுதியாக கருதபடுவது தொடர்பு திறன் எனப்படும் Communication skill. என்னதான் மதிப்பெண் வாங்கி இருந்தாலும் Communication skill இல்லாவிட்டால் எந்த நிறுவனத்திலும் வேலைக்கு எடுக்க மாட்டார்கள். இந்த தொடர்பு திறன்  Communication skill -யை வளர்த்து கொள்ள மிக முக்கிய தேவை தைரியம், தைரியமாக நீங்கள் நினைக்கும் கருத்துக்களை பிறருக்கு சொல்ல பழகுங்கள். அதாவது இஸ்லாமிய ரீதியில் சொல்வதாக இருந்தால் நல்ல தாயிகளாக ( பிரசாரகர்களாக) மாற பழகுங்கள். Communication skill  என்பது  ஒவ்வொறு முஸ்லீமிடமும் கட்டாயம் இருக்கவேண்டிய பண்பாகும். 
"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்." (குர்ஆன் 3 : 104)

தினமும் குர் ஆனை எடுத்து தொழுகைக்கு பிறகு வீட்டில் உள்ளவர்காளுக்கு படித்துகாட்டுங்கள், முடிந்தவரை பிறருக்கு எடுத்து சொல்லுங்கள், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல பழகுங்கள்.  குர் ஆனுடைய கருத்துகளை பிறருக்கு சொல்வதற்க்கு வெட்க படாதீர்கள், தைரியமாக சொல்லுங்கள். இப்படி தொடர்சியாக செய்வதன் மூலம் நம்முடைய Communication skill - யை வளர்த்து கொள்ள முடியும்.

கணினி அறிவை (Computer knowledge ) வளர்த்து கொள்ளுங்கள் : தற்போது பள்ளிபடிப்பு படிக்கவே கணினி அறிவு  (Computer knowledge)அவசியமாகின்றது, எனவே கணினியில் குறிப்பாக MS Office (Word, Excel, Power Point etc..)கற்றுகொள்ளுங்கள். மேலும்  internet-ன் பயன்பாட்டையும் கற்றுகொள்ளுங்கள், குறிப்பாக  மின் அஞ்சல் (E -mail) துவங்குவது, google Search, விக்கீபீடியா போன்றவைகளை அறிந்துகொள்ளுங்கள், இன்டெர்னெட் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும், இணையதளத்தில் நல்ல வியஷயங்களுக்கு இணையாக கெட்ட விஷயங்களும் கொட்டிகிடக்கின்றது. தற்போதுள்ள காலத்தில் இன்டெர்னெட்டே வேண்டாம் என ஒரேடியாக ஒதுக்கிவிட முடியாது, எனவே பெற்றொர்கள்தான் மாணவர்களை இன்டெர்னெட்டை சரியான முறையில் பயன்படுத்த பழக்க படுத்த வேண்டும்

10 மற்றும் +2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கு : விடுமுறையை வீணாகாமல் இப்போதே பொது தேர்விற்க்கு படிக்க ஆரம்பித்து விடுங்கள்.  9 - ஆம் வகுப்பு முடித்து 10 - ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் 10 - ஆம் வகுப்பு பொது தேர்விற்க்கும். +1 முடித்து +2 செல்லும் மாணவர்கள் +2  வகுப்பு பொது தேர்விற்க்கு தயாராகுங்கள்.  +2 ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்கள்  தேசிய அளவில் மருத்துவம் பொறியியல் படிக்க நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு  தயாராகுங்கள்.

 +2 - ஆம் வகுப்பு படிக்க போகும் மாணவர்களுக்கான போட்டி தேர்வுகள் :

IIT-JEE - இந்த தேர்வு IIT, IISc - ல் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIEEE - NIT  மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் B.E/B.Tech/B.Arch படிக்க நடத்தபடும் தேர்வாகும், +2 - ல் கணிதம், இயற்பியல், வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
AIPMT -  மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் MBBS படிக்க நடத்தபடும் தேர்வு, உயிரியல் அல்லது விலங்கியல், தாவரவியல் மற்றும் இயற்பியல் , வேதியியல் படிக்கும் மாணவர்கள் எழுதலாம்.
HSEE - IIT -யில் ஒருங்கினைத்த 5 ஆண்டு M.A. படிப்பிற்க்கான தேர்வு. அனைத்து பிரிவு மாணவர்களும் எழுதலாம், குறிப்பாக Arts குரூப் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வின் மூலம் IIT-யில் படிக்கலாம்

மாணவர்களே!  நேரத்தை வீணாகாமல் இப்போதே போட்டி தேர்வுகளுக்கும் , பொது தேர்வுகளுக்கும் தயாராகுங்கள்.  தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுத்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

அனைத்து போட்டி தேர்வுகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

S.சித்தீக்.M.Tech

அன்னா ஹசாரே கைதாவாரா? பரபரப்பு செய்தி!!

 ஊழலுக்கு எதிராக பாசிஸ்டுகளுடன் சேர்ந்து அட்டகாசம் செய்த காந்தியவாதியின் ஊழல்! இவர் செய்த ஊழலை பார்த்து அரசியல்வாதிகளே கலங்கிபோய் இருக்கிறார்கள்! இதோ அன்னா ஹசாரே ஊழல் விவரம்!

அண்ணா ஹசாரே தலைமை வகிக்கும் ஹிந்த் சுராஜ் டிரஸ்ட் என்ற அமைப்பு நடத்திய ஊழலை பற்றிய ஜுடிசியல் விசாரணையின் விபரங்கள் இதோ!

இந்த டிரஸ்ட் உதவி தலைவர் சந்திபூசனும் இதில் உறுப்பினரான பிரசாந்த் பூசனுக்கும் சம்பத்தப்பட்ட சீ. டி வெளியில் வந்த பிறகு கதாநாயகன் ஹசாரே உடைய ஊழல் வெளியில் வந்து பரப்பரப்பை உண்டாக்கி கொண்டிருகிறது.

அந்த இருவர்களுடை வீடியோவில் சில சந்தேகங்கள் இருந்தாலும் ஹசாரே சம்பந்தப்பட்ட ஊழலில் எந்த வித சந்தேகமும் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்து இருகிறார்கள்.

அண்ணா ஹசாரே தன்னுடையே பிறந்தநாள் தினத்திற்கு டிரஸ்ட் உடைய பணம்
இரண்டரை லட்சம் பணத்தை சட்டவிரோதமாக செலவளித்தது.

மத சார்பற்ற கல்வி படிப்பதற்காக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை
கோவில் கட்டுவதற்காக கொடுத்தார் என்றும் விசாரணை கமிஷன் கூறி உள்ளது.

இந்த நிறுவனத்திற்கு அரசு ஒதுக்கி கொடுத்த நிலத்தை சட்டவிரோதமாக வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் கணக்குகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளதாக மகாராஷ்டிரா மத்திரி சுரேஷ் ஜெயின் குற்றம் சுமத்தி இருந்தார்.

அலஹபாதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நிலம் வாங்கியதில் முத்திரைதாள் வாங்கியதில் கள்ள கணக்கு காட்டியிருப்பதாக மகாராஷ்டிரா அரசுசுக்கு சமர்ப்பித்த விசாரணை அறிக்கையில் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் 1995 இல் இவர் ட்ரஸ்ட்க்கு சொந்தமான பணத்தை தனது பிறந்த நாளைக்கு செலவழித்தார் என்பது விசாரணை கமிசனால் நிருபிக்கப்பட்டுள்ளது. இவர்தான் நேர்மை ஊழல் என்று பேசுகிறார்.

ஒரு ட்ரஸ்ட்க்கு சொந்தமான பணத்தை எடுத்து தனது பிறந்த நாள் விழாவுக்கு செலவு செய்வது ஒரு காந்தியவாதின் அழகு இல்லை. ட்ரஸ்ட்க்கு சொந்த மான நிலத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு எழுதி கொடுத்தது மட்டுமல்லாமல் அதை பதிவு செய்யும்போது முத்திரை தாள் மோசடி செய்வது என்பது ஒரு கேவலமான செயல். ஊழழலை பற்றி பேச அன்னா ஹசாரேக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.

ஓஓஓ இதுதான் காந்திய தருமமோ ?


வாசகர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் நல்லவர்கள் ஒரு நாளும் ஹிந்துத்துவா பாசிஸ்ட்களோடு சேரமாட்டார்கள்.நன்றி http://www.sinthikkavum.net/

Saturday, April 16, 2011

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

திருப்பூர் அருகே பூலுவப்பட்டியை சேர்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகம் (55). இவரது மகள் மீனாட்சி (18) குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார்.

பள்ளி விடுமுறையை கொண்டாட, பல்லடம் மேட்டுக்கடையில் உள்ள தன் அக்கா ப்ரியா வீட்டுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் அருகில் உள்ள தோட்டத்தில் பூப்பறிக்கச் சென்ற மீனாட்சி ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அக்கம் பக்கம் தேடினர். ஆனால், மாலை 4 மணி அளவில் அங்குள்ள கிணற்றில் மீனாட்சி பிணமாக மிதப்பதை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

தீயணைப்பு துறையினர் உதவியோடு மீனாட்சி பிரேதத்தை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பிரேத பரிசோதனைக்காக சவக் கிடங்கில் உடல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று காலை பிரேத பரிசோதனை செய்ய டாக்டர் மற்றும் ஊழியர்கள் வந்தனர். அப்போது மீனாட்சியின் இரு மார்பகங்களும் கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தன. மேலும் அவை மாயமாகியிருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் தந்கனர்.

இது குறித்து தகவலறிந்த மீனாட்சியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பல்லடம் டி.எஸ்.பி. தங்கதுரை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியததை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

இதனையடுத்து, மீனாட்சியின் பிரேதம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவுப் பணியில் இருந்த பல்லடம் மருத்துவமனை டாக்டர்கள், சவக் கிடங்கு ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவிக்கு நேரந்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேற்கண்ட செய்தியை நாளிதழ்களில் வாசித்தவுடன் நெஞ்சம் குமுறியது.கண்கள் அடைத்துக் கொண்டன.அடப் பாவிகளா,வன்முறைக்கும் ஒரு வரம்பில்லையா?


இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக.

குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரு கர்ப்பவதியான முஸ்லிம் பெண்ணை கற்பழித்துவிட்டு,  பெரிய சூலாயுதத்தால் அந்த பெண்ணின் வயிற்ரை கிழித்து - வயிற்றினில் இருந்த அந்த பிஞ்சு சிசுவை வெளியே எடுத்து தூக்கி வீசி 
எறிந்ததை 
மறக்க முடியாது.

இவைகள் எல்லாம் நடப்பது நம் இந்திய திரு நாட்டில்தான்.இங்குதான் பெண்கள் மதிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் புள்ளி விவரப்படி உலகில் மிக அதிக அளவில் பெண்களுக்கான குற்றங்கள் நடப்பது இந்தியாவில்தான் என்கிறது.

இனியாவது இந்த நரேந்திர மோடிக்கள் திருந்துகிறார்களா எனப் பார்ப்போம்.

இதுவல்லவோ ஜனநாயகம்


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்


நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

நபிகள் நாயகம் 

உமர்[ரலி] காலத்தில் பெண்கள் தங்கள் மகர் தொகையை அதிகரித்துக் கொண்டு செல்ல ஆண்களால் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.தங்களது குறையினை ஜனாதிபதி உமர்[ரலி] அவர்களிடம் முறையிட்டனர்.அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டஉமர்[ரலி] அவர்கள் அப்போதைய பாராளுமன்றமான வெள்ளி ஜும்மாவில்புதிய சட்டத்தை அறிவிக்கிறார்கள் .
அதாவது ,இனி பெண்கள் மகரமாக நானூறு திர்கம்களுக்கு மேல் கேட்கக் கூடாது என்று மகர் தொகையை நிர்ணயம் செய்கிறார்கள்.
அப்போது ஜும்மாவிர்க்கு வந்திருந்த ஒரு நபி தோழியர் அவர்கள் உடன் எழுந்து ,அமீருல் முஹ்மீன் அவர்களே ,"பெண்களுக்கு மகராக ஒரு பொருட் குவியலே கொடுத்தாலும் அவற்றிலிருந்து திரும்ப பெறாதிர்கள்,,"என்று பொருள்படக் கூடிய குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டி இறைவனே பெண்களுக்கான மகரை நிர்ணயிக்கத போது அதை மாற்ற உங்களுக்கு உரிமை எப்படி வந்தது ?என்று கேட்டார்.
ஆடிப்போன உமர்[ரலி] அவர்கள் உடன் இந்த பெண் இறைவனின் சட்டத்தை சொல்லிவிட்டார்.அதுவே சரியானது நான் தொகை நிர்ணயித்ததை திரும்ப பெற்றுக் கொள்கிறேன்.என்று கூறினார்கள்.
இன்றைய உலகில் வாய் கிழிய பேசப்படும் ஜனநாயக நாட்டில் ஒரு கவுன்சிலரிடம் கூட போலீசாரால் நியாயத்தை நிலை நிறுத்த முடியவில்லை.
ஆனால் இஸ்லாம் காட்டிய ஜனநாயகத்தில் ஒரு சாதாரண பெண்ணால் ஜனாதிபதியிடமே நீதியை தட்டி கேட்க முடிகிறது இது போன்று ஒரு ஜனநாயகத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்கும் காண முடியாது.காந்திஜி பாராட்டிய இந்த ஜனநாயகத்தை முஸ்லிம் நாடுகள் இன்று தொலைத்து விட்டதால் ஓநாய் களெல்லாம் இன்று கண்ணீர் வடிக்கவேண்டிய நிலை.

Monday, April 11, 2011

ஓட்டு பணம் லஞ்சம் ஹராம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்துவிட்டது வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நாள். மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்று அநேகம் முடிவு செய்திருப்பார்கள். இச்சூழலில் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் போக்கு தமிழக அளவில் அதிகரித்துள்ளது. இதை யார் செய்கிறார்கள் என்பது நாடறிந்த விசயமாகிவிட்டது. தன் அணிக்கு ஒட்டுப்பெறுவதற்காக பணம் பட்டுவாடா செய்வதில் அதிரைவாசிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

ஒரு நாட்டில் உள்ள குடிமகனுக்கு ஓட்டுறிமை ஒரு ஜனநாயக கடமை, காசுக்காக ஓட்டு போடுவதும் ஓட்டுப்போட வைப்பதும் நம் நாட்டில் சட்டப்படி குற்றம். சட்டத்தை இயற்றும் அவைக்கு செல்பவனே சட்டங்களை மதிப்பதில்லை இந்நாட்டில் எவன் சட்டத்தை எல்லாம் மதிக்கிறார்கள், மக்களுக்கு ஓசியில் காசு கிடைக்குது இதுக்கேல்லாமா ஒரு கட்டுரை? என்ற முனுமுனுப்பு இதை படிக்கும் சிலருக்கு தேன்றும். உண்மை தான். ஜனநாயகத்தை மதிக்கும் இந்தியனாக அனுகுவதற்கு முன்பு இதை ஒர் இஸ்லாமிய பார்வையில் அனுகுவதே ஒவ்வொரு முஸ்லீகளின் கடமை. சிந்திப்பீர்..
ஓட்டுக்காக (தீர்ப்புக்காக) பணம் வாங்குவது லஞ்சம் இது ஹராம் என்பதை பின் வரும் இறைவசனங்களும், நபி மொழிகளும் நமக்கு நன்கு உணர்த்துகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.  (அல்-குர்ஆன் 4:29)

மேலும் உங்களுடைய செல்வங்களை உங்களுக்கடையில் உரிமையின்றி உண்ணாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே (பிற) மனிதர்களின் செல்வங்களிலிருந்து ஒரு பகுதியை பாவமான முறையில் நீங்கள் உண்ணுவதற்காக அவற்றை (இலஞ்சமாகக் கொடுக்க) அதிகாரிகளின்பால் கொண்டும் செல்லாதீர்கள். (அல்குர்ஆன் 2:188)


நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:

தீர்ப்புக்காக லஞ்சம் கொடுப்பவனையும் லஞ்சம் வாங்குபவனையும் அல்லாஹ் சபிப்பானாக! (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹமத்)

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘லஞ்சம் கொடுப்பவர் மீதும் லஞ்சம் வாங்குபவர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ (இப்னுமாஜா)

அல்லாஹ்வின் இறை வசனமும், நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தடுக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

அதிரையை ஆண்டுவரும் பாரம்பரியமிக்க இரு பெரும் கட்சிகள் கடந்த பல தேர்தல்களில் பணம் பட்டுவாடா செய்து ஓட்டுக்கள் பெற்றார்கள் என்பதை ஊரில் உள்ள மனசாட்சியுள்ள ஒவ்வொருவரும் அறிவார்கள். மார்க்கத்தை விளங்காத காலத்தில் சில தெருக்களில் பிரபலமான நம்மூர் பெண்கள் (பெருசுகள்) இரவோடு இரவாக வீடுவீடாக சென்று பணம் கொடுத்து ஓட்டுக்கள் பெரும் முயற்சியில் ஈடுப்பாட்டார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் சிறுபிள்ளைகளாக இருந்தகாலத்தில் கண்டிருப்பார்கள். பாவம் அந்த பெருசுகளுக்கு இது போன்ற ஹதீஸ்கள் குர் ஆன் ஆயத்துக்கள் தெரியவில்லை. யா அல்லாஹ் ஓட்டுக்காக பணம் லஞ்சம் பட்டுவாடா செய்த அந்த பெண்மணிகளை மன்னித்துவிடுவாயாக. ஆனால் இன்றும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அவலம் தொடருகிறது என்பது தான் வேதனை. தேர்தல் அல்லாத நேரத்தில் மார்க்கத்தை பேசும் சிலரும் இது போன்ற ஹராமான செயல்களை நம் சமூகத்தவர்கள் செய்கிறார்கள் என்று அறிந்தும் அதை தடுக்க மறுக்கிறார்கள், என்ற செய்திகளை கேள்விபடும்போது போது மிக வேதனையாக உள்ளது.

சில செய்திகள் நட்புவட்டாரத்தின் மூலமாக அறிய முடிகிறது. கடந்த சில நாட்களாக அதிரையில் ஓட்டுக்காக பணம் விநியோகம் மிக துரிதமாக நடந்துவருகிறது. ஒரு சில வீடுகளின் ஓட்டு எண்ணிக்கையை வைத்து 5000 ரூ வரை கொடுக்கப்படுகிறதாம். தற்போது கிடைத்த தகவலின் அடிப்படையில் பணம் பட்டுவாடா செய்பவர் 1000ரூபாயில் 100ரூபாய் பட்டுவாடா கமிஷன் என்று சொல்லி எடுத்துக்கொள்கிறார்  சொல்லப்படுகிறது. என்ன கேவலமோ...  இது உண்மையா? அல்லது பொய்யா? என்பதை அல்லாஹ் நன்கறிவான்.

இது நம் பணம் தான் என்று சீமான் சொல்லுகிறார், ஜெயலலிதா சொல்லுகிறார் ஏன் நாம் இதை வாங்கிக்கொள்ளக்கூடாது? என்று ஒரு சில அறிவாளிகள் வாதாடுகிறார்கள். இவ்விருவர் சொல்லுவதால் அது நம் பணமாகிவிடுமா? அடுத்த தேர்தல் தேதிக்குள் எனக்குள்ள பங்கு பணம் தரவேண்டும் என்று இந்த அரசியல் கொள்ளைகார கூட்டத்துடன் நம் மக்கள் அக்ரிமண்ட் போட்டுத்தான் சென்ற தேர்தலில்  தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா?  ஓசியில் பணம் எவன் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள வெட்கமில்லையா நம் மக்களுக்கு?

அன்பானவர்களே ஓட்டுக்காக பணம் வாங்குவது லஞ்சம், அது ஹராம் என்பது மேல் சொல்லப்பட்ட இறைவசனங்களும்,  நபிமொழியும்  நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதை அதிரையில் உங்கள் உறவுகளிடம் எடுத்துச்சொல்லுங்கள், பணம் வாங்கியிருந்தால் தந்தவரிடமே அதை திருப்பி கொடுத்துவிட சொல்லுங்கள். ஊருக்கு நல்லது செய்பவர் யார் என்பதை முடிவு செய்து ஓட்டுப்போட சொல்லுங்கள்.

ஏகத்துவத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தி, இவ்வுலகிலும் மறுவுலகிலும் அல்லாஹ்வின் திருப்தியை அடைவதை மட்டுமே லட்சியம் என்பதை மறந்து, கட்சிகளுக்கு நம் பலம் காட்ட வேண்டும் என்று கச்சைக்கட்டி உண்மைகளை மறைத்து பொய்களை மெய்படுத்தி மேடை மேடையாக பேசிவந்த நம் சமுதாய சகோதரர்களுக்கு கிழ் வரும் இறைவசனத்தை கேள்வியாக வைத்து இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)

அல்லாஹ் போதுமானவன்.

தயவு செய்து ஓட்டுமட்டும் மறந்திடாம உங்களுக்கு பிடித்த நல்ல வேட்பாளருக்கு போடுங்க.

அன்புடன் தாஜுதீன்

Sunday, April 10, 2011

முபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

1930களில், சவூதி அரேபிய அரசாங்கம், தன் நாட்டில் இருந்த தர்காக்களை ஒழித்து கட்டியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்பதாகும்.

தர்காக்கள் தேவையா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து முஸ்லிம்களிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. 

முபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், தர்காக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற செய்தி தான் அது. 

சில தினங்களுக்கு முன்பு (April 3), கல்யுப் நகரில் உள்ள சிதி அப்துல் ரஹ்மான் சமாதியை இடிக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட முயன்றிருக்கின்றது. அவர்களது முயற்சி அந்த பகுதி மக்களால் முறியடிக்கப்படாலும், அந்த சமாதி குறிப்பிடத்தக்க சேதமடைந்திருக்கின்றது. 

"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் கூறுகின்றார். 

முபாரக் வெளியேறியதிலிருந்து இது போன்ற செயல்களும் அதிகரித்து விட்டதாக குறிப்பிடும் சூபி(??) அறிஞர் சைய்த் டார்விஷ் மேலும் குறிப்பிடுகையில் "முன்னரெல்லாம் இவர்களை காண முடியாது. ஆனால், இன்றோ, இவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்" என்கின்றார். 

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது,  "(தர்காக்களை அகற்ற) அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். அவர்கள் கூறுகின்றனர், 'போதும், இறைவனின் சட்டத்தை நாங்களே நடைமுறை படுத்துகின்றோம்'என்று" 

அவர் மேலும் கூறுகையில், "நிச்சயமாக சட்டத்தை கையிலெடுப்பது தவறுதான். ஆனால் இவை மிகைப்படுத்தபடுகின்றன. கல்யுப் நகரத்தில் மட்டும் சுமார் எட்டு தர்காக்கள் கடந்த இரு ஆண்டுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும், இந்த நகரத்தில் மேலும் ஐந்து தர்காக்களை அமைதியான முறையில் மக்கள் அகற்றி இருக்கின்றனர். தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், மக்கள், தாங்களாக சட்டத்தை கையிலெடுத்து கொள்கின்றனர்".     

பாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது. 

இதற்கெல்லாம் காரணம் சலபி(??) குழுக்கள் தான் என்று எகிப்திய ஊடகங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. நிலையில்லாத அரசாங்கம் இருக்கும் நிலையில் இது போன்ற செயல்கள் அதிகரித்திருப்பது எகிப்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. 

என்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹீத் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது. 

தர்காக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது, 

1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’  (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா,  நூல்: புகாரி, முஸ்லிம்)

2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)   

தன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்?

3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, "அபீமிர்சத்" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)

4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். "அவ்வாறு நான் செய்ய மாட்டேன்" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம்! கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத் ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)

5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)

6. "நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)

இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். 

References:
1. Islamist campaign against Egypt shrines focus fears - Reuters, dated 6th April, 2011. link
2. Shrine - Wikipedia. link

உங்கள் சகோதரன், 
ஆஷிக் அஹமத் அ 

Sunday, April 3, 2011

உண்பது நாழி


உணவு என்று சொன்னால்உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம்தசைகொழுப்புஎலும்புநரம்புஉமிழ்நீர்மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால்பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு:
உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வைரத்தப்போக்குவயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய்மாதுளைமாவடுமஞ்சள்அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு:
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள்உருளைகாரட்அரிசிகோதுமைகரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு:
உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால்பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல்ரத்தக் கொதிப்பு,அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சைபுளிச்ச கீரைஇட்லிதோசை,தக்காளிபுளிமாங்காய்தயிர்மோர்நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம்:
பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம்மிளகாய்இஞ்சிபூண்டு,மிளகுகடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு:
பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இதுநோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம்உடல் எரிச்சல்அரிப்பு,காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய்சுண்டைகத்தரி,வெங்காயம்வெந்தயம்பூண்டுஎள்வேப்பம் பூஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:
அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டுவாழைத் தண்டு,முள்ளங்கிபூசணிசுரைக்காய்பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர்இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும்முதலில் உண்ண வேண்டியதுஇனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்புஉப்புகாரம்கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால்உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால்உணவில் கலந்துள்ள வாத பித்த ரசயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும்மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல்நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக்கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப்படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.
உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால்உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
நோயுடைய உடலைக் கொண்ட மனம்மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால்நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
உண்பது நாழி’ என்றுஉணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால்இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

 

Saturday, April 2, 2011

தேர்தல் கல கல,

ஒரு ஊர்ல ஒரு விஷமம் புடிச்சவன் இருந்தானாம்.அவனோட வேலை எல்லாரையும் வம்பிக்கிழுத்து சண்ட மூட்டிவிட்டு பிரச்சனை உண்டு பண்ணுவதுதான்.அந்த நேரத்துலஅந்த விஷமம் புடிச்சவன் நைசா நழுவிடுவான்.


அப்பிடித்தான் ஒரு நாலு,இன்னிக்கி என்ன பண்ணலாம்னு யோசிச்சுக்குட்டு இருந்தப்போ இப்பிடி ஒரு யோசனை தோணிச்சு.

உடனே மக்கள் நெறஞ்ச மார்கெட்டுக்கு போயி,ஒரு மிட்டாய் வாங்கினான்.அந்த மிட்டாயில பாதியை தின்னுட்டு,ஒரு கண்ணாடி கோப்பைகள்,கண்ணாடி பீங்கான்கள் விக்கிற கடைக்கு 
போயி சாதூர்யமான முறையில அந்த மிச்சம் இருந்த மிட்டாயை ஒரு கண்ணாடி கோப்பையில ஓட்டிவிட்டு,கொஞ்ச தூர போயி நின்னு என்னதான் நடக்குதுன்னு நோட்டமிட்டுக்குட்டு இருந்தான்.

இந்த நேரத்துல அந்த கண்ணாடிக் கடையில இருக்குற மிட்டாயை திங்க ஒரு ஈ வந்துது.அந்த மிட்டாய் மேல உக்காந்து தின்ன ஆரம்பிச்சது.அப்போ ஒரு பல்லி இந்த ஈய பாத்துட்டு - மெது மெதுவா நகர்ந்து வர,இப்போ ஈ பல்லிக்கு போக்கு காட்ட,இப்பிடியே போய்க்கிட்டு இருக்கும்போது ஒரு பூனை அந்த பக்கம் வர,அது பல்லியை பாத்துட்டு - ஆஹா நல்ல சந்தர்ப்பம் டோயின்னு ஒரே தாவு தாவ -பல்லி லபக்குன்னு காணாம போக - அந்த பூனை அங்கன இருந்த கண்ணாடி பாத்திரங்களைஎல்லாம் உடைக்க - பூனையோட மொதலாளி எங்க நம்ம பூனையாரை காணோம்னு அந்தக்கடைக்கு வர,இத பார்த்த - கண்ணாடி கடை மொதலாளிக்கு அட இவன் பூனைதான் இதுன்னு தெரிய - கோபம் தலைக்கு ஏறி - இப்போ ரெண்டு பேருக்கும் குடுமிப்பிடி சண்டை.

இதுல மிச்சம் இருந்த கண்ணாடியும் உடைஞ்சு போயி,பூனையோட மொதலாளியோட பல்லும் உடைஞ்சு -கிளைமாக்ஸா போலிசு வந்து- அப்பப்பா இனியும் சொல்லனுமா?

அந்த விஷமக்கார நம்மாளு ,ரகசியமா - சிரிச்சுக்குட்டு இருந்தான்,முழு திருப்தியோட.

அப்பாடா,இந்த தேர்தல பத்தி - அவிங்க தேர்தல் அறிக்கை பத்தி - பிரச்சாரம் பத்தி படிக்கும்போது எனக்கு மேற்கண்ட கற்பனை வந்துது,கொட்டிபுட்டேன்,அவ்வளவுதான்.(நீங்க அந்த விஷமக்கார ஆளு யாருன்னு கருணாநிதி,ஜெயலலிதா,இப்பிடி இன்னும் யாரைப்பத்தியும் கற்பனை பண்ணாலும் நான் பொறுப்பல்ல)

Friday, April 1, 2011

அழகிய அணிகலன்கள் பகுதி - 2அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ், 

மிகுந்த இடைவேளைக்கு பிறகே எழுத முடிந்தது. சகோதர சகோதரிகள் மன்னிக்கவும். :) நேரே இப்பகுதிக்கு செல்வோம்.
முதலில் இந்த து’ஆ ஓதுவதை வழக்கமாக்கிக் கொள்வோம், இன்ஷா அல்லாஹ். 

"அல்லாஹும்ம கமா ஹஸ்ஸன்த கல்ஃகி ஃப ஹஸ்ஸின் க்ஹுலுக்கி"
(Allahumma kamaa hassantha khalki fa hassin khuluqi)

"யா அல்லாஹ் எவ்வாறு என்னுடைய வெளித்தோற்றத்தை அழகுபடுத்தினாயோ அதே போல் என்னுடைய செயல்களையும் / உட் தோற்றத்தையும் / இதயத்தையும் / எண்ணங்களையும் அழகுபடுத்துவாயாக.”

ஆமீன், ஆமீன், ஸும்ம ஆமீன்.

இந்த பகுதியை தொடர்வதற்கு முன் ஒரு சின்ன விண்ணப்பம். எந்த ஒரு ஆயாத் / ஹதீத் / து’ஆ / ஸீறா படிக்கும்போது அதை நடைமுறையிலும் கொண்டு வரவேண்டும். அமலில் வராத இல்ம்’ஆல் பயன் பூஜ்ஜியமே. இனி, உங்களின் முடிவில் உங்கள் ’ஏடு’!!

இன்றைய பகுதியானது ‘மென்மை’யைப்பற்றியது. நல் அமல்கள் என்பது நல் இதயத்தை குறிக்கும், நற்பண்பை குறிக்கும், நல்லெண்ணங்களையும் இன்னும் நல்மனிதத்தையும் குறிக்கும், எனினும் ’மென்மை’ என்னும் குணமானது இவை எல்லாவற்றையும் விட நல்லமல்களில் சிறந்ததாய் நிற்கிறது. ‘மென்மை’ என்பது அரபியில் ‘அர் ரிஃப்ஃக்’( RIFQ - Ra Fa Qaaf) என்னும் சொல்லிலிருந்து வருகிறது. றஃபஃக் என்னும் சொல் உதவி / யாருக்கேனும் உதவி செய்தல் / லாபமளிப்பது. பின் ரிஃப்ஃக் என்னும் சொல், ’மென்மை’, ‘எளிதான’ மற்றும் ‘கருணைக்கண் கொண்டு’ செயல்படும் விதத்தை குறிக்கிறது. இதே போல் இந்த வார்த்தை உதவி பெறும் / இலாபம் பெறும் விதத்தையும் குறிக்கிறது. ’ரிஃப்க்கா’ என்னும் சொல் நண்பர்கள் கூட்டாக அமைவதை குறிக்கிறது. நண்பர்களிடையே மென்மை இல்லாவிட்டால் நட்பாய் இருப்பதில் அர்த்தமில்லைதானே??

’றஃபீக்’ என்னும் பெயரையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது நண்பனைக் குறிப்பதாகும். நண்பன் எனப்படுபவன் அன்பானவனாய் கருணையுள்ளவனாய் இருப்பவன் என்றுதானே பொருள்?? திருக்குர்’ஆனில் ‘முர்தஃபக்கா’ (murthafaq) என்னும் வார்த்தையையும் படித்திருப்பீர்கள். அது ஜன்னத்தையும் குறிக்கிறது, ஜஹன்னத்தையும் குறிக்கிறது. ஜன்னத்தை ‘ஹஸுனத் முர்தஃபக்கா’ என்றும் ஜஹன்னத்தை ‘ஸா’அத் முர்தஃபஃக்கா’ என்றும் குறிப்பிடுகிறது. ஹஸுனத் முர்தஃபக்கா என்பதாவது மென்மையான / உயர்வான / மேன்மையான இடம் என்னும் பொருள் கொள்கிறது. ஜன்னத்தை வந்தடைபவர்களும் அப்படியே!!

மனிதர்களுக்குள் மென்மை இல்லாமல் போகும்போது இவ்வுலகமே ’ஸா’அத் முர்தஃபக்கா’வாக / ஜஹன்னமாக மாறிப்போவதில் ஆச்சரியமில்லை. நாம் அன்றாடம் உபயோகிக்கும் சொலவடையிலும், ‘இந்த உலகமே உன்னால் ஜஹன்னமாகிப் போனது’ என்பது மிக சாதாரணமாகி விட்டது. ஏன், கூடி வசிப்போருடன் / கூடி வேலை செய்பவருடன் / கூடி வாழ்பவருடன் மென்மை இல்லாது போன காரணத்தால்..!


புகாரி மற்றும் முஸ்லிம் கிரந்தங்களில் ஒரு ஹதீத் வருகிறது, அதில் முஸ்லிமான ஆண்/பெண்ணை ஒரு நாணல் போன்ற செடியுடன் உவமைப்படுத்தப்படுகிறது. அந்த செடியை காற்றின் ஒரு வீச்சு கீழே சாய்த்தும்விடும், மறுதரம் கீழேயிருந்து மேலே நிமிர்த்தியும் விடும். சூறாவளியிலும் புயலிலும் எவ்வகையான செடிகள் தாக்குப்பிடிக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள், நாணல் போன்ற இளகிய செடிகளே. புயல் ஓய்ந்ததும் அது மீண்டும் நிமிர்ந்து விடுகிறது. அது போலவே ஒரு முஃமினும் ஏச்சுபேச்சுக்கள் / பொய்கள் / வன்சொல் வரும்போது பேசாமடந்தையாய் பொறுமை காக்கிறான். பின் புயல்போன்ற வேளை கடந்ததும் தன் நிலைக்கு வருகிறான். வாழ்வில் என்நேரமும் ஒரே நிலையை எண்ணுவது சரியில்லையே?? ஆனால் நம்முடைய எண்ணங்களை / நம்முடைய செயல்களை / குணங்களை மாற்ற முடியும், காலத்திற்கு ஏற்றமாதிரி பொறுமையுடன் வாழ முடியும். எனவே இந்த ஹதீத் மூலம் நமக்கு தெரிய வருவது என்ன? ஒரு முஃமினானவன் தற்பெருமை கொண்டவனாக / வீம்பு பிடித்தவனாக / பிடிவாதக்காரனாக இருக்க மாட்டான். பொறுமையற்றவனாக இருக்க மாட்டான். தற்பெருமை என்பது ஈமானின் எதிரி ஆகும்.

எந்த ஒரு பொருளிலும் 'Stiffness' என்பது அந்த பொருளை உடைப்பதற்காகவே /  உடைபடுவதற்காகவே. ஆனால் ’Flexibility'  என்பது அந்த பொருளை வாழக்கூடியதாக / உபயோகப்படுத்தக்கூடியதாக மாற்றித்தருகிறது. இன்னும் சொல்லப்போனால் புல்லின் மென்மையே, அது காற்றில் ஆடும்போது புல்லின் அழகைக் கூட்டுகிறது.

எனவே நினைவில் நிறுத்துங்கள். மனிதனிடத்தில் வீம்பு /பிடிவாதம் /
முரட்டுத்தன்மை அதிகமாக இருந்தால் வாழ்வில் மாறி மாறி வரும் சூழ்நிலைகள் அவன் வாழ்வை முடித்து விடும்.

கண்டிப்புடனும், வீம்புடனும் வாழலாம். எப்பொழுது??? உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டும். ஜமா'அத் தொழுகையை எக்காரணம் கொண்டும் விடம்மாட்டேன் அல்லது தஹஜ்ஜுத் நேரம் விடிகாலை 3:30 மணிதான், அதை மாற்ற மாட்டேன், ஹிஜாபில்லாமல் திண்ணை வரைக்கும் கூட வரமாட்டேன்...என இது போன்ற தனி மனித வாழ்வின் ஒழுக்கங்களில் கண்டிப்புடனும், பிடிவாதத்துடனும் இருங்கள் ஆனால் மக்களுடன் வாழும்போது (கணவன் / மனைவி ஆயினும் கூட) விட்டுக்கொடுத்து வாழகற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாஞ்சையுடன் மக்களை அணுகுங்கள். மென்மையுடனும், அன்புடனும் நடந்துகொள்ளுங்கள்.
சுயமதிப்பு / சுய கௌரவமானது ஈகோவை வளர்க்கவிடாதீர்கள். அப்படிப் பார்த்தால் ஒரு மனிதன் எப்பொழுது 'தான்' என்னும் வலையில் சிக்குகிறான்??? தான் ஒரு, அல்லாஹ்வின்  அடிமை என்பதை மறக்கும்போது, தன்னை மிஞ்சி எவரும் இல்லை என்ற நினைப்பில் வாழும்போது!!!

(இன்னும் வரும், இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே!!!)

வாஹிர்தவானில் ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன்!!
( விளக்க உரையின் மூலம்:டாக்டர். ஃபர்ஹாத் ஹாஷ்மியின் உரை )

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!