Monday, February 28, 2011

நமக்கு நாமே எதிரி திட்டம்


என் அருமை சகோதரர்களே!. நம் இணையத்தில்,முஸ்லிம்களின் நமக்கு நாமே எதிரி திட்டம் (தமிழக தேர்தல்களும் கழகங்களும், ஜமாத்களும் ஓர் பார்வை) என்ற தலைப்பிலும்,இழிச்சவாயர்களா தமிழக முஸ்லிம்கள்(முஸ்லிம்களுக்கு எத்தனை இடம்) என்ற இரு கட்டுரைகள், தமிழக முஸ்லிம் சகோதரர்களின் மத்தியில் பரவலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதை அறிவீர்கள். இந்த கட்டுரைகள் 25 க்கும் மேற்பட்ட நம் சகோதர இணையதளங்களில் வெளிவந்தும், சுமார் 8 க்கும் மேற்பட்ட குழுமங்களில் (Group) இது பதியப்பட்டு சகோதரர்களால் விவாதிக்கப்பட்டும், பெரும்பாலானவர்களுக்கு மின் அஞ்சல்கள் மூலமும் இச்செய்தி அனுப்பப்பட்டும் வருகின்றது. ஏன், எனக்கே இது மின்னஞ்சலில் வந்தது!. அல்ஹம்து லில்லாஹ்!. 

இதன் மூலம் நான் பெற்ற செய்தி, நீ எழுது, மற்றதை நாங்கள் பார்த்து கொள்கின்றோம், என்று என் சகோதரர்கள் உற்சாகம் தரும் அதேவேளை, நான் அறிந்த மற்றொரு செய்தி, இந்த சமுதாய இயக்கங்கள் இன்னும் நம்மை கூறுபோட முயலுவதால், விரக்தியின் விழிம்பில் நம் சமுதாயம் இருப்பதையும் எண்ணி வேதனைதான் மிஞ்சியது. ஏனெனில் பல தரப்பட்ட இயக்கங்களிலும், ஜமாத்களிலும், இன்ன பிற கொள்கையில் இருந்தும் பாடுபட்டு, பின் அதில் இருந்து வெறுத்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையும் நாம் கண்கூடாக காண்கின்றோம்!. இயக்கங்களை நாம் ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள வேண்டும். அதையே நாம் உணவாக உட்கொண்டால் இதுபோன்ற அஜீரனக்கோளாருகள் வருவது தவிர்க்க முடியாதது!.தற்போது தொகுதி ஒதுக்கீட்டு பங்கீடுகள் நடந்தேறி வருகின்றது. அதில் முதற்கட்டமாக வீரியமிக்க(!) ம.ம.க விற்கு அ.தி.மு.க கூட்டணியில் மூன்று தொகுதிகள் (அடேங்கப்பா! எம்மாம் பெரிய மனசு ஜெயலலிதாவிற்கு!.) வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் மூன்று தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு விட்டு, இனி என் இஸ்லாமிய சகோதரர்கள், மீதமுள்ள 231 தொகுதியில் உள்ள மற்ற முஸ்லிம்களின் ஓட்டைபெற்று, இந்த கூட்டணிக்கு தாரைவார்த்து கொடுக்கவேண்டும்!. மற்றவர்களுக்காக நாயாய், பேயாய் இரவு பகல் பாராமல் அலைய வேண்டும்!. பிரச்சாரத்தின் போது அடி உதைகள் வாங்கவேண்டும். வழக்குகளை சந்திக்க வேண்டும். ஏன் சில சமயங்களில் தங்களின் இன்னுயிரையே மாய்க்கவேண்டும்!. இவைகள் அத்தனையும் எதற்கு தெரியுமா?. மூன்றே மூன்று முஸ்லிம் உறுப்பினர்களை சட்டமன்றத்திற்குள் எப்படிபட்டாவது அதிகரிக்க வேண்டி!.

ஆனால் அதையும் கூட, தனது பார்ப்பன புத்தியின் வெளிப்பாடாக, பி.ஜே.பி யை இவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் நிறுத்தி அவர்களுக்கு மறைமுக ஆதரவை அதிமுக தெரிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!. (இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா...!) ஏனெனில் ஜெயலலிதாவின் பார்ப்பன புத்தி அப்படித்தான் செயல்படும். அதைவிட மிக கொடுமை ம.ம.க.வை பழிதீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, முஸ்லிம் சமூகத்திற்கு கிடைக்க இருக்கும் பலனை கிடைக்கவிடாமல் செய்ய நினைப்பது, த.த.ஜ தமிழக முஸ்லிம்களுக்கு செய்யும் பெரிய துரோக முடிவாகும். ம.ம.க வை எதிர்த்து இவர்கள் பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருப்பது இந்த சமுதாயத்திற்கு நல்லதல்ல!. இதை இவர்கள் உடனே மறுபரிசீலனை செய்யவேண்டும். 

ம.ம.க மட்டுமல்ல, இவர்கள் எந்த அரசியல் கட்சி கூட்டணிக்கு ஆதரவாக செயல்பட முடிவெடுக்கின்றார்களோ, அக்கூட்டணிக்கு எதிர்தரப்பில் நிறுத்தப்படும் எந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது!. இவர்களுக்குப்பின் ஒரு கூட்டம் இருப்பது உண்மை என்றாலும், இவர்கள் எடுத்த இந்த தவறான முடிவை இம்மக்கள் நிராகரிக்கவேண்டும். வேறு முடிவுகளை நீங்கள் ஆதரித்தாலும் இதுபோன்ற தவறான முடிவிற்கு ஆதரவளிக்காமல் இருப்பதே நலம்.

மேலும் திமுகவின் சிறுபான்மை பிரிவான முஸ்லிம் லீக்கிற்கு வழக்கம் போல் குடும்ப கட்டுப்பாட்டு கோட்பாட்டின் தாரகமந்திரமான இரண்டுக்கு மேல் வேண்டாம்(!) என்ற அடிப்படையில் இரண்டு தொகுதிகள் வழங்கப்படலாம். அதுவும் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டால் ( போட்டியிட்டாலா?. பரம்பரை பழக்கத்தை மாற்ற முடியுங்களா?.) மூன்று கிடைக்கலாம். ஆக மொத்தம் இஸ்லாமிய இயக்கங்களுக்கு மொத்தமாக இந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பே உள்ளது. தவிர ஒன்றோ அல்லது இரண்டோ வேறுபடலாம். 

இதில் ஜெயித்து வருவது எத்தனைபேர்?. இதில் 50% வெற்றி வாய்ப்பென்றால், முஸ்லிம் இயக்கங்களின் சார்பில், இரண்டு அல்லது மூன்று முஸ்லிம்கள் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் என்ற அவல நிலை ஏற்படும்!. இது இந்த சமுதாயத்திற்கு போதுமா? என்பதே தற்போதைய கேள்வி?

அரசியல் கட்சிகளில், குறிப்பாக திமுக, மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தான் தற்போது அதிக அளவிலான தொகுதிகளில் போட்டியிடுகின்றது. எனவே இவர்கள் தங்களின் கட்சியை சேர்ந்த தலா பத்து முஸ்லிம்களுக்கு தேர்தலில் நிற்க தொகுதிகளை ஒதுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் ஏழு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். ப.ம.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தலா ஐந்து தொகுதிகளை அவர்கள் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளர்களுக்கு ஒதுக்க வேண்டும். ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தலா இரண்டு தொகுதிகளை அவர்களின் கட்சியை சார்ந்த முஸ்லிம் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட வேண்டும். 

ஏனெனில் இந்த கட்சிகளில் பெரும்பாலான முஸ்லிம்கள் எந்த விதமான அதிகாரமிக்க பதவிகளை பெறுவதே கிடையாது!. குறிப்பாக ப.ம.க, மதிமுக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட்கள் சார்பில் இதுவரை ஓரு முஸ்லிம்கூட சட்டமன்ற உறுப்பினரானது கிடையாது!. ஆனால் நம் ஓட்டுக்கள் மட்டும்தான் தேவை!.

திமுக 10
அதிமுக 10
காங்கிரஸ் 7
ப.ம.க 5
தே.மு.தி.க 5
ம.தி.மு.க 2
இரு கம்யூனிஸ்ட்கள் 4
விடுதலை சிறுத்தைகள் 2

இவ்வாறு இவர்கள் ஒதுக்கீடு செய்தால், ஆக மொத்தம் அரசியல் கட்சிகள் சார்பில் 45 முஸ்லிம் வேட்பாளர்களும், இஸ்லாமிய கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படும் 6 வேட்பாளர்களையும் சேர்த்து, இத்தேர்தலில் 51 முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள். இறக்கப்பட்ட வேண்டும்!. இந்த 51 வேட்பாளர்களில் மிகவும் கீழ்த்தரமாக வெறும் 50 % முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றார்களே யானால் வரும் சட்டமன்றத்தில் நீங்கள் 25 முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை காணமுடியும். 

அதாவது இது நியாயமான மற்றும் அடிமட்ட கோரிக்கையின் கணக்கீடேயாகும். இதை தவிர முஸ்லிம்களின் எண்ணிக்கையை சட்டமன்றத்தில் நாம் அதிகரிக்கச் செய்யவே முடியாது. ஊராட்சி, பஞ்சாயத்து போர்டு, நகராட்சி, மாநகராட்சி, சட்டமன்றம், பாராளுமன்றம் ஆகிய அத்தனை தேர்தலிலும் இதே போன்று கிடைக்க செய்யவேண்டும்.

இந்த சமுதாயத்திற்கு இதுபோன்ற இடங்களில் சீட் கிடைக்கின்றதோ இல்லையோ!, தவறாமல் கடவுசீட்டை (பாஸ்போர்ட்) மட்டும் எளிமையாக கிடைக்க வழிவகை செய்து வைத்து விடுகின்றார்கள். ஏனெனில் இதை உங்களுக்கு எளிமை படுத்தி வைத்ததற்கு காரணமே, இதை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஓடிவிடுங்கள் என்பதற்காகவே!. நீங்கள் இதுபோல் முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களை கேட்டு இந்த அரசியல் கட்சிகளை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காவே!. அட சனியன் பிடித்த அயோக்கியர்களே!. முதலில் கடவுச்சீட்டை எங்களுக்கு கிடைப்பதை கஷ்டமாக்குங்கள்!. அப்போதுதான் என் சமுதாயம் ஊரிலே இருந்து, இது போன்று தேர்தலை சந்திக்க சிந்திக்கும். ஆட்சி அதிகாரத்தினை அடைய முற்படும்!. அதிகார படிப்பினை படிக்கும்!.

எனவே இனி நாம் என்ன செய்யவேண்டும்?.

அரசியல் கட்சிகளின் சார்பில் அவர்கள் கட்சியை சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்த தேர்தலில் அதிக சீட் ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை மிகவும் வலுவாக்கப்பட வேண்டும்!. இந்த கோரிக்கையை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊரில் உள்ள ஜமாத்திலும், தேர்தலில் ஆதரவு என்ற நிலைபாட்டை மட்டுமே எடுக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், கட்சி மற்றும் கட்சி சார்பற்ற முஸ்லிம்கள் அனைவரும் இதை கோரிக்கையாக, இந்த செவிட்டு அரசியல் கட்சிகளின் தலைமைக்கு புரியும் வண்ணம் போஸ்டர்களாகவும், நோட்டீசாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் நம் கோரிக்கையை பிரபலப்படுத்தி வலுசேர்க்க வேண்டும். இந்த தேர்தலிலேயே கிடைக்க பெரும்முயற்சி செய்யவேண்டும். 

வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் ஊரில் உள்ளவர்கள் மூலம் போஸ்டர்கள் அடித்து ஓட்ட ஆவன செய்யுங்கள். இந்த தேர்தலில்  அரசியல் கட்சிகள் தங்களின் நிலைபாட்டை மாற்ற நீங்களும் காரணமாக இருங்கள். இது தொடக்கமாக இருக்கட்டும்!. அடுத்த அடுத்த தேர்தல்களில் இவர்களுக்கு வேறு வழியில்லாமல் போகும்!. தந்தே தீருவார்கள்!. “இத்தனை முஸ்லிம்களை நிறுத்தினால் மட்டுமே ஓட்டு” என்ற கோரிக்கையை, இக்கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை பரிசீலிக்கும் முன்பே, வலுசேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதையும் நினைவில் வையுங்கள்.

எப்படி என் முந்தைய இரண்டு கட்டுரைகளையும் மக்கள் மத்தியில் நீங்கள் எடுத்து செண்றீர்களோ, அதை விட பல மடங்கு இதை மக்கள் மத்தியில் பெரிதுபடுத்தப்பட வேண்டும். இந்த கட்டுரையில் உங்களின் பெயர்களையோ அல்லது உங்களின் இணைய தளங்களின் முகவரியையோ போட்டுக்கொள்ளுங்கள். நன்றி என்று என் பெயரையோ அல்லது என் இனையத்தின் பெயரையோ போடவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இது என் கோரிக்கை அல்ல!. இந்த சமுதாயத்தின் கோரிக்கை!!.

Sunday, February 27, 2011

ம ம கவுக்கு 30 சீட்டுக்கள்! அதிரடி ஆரம்பம்!!

த மு மு கவின் அரசியல் பிரிவான ம ம க இந்த தேர்தலில் அதிமுககூட்டணியிலபோட்டி இடுகிறது.


கட்சி ஆரம்பித்து சில வருடங்களே ஆன நிலையில் பல்லாயிரம் இளைஞர்களை தன பக்கம் ஈர்த்துள்ள அக்கட்சி முஸ்லிம் மக்களிடையே செல்வாக்குள்ள ஒரு கட்சிதான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.


நூறு வருடங்களை தாண்டிய முஸ்லிம் லீக் இன்று ஒரு சீட்டுக்கும்,இரண்டு சீட்டுக்கும் கருனாநித்திக்கு பல்லிளிக்கும் பரிதாபமான நிலையில் இன்று ம ம க பெற்ற அதே எண்ணிக்கையான மூன்று தொகுதிகள் அதற்கும் கிடைத்துள்ளன.ம ம க இன்று அரசியலில் இல்லாதிருந்தால் முஸ்லிம் லீக் ஒன்று அல்லது இரண்டு சீட்டுக்கள் மட்டுமே பெறுவார்கள் என்பது உறுதி.காரணம் முஸ்லிம் லீக்கிற்கு இளைஞர் பட்டாளம் 
கிடையாது என்பதும்,விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் அவர்கள் இருப்பதும்,பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள்,CMN சலீம் போன்ற துடிப்புள்ள ஒன்று அல்லது இரண்டு என எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பது உள்ளங்கை 
 நெல்லிக்கனி.

புதுக்கட்சியான ம ம க தனக்கென தனியான சின்னத்தில் போட்டியிடுகிறது.இதன் மூலம் தனி அந்தஸ்த்து பெற முடியும்.தனி முடிவு மேற்கொள்ள முடியும்,நமக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரப்படும்போது அதை எதிர்த்து குரல் கொடுக்க முடியும்.அது மட்டுமல்ல-த மு மு க ஒரு நியாயமான - நேர்மையான முறையில் செயல்படும் கட்சி என்பதும்,ஒடுக்கப்படும் எல்லா மக்களுக்காகவும் பாடுபடும் கட்சி என்பதும் அனைவரும் அறிந்ததே.எனவே ம ம க வினுடைய சீட்டுக்கள் மூன்றுதான் என்றாலும் அது முப்பதுக்கு சமம் என்றால் அது மிகையல்ல.

ஆனால் முஸ்லிம் லீக்கோ - மூன்று சீட்டுக்களிலும் வென்றாலும் கருணாநிதியின் குரலாகவே இருப்பார்கள்.தி மு கவின் கொரடா என்ன கட்டளை இடுகிறாரோ - அதைத்தான் செய்ய முடியம்,ஏனெனில் நூறு வருட முஸ்லிம் லீக் இரவல் சின்னமான உதய  சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

 1991க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.

அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.

ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில் மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள¢கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

Saturday, February 26, 2011

நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய முஸலிம்கள்

நேதாஜியின் தேசிய இராணுவத்தில் பணியாற்றிய தமிழர்கள்
1973
ம் ஆண்டு தமிழக அரசு புத்தகம் ஒன்றைவெளியிட்டது.அப்பட்டியலில் 25% மேற்பட்ட முஸலி­ம்கள் இருந்தனர்என்பது குறிப்பிடத்தக்கதுஅவர்களின் விபரம் வருமாறு:
பள்ளப்பட்டி மனிமொழி மவ்லானா
இராஜகிரி அப்துல்லா
...
இளையான்குடி கரீம் கனி
திருப்பத்தூர் அபூபக்கர்
திருப்பத்தூர் தாஜிதீன்
அத்தியூத்து அபூபக்கர்
பக்கரி பாளையம் அனுமன் கான்
சென்னை அமீர் ஹம்சா
சென்னை ஹமீது
செங்குன்றம் கனி
வண்ணாரப்பேட்டை ஹயாத்கான்
புதுவலசை இபுராஹிம்
பார்த்திபனூர் இபுராஹிம்
வனரங்குடி இபுராஹிம்
இளையான்குடி அப்துல் கபூர்
மேலூர் அப்துல் ஹமீது
சோழசக்கர நல்லூர் அப்துல் ஜப்பார்
தத்தனனூர் அப்துல் காதர்
பட்டுக்கோட்டை அப்துல் காதர்
திருப்பூர் அப்துர் ரஜாக்
காவிரிப்பட்டினம் அப்துல் மஜித்
குருவம் பள்ளி அப்துல் மஜீத்
கண்ணாத்தாள் பட்டி அப்துல் முத்தலிபு
லெப்பைக் குடிகாடு அப்துல் சலாம்
ராம்நாடு அப்துல் வஹாப்
மானாமதுரை அப்துல் பாசித்
திரிவிடைச் சேரி அப்துல் வஹிப்
அத்தியூத்து இபுராஹிம்
சென்னை ஜாபர் ஹக்கிமி
சிங்கம் மங்களம் ஜெய்னுல் ஆபிதீன்
திருப்பத்தூர் காதர் பாட்ஷா
புதுவலசை முஹம்மது லால் கான்
பார்த்திபனூர் கச்சி மைதீன்
தஞ்சை முஹம்மது தாவூது
அறந்தாங்கி முஹம்மதுசெரிபு
திருச்சி வரகனேரி முஹம்மது சுல்தான்
வடபழனி சென்னை முஹம்மது யூசுப்
தூத்துக்குடி முஹம்மது கல்லுரிஜனி
சிவகங்கை முஹம்மது இபுராஹிம்
சென்னை முஹம்மது உமர்
மதுரை மொய்தீன் பிச்சை
அம்மன்சத்திரம் முஹம்மது மீராசா
திருப்பத்தூர் பீர் முஹம்மது
கும்பகோணம் ரஹ்மத்துல்லா
குடியத்தம் நஜீமுல்லாஹ்
கிருஷ்ணகிரி தாவூத் ஷாயிபு
இராமநாதபுரம் சையது கனி
பரகப்பேட்டை தாஜிதீன்
மன்னர்குடி சிக்கந்தர்
கம்பம் சிக்கந்தர்
முதுகுளத்தூர் சுல்தான்
கும்பகோணம் சுல்தான்
இராமநாதபுரம் தாஜிதீன்

Thursday, February 24, 2011

விடி வெள்ளி மகளிர்

ஆடு வளர்க்கும் வளர்மதி: தேனி மாவட்டம் சிலமலை என் சொந்த ஊர். நான்காவது வரை படித்துள்ளேன். 19 வயதில் திருமணம். கணவர் சத்தியமூர்த்திக்கு தச்சு வேலை. தகரம்தான் சுவர்தென்னங்கீற்று தான் கூரைஅதுதான் எங்கள் வீடு. வறுமை வாழ்க்கையை பிடுங்கியது. "அரம்'செய்வது எங்கள் ஊரின் குடிசைத் தொழில். அதையே நானும் செய்தேன். தினம், 50 ரூபாய் கிடைத்தது. எனக்கு தையல் தெரியும் என்பதால்ஒரு பழைய தையல் இயந்திரத்தை வாங்கி வந்தேன். காடா துணி வாங்கி வந்து,உள் பாவாடை தைத்து விற்றேன். அதன் மூலம் சிறிது வருமானம் உயர்ந்தது. அடுத்ததாககிரைண்டர் வாங்கிகூலிக்கு மாவு அரைத்துக் கொடுத்தேன்.


 பின்மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினரானேன். அப்போது தான்வெளியே நாலு பேருடன் பழக முடிந்தது. முன்னேறுவதற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்ள முடிந்தது.  ஆடு வளர்க்க குழுவுக்கு கடன் கொடுத்தனர். துணிந்து 34 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, 11 ஆடுகளை வாங்கினேன். ஆட்டு புழுக்கையை விற்றுஅந்த பணத்தில் ஆடுகளுக்கு தீவனம் வாங்கினேன். 


 தொண்டு நிறுவனத்தில் இருந்து எங்களுக்குமொபைல் போன் வாங்க பணமும்இலவச சிம் கார்டும் கொடுத்தனர். தினமும் அதில் ஐந்து முறைவாய்ஸ் மெயிலில் விவசாய டிப்ஸ் வரும். ஆடு வளர்ப்புஎளிய முறை ஆடு வைத்திய குறிப்புகள் போன்றவற்றை கேட்டுக் கொள்வேன். வர்த்தக வசதி சேவை மையம்,வங்கிகள் இல்லாத கிராமங்களுக்கு கை கொடுக்கிறது.


 எங்கள் ஊரிலும் அந்த மையம் இருக்கிறது. அதற்கு நான் தான் பொறுப்பாளர். அதற்கு ஊதியமும் உண்டு. நான் இப்போதுசிலமலை கிராம ஏழு மகளிர் குழு கூட்டமைப்பின் தலைவி; 14 மகளிர் கூட்டமைப்பின் பொருளாளர்விடி வெள்ளி மகளிர் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்மகளிர் சுய உதவிக்குழுக்களின் தீவிர ஆர்வலர் ஆகிய பொறுப்புகளை வகிக்கிறேன். நாள் முழுவதும் அயராத உழைப்பு என்றாலும்இப்போது என்னால் தலை நிமிர்ந்து வாழ முடிகிறது.

Wednesday, February 23, 2011

முரட்டுப்பயலே, முரட்டுப்பயலே சேதி கேளடா?


வாரத்தில் 35 மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவிபார்க்கும் குழந்தைகளின் மனதில் முரட்டுத்தனமும்உடலில் பருமனும் கூடும் எனஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குழந்தைகள் அதிக நேரம், "டிவி'  பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துஅசோசம் சமூக மேம்பாட்டு அமைப்பு ஆய்வு நடத்தியது.  சென்னைமும்பைடில்லிபாட்னாசண்டிகார் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த ஆறு முதல் 17 வயது வரையிலான 3,000 பிள்ளைகளிடமும், 3,000 பெற்றோரிடமும் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குழந்தைகள் வாரத்திற்கு 35மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவிபார்ப்பதால்அவர்கள் மனதளவிலும்,உடலளவிலும் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைகள் முரட்டு தனத்துடனும்அதிக உடல் பருமனுடனும் இருப்பர்.  அவர்களுக்கு படிப்பதிலும் கவனம் சிதறும். ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கு அதிகமாக, "டிவிபார்ப்பதால்இந்த விளைவுகள் ஏற்படுகின்றன. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக "டிவிபார்ப்பது தான் உடல் நலத்திற்கும்மன நலத்திற்கும் பாதுகாப்பானது.  பெரும்பாலான பெற்றோர்தங்களது குழந்தைகள், "டிவி'யில் வரும் விளம்பரங்களைப் பார்த்து,  சத்துக் குறைவான  உருளைக்கிழங்கு சிப்ஸ்குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

"டிவிநிகழ்ச்சிகளில் மோசமான வார்த்தைகளும்நாகரிகமற்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவதாக, 90 சதவீத பெற்றோர் ஒப்புக் கொள்கின்றனர். 12 முதல் 18 வயது வரையிலான 54 சதவீத பிள்ளைகள்,தங்களது பெற்றோருடன் அமர்ந்து, "டிவிபார்ப்பதையே விரும்புகின்றனர். "ரியாலிட்டி ÷ஷா'க்களை 76 சதவீத பேர் விரும்புகின்றனர்.  பெரும்பாலான, "டிவிநிகழ்ச்சிகளில் வன்முறைஆபாசம் உள்ளிட்டவை தலை தூக்கியுள்ளதாகவும்அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 60 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் வன்முறை பாதைக்கு செல்வதற்கு, "டிவிநிகழ்ச்சிகள் தூண்டுகின்றன என்று 10 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  

Monday, February 21, 2011

மூன்று தொகுதிகளைப் பெற்றது ஏன்?


அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி
அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட்சி

20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக முஸ்லிம் அரங்கில் எழுச்சி!மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாராட்டுகள், வாழ்த்துகள் வரும் வேளையில் ஒரு சிலர் விமர்சனங்களையும் முன் வைக்கின்றனர். பலர் எங்களிடம் அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட கேள்விகளைத் தொகுத்து, அதற்கான விளக்கங்களை அளிக்கின்றோம்.


கேள்வி: மாற்று அரசியலுக்கான முன்முயற்சி என்ற பெயரில் மனிதநேய மக்கள் கட்சியை உருவாக்குகிறீர்கள். கூடுதல் தொகுதிகளை பெறுவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் மூன்று தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளீர்கள். ஏன்?


பதில்: சமுதாயத்தின் அரசியல் தலை நிமிர்வுக்காகத்தான் நாங்கள் போராடி வருகிறோம். அதில் நாங்கள் சமரசம் செய்துகொள்வதில்லை. இப்போது 3 தொகுதிகள் குறித்து ஒரு சிலர் விமர்சிக்கிறார்கள். அதேசமயம் 90 சதவீதம் பேர் பாராட்டுகிறார்கள் என்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். எனினும் விமர்சிப்பவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் என்று சிறு கூட்டமாக இருந்தாலும் அவர்களுக்கும் விளக்கமளிப்பது எமக்கு கடமையாகிறது.

“ஏதோ கொடுத்ததை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்கள்” என்பதுபோல அந்த சிலர் விமர்சிக்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக குழுவுடன் மமக குழு 5 முறை பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகளின் பட்டியலைக் கொடுத்துவிட்டு, அதில் 12 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் 12&ல் இருந்து ஏழு தொகுதிகள் என்ற நிலைக்கு வந்தோம். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் 5 தொகுதிகள் என்ற நிலையில் இதற்கு மேல் எங்களால் இறங்கி வரமுடியாது என கூறிவிட்டோம். பிப்ரவரி 18&ம் தேதி அதிமுக குழுவிடம் எங்களின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துவிட்டோம். அதனாலேயே ஒப்பந்தம் போடுவது ஒத்திப்போய்க் கொண்டிருந்தது. அதிமுக குழு பல்வேறு காரணங்களை எடுத்துக் கூறி மூன்று தொகுதிகள் தான் என்ற எண்ணிக்கையை ஏற்கக் கூறி வேண்டிக் கொண்டிருந்தது. ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தார்.

நாம் கடைசியாக 4 தொகுதிகளும், புதுச்சேரி மாநிலத்தில் 1 தொகுதியும் ஒதுக்க வேண்டும் என்று உறுதி காட்டினோம். இதனிடையே மமக மல்லுக்கட்டுவது குறித்து நக்கீரன் உள்ளிட்ட ஏடுகள் செய்தி வெளியிட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே ஜமாஅத்துகள், உலமாக்கள், சமுதாய ஆர்வலர்கள், சமுதாய அறிவுஜீவிகள் என பலதரப்பும் நமக்கு அன்பான வேண்டுகோளை விடுத்தனர். போனமுறை திமுகவிடம் மல்லுகட்டியது போல் வேண்டாம். இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்ற அளவில் சிந்தியுங்கள். கூடுதல் தொகுதிகளை அடுத்தடுத்த தேர்தல்களில் வற்புறுத்துங்கள் என கருத்து தெரிவித்தனர்.

இதே கருத்தை பிப்ரவரி 19 அன்று பல மாவட்ட நிர்வாகிகளும், வெளிநாடுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நம்மிடம் வலியுறுத்தினர். சமுதாயத்திற்காகத்தான், நாம் கட்சி ஆரம்பித்தோம். சமுதாயத்தின் கூடுதல் பிரதிநிதித்துவத்திற்காகத்தான் போராடுகிறோம். எந்த சமுதாயத்திற்காகப் போராடுகிறோமோ அந்த சமுதாயத்தின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் ஏற்றுக்கொள்வது கட்டாயமாகிறது.

அந்த அடிப்படையில் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளுடன் அதிமுக தர முன் வந்த மூன்று தொகுதிகளை இப்போதைய சூழ்நிலையில் ஏற்றுக்கொள்வது என்றும், மூன்று தொகுதிகளில் வெற்றி வாகை சூடிய பிறகு கூடுதல் தொகுதிகள் என்ற லட்சியத்தை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கேள்வி: நீங்கள் அதிமுக குழுவுடன் பெரும் போராட்டம் நடத்தியது, விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும். உங்களை விமர்சிப்பவர்கள் அதை ஏற்க மாட்டார்களே..?


பதில்: நாங்கள் கூடுதல் தொகுதிகளுக்காகப் போராடியது வேறு யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, இறைவனுக்குத் தெரியும். கடைசியாக நான்கு தொகுதிகளையாவது பெற்றுவிட வேண்டும் என்று உறுதிகாட்டினோம். ஆனால் இறைவன் நாடவில்லை. சமுதாயத்தின் தலை நிமிர்வுக்காக நாங்கள் போராடியதற்கான கூலி இறைவனிடத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளோம். எங்களை விமர்சிப்பவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

கேள்வி: அதிக தொகுதிகள் எதிர்பார்த்து கிடைக்காத நிலையில் மூன்று தொகுதிகளை பெற்றுள்ளீர்கள். அதை ஈடுகட்டும் வகையில் சமுதாயத்தின் நலன் காக்கும் வேறு கோரிக்கைகளை வைத்திருக்கீறீர்களா?

பதில்: செல்வி ஜெயலலிதாவை சந்தித்தபோது பொதுக்குழுவின் தீர்மானப்படி இடஒதுக்கீடு குறித்தும் விரிவாகப் பேசியுள்ளோம். கல்வி முறையில் உருது, அரபி உட்பட சிறுபான்மை மொழிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாராபட்ச போக்கு குறித்தும், திருமண பதிவுச்சட்டத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும், பல்வேறு சமுதாய கோரிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசியுள்ளோம். எல்லாம் நல்லபடியாக நடைபெற அனைவரும் துவா செய்வோம்.

கேள்வி: இந்த மூன்று தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்றும் தருவதாக கூறியிருக்கும் ஒரு தொகுதியும் ஒரு வகையில் சாதனைதான் என சமுதாய அரசியல்வாதிகள் பாராட்டுகிறார்களே..

பதில்: உண்மைதான்! 1991&க்கு பிறகு கடந்த 20 ஆண்டுகளில் முஸ்லிம்கள் நடத்தும் அரசியல் கட்சிக்கு சொந்த சின்னத்தில் மூன்று தொகுதிகளை திராவிடக் கட்சிகள் ஒதுக்கியது இப்போதுதான்! இக்காலக்கட்டத்தில் அப்துல் லத்தீப் அவர்கள் ஒருமுறை 5 தொகுதிகளை திமுகவிடம் பெற்றார். ஆனால் உதயசூரியனில் தான் அனைவரும் போட்டியிட்டார்கள்.

அப்துல்சமது அவர்கள் முஸ்லிம் லீக்கிற்கு அதிமுக கூட்டணியில் இரண்டு இடங்களைப் பெற்றார். ஆனால் அவர்களும் இரட்டை இலையில்தான் போட்டியிட்டார்கள்.

ஆனால், அப்துல் சமது, அப்துல் லத்தீப், ஆகியோர் செல்வாக்கோடு இருந்த 1991லிருந்து இப்போதைய 2011 வரை உள்ள இருபது வருடத்தில் தமிழகத்தில்¢மூன்று தொகுதிகளை சொந்தச் சின்னத்தில் பெற்று, மனிதநேய மக்கள¢கட்சி முதல்கட்டமாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

கேள்வி: நீங்கள் இரட்டை இலையில் போட்டியிடுவதாக, சொல்லி இருந்தால் நிச்சயம் 12 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும், முழு தேர்தல் செலவுகளையும் அவர்களே ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்றும் பலரும் வருத்தப்படுகிறார்களே..

பதில்: உண்மைதான். ஆனால் சமுதாயத்தின் தனித்தன்மையும், அரசியல் உரிமைகளும், சுதந்திரப் பேச்சுகளும் முடக்கப்பட்டிருக்கும்.

எந்த பெரிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டோமோ அக்கட்சியின் கொறடா அனுமதியில்லாமல், நமது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் சுதந்திரமாகப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். கடந்த காலத்தில் காயிதே மில்லத்திற்கு பிறகு பல முஸ்லிம் அமைப்புகள் செய்த தவறுகளை நாமும் செய்ய விரும்பவில்லை.

கூடுதல் தொகுதிகளுக்காகவும், தேர்தல் செலவுகளுக்காகவும் நமது உரிமைகளை முடக்க நாங்கள் விரும்பவில்லை. குறைவான தொகுதிகளாக இருந்தாலும், அவை தனித்தன்மையோடும் தன்மானத்தோடும் இருக்க வேண்டும் என்பதால்தான் மூன்று தொகுதிகளாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: அதிமுக கூட்டணியில் மற்ற கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடும்போது மமகவுக்கு 3 தொகுதிகள் கிடைத்திருப்பது பரவாயில்லை என பல பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்களே...

பதில்: விபரம் அறிந்தவர்களுக்கு அந்த உண்மை புரியும், போனமுறை அதிமுக கூட்டணியில் 35 தொகுதிகளைப் பெற்ற வைகோ அவர்களுக்கு இம்முறை 15 தொகுதிகள் பேசப்படுவதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கின்றது. 80 தொகுதிகள் கேட்ட விஜயகாந்துக்கு 41 தொகுதிகள் பேசப்படுவதாக மீடியாக்கள் தெரிவிக்கின்றன.

முன்பு 2001ல் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட வலுவான கட்சியான புதிய தமிழகத்துக்கு இப்போது அதிமுக கூட்டணியில் 2 தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தேவர் சமுதாயக் கட்சியான: மக்கள் அறிமுகம் கொண்ட, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சிக்கும், நாடார் சமுதாயப் பின்னணி கொண்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கும் புதிய தமிழகத்தின் எண்ணிக்கைகள் தான் பேசப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு லட்சத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கிய கொங்கு முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு கூட்டணியிலுமே நான்கு தொகுதிகள்தான் பேசப்படுவதாக செய்திகள் வருகின்றன. அது மட்டுமல்ல, மேற்கண்ட அனைவருக்கும் சொந்தச் சின்னங்களில் போட்டியிட அனுமதி கிடைக்குமா? தெரியவில்லை.

இதையெல்லாம் ஒப்பிடும்போது மமகவுக்கு தமிழகத்தில் மூன்று தொகுதிகள் சொந்தச் சின்னத்தில் அளிக்கப்பட்டிருப்பதும், புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி தரப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதும் நல்ல மரியாதையான தொடக்கம் என்பதை பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கேள்வி: இப்போது சூழ்நிலையைப் புரிந்துகொண்டு காய் நகர்த்தும் நீங்கள், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தர முன்வந்த ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டிருக்கலாமே...


பதில்: அன்றைய அரசியல் சூழலில், எடுக்கப்பட்ட முடிவு அது. 2004&ல் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, மதிமுக, கம்யூனிஸ்டுகள் 2009&ல் திமுக கூட்டணியில் இல்லை. அவர்கள் விட்டுச் சென்ற 14 தொகுதிகள் உபரியாக இருந்தது.

வட மாவட்டங்களில் மட்டுமே உறுதியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அப்போது இரண்டு தொகுதிகளை கொடுத்து, தமிழகம் முழுக்க செயல்படும் நமக்கு ஒரு தொகுதியை மட்டுமே தருவோம் என்று அரசியல் பாரபட்சத்தை திமுக தலைமை வெளிக்காட்டியது.

அவர்கள் தர முன்வந்த ஒரு தொகுதியை கூட, எங்களுடன் கலந்து பேசி தரவில்லை. நாம் விரும்பிய வேலூரை கவனத்தில் கொள்ளாமல், அவர்களாகவே ராமநாதபுரத்தை முடிவு செய்தார்கள். இரண்டும் நமக்கு பலமானவைதான் என்றாலும், ராமநாதபுரம் அழகிரியின் கட்டுப்பாட்டில் வரக்கூடிய தொகுதி.

அந்த நேரத்தில் வக்பு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக நமக்கும், அழகிரிக்கும் கடும் கருத்து வேறுபாடு இருந்தது. இது திமுக தலைமைக்கு நன்றாகத் தெரியும்.
ஒருவேளை ஒரு தொகுதியை ஏற்றுக் கொண்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டு இருந்தால், அழகிரியின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆட்சியில் பங்கு கேட்டதற்காக கூட்டணியில் வைத்தே தங்கபாலுவும், இ.வி.கே.எஸ். இளங்கோவனும் தோற்கடிக்கப்பட்டது போல ‘உள்குத்து’ வேலைதான் நடந்திருக்கும். எது எப்படியோ, கடந்து போன அந்த அரசியல் நிகழ்வுகளை நாம் பெரிதாக்க விரும்பவில்லை. அவற்றை அரசியல் அனுபவங்களில் ஒன்றாகவே எடுத்துக் கொள்கிறோம்.

இத்தருணத்தில் ஒரு ஹதீஸை இங்கே நினைவூட்டுகிறோம்.

பலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை. இப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச் செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு. (நபிமொழி)

அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945)


கேள்வி: என்னதான் நீங்கள் தெளிவாக விளக்கினாலும், ஒரு சிலர் உங்களை விமர்சித்துக் கொண்டே இருப்பார்களே... என்ன செய்யப் போகிறீர்கள்?

பதில்: அவர்களெல்லாம் யார் என்று சமுதாயத்திற்கும், பொதுமக்களுக்கும் தெரியும். சமுதாயத்தில் பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி சுயநலத்திற்காக செயல்படுபவர்கள்: இயக்கம் ஒன்றை உருவாக்கி தலைமையேற்க தகுதியில்லாதவர்கள் தற்போது செயல்படும் இயக்கங்களை வலுவூட்டி, சமுதாயத்திற்கு நலன்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம் காட்டாதவர்கள்: தங்கள் இயக்கத்தின் சார்பாக அரசியல் கட்சியை உருவாக்க முடியவில்லையே என பொறாமைப்படுபவர்கள்: சொந்தச் சின்னத்தில் ஒரு தொகுதியைக் கூட பெற வழியில்லாதவர்கள்: அடுத்தவர்கள் நடத்தும் பத்திரிக்கைகளில் எதையாவது பரபரப்புக்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள்: & இப்படி இவர்களின் பட்டியல் நீளும்.

அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை. காரணம், முன்பு நாம் தனித்து நின்றபோது இவர்களெல்லாம் நம்மை ஏன் ஆதரிக்கவில்லை. அப்போது எங்கே தொலைந்தார்கள்?

ஒருவேளை மூன்று தொகுதிகளை வாங்காமல், நாம் வெளியே வந்திருந்தால், கொடுத்ததை ஏன் மறுத்தீர்கள் என விமர்சிப்பார்கள். வாங்கிய பிறகு, மூன்று தொகுதிகளை வாங்கியது ஏன் என விமர்சிப்பார்கள்.

ஒரு நிலைப்பாடு எடுத்து அதில் வெற்றி பெற்றால் ஒரு மாதிரி பேசுவார்கள். தோல்வியடைந்தால் உடனே மாற்றி பேசுவார்கள்.

ஒரு வேளை கூடுதலாக மூன்று தொகுதிகளை பெற்றிருந்தால், அதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது போல பேசும் இவர்களெல்லாம்: நாம் சந்தியில் நிற்க வேண்டும் என விரும்பும் நரிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய “விமர்சகர்களின்” முகமும், முதுகும் எப்படிப்பட்டது என்று நமக்கு தெரியும். இவர்களால் எந்த நன்மையும் நமக்கு இல்லை.

நமக்கு சமுதாய மக்களும், இயக்கவாதிகளும்தான் முக்கியம். அவர்களது புரிதல்களும், ஆதரவும், அல்லாஹ்வின் அருளும் இருக்கும்போது நாம் எதைப்பற்றியும், யாரைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

Saturday, February 19, 2011

கீழ் ஜாதி ஹிந்துக்களுக்குத் தனி 'டப்பாக்கள்"

அய்யர்கள் அவர்களின் உடல் அமைப்பால் ஆரிய ஆக்கிரமிப்பாளர்களின் நேரடி வாரிசுகளாவார்கள். அவர்கள் நல்ல நிறம் நீண்ட மூக்கு இவற்றைக் கொண்ட ஜெர்மானியர்களைப் போல் தோற்றந் தருகின்றார்கள். மனுஸ்மிர்தி மனுதர்மம் அதாவது ஹிந்து மதத்தின் வேதநூல், பிராமணர்களைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

1). பிராமணன் தர்மத்தை நிறைவு செய்வதற்காகப் பிறந்தவன். இந்த உலகில் என்னென்ன வெல்லாம் இருக்கின்றனவோ இவை அனைத்தும் ஒரு பிராமணனுக்குச் சொந்தம். அவன் பிறப்பால் அடைந்த உயர்வால் அவன் அத்தனைக்கும் சொந்தக்காரனாகின்றான். இந்த உலகில் இருப்பவை அனைத்தும் பிராமணனின் தயவால் ஜீவித்துக் கொண்டிருக்கின்றன.

2). அறிவற்றவனோ அறிவாளியோ எந்த நிலையிலும் ஓர் பிராமணன் உயர்ந்தவனே! மூன்று உலகங்களும் அவற்றிலிருக்கும் கடவுள்களும் பிராமணனால் இருந்து கொண்டிருக்கின்றன.

டாக்டர் அம்பேத்கார் கூறுகின்றார்கள்: பிராமணர்களின் கொள்கைகள் ஆறு அவை:

1. பல்வேறு வகுப்பாருக்கும் இடையே தராதரம் அது நிரந்தரம்.

2. சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் நிராயுதபாணிகளாக ஆக்கிவிடுவது.

3. சூத்திரர்களுக்கும் தீண்டத் தகாதவர்களுக்கும் கல்வியை முற்றாக மறுத்துவிடுவது.

4. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் அதிகாரங்களை முற்றாகத் தடை செய்துவிடுவது. அல்லது மறுத்துவிடுவது.

5. சூத்திரர்களுக்கும் தீண்டத்தகாதவர்களுக்கும் சொத்து உரிமையை மறுத்துவிடுவது.

6. பெண்களுக்கு அடிப்படை உரிமைகளை மறுத்துவிடுவது. அவர்களை அமுக்கப்பட்டவர்களாகவே வைத்துக் கொண்டிருப்பது.

ஆக ஏற்றத்தாழ்வுகள் பிராமணர்களின் அதிகார பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட, அடிப்படைக் கோட்பாடு மனுஸ்மிர்தி 204 அபபி J.A. Duboils என்பவர் Hindu Manners Customs and என்ற நூலில் ((Oxford Third Eidtion 1906, Page 139) ஹிந்து மந்திரம் ஒன்றை இப்படி மொழிபெயர்த்துள்ளார். இந்த பிரபஞ்சம் கடவுள்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றது.
கடவுள்கள் மந்திரங்களின் சக்தியின் கீழ் இருக்கின்றார்கள். மந்திரங்கள் பிராமணர்களின் அதிகாரத்தின் கீழ் இருக்கின்றன. எனவே பிராமணர்கள் நமது கடவுள்கள் அல்லது கடவுள்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

1. கீழ்ஜாதி ஹிந்துக்களின் பரிதாபம்: தீண்டத்தகாதவர்கள் ஹிந்துக்கள் அல்ல இப்படிப் பறை அறிவிக்னறார் பூரி சங்கராச்சாரியார். இந்த சங்கராச்சாரியாரைத் தான் இந்த பிராமணர்கள் தங்களுடைய மிகப்பெரிய தலைவராகக் கொண்டாடுகின்றார்கள். 'மனு" என்ற ஹிந்து தர்ம சாஸ்தரிம் கூறுகின்றது. சூத்திரன் காகம், தவளை, நாய் இன்னும் இவை போன்ற மிருகங்களைப் போலாவான். இவற்றைப் போல் இவன் ஊனம் உள்ளவன். இவற்றிலுள்ள பலவீனங்கள் அனைத்தும் இவனுக்கு உண்டு.

சூத்திரர்களுடைய சொத்துக்களையும், செலவங்களையும் ஏய்த்துப் பறித்துக் கொள்வது உயர் ஜாதியினருக்கு அனுமதிக்கப்பட்டது. சூத்திரர்களுக்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக் கொள்ளும் உரிமையே, அடுத்தவர்களைச் சார்ந்து வாழாத ஓர் நிலையை உருவாக்கிக் கொள்ளும் உரிமையோ இல்லை. வெவ்வேறு ஜாதியினரும் வெவ்வேறு விகிதங்களில் வட்டி கொடுக்க வேண்டும்.

கீழ்ஜாதியனர் உயர்விகிதத்தில் வட்டி கொடுக்க வேண்டும். சூத்திரர்களின் 'சாட்சியம்" சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தங்களை இந்த நாட்டின் நிரந்தர ஆட்சியாளர்களாகவும் அதிகாரிகளாகவும் ஆக்கிக் கொள்ள இந்த நாட்டுக் குடிமக்களை பல்வேறு ஜாதியினர் எனப் பிரித்துப் பலவீனப்படுத்தி விட்டார்கள் ஆரியர்கள் பிராமணர்கள்.
அண்மையில் அரசு மேற்கொண்ட ஓர் கணிப்பில் இந்தியாவில் 2000 ஜாதிகள் இருக்கின்றன என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு ஜாதியினரும் தனது ஜாதி தான் உயர்ந்து. ஏனைய ஜாதிகளெல்லாம் கீழானது எனப் பேசிப் பிரிந்து நிற்கின்றனர். ஒரு ஜாதியைச் சார்ந்தவன் இன்னொரு ஜாதியைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாட்டான். இரண்டு ஜாதியினர் ஒன்றாய் ஓரிடத்தில் குழுமுவதில்லை.


2. கொத்தடிமைகள்: பிராமணர்களும், வேதங்களும் சேர்ந்து கொத்தடிமை முறையை இந்தியாவில் ஏற்படுத்தி விட்டார்கள். இந்தியா சுதந்திரமடைந்து ஏறத்தாழ 50 ஆண்டுகளாகியும் இந்தக் கொத்தடிமை முறையிலிருந்து விடுபட இயலவில்லை. 10-5-1987 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் இப்படி ஓர் செய்தியைத் தருகின்றது. கொத்தடிமைகள் விடுதலை இயக்கத்தின் தலைவர் கூறுகின்றார்: பீகார் மாநிலத்தின் தென மாவட்டங்களான சாம்ரான், கோபால் கஞ்ச் போன்றவற்றில் மட்டும் 20000 ஹரிஜன மக்கள் கொத்தடிமைகளாக வாழ்ந்து வருகின்றார்கள். நாம் 20ம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விஞ்ஞானத்துறையில் அரிய பல சாதனைகளை நித்தம் நித்தம் சந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

ஆனாலும் இந்தியாவின் பல பாகங்களில் கீழ் ஜாதியினர் சில தெருக்களில் போகவே இயலாது. இன்னும் சில தெருக்களில் அவர்கள் தங்கள் செருப்புக்களைக் கழற்றித் தலையில் வைத்துக் கொண்டுதான் நடக்க முடியும். இன்னும் பல டீக்கடைகளில் கீழ் ஜாதி ஹிந்துக்களுக்குத் தனி 'டப்பாக்கள்" வைக்கப்படிருக்கின்றன. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்த இராஜ கோபாலாச் சாரியார் என்ற இராஜாஜி வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஒழித்திட ஓர் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அது குலத்தொழில் திட்டம் என்பதாகும். இந்தத் திட்டத்தின்படி ஒவ்வொரு சமுதாயத்தினரும் அதாவது ஒவ்வொரு குலத்தினரும் தங்கள் மூதாதையர்கள் செய்து வந்த தொழில்களை அப்படியே செய்து வரவேண்டும் என்பதாகும் இந்தத் திட்டத்தை அவர் அறிவித்தாரோ இல்லையோ பிராமணப் பத்திரிக்கைகள் அனைத்தும் ஒன்றாய் இணைந்து இந்தத் திட்டத்தைப் புகழ்ந்து எழுதின. இந்தக் குலத்தொழில் திட்டத்தின் நோக்கம், கீழ்ஜாதியினர் தங்களது கீழான தொழிலைத் தொடர்ந்து செய்து வர வேண்டும். மேல் ஜாதியினர் தாங்கள் பிடித்து வைத்திருக்கின்ற உயர் பதவிகளில் நிரந்தரமாக அமர்ந்திட வேண்டும் என்பதாகும்.

கீழ்ஜாதியினர் என பிராமணர்கள் முத்திரைக் குத்தி மூடிப்போட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் ஏன் ஏழைகளாகவே இருந்து கொண்டிருக்கின்றார்கள்? பிராமணர்கள் அவர்களை எந்த நிலையிலும் எந்த வகையிலும் முன்னேற விடுவதில்லை. அதிகாரம் அனைத்தும் இருக்கும் அரசு பதவிகள் எல்லாம் அவர்களின் கைகளில் இருக்கின்றன.
இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்து என்பதை மக்களுக்குச் சொல்லிட வேண்டிய செய்தி நிறுவனங்களான பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி இவை அனைத்தும் அவர்களின் கைகளில் இருக்கினறன. கல்வித்துறை அவர்களின் கைகளிலிருக்கின்றது.

இந்த நாட்டிலே புழங்கும் பணத்தில் பெரும்பகுதி அவர்களின் கைகளிலேயே புழங்குகின்றது. இத்தனையையும் தங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் விஞ்ஞானிகளாகவும், டாக்டர்களாகவும் ஆகிவிடுகின்றார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இத்தனை வசதிகளும், வாய்ப்புகளும், நிதிவளங்களும், எந்த சமுதாயத்தின் கைகளிலே இருந்தாலும் அந்தச் சமுதாயம் முன்னேறும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.நிச்சயமாக இன்று அமுக்கப்பட்டவர்களாகவும், நசுக்கப்பட்டவர்களாகவும் இருந்து கொண்டிருக்கும் மக்களிடம் இதே வசதிகள் இருக்கமேயானால் அவர்களும் முன்னேறி இருப்பார்கள். இந்த நாட்டையும் முன்னேற்றி இருப்பார்கள்.

நன்றி: DR. சாட்டர்ஜி M.A., Ph.d., (U.S.A.).

Friday, February 18, 2011

உறவினர்கள் இருந்தும், அனாதை ..........


நிர்கதியாக விடப்பட்ட முன்னாள் ரியல் எஸ்டேட் அதிபர்சாலையில் அனாதை பிணமானார். பல லட்சம் ரூபாய் கடன் காரணமாகமகன் மற்றும் உறவினர்கள்அவரின் உடலை வாங்க மறுத்ததால்தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன்தொழிலதிபர் உடலை அடக்கம் செய்ய,திருவான்மியூர் போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

சென்னை மேற்குமாம்பலம்ஆர்.கே.புரம்இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ரகு(53). இவரது மனைவி லட்சுமி. குடும்ப பிரச்னை காரணமாகலட்சுமி கணவரை பிரிந்து மும்பையில் உள்ள மகளுடன் வசித்து வருகிறார். ரகுவின் தாய் சரஸ்வதிசகோதரி ராதாமகன் வினய்(22) ஆகியோர்,திருவான்மியூர்மாலாபி அவென்யூவில் வசித்து வருகின்றனர். வினய் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகு முன்பு ரியல் எஸ்டேட் தொழில் பார்த்துவந்தார். அதில் ஏற்பட்ட பலத்த நஷ்டம் காரணமாக, 27 லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. வீடுகட்ட பணம் கொடுத்தவர்கள் தொடுத்த வழக்குசி.பி.சி.ஐ.டி.பிரிவில் நிலுவையில் உள்ளது.

சொத்துபணம் ஆகியவற்றை இழந்ததால்குடும்பத்தினரால் தள்ளி வைக்கப்பட்ட ரகுஅனாதையாக திருவான்மியூர் வடக்கு மாட வீதி சாலையில் திரிந்தார். அவருக்குகடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால்குளக்கரை சாலையில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்த பொதுமக்கள் 108 க்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள டாக்டர்கள்,ரகு அனாதை என்பதால்சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து,மீண்டும் குளக்கரை பகுதியில் இறக்கிவிடப்பட்டார்.

இந்நிலையில்அவரின் உடல் நிலை மேலும் மோசமானது. ரகுவின் நிலை குறித்துதிருவான்மியூரில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை. ரகுவின் நெருங்கிய நண்பரான பெருங்குடிரத்னமணி நகரில் வசிக்கும் ரவி என்பவர்தகவலறிந்துமீண்டும் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால்சிகிச்சை பலனின்றி கடந்த 11ம் தேதி மாலை ரகு இறந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்துரகுவின் மகன் வினயை தொடர்பு கொண்டு உடலை பெற்றுச் செல்லும் படி கூறினர். ஆனால்வினயோ," என் தந்தைக்கு எந்த சொத்தும் கிடையாது. அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் தான் உள்ளது. அவரது உடலை வாங்கி அடக்கம் செய்தால்கடன் காரர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிவரும். மேலும்என் தந்தை எங்களிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தார். அதனால்அவரது உடலை நான் வாங்க மாட்டேன்என மறுத்ததோடுபோலீசாருக்கு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு விலகினார். மனைவிமகன்மகள்உறவினர்கள் இருந்தும்அனாதை பிணமாகிப்போன ரகுவின் உடலை என்ன செய்வது என தெரியாமல்போலீசார் தவித்து வருகின்றனர். அனாதை உடல்களை அடக்கம் செய்யும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அடக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Tuesday, February 15, 2011

குளோனிங் பற்றி திருக்குர்ஆன் !

ஈஸா நபியவர்கள்(JESUS )peace be upon himஆணின் உயிரணுவின்றி கன்னித் தாய் மூலம் இறைவனின் தனிப் பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் இது ஓர் அத்தாட்சியாக உள்ளதுஎன்றும் கூறிஇது குறித்து சிந்திக்கத் தூண்டுகிறது.

மனிதர்கள் முயற்சி செய்தால்இது சாத்தியமாகும் என்பது இல்லாவிட்டால் இதைச் சிந்திக்கத் தூண்டுவதில் பொருள் இருக்காது.


இன்றைய நவீன உலகில் உயிரினங்களின் உயிரணுவுக்கு மாற்றாக மரபணுவைப் பயன்படுத்தி உயிரினங் களை உண்டாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.


உதாரணமாக ஓர் ஆடு குட்டி போட்டால் அந்தக் குட்டி எல்லா வகையிலும் தாயைப் போலவோஅக்குட்டி உருவாவதற்குக் காரணமாக கிடாவைப் போலவோ இருப்பதில்லை. சில விஷயங்கள் தாயை ஒத்ததாகவும்சில விஷயங்கள் தந்தையை ஒத்ததாகவும் இருக்கும். சில சமயங்களில் பெற்றோருக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத தோற்றத்திலும் இருக்கும்.
ஆனால் ஓர் ஆட்டின் மரபணு மூலம் உருவாக்கப்படும் குட்டியானதுஅந்த மரபணுக்குச் சொந்தமான ஆடு அல்லது கிடாவை எல்லா வகையிலும் ஒத்ததாக இருக்கும். இவ்வாறு மரபணு மூலம் இன உற்பத்தி செய்வதற்குக் குளோனிங் எனப்படுகின்றது.


மரபணுவில் உருவாக்கப்படும் குட்டிஅச்சு அசலாகப் பிறப்பதற்குரிய காரணத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆணுடைய உயிரணுவும்பெண்ணின் சினை முட்டையும் இணைந்து கரு உருவாகி வளரும் போது அதில் அதற்கான மரபணுக்கள் தோன்றுகின்றன.


இரண்டும் கலந்த ஒரு கலவையாக மரபணு அங்கே புதிதாக உருவாவதால் அது பெற்றோரை எல்லா வகையிலும் ஒத்ததாக இருப்பதில்லை. அதே சமயம்உயிரினங்களின் உடல் முழுவதும் ஒவ்வொரு தசையிலும் மரபணுக்கள் வியாபித்துள்ளன. சிறிய அளவு தசையை எடுத்து அதிலிருந்து மரபணுவை மட்டும் பிரிக்கின்றனர். இந்த மரபணு 25 வயதுடைய ஒருவனின் மரபணு என்றால் அந்த மரபணுவின் வயதும் 25 தான்.


இதன் காரணமாகத் தான் யாருடைய மரபணுவிலிருந்து குழந்தை உருவாக்கப் படுகின்றதோ அவரைப் போலவே அச்சு அசலாக இருக்கிறது.
ஆணுடைய உயிரணுவையும்பெண்ணுடைய கரு முட்டையையும் சோதனைக் குழாயில் வைத்து வளர்க்கிறார்கள். இரண்டும் கலந்து புதிய மரபணுக்கள் அதில் உருவாகியிருக்கும். குறிப்பிட்ட காலம் வரை குழாயில் வளர்த்துஅதில் உருவான மரபணுவை நீக்கி விட்டுயாரை குளோனிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவருடைய மரபணுவை அந்த இடத்தில் வைக்கிறார்கள். இதன் பிறகு சோதனைக் குழாயில் வளர்த்ததை பெண்ணின் கருவறையில் வைத்து கரு வளர்ச்சி ஏற்படுகின்றது. சாதாரண குழந்தையைப் பெற்றெடுப்பது போல் அக்குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.
மனிதனிடம் இது சோதித்துப் பார்த்து நிரூபிக்கப்படாவிட்டாலும் ஆடுஎருமைபன்றி போன்ற உயிரினங்களில் இதைச் சோதித்து விஞ்ஞானிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.


மனிதனைப் பொறுத்த வரை அவனைக் குளோனிங் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள். 25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்த வரை அதன் வயது 25 ஆகும். எனவே 25வயதுடையவனின் அறிவும் சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.


இந்த விபரங்களைக் கவனத்தில் வைத்துஈஸா நபியின் பிறப்பு பற்றிக் குர்ஆன் கூறுவதைச் சிந்தித்துப் பார்ப்போம்.


தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால்ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பிஅந்த வானவர்ஈஸாவின் நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப் பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும்எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது. அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விஷயம்ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே பேசியதாகவும் இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்ததால் அற்புதம் என்ற அடிப்படை யில் பிறந்தவுடன் சில வார்த்தைகளைப் பேசி விட்டு அதன் பிறகு குழந்தைத் தன்மையுடையவராக அவர் இருந்திருப் பார் என்று நினைக்கலாம். இது தவறாகும். ஏனெனில்அவர் குழந்தையாக இருக்கும் போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத் தூதராகவும் ஆக்கியதாக இங்கு கூறப்படுகிறது.


இறைத் தூதர் என்றால்இறைச் செய்திகளைச் சரியாக விளங்க வேண்டும்அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.
பிறந்தவுடனேயே ஈஸா நபியவர்கள் பேசியதுடன்இறைச் செய்திகளை விளங்கிமக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சி உடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.


இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!