Saturday, January 29, 2011

புரோக்கரும் தேவையில்லை


இவ்வளவு கஷ்டமும் ஒரு மனுஷனுக்கு, ஒரே நாள்ல அடுத்தடுத்து வந்தா அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாயிர மாட்டான்..? ஆனால் இதுவெல்லாம் வராது என்று நினைக்காதீர்கள். வரும்.. நிச்சயமாக வரும். இதுதான் மனித வாழ்க்கை.. 

கஷ்டங்களெல்லாம் சொல்லி வைத்தாற்போல் சேர்ந்துதான் வரும். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்தக் கஷ்டங்கள் வருகிறது..? மனிதன் எதையோ செய்கிறான். ஏன் செய்கிறான்? அவனுக்கு அவன் செய்த செயல் தொடர்பாக ஒரு ஆசை. அந்த ஆசையினால் அந்தச் செயலை செய்யப் போய் சிக்கலில் மாட்டுகிறான். ஆக எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த ஆசைதான்.

நியாயமான ஆசைகளாக இருந்தாலும் அதற்காக நாம் கஷ்டப்படத்தான் வேண்டும். இங்கே கஷ்டம் என்பது பெற்றோர்களின் கடமை, பிள்ளைகளை வளர்ப்பது, பிள்ளைகள் பெற்றோரை காப்பது.. இதற்காக அவர்கள் சில தியாகங்களைச் செய்வது போன்றவற்றிற்குள் அடங்கும். 

ஆனால் நியாயமில்லாத ஆசைகளினால் துன்பங்களை அனுபவித்தால் யார் அதற்கு பொறுப்பாவது..? 

சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.

ஒரு பையன். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 50 சதவிகித மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறான். ஆனால் அவனது பக்கத்து வீட்டுப் பையன் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறான். இவனது அப்பா இவனை பொறியியல் படிக்க வைக்கிறார். 

இதேபோல் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த பையனையும் அவனது தந்தை பொறியியல் படிக்க வைக்க முயல்கிறார். அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில்தான் கிடைக்கிறது. ஆனால் இதற்கு பணம் நிறைய செலவாகும். ஆனால் வேறு வழியில்லை. தன் பையனை பக்கத்து வீட்டுப் பையனைப் போல பொறியாளனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார். 

மனைவியிடம் இருந்த நகைகளை விற்றுக் காசாக்கி பையனை தனியார் கல்லூரியில் நுழைத்துவிடுகிறார். பையனும் பெயருக்கு கல்லூரிக்குப் போகிறான். படிப்பதைப் போல் ஏதோ செய்கிறான். அப்பா அடுத்த செமஸ்டருக்கு பீஸ் கட்ட பணமில்லாமல் கடன் வாங்குகிறார். பின்பு இந்தக் கடனை அடைக்க வேறொருவரிடம் பெரிய அளவிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறார். 

கடன் கழுத்தை நெரித்த வேளையில் தாங்க மாட்டாமல் இதனை அடைக்க வேண்டி தான் வேலை பார்க்கும் அரசு வேலையில் முறைகேடாக நடந்து கொள்ள முயல்கிறார். லஞ்சம் வாங்குகிறார். முதல் முயற்சி ஜெயிக்கிறது. தொடர்ந்து கொண்டே செல்கிறார். பையன் அரியர்ஸில் குளித்துக் கொண்டிருக்கும்போது இவர் லஞ்சத்தில் குளிக்கிறார். 

கடைசியாக ஒரு நாள் பிடிபடுகிறார். ஜெயிலுக்கு போகிறார். இப்போது இவரது மனம் சொல்கிறது நான் என் பையனுக்காகத்தான் செய்தேன் என்று.. பையன் சொல்கிறான் இது அப்பாவின் கடமைதானே என்று.. 

இது நியாயமில்லாத ஆசைதானே..? இந்தப் பையனுக்கு இருக்கின்ற அறிவை வைத்து, எடுத்திருக்கின்ற மதிப்பெண்களை வைத்து, அவனால் பொறியியல் படிப்பை படிக்க முடியுமா? முடியாதா? என்றல்லவா அந்தத் தகப்பன் சிந்தித்திருக்க வேண்டும்..? 

பொறியியல் துறை இல்லையென்றால் பாலிடெக்னிக், கம்ப்யூட்டர், ஐ.டி.ஐ. என்று பல்வேறு பிரிவுகளில் திருப்பிவிடலாமே.. நிறைய வழிகள் இருக்கிறதே.. செய்யவில்லையே இந்தத் தந்தை.. 

அவரது இந்த அர்த்தமற்ற ஆசைக்கான விலையை அவர்தானே கொடுக்க வேண்டும். இத்தனையையும் வரிசையாக செய்துவிட்டு "எனக்கு ஏன் இப்படி சோதனையைக் கொடுக்கிறாய்..?" என்றால் என்ன நியாயம்..?

நான் இன்றைக்கும் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பிக் கொண்டிருப்பதற்கும் நானேதான் காரணம். எனக்கே நன்கு தெரிகிறது. சினிமா துறையில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் இந்நேரம் நான் எத்தனை கஷ்டப்பட்டாலும் ஏதாவது ஒரு இயக்குநரிடம் ஒட்டியிருக்க வேண்டும். நான் செய்யவில்லை. 

சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதுவேன் என்று நினைத்து முனைப்போடு போராட நினைத்திருந்தால் இந்த பிளாக்கையெல்லாம் இழுத்து மூடிவிட்டு அங்கே ஓடியிருக்க வேண்டும். அதையும் நான் செய்யவில்லை.

இங்கே பாதி கால்.. அங்கே பாதி கால் என்று வைத்து அலம்பிக் கொண்டிருப்பதினால்தான் எனது நிலைமை இப்போதுவரையிலும் திரிசங்கு சொர்க்கமாக இருக்கிறது. எனக்கே நன்கு தெரிகிறது.. தவறு என் மீதுதான் என்று.

"இது தொடர்பாக ஏதாவது ஒரு முயற்சியை நான் எடுக்கிறேன். அதற்கு ஏதேனும் ஒருவகையில் நீ எனக்குத் துணையிரு. அது போதும்.. வழியைக் காட்டு. நான் ஓடுகிறேன். ஆளைக் காட்டு. நான் பேசுகிறேன்.." என்று ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தில்தான் எனது நம்பிக்கையான வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எனது ஆசை சினிமா என்பதால் அதற்கு என்ன விலை கொடுத்தாக வேண்டுமோ அதனை நான் கொடுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

இந்நேரம் எனக்கு சாதாரணமாக ஐயாயிரம் ரூபாயில் டிடிபி வேலை கிடைத்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் செட்டிலானால் போதும் என்று நான் நினைத்திருந்தால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் எனக்கு வந்திருக்காதே.. ஆக.. இந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாவதே நமது ஆசைகளினால்தான்..


போதும் என்ற மனதோடு.. வாழ்க்கையை ஆண்டவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு.. எப்போது வேண்டுமானாலும் எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு எந்த ஒரு வழிபாடும் தேவையில்லை.

 மனசு நிறைய கனவுகளோடு, நிறைய எதிர்பார்ப்புகளோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை திடீரென்று அழைத்துக் கொள்கிறானே என்பதை நினைக்கின்றபோது அவனை தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

நான் இப்போதே இறக்கத் தயார் என்று சொல்வதாலேயே உடனேயே எனக்கு இறப்பு வந்துவிடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் ஒரு கூடுதல் வசதி என்னவெனில், எதன் மீதும் அதிகம் நாட்டம் வராது.. இருப்பதே போதும் என்று ஆசையை அளவோடு வைத்துக் கொள்ளலாம்.

"நாம் உழைத்துக் கொண்டேயிருப்போம். இறப்பை பற்றிக் கவலைப்படாமல் உழைப்போம். இறைவன் எப்ப கூப்பிடுறானோ அப்போ போய்க்குவோம்... எதுக்கு அதைப் பத்தி நினைக்கணும்"னு சொல்கிறவர்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மாதிரி மனப்பான்மை உள்ளவர்கள்தான் ஒரு போதும் நித்தி மாதிரியான சாமியார்களிடமோ, பாதிரியார்களிடமோ அல்லது ஏமாற்றும் ஹஜ்ரத்துகளிடமோ போகவே மாட்டார்கள்.

வெற்றியும், தோல்வியும், இன்பமும், துன்பமும், லாபமும், நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம். அதற்காக துவண்டு போகக் கூடாது. அதைத் தூக்கிப் போட்டுட்டு மேலும், மேலும் உழைக்க வேண்டும்.. எல்லாமே கடந்து போகும் என்கிற மனநிலை நமக்குக் கிடைத்தால் நிச்சயம் இந்த மாதிரியான மனித போலிகளான சாமியார்களின் தயவு நமக்குத் தேவையிருக்காது.

நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என்னை படைத்த இறைவனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. நமக்கு அவன் மட்டுமே உதவுவான். இதுவே எங்களுக்கு போதும்..

Tuesday, January 25, 2011

அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயம்


குடியுரிமை மோசடி விவகாரத்தால் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து வலுக்கட்டாயமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதில் பெரும்பாலான மாணவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சிலிக்கன் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் மிக அதிக அளவில் குடியுரிமை மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் பல்கலைக் கழகத்தில் சோதனை நடத்தியதில் பெருமளவிலான மோசடி அம்பலமானது. இதைத் தொடர்ந்து அந்த பல்கலைக்கழகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள இந்த பல்கலைக் கழகம் விசா அனுமதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது. அது தவிர அன்னியச் செலாவணி பணப்பரிவர்த்தனை விவகாரத்திலும் இந்த பல்கலைக்கழகம்  ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்தே கடந்த வாரம் இந்த பல்கலைக்கழகத்தில் போலீஸôரும், குடியேற்ற அதிகாரிகளும் சோதனை நடத்தி பல்கலைக் கழகத்துக்கு சீல் வைத்தனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் மொத்தம் 1,555 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியர்களாவர்.
இந்த பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் உறைவிட கல்லூரி, ஆன்லைன் பயிற்சிகள் அளிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. கலிஃபோர்னியாவில் இருப்பதாக முகவரி குறிப்பிடப்பட்டிருந்தாலும் மாணவர்கள் மேரிலாண்ட், வர்ஜீனியா, பென்சில்வேனியா, டெக்ஸôஸ் ஆகிய பகுதிகளில் பணி புரிவது கண்டுபிடிக்கப்பட்டது. ஷாம் பல்கலை என்ற பெயரில் இந்த கல்வி மையம் இயங்கி வந்ததாகத் தெரிகிறது. இந்த பல்கலைக் கழகத்தில் பயிலும் மாணவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் கலிபோர்னியா மாகாணம் சன்னிவேல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் உறைவிடப் பள்ளியில் தங்கியிருப்பதாக இந்த பல்கலைக் கழகம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அவர்கள் தங்கி பணிபுரிவதோ கலிபோர்னியாவில். பொதுவாக அமெரிக்க குடியுரிமை பெற வேண்டுமெனில் மாணவர்கள் கல்லூரியில் பயில்வதற்கான அடையாளத்தை  நிரூபிக்க வேண்டும். மேலும் மாணவர்கள் குறிப்பிட்ட காலம் வரை கல்லூரிக்கு வருகை தந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இப்போது அமெரிக்க புலனாய்வு போலீஸôர் ஒவ்வொரு மாணவரைப் பற்றியும் விரிவாக விசாரித்து வருகின்றனர். இதில் சில மாணவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாக அதிகமானோர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் இந்த பல்கலைக் கழகத்தில் அடுத்த செமஸ்டர் தேர்வு எழுத முடிவு செய்திருந்தனர். தங்களிடம் விசாரணை நடத்தும் முன்பாகவே அமெரிக்காவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதில் சில மாணவர்கள் தீவிரமாக உள்ளனர்.
ஏனெனில் இவர்களில் சிலர் கைது செய்யப்பட்டு கட்டாயமாக நாட்டை விட்டு அவரவர் நாட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த பல்கலைக் கழகம் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட எப்-1 விசா காலம் முடிவடைந்துவிடும். குறித்த காலத்துக்குப் பிறகு அவர்களால் அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது.

Sunday, January 23, 2011

உயிர் காக்க உதவுங்கள்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

நமதூர் புதுத்தெருவைச் சார்ந்த சகோ.நிஹமதுல்லாஹ் [வயது 20] இருசிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனையில் கடந்த 20-01-2011 அன்று அனுமதிகப்பட்டுள்ளார். தற்போது அவர் நிலைமை மிக மோசமாக உள்ளது என்றும் மருத்துவர் ஆலோசனைப்படி உடனேயே மருத்துவம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அதற்கு பொருளுதவி வேண்டும் என்றும் மிக அவசர கோரிக்கை வந்துள்ளது.

இது குறித்த முந்தைய கோரிக்கை அதிரை எக்ஸ்பிரஸில் 
16/04/2008 அன்று வெளியானதைத் தொடர்ந்து உலகெங்கிலுமுள்ள அதிரைவாசிகளும் நல்லுள்ளம் படைத்தவர்களும் பொருளாலும் துஆ மூலமாகவும் உதவினார்கள். (அல்லாஹ் அவர்களுக்கு மென்மேலும் பரக்கத் செய்வானாக. ஆமின்!)

தற்போது மிகவும் சீரியஸான நிலையில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்படைந்து கடந்த ஐந்து வருடங்களாக குழாய் மூலம் சிறுநீர் கழிக்கும் நிலையில் இருப்பதாக அவரது சகோதரர் மடலிட்டு நல்லுள்ளம் படைத்தவர்களிடமிருந்து மீண்டும் மருத்துவ நிதிஉதவி கோரியுள்ளார். 
கீழ்காணும் அவரது மடலை வாசிப்பவர்கள் தாங்களும் தங்கள் நட்பு வட்டாரங்களிலும் இந்த  கோரிக்கையை எடுத்துச் சொல்லி தங்களால் முடிந்த உதவிகளைச் செய்யும்படி அதிரை எக்ஸ்ப்ரஸ் சார்பில் மீண்டும் கோருகிறோம்.

அதிரை மற்றும் ஏனைய வலைப்பூக்களிலும், குழுமங்களிலும் இந்த கோரிக்கையை பிரசுரித்து அதிகபட்ச உதவிகள் உரியநேரத்தில் சென்றடையுமாறு நட்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களது உதவிகளை மறக்காமல் கீழ்காணும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கவும்.


A.J. Nihmathullah


His A/c No is 776490218

Indian Bank Adirampattinam Branch

Branch code 00A110
அல்லாஹ்வின் நல அருள் நம் அனைவர் மீது கிட்டட்டுமாக.ஆமீன்

-அதிரை எக்ஸ்ப்ரஸ் குழு மற்றும் வாசகர்கள்-

----------------------------------------
Assalamualikum

My brother Nihamathullah 20 years old, He was admitted in Ramachandra Hospital, porur,Chennai in 20 Jan 20011.

As a both kidney has affected and nerugenic bladder problem for past 15 years. also past five years he passed urine through cathetral tube, every three month its should be changed.


But Now His Blood  serum creatitine level is 20
Blood Urea is 164 . so doctor advised to immediately  start  the hemodayalasis process.
Now we do the hemodayalasis process

Also he need a dialysis process for every weekly for  two times.
per dialysis cost is min Rs.3000/-

insha allah after improve his body condition they will advised to kidney transplantation. its cost approx 6 lakhs.
Make a dua for his guys. and also if u possible pls help this guy.

A.J. Nihmathullah
His A/c No is 776490218
Indian Bank Adirampattinam Branch
Branch code 00A110

Thanking you
Best Regards
Najumudeen
---------------------------------------------
*மேற்கண்ட மடலை அதிரை எக்ஸ்ப்ரஸிற்கு உடனடியாக அனுப்பித் தந்த சகோதரருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமின்.

நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக கியாமத் நாளில் அல்லாஹ் (மனிதர்களை அழைத்து) 'ஆதமின் மகனே! நான் நோய்வாய்ப் பட்டிருந்தேன். நீ ஏன் என்னை உடல் நலம் விசாரிக்கவில்லை?' என கேட்பான். அப்பொழுது அடியான், 'என் இரட்சகனே! நான் உன்னை எவ்வாறு உடல் நலம் விசாரிக்க முடியும்? நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று பதில் அளிப்பான். அப்பொழுது அல்லாஹ் 'என் அடியான் நோய்வாய்ப்பட்டிருந்தான், அவனை நீ உடல் நலம் விசாரிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனை உடல் நலம் விசாரித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா? என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவைக் கேட்டேன், நீ எனக்கு உணவளிக்க வில்லை?' என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அடியான் 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு உணவளிக்க முடியும், நீயோ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்!' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ் 'என் இன்ன அடியான் உன்னிடம் உணவைக் கேட்டான். நீ அவனுக்கு உணவை அளிக்கவில்லை என்பதை நீ அறிவாயா? நீ அவனுக்கு உணவளித்திருந்தால், அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய்! என்பதை அறிவாயா?' என்று கூறுவான். 'ஆதமின் மகனே! நான் உன்னிடம் எனக்கு தண்ணீர் புகட்டுமாறு வேண்டினேன். நீ எனக்கு தண்ணீர் புகட்டவில்லை' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு அடியான். 'என் இரட்சகனே! நான் எவ்வாறு உனக்கு தண்ணீர் புகட்ட முடியும்! நீ அகிலத்தாரின் இரட்சகனாக இருக்கிறாய்' என்று கூறுவான். அதற்கு அல்லாஹ், 'என் இன்ன அடியான் உன்னிடம் தனக்கு தண்ணீர் புகட்டும்படி வேண்டினான். நீ அவனுக்கு தண்ணீர் புகட்ட மறுத்து விட்டாய்! நீ அவனுக்கு தண்ணீர் புகட்டியிருந்தால் அவனிடம் என்னை நீ பெற்றுக் கொண்டிருப்பாய் என்பதை நீ அறிவாயா?' என்று கூறுவான். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : முஸ்லிம்
 நபிகள் நாயகம் 


http://adiraixpress.blogspot.com/

Wednesday, January 19, 2011

அதிரை கல்வி மாநாடு கானொளி - CMN சலீம் அவர்களின் எழுச்சி உரை

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பான வாசகர்களே, கடந்த ஜனவரி 14ம் மற்றும் 15ம் தேதிகளில் அதிரையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு மாநாடு நடைப்பெற்றது என்பது நாம் எல்லோரும் அறிந்தது.

நாம் எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்த சிறப்புப் பேச்சாளர் சகோதரர் CMN சலீம் அவர்களின் எழுச்சியுரை கானொளி முதன் முதலில்  அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறோம்.


இந்த கானொளியை பார்த்து பயனைடையுங்கள், இதை உங்களுக்கு தெரிந்த அதிரை சகோதரர்கள் மற்ற வெளியூர் சகோதரர்களுக்கும் பகிர்ந்து பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மாநாடு முடிந்த பிறகும் இந்த கானொளியை இணையத்தில் நம் அதிரைவலைப்பூக்களுக்காக தன் நேரத்தை முழுமையாக பயன்படுத்தி upload செய்து தந்த சகோதரர் மொய்னுதீன் அவர்களுக்கு மிக்க நன்றி.

அல்லாஹ் போதுமானவன்.

-- அதிரைநிருபர் குழு

Tuesday, January 18, 2011

ஜோதிடம் பொய் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே ஜோதிடத்தையும், ஜோதிடர்களையும் நம்பாதீர்கள் இது முழுக்க முழுக்க அறிவியல் சிந்தனைக்கு அப்பாற்பட்டது மற்றும் இது விபரமரியாத மனிதர்களை ஏமாற்றும் குருட்டு வித்தையாகும்.

உதாரணமாக உங்கள் அன்பு மகனுக்கோ அல்லது மகளுக்கு திருமணம் செய்ய நாடுவீர்கள் ஆனால் இந்த ஜோதிடர்கள் செவ்வாய்தோஷம் என்று கூறி அந்த இளம் ஆண், பெண்ணின் திருமணத்தை தடை செய்வார்கள் இதனால் பாதிக்கப்பட்ட அந்த அப்பாவி ஆணும், பெண்ணும் 35 வயது வரை இல்லற சுகத்திற்கு ஏங்கி அறை கிழட்டு பருவத்தை அடைந்த பிறகு திருமணம் செய்து குழந்தை பேறு இல்லாதவர்களாகவும், வயது முதிர்ந்த நிலையில் தங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறு கணவன், மனைவி பொருத்தம் அமையாமலும் காணப்பட்டு வாழ்க்கை முழுவதும் அலங்கோளமாக காணப்படுவார்கள். மேலும் 35 வயதில் தகப்பனை இழந்தும், தாயை இழந்தும் அநாதைகளாக திருமணம் செய்துக்கொள்பவர்கள் எத்தனை பேர் சிந்தியுங்கள் ஏன் இந்த அவலம்.

சிந்தித்துப்பாருங்கள் உலகத்தில் இன்று சுமார் 600 கோடி மக்களுக்கும் மேல் வசிக்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் செவ்வாய் தோஷம், பீடை என்று இருந்திருந்தால் யாருக்கேனும் திருமணம் நடைபெறுமா? இந்த அவல நம்பிக்கை முழுக்க முழுக்க தமிழ் பேசக்கூடிய நம் தமிழர்களின் மத்தியில்தான் உள்ளது மாறாக அமெரிக்கர்கள், ஆப்ரிக்கர்கள், ஜப்பானியர்கள், இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் என்று யாருக்கும் இந்த தோஷம் பயம் ஏற்படுவதில்லை காரணம் உலகில் உள்ள 600 கோடி மக்களில் ஜோதிடத்தை நம்புபவர்களை தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் ஜோதிடத்தையும், ஜாதகத்தையும் நம்புவதில்லை அதை அனுமதிப்பதும் கிடையாது. குறி சொல்லும் ஜோதிடன் உங்களிடம் அற்ப காசுகளுக்காகத்தான் குறி கூறுகிறானே தவிர அவனுக்கு கோடி ரூபாய் பணம் இருந்தால் குறி சொல்வதை கேவலமாக எண்ணி பார்க், பீச் என்று ஜாலியாக அலைந்து திரிவான். எனவே இந்த ஜோதிடமும், ஜோதிடனும், ஜாதகமும் பொய் என்பதை உணருங்கள். இதோ சிந்திப்பவர்களுக்கு இந்த கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

ஜோதிடம் பொய்யானது! 
ஜோதிடம் என்பதற்கு வான மண்டலத்திலுள்ள (GALAXY)  நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்பது பொருளாம்! எந்த நட்சத்திரமாவது மனிதனிடம் பேசுமா எனவே ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க பொய். எந்த நட்சத்திரமாவது குறி சொல்கிறதா? பேசுகிறதா? இது முட்டாள்தனம் இல்லையா? எடுத்த எடுப்பிலேயே ஜோதிடம் என்ற பெயர் பெய்யாக இருக்கிறது சரி பார்ப்போம் இதில் என்ன உள்ளது என்பதை!

ஜோதிடன் என்பவன் பொய்யன்!
நட்சத்திரங்களின் மொழியை அறிந்தவன் ஜோதிடனாம் இது கொஞ்சம் ஓவரா இல்லையா? ஒரு தமிழ் பேசக்கூடியவனிடம் சென்று எதுகை, மோனை பற்றி கேட்டால் திக்குமுக்காடுகிறான் தமிழே தடுமாற்றமாக உள்ள நிலையில் ஜோதிடனுக்கு நட்சத்திர மொழி தெரியுமாம். வடமாநில மொழியான ஹிந்தி படிக்க தமிழனுக்கு தெரியல வானமண்டல மொழி தெரியுதாம்!

நட்சத்திரம் குறி கூறுகிறதாம்!
நட்சத்திரம் நேரத்தை கூறுகிறதாம் அது வானமண்டலத்தில் உள்ள 9 கோள்களின் மூலமாக விதியை ஆராய்ச்சி செய்து இது இப்படி! அது அப்படி என்று கூறுகிறதாம். எந்த நட்சத்திரமாவது பேசுமா அப்படி பேசுவதாக இருந்தால் இதோ நாம் டேப்ரிக்கார்டர் தருகிறோம் அதன் பேச்சை பதிவு செய்து தாங்க நாமும் கேட்டு ரசிக்கிறோம்!

கோள்களின் பெயரால் மோசடி
வான் மண்டலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி,ராகுகேது ஆகிய கோள்கள் இருக்கிறதாம் இந்த கோள்கள்தான் நேரத்தை நிர்ணயிக்கிறதாம். ஆனால் இதில் வேடிக்கை என்னவெனில் ராகு, கேது என்பது கண்ணிற்கு தெரியாத கோள்களாம் மற்ற 7 கோள்கள்தான் கண்களுக்கு புலப்படுமாம். (ராகு, கேது ஆகிய இரு கோள்கள் நிழல் உலக தாதாத்கள் போன்று நிழல் கோள்களாம் இவைகள்தான் கெட்ட நேரத்துக்கு காரணமாம்) 

இந்த ஒன்பது கோள்களுக்கு அருகில் அஸ்வினி, கார்த்திகை, ஆயில்யம், சித்திரை என்று 27 நட்சத்திரங்கள் இருக்கிறதாம் இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றவாம். சூரியனை சுற்றி கோள்கள் வருகிறதா? இல்லை இந்த 27 நட்சத்திரங்களை சுற்றி கோள்கள் வருகிறதா? தலையே கிர்ர்ர்ருன்னு சுற்றுகிறது!

எல்லா கோள்களும் ஒரே வேகத்தில் வருவதில்யாம் ஒவ்வொரு கோளும் வேகத்தில் மாறுவிடுகின்றனவாம்.

சரி! கோள்கள் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது.
பூமி (Earth), சந்திரன் (Moon), புதன் (Mercury), வெள்ளி(Venus), செவ்வாய் (Mars) ,வியாழன் (Jupiter), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்டியூன் (Neptune) முதலான கோள்கள் சூரியன் (Sun), சுற்றி வருகிறது.

ஜோதிடர்கள் கூறும் கோள்களின் வேக கணிப்பு பொய்

கோள்கள் பெயர்
ஜோதிடர்களின் கோள் கணிப்பு
நாசா விஞ்ஞானிகளின்
கோள் கணிப்பு
சூரியன்12 மாதம்சுழலும் காலம்  30 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 273 m/s/s
வெளியேறும் வேகம் 620 km/sec.
சந்திரன்30 நாள்சுழலும் காலம்  27.32 நாட்கள்
ஈர்ப்பு வேகம் 1.6 m/s/s
வெளியேறும் வேகம் 2.38 km/sec
செவ்வாய்1½ ஆண்டுகள்சுழலும் காலம் 24.62 மணிகள்
ஈர்ப்பு வேகம் 3.7 m/s/s
வெளியேறும் வேகம்  5.01 km/sec.
ராகு &  கேது18 ஆண்டுகள்,இப்படி 2 கோள்கள் இல்லை
சனி30 ஆண்டுகளசுழலும் காலம் 10.53 மணிகள்
ஈர்ப்பு வேகம் 9.1 m/s/s
வெளியேறும் வேகம்  35.60 km/sec.
ஜோதிடர்களின் இந்த கோள்களின் வேக கணிப்பை விஞ்ஞானிகளின் வேக கணிப்புடன் இணைத்துப்பார்த்தால் நமக்கு தலை சுற்றல்தான் வருகிறது. இந்த அளவுக்குமா ஜோதிடர்கள் புரளியை கிழப்புவார்கள்.

சனி கிரகத்தை கிண்டல் செய்யும் ஜோதிடர்கள்!
ஒன்பது கிரகங்களில (அதாவது 2 பொய் கிரகங்களும் சேர்த்து) சந்திரன் என்ற கிரகம்தாம் வேகமாக சுற்றுகிறதாம்.  சனி கிரகம் மெதுவாக சுற்றுகிறதாம். எனவே சனி கிரகத்தை மந்தன் என்று கூறுகிறார்கள்.

சனி கிரகம் பற்றிய நொண்டி கதையை கேளுங்கள்
சனி என்பவர் ஒரு கிரகமாம் அவருக்கு ஒருகால் நொண்டியாம். ஆகவேதான் இந்த சனி கிரகம் மட்டும் சூரிய குடும்பத்தில் நொண்டி நொண்டி மெதுவாக சுற்றிவருவாராம். அந்த நொண்டி கதையை படித்துப்பார்ப்போமா!

இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினானாம்  அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றாம்  ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்து விட்டானாம்.

ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்குமாம் அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாதாம்இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டானாம். தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனராம்  

ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே!அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும்என்ன செய்வது என்றறியாது கலங்கினராம் அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, “உன்னால்தான்ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும்ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டாராம்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கிஇந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டாராம். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகுமாம். இந்தக்கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால்இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டாராம்மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தனவாம்.


இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தானாம்,சனி 12ம் இடத்தில் காணப்பட்டாராம்

தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டானாம்உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டானாம் இது தான் சனிபகவான் நொண்டியான கதையாம். ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறாராம்.

நொண்டி கதையை சிந்தித்துப்பாருங்கள்
நாம் இந்த ஜோதிடப் பிரியர்களிடம் கேட்பது என்னவென்றால் இந்த சனி பகவானுக்கு ஜாதகம் கணிக்க யாரும் இல்லையா? தன் கால் நொண்டியாகும் என்ற செய்தியை சனி பகவானால் முன்கூட்டியே கணித்து அறியவோ அதற்கான பரிகாரம் செய்யவோ இயலவில்லை அப்படியிருக்க இந்த சனி பகவான் எப்படி மற்றவர்களுக்கு குறி சொல்ல பயன்படுவார்.

இந்த நொண்டிக்கதைகளை வைத்துக்கொண்டு மனிதர்களை ஏமாற்றுகிறார்கள் இந்த ஜோதிட வித்துவான்கள் அதாவது காசுக்காக தங்களடைய கடவுளையை நொண்டியாக்கி அதன் மூலம் குளிர்காய்கிறார்கள். தாங்கள் வணங்கும் கடவுளை நொண்டியாக்கும் இந்த அவலநிலை இந்த தமிழர்களுக்கு தேவையா?

ஜாதகத்தை  கணிக்கும் முறையில் தவறுகள்
  1. கிருதயுகம்.
  2. திரேதாயுகம்
  3. துவாபரயுகம்
  4. கலியுகம்.

வாண்மண்டலம் இந்த நான்கு யுகங்களையும் கொண்டதாம் இதற்கு  ஒரு சதுர்யுகம் என்று பெயராம். இந்த சதுர்யுகத்தில் முதல் 3-யுகங்கள் முடிந்துவிட்டதாம் இப்போது நடை முறையில் இருக்கும் யுகம் கலியுகமாம்

  • ஒரு சதுர்யுகம் என்பது 43,20,000 ஆண்டுகளாம்
  • கலியுகத்தில் 5094 ஆண்டுகள் முடிந்துவிட்டனவாம்

ஆனால் விஞ்ஞானிகளின் துள்ளியமான கணிப்பு படி இந்த வாண் மண்டலம்காஸ்மோலாஜிகள் டைம் (cosmological time) பிரகாரம் 13.73 பில்லியன்வருடங்கள் முடிந்துவிட்டதாம்.

ஒரு பில்லியன் என்பது 100 கோடிகள் இப்போது 13.73 பில்லியன் என்பதை இந்திய முறைப்படி கணித்தால் 13,73,00,00,000க்கு மேல் செல்கிறது. அதாவது

விஞ்ஞான கணிப்பு
13,73,00,00,000
ஜோதிடர்களின் கணிப்பு
43,20,000
வித்தியாசம்
13,72,56,80,000

ஜோதிடர்களால் ஒழுங்காக பிரபஞ்சத்தின் வயதை கூட அறிய முடியவில்லை கணித பாடத்தையே தப்பாக போட்டு வைத்துள்ளார்கள் அப்படியிருக்க ஜாதகம் எப்படி துள்ளியமாக அமையும். (பிரபஞ்சத்தின் வயதை அல்லாஹ் மட்டுமே துள்ளியமாக அறிவான் காரணம் அவன் பிரபஞ்சத்தை முன்மாதிரியின்றி படைத்தவன்) 
இஸ்லாமிக் பாரடைஸ்


சிந்திக்க சில அருள்மறை குர்ஆன் வசனங்கள்
துன்பம் ஏற்படுத்துவதும் அல்லாஹ்வின் அதிகாரம்
 எத்துன்பமும் அல்லாஹ்வுடைய கட்டளை கொண்டே தவிர உண்டாகுவதில்லை.(அல் குர்ஆன் 64:11)

அல்லாஹ்விடம் துன்பம் பற்றிய பதிவேடு உள்ளது
 எத்துன்பத்தையும் (உலகில்) நாம் உண்டாக்குவதற்கு முன்னதாகவே(லவ்ஹ{ல் மஹ்பூல் என்னும் ) பதிவேட்டீல் (பதியப்பட்டு) இருந்தே தவிர பூமியிலும் உங்களிலும் எத்துன்பமும் ஏற்படுவதில்லை. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு (மிக) இலேசானதாகும்.(அல் குர்ஆன்57~22)

அல்லாஹ்வைத் தவிர யாரக்கும் மறைஞானம் கிடையாது
மறைவானவற்றின் திறவுகோள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றைஅவனைத்தவிர (வேறு எவரும்) அறியமாட்டார்கள். இன்னும் கரையிலும்கடலிலும் உள்ளவற்றையும் அவன் அறிவான். ஓர் இலை உதிர்வதைக் கூட அவன் அறியாமல் (அவன் கட்டளையின்றி) அது உதிர்வதில்லை.பூமியின் இருள்களுள்ள எந்த விதையும் எந்தப்பசுமையானதும் எந்தக் காய்ந்ததும் அவனுடைய தெளிவான பதிவேட்டில் இல்லாமலில்லை. (அல் குர்ஆன் 6:59)
மறைவான ஞானம் இறைத்தூதர்களுக்கும் கிடையாது


--
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? 6:32

பிடிச்ச தலைப்ப கிளிக்கிப் படிங்க!